karpoora pommai onru Serial Stories கற்பூர பொம்மை ஒன்று

கற்பூர பொம்மை ஒன்று – 33

33

பின்னங்களென பின்னிக்கிடக்கும் 
நம் எண்ணங்களில் ,
பிறிதொரு நாளென நாம் ஒத்தி வைத்தது 
இந்த ஞாயிறுதானே ….?

” ஏய் நம் ரிசப்சனின் போது வருபவர்களை கவனிக்காமல் எங்கேயோ வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாயே …அழகாக அலங்காரம் பண்ணிக்கொண்டு உன் ஸ்மார்ட்டான புருசன் பக்கத்திலிருக்கிறேன்.என்னை கவனிக்காமல் எங்கே …ம் …? ” அவளை தேய்த்தபடி அருகில் அமர்ந்திருந்த வீரேந்தரின் அருகாமை சாத்விகாவினுள் இன்ப இம்சையை கொடுத்திருந்த்து .

ரிசப்ஷன் முடிந்து மணமக்கள் ஒரு காரிலும் , மற்றவர்கள் ஒரு காரிலுமாக வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தனர் .காரில் ஏறியதுமே அவளை உரசியபடி அமர்ந்த கணவனை ” கொஞ்சம் தள்ளித்தான் உட்காருங்களேன் …” சிலிர்த்தபடி கண்டித்தாள் .

” புதிதாக திருமணமான அழகான மனைவியை விட்டு  எந்த முட்டாள் கணவனும் தள்ளி உட்காரமாட்டான் ” இன்னமும் அவளை நெருங்கி தீற்றினான் .

சாத்விகா ஒரு செல்ல முறைத்தலுடன் கார் சன்னல் பக்கம் நகர்ந்து அமர்ந்து அவர்களை கடந்து போன அந்த காரை கவனித்தாள் .அதனுள் சக்கரவர்த்தி, சண்முகபாண்டியன் , கார்த்திக் மூவரும் ஒரு சீட்டில் அமர்ந்திருக்க , அவர்களுக்கு எதிர் சீட்டில் சௌந்தர்யாவும் , சந்திரிகாவும் அமர்ந்திருந்தனர் .சும்மா அல்ல இருவரும் இணை பிரியா தோழிகள் போல் ஒருவர் கையை ஒருவர் பற்றியபடி …ஐவரும் பிரகாசமான முகத்துடன் ஒருவரை ஒருவர் பார்த்தபடி பேசிக்கொண்டிருந்தனர் .

சந்திரிகாவோ , சக்கரவர்த்தியோ …இது வரை இன்னமும் சாத்விகாவிடம் முகம் கொடுத்து ஒரு வார்த்தை பேசவில்லை .வீரேந்தர் அவர்கள் திருமண விசயத்தை சொன்ன பிறகும் கூட …யாரோ தெருவில் போகும் ….யாருக்கோ திருமணம் என்பது போல்தான் வீட்டிற்குள் வளைய வந்து கொண்டிருந்தனர் .திருமணத்தற்கு பின் அவர்கள் சரியாகி விடுவார்கள் என வீரேந்தர் சாத்விகாவை சமாதானப்படுத்தி வைத்திருந்தான் .




ஆனால் சண்முகபாண்டியனும் , சௌந்தர்யாவும் வீட்டிற்குள் வந்த நாளிலிருந்து அவர்களை மிக அருமையாக வரவேற்று …தாங்கு தாங்கென்று தாங்கிக் கொண்டிருந்தனர் .பிடிக்காத மருமகளின் தாய் ,தந்தையும் பிடிக்காமல் போவதுதானே இயல்பு .ஆனால் இங்கே …இன்னமும் சாத்விகா மருமகளான பின்பும் அவள் மீது அவர்களுக்கு ஒன்றும் பெரிதான அபிப்ராயம் வந்துவிடவில்லை .இன்னமும் அதே அலட்சிய பாவனைதான் அவளிடம் .ஆனால் அவள் தாய் தந்தையிடம் மட்டும் இந்த அளவு ஒட்டுதலா …? ரிசப்ஷன் மேடையில் நின்று கொண்டு கூட ..இந்த விநோத ஒட்டுதலைத்தான் சாத்விகா புரியாத ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள் .

ஒரு நிமிடத்தில் கடந்து சென்று விட்ட காரில் அமர்ந்திருந்தவர்களை தன் மனதினுள் கூறு போட்டு ஆராய்ந்து கொண்டிருந்த சாத்விகா , தன் கழுத்தோரம் இதமான மூச்சுக்காற்று பட சிலிர்த்து திரும்பினாள் .வீரேந்தர் அவள் தலையில் சூடி தோளில் வடிந்திருந்த  மல்லிகையின்  வாசத்தை முகர்ந்து கொண்டிருந்தான் .

” எனக்கு மல்லிகை பூதான் வேண்டுமென கூறிவிட்டாய் பேபி .இந்த டில்லியில் …இந்த மல்லிகை பூவை வாங்குவதற்குள் நான் எவ்வளவு கஷ்டப்பட்டு விட்டேன் தெரியுமா …? ம் …எவ்வளவு வாசம் …!!! ” மல்லிகையை முகர்வது போல் அவன் இதழ்கள் சாத்வகாவின் தோள்களை ஸ்பரிசித்து கொண்டிருந்தன.

” ஷ் ..்என்ன வீரா இது …? டிரைவர் …” கார் ஓட்டிக்கொண்டிருந்தவரை சைகையால் காட்டி அவனை தள்ள முயன்றாள் .

” அவர் ரொம்ப இங்கிதம் பேபி .இந்த பக்கம் திரும்ப மாட்டார் .தவிர அவருக்கு தமிழும் தெரியாது ….” உள்ளங்கையிலிருந்து முழங்கை வரை பூப்பூவாக மலர்ந்திருந்த அவள் கை மெஹந்தியின் மீது விரல்களால் பயணித்தபடி பேசினான் .

” அழகாக இருக்கிறது பேபி …” அவள் உள்ளங்கையை தன் முகத்தில் பொருத்தி மூச்சை இழுத்து முகர்ந்தான் .

” ஐய்யே …இப்படியே வாசனை பிடித்துக் கொண்டே இருக்க போகிறீர்களா …? ” கூச்சத்துடன் நெளிந்தாள் .

” இனி எனக்கு அதுதானே வேலை பேபி .உன்னை வாசம் பிடித்துக்கொண்டே …”

” ம்க்கும் …நாளையே மந்திரி அழைக்கிறாரென்று ஓடி விடுவீர்கள் …”

” இல்லை இன்னும் ஒரு மாத்த்திற்கு ஜனாதிபதியோ , பிரதமரோ  கூட என் பக்கத்தில் வரக்கூடாதென்று சொல்லிவிட்டேன் .எனக்கு உன்னிடத்தில் நிறைய வேலை இருக்கிறது பேபி .நிறைய கற்றுக் கொடுக்க , கற்றுக் கொள்ள என்று …நம் அப்பா ,அம்மாவிற்கு கூட நமக்கிடையே நுழைய அனுமதி கிடையாது .இன்று இரவே ” அ ” போட்டு ஆரம்பக்க வேண்டும் …” கிறக்க குரலில் கணவன் சுட்டிக்காட்டிய தங்கள் முதல் நாளிரவு பல உணர்வுகளை உள்ளுக்குள் பரப்ப …இப்போதே முத்தமிட்டு அணைக்க தயாரென்றதோர் பாவனையில் அருகிலிருந்த கணவனின் மோக வலையில் மாட்டித் தவித்து சாத்விகா , தனது வெட்கத்தை அவன் காணாமல் மறைக்கும் முயற்சியில் இறங்கினாள் .

அட …உனக்கு வெட்கமெல்லாம் வருமா …என அவன் அதற்கும் சீண்டுவான் .” மறைக்காதே பேபி நான் பார்த்து விட்டேன் .என்னமாக சிவக்கிறது உன் கன்னம் .ம் ” தன் கன்னம் வருடியவனின் கைகளை தடுக்க முடியாமல் ,நிமிர்ந்து அவன் முகம் பார்க்காமல் அவன் கைக்குள் பொதிந்து காணாமல் போயிருந்த தன் கை விரல்களை தேடியபடியே ” எனக்கு ஒரு சந்தேகம் வீரா ” என்றாள் .

” இங்கே வைத்து கேட்காதே பேபி .செய்கையில்தான் விளக்கவேண்டுமென்ற கட்டாய சந்தேகமென்றால் கஷ்டம் பார் ….” முதலில் புரியாமல் …பிறகு புரிந்து தன் முழங்கையால் அவன் வயிற்றில் இடித்தாள் .

” சை ….எப்போது பார் அதே நினைப்புதானா …? நான் நம் அப்பா , அம்மாவை பற்றி கேட்க நினைத்தேன் .என்னையே பிடிக்காத்து போது என் அப்பா , அம்மாவை உங்கள் அப்பா , அம்மாவிற்கு எப்படி பிடித்தது வீரா …? அவர்கள் வந்த நாளிலிருந்து இந்த சந்தேகம் என் மண்டையை குடைந்து கொண்டே இருக்கிறது …”

” கடவுளே …எப்போது பார்த்தாலும் …யாரை பார்த்தாலும் உனக்கு சந்தேகமா பேபி .ஒரு சாதாரண விசயத்திற்கு எதற்கு உனக்கு இவ்வளவு பெரிய சந்தேகம் …? இறங்கு …” வீடு வந்துவிட்டிருக்க காரை விட்டு இறங்கி அவள் இறங்க கைநீட்டினான் .

இரட்டை தாமரைகள் போல் ஒன்று போல் மலர்ந்த முகத்துடன் அவர்களுக்கு ஆரத்தி எடுத்து உள்ளே அழைத்த சந்திரிகா , சௌந்தர்யாவை பார்க்கவும் சாத்விகாவின் சந்தேகம் கூடியது .இவர்களின் ஒட்டுதல் இப்போது அறிமுகமானது போல் இல்லையே .அதோ …அங்கே ஒருவர் தோளில் ஒருவர் தட்டி சிரித்து பேசிக் கொண்டிருக்கும் சக்கரவர்த்தி …சண்முகபாண்டியனின் நெருக்கமும் தான் .

” ரொம்ப அழகாக இருக்கிறீர்கள் திதீ .இன்று காலவயிலிருந்து உங்களை பார்த்த கண்களை விலக்கவே முடியவில்லை தெரியுமா …? ” அடுப்படியினுள் போன சாத்விகாவின் கைகளை ஆவலொடு பிடித்து கொண்டாள் சாந்தினி .

” ஏய் …போதும் .நீயே கண் வைக்காதே .குடிக்க தண்ணீர் கொடு …” டைனிங்டேபிள் சேரை இழுத்து போட்டு அமர்ந்த சாத்விகாவின் அலங்காரம் அவர்கள் இரவுக்கான எளிய அலங்காரம் .

அவர்களின் முதலிரவுக்கென்று அவர்கள் ரிசப்ஷன் நடந்த பைவ் ஸ்டார் ஹோட்டலிலேயே ஹனிமூன் சூட் ஒன்று புக் செய்யப்பட , எங்கேயோ தெரியாத வெளியிடத்தில் எப்படி வாழ்க்கையை முதன் முதலாக தொடங்குவது …என சாத்விகா தயங்க ,அவள் சொல்லாமலேயே அவள் தயக்கத்தை உணர்ந்து கொண்ட வீரேந்தர் , அவள் கேட்காமலேயே அந்த ஏற்பாட்டை கேன்சல் செய்தான் .அந்த சடங்கை அவர்கள் வீட்டிலேயே ஏற்பாடு செய்ய வைத்தான் .

” தேங்க்ஸ் …” அவனுக்கு மட்டும் கேட்கும் குரலில் முணுமுணுத்தவளின் காதில் ..” நமக்கு இடமா முக்கியம் பேபி ..” என்று போகிற போக்கில் சொல்வது போல் சாதாரணமாக சொல்லி அவள் வெட்கத்தினை தூண்டிவிட்டு சென்றான் .

இதோ …இப்போதும் மாடியில் வீரேந்தரின் அறையில் அவர்கள் இருவருக்கான முதலிரவு ஏற்பாட்டில்  சௌந்தர்யாவும் , சந்திரிகாவும் உற்சாகமாக இருக்க ,முதலில்  தெரியாமல் அந்த அறைக்குள் நுழைந்து விட்ட சாத்விகா …வண்ணங்களும் ,பூக்களும் , வாசமுமாக அடியொடு மாற்றப்பட்டுக் கொண்டிருந்த அந்த அறையை பார்த்ததும் முதலில் திகைத்து நின்றுவிட்டாள் .

இனம் புரியா புது உணர்வொன்று உடல் முழுவதும் உருள , அப்படியே நின்றவளை நிமிர்ந்து பார்த்த அன்னையர் இருவரின் கண்ணிலும் கேலி வெளிப்படையாக தெரிய …வெட்கத்துடன் ஓடி வந்துவிட்டாள் .




அறையை விட்டு வெளியே வந்தவள் எதிரே வந்த வீரேந்தரின் மேல் மோதிக்கொண்டாள் .அவள் வந்த வழியை பார்த்தவன் ” என்ன பேபி நம் அறைக்குள் போய் பார்த்து விட்டு வந்தாயா ..? ஐந்து நிமிடத்தற்கு முன் நானும் உன்னை போலத்தான் தெரியாமல் போய் நின்றுவிட்டு விழித்துக் கொண்டிருந்தேன் .அம்மாவின் பார்வை என்னடா அவசரம்னு என்னை முறைத்தது .உன்னை போலவே ஓடிவந்து இதோ இங்கே மறைவாக மூஞ்சை வைத்துக்கொண்டு நின்று கொண்டிருக்கறேன் …” கிசுகிசு ப்பாய் சொன்னபடி அந்த சுவர் மறைவுக்கு அவளையும் இழுத்துக் கொண்ட வீரேந்தரின் முகத்திலும் உண்மையிலேயே கொஞ்சம் கூச்ச உணர்வு இருந்த்து .

” ஐய்யோ …இரண்டு பேரும் அடுத்தடுத்து போய் நின்றோமா …அவர்கள் நம்மை பற்றி என்ன நினைப்பார்கள் …” வெட்கத்துடன் சிணுங்கியபடி  அவனை பார்த்தவள் …கணவனின் முகம் கொஞ்சம் தயங்கி சிவந்திருப்பதை ஆசையுடன் பார்த்தாள் .

” அட , உங்களுக்கும் இப்படி வெட்கம் வருமா …? ” ஆச்சரியமாய் அவன் மீசையை பிடித்திழுத்து  சீண்டினாள் .

” ஏய் …என்னையே சீண்டுகிறாயா …உன்னை …” என்றவன் அவளை நெருங்கி கன்னத்தை கடித்தான் .

” சாரி …” என்ற குரல் அவர்கள் பின்னாலிருந்து வர திடுக்கிட்டு திரும்பியவர்கள் அவசரமாக பிரிந்து நின்றார்கள் .அங்கே இவர்களுக்கு முதுகு காட்டியபடி கார்த்திக் நின்றிருந்தான் .

” கொஞ்சம் வழி விட்டீர்களானால் நான் உள்ளே ஓடிவிடுவேன் ….” என்ற கார்த்திக்கின் குரலில் வெட்கம் கலந்த சங்கடம் தெரிந்த்து .

முதலில் அறைக்குள் போன வீரேந்தர் கூச்சத்துடன் இந்த பால்கனி சுவர் பக்கம் வந்து நிற்க , அதே இடத்திற்கு சாத்விகாவும் ஓடி வர , அந்த நீண்ட குறுகலான இடத்தில் முன்பே எதற்கோ வந்திருந்த கார்த்திக் வழியை இவர்களிருவரும் மறைத்து நின்றிருக்க ஙெளியேற முடியாமல் குரல் கொடுத்து கொண்டிருந்தான் .

” இந்த பக்கம் எரிந்து கொண்டிருந்த பல்ப் டூம் கொஞ்சம் சரிந்திருந்த்து .அதை சரி செய்யலாமென குனிந்து பார்த்து கொண்டிருந்தேன் .அதற்குள் நீங்கள் வந்துவிட்டீர்கள் ….” கல்யாண வீட்டு அலங்காரத்திற்காக அதிகப்படியாக பொருத்தப்பட்டிருந்த பல்ப் ஒன்றை திரும்பி நின்றபடியே சுட்டிக்காட்டினான் .

சாத்வகாவை வெட்கம் பிடுங்கி திங்க அந்த இடத்தை விட்டு ஓடினாள் .வீரேந்தர் முக்கிய போன் கால் பேசுவது போல் போனை எடுத்து காதில் வைத்துக்கொண்டு ஏதோ பேசியபடி நடந்தான் .அவனை கடந்து போக அவனருகே வந்த கார்த்திக

” மாப்பள்ளை தொந்தரவு கூடாதென்று நீங்கள் அப்போதே உங்கள் போனை சுவிட்ச் ஆப் செய்தீர்கள்…” என மெல்லிய குரலில் கூறி , வீரேந்தரை அசடு வழிய வைத்துவட்டு நடந்தான் .

வேகமாக படியிறங்கிய சாத்விகா அங்கே ஹாலில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த தந்தையையும் , மாமனாரையும் பார்த்தவள் …ஏனோ அவர்கள் முன் போகஙும் கூச்சப்பட்டு இதோ அடுப்படிக்குள் வந்து உட்கார்ந்து கொண்டிருக்கிறாள் .

” காலையிலிருந்து உங்களோடு போட்டோ எடுக்க வேண்டுமென்று ஆசை திதீ. உங்கள் பக்கத்தில் கூட வரமுடியவில்லை .நான்தான் இப்போது புது போன் வாங்கியிருக்கிறேனே .வாருங்களேன் நாம் இருவரும் சேர்ந்து போட்டோ எடுத்துக் கொள்வோம் ….” தான் புதிதாக வாங்கிய கேமெரா போனை எடுத்தபடி ஆசையுடன் கேட்ட சாந்தினிக்காக அவள் அருகே நின்று செல்பி எடுத்துக் கொண்டாள் சாத்விகா .

” உங்களுக்கு நான் வேறு என்ன சொல்லட்டும் திதீ …? ” கண்களை சிமிட்டியபடி சாந்தினியும் தன் கேலியை தொடங்க …” நீ என்னிடம் அடி வாங்க போகிறாய் …” என மிரட்டி அவளை சமாளித்துவிட்டு , சமையலறை பின்வாசல் வழியாக சற்று இருளாக தெரிந்த வீட்டின் பின்புறத்தில் வந்து நின்றாள் .

” ராஸ்கல் …இவனை சந்தித்ததிலிருந்து அடிக்கடி இப்படி வெட்கப்பட்டு தொலைய வேண்டியிருக்கிறது …” சற்று முன் கணவன் கவ்விய கன்னத்தை வருடியபடி ஏதேதோ இனிய கற்பனைகளில் மூழ்கியபடி நின்றாள் .




அப்போது யாரோ வருவது போல் தோன்ற சூழ்ந்திருந்த  அரையிருளில் யாரென்று உன்னித்து பார்த்தவள் சண்முகபாண்டியனும் , சக்கரவர்த்தியும் வருவதை பார்த்ததும் , இவர்கள் ஏன் இப்போது இங்கு வருகிறார்கள் …என நினைத்தபடி   இன்னமும் கொஞ்சம் மறைவாக இருளுக்குள் போனாள் .

” என் மகளை பாதுகாப்பான இடத்தில் ஒப்படைத்துவிட்டேன் மேஜர்.இனி நான் நிம்மதியாக இருப்பேன் ….” என்ற சண்முகபாண்டியனுக்கு …

சக்கரவர்த்தியின் பதில்….

சாத்விகாவின் நெஞ்சில் தணலை வாரி இறைத்தது .வீரேந்தருடன் தனது வாழ்வை தொடர முடியுமா …என்ற சந்தேகத்திற்கு அவளை தள்ளியது .

” தாலி கட்டி விட்டதாலேயே உன்னோடு நான் சேர்ந்து வாழத்தான் வேண்டுமா ….? “

அன்றிரவு அவளை அணைக்க ஆசையாய் நெருங்கிய கணவனிடம் அவள் இப்படித்தான் கேட்டாள் .

What’s your Reaction?
+1
16
+1
8
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!