karpoora pommai onru Serial Stories கற்பூர பொம்மை ஒன்று

கற்பூர பொம்மை ஒன்று – 31

31

வெட்கங்களை பூக்க வைக்கும் 
உன் கலைக்கு 
என்ன மாற்று செய்ய …?
கால் பெருவிரல் 
கோலமிடுதலை விட …

” என்ன ….? என்ன கேட்டீர்கள் …? ” நம்பமுடியாமல் திரும்ப கேட்டாள் .

” என்னை திருமணம் செய்து கொள்ள கேட்டேன் ….” இப்போது கொஞ்சம் குரலுயர்த்தி தெளிவாக சொன்னபடி , அவள் விழிகளை ஊடுறுவினான் .

இமைகளை சிமிட்டவும் மறந்து அப்படியே அமர்ந்திருந்தாள் சாத்விகா .

” நீ அந்த சுகுமாரை காதலித்தாயா சாத்விகா …? ” அவள் கண்களுக்குள் பார்த்தபடி கேட்டான் .

” அவரை திருமணம் செய்து கொள்ளச் சொல்லி நீங்கள்தான் சொன்னீர்கள் …” வீரேந்தருக்கு நினைவுறுத்திய சாத்விகாவின் இமைகள் இன்னமும் பிரமிப்பினால் இமைக்கவில்லை .

” அது …அப்போதிருந்த சூழ்நிலைக்கேற்ப நான் சொன்னது .இப்போது…அது …அவன் …சுகுமார் உனக்கு வேண்்டாம்தானே ….? ” தான் எதிர்பார்த்த பதிலை அவள் வாய் வழி வர தூண்டினான் .

” அ…அதை பற்றி இன்னமும் நான் ஒரு முடிவுக்கு வரவில்லை ….” திணறினாள் .

” இப்போது வந்துவிடேன் ….இனியும் அவனை திருமணம் செய்து கொள்ளத்தான் நினைக்கிறாயா ….? “




” அப்பா …அப்படித்தான் சொல்வார் ….”

” அப்பா சொல்வதையெல்லாம் தட்டாமல் செய்பவளா நீ …? “

” எனக்கு குழப்பமாக இருக்கிறது ” தலையை பற்றியபடி குனிந்தாள் .

தலையை பற்றியிருந்த அவள் கைகளை ஆதரவாக பிடித்தவன் ” குழம்புவதற்கு ஒன்றுமில்லை பேபி .உன் மனதை கேட்டு முடிவெடு …” என்றான் .

” நான் யோசிக்கவேண்டும் …”

அவர்கள் முன் இருந்த டீப்பாயில் தட்டென்ற சத்தத்துடன் கீழே பரவிய சிதறலுடன் ஜூஸ் கிளாஸ் வைக்கப்பட்டது .

” உனக்கு வேலை இல்லையா வீரா …? நடுவீட்டில் உட்கார்ந்து கொண்டு …என்ன இது …வேலைக்கார்ர்கள் இருக்கிறார்கள் ” மெல்லிய குரலென்றாலும் ஆத்திரம் அதிகமிருந்த்து சந்திரிகாவின் குரலில் .அவள் பார்வை அருகருகே அமர்ந்து பற்றியபடியிருந்த அவர்கள் கைகளின் மேல் எரிச்சலாக படிந்திருந்த்து .

” என்னம்மா ….சும்மா உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்கிறோம் . இதிலென்ன இருக்கிறது …? ” தாய்க்கு ஆட்சேபணை சொன்னவன் தனது நெருக்கத்தை மாற்றிக்கொள்ளஙில்லை .

” சும்மா பேசுவது போல் தெரியவில்லை …” முணுமுணுத்தபடி சென்ற சந்திரிகாவின் நுண்ணறிவு சொன்னதை போல் வீரேந்தரும் , சாத்விகாவும் சும்மா பேசிக்கொண்டிருக்கவில்லை .வாழ்வின் முக்கிய முடிவை எடுத்துக் கொண்டிருந்தனர் .

” மாடிக்கு உன் அறைக்கு போய் நிதானமாக யோசி ….எனக்கு வெளியே ஒரு வேலை இருக்கிறது .ஒரு மணி நேரத்தில் வருகிறேன் ….” சாத்விகாவின் தலையை வருடிவிட்டு வீரேந்தர் எழுந்து சென்றான் .

வீரேந்தரை சந்தித்த ஆரம்ப நாளிலிருந்து யோசிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் அறையினுள் நுழைந்து சோபாவில் அமர்ந்த சாத்விகாவின் மனதில் வீரேந்தரின் உருவம் தவிர வேறு எதுவும் நினைவில் வரவில்லை .வீரேந்தருடன் திருமணம் என்ற நினைப்பலேயே இதயம் படபடத்து புஸ்வானம் ஒன்று மனதிற்குள் சீறி கங்குகளாய் விழுவதை உணர்ந்தாள் .இந்த உணர்வு பிடிக்கிறதா …இல்லையா ..? அவள் குழப்பத்தல் இருந்த போதே அறைக்கதவை தறந்து கொண்டு வீரேந்தர் வந்தான் .

” முடிவெடுத்து விட்டாயா பேபி ….? ” கேட்டபடி அவளருகில் சோபாவில் அமர்ந்தான் .

இவனென்ன அதற்குள் வந்துவிட்டான் …? திகைப்புடன் மணி பார்க்க அவன் போய் அரைமணி நேரமே ஆகியிருந்த்து .

” ஒரு மணி நேரம் டைம் கொடுத்திருந்தீர்கள் …” கோபமாக சொன்னாள் .

” அதனால் என்ன பேபி …போன வேளை முடிந்த்து .வந்துவிட்டேன் .இன்னும் பதினைந்து நாட்களில் கைலாசநாதர் கோவிலில் நம் திருமணத்திற்கு ஏற்பாடு செய்துவிட்டு வந்திருக்கிறேன் ..”

” என்ன …நான் இன்னமும் ஒரு முடிவும் சொல்லவில்லையே …அதற்குள் ஏன் இப்படி செய்தீர்கள் …? “

” ஒரு சின்ன ” ம் ” சொல்ல  நீ ஏன் இவ்வளவு தாமதமாக்குகிறாய் …? “

” எனக்கு தடுமாற்றமாக இருக்கிறது …” நெற்றிப் கோட்டை அழுத்தி விட்டுக்கொண்டாள் .

” நான் உதவட்டுமா பேபி …? ” அவளை நெருங்கினான் .

” எ…எதற்கு …? ” மிக நெருங்கிநவனை மிரட்சியாய் பார்த்தபடி கேட்டாள் .

” உன் தடுமாற்றம் போக்கி உன்னை தெளிவாக்க …” என்றபடி அவள் இரண்டு கன்னங்களையும் பற்றினான் .
” என்னை பார் பேபி …என் கண்களை பார் …” கன்னங்களை வருடியபடி கூறியவனின் மென்குரலில் மெஸ்மரிக்கப்பட்டு அவன் கண்களை பார்த்தபடி இருந்தவளின் விழி வட்டத்தில் அவள் இதழ்களை நெருங்கிய அவனது உதடுகளின் வரி வடிவம் தெளிவாக தெரிய நடக்கப்போவதை ஊகித்து மூளையில் உணரும் முன்பே அவனது இதழ்கள் அவளது இதழ்களை …அவளை …சிறை செய்திருந்தன.

குளிருக்கு இதமான கணப்பு அடுப்பினருகே சில நிமிடம் இதமாய் உலவிவிட்டு திரும்பிய சாத்விகா , மரத்துவிட்டிருந்த தனது இதழ்களை மடித்து கடித்தபடி …யோசித்தாள் .இது எப்படி நடந்த்து …?

” இப்போது ஓ.கே வா பேபி …? ” வீரேந்தரின் மாயக்குரல் காதிற்குள் கிசுகிசுக்க , அவன் மார்பின் சுருண்ட முடிகளுக்குள் ஆழ்ந்து விட்ட தனது விழிகளை மீட்க முடியாமல் தவித்தாள் .

” என்ன செய்தாலும் …பதிலுக்கு பதில் செய்வாயே …இப்போது என்ன ஒரு பதிலும் கொடுக்காமல் அப்படியே உட்கார்ந்து விட்டாய் …? ” சீண்டினான் .

” என்ன செய்கிறீர்கள் …? ” பலவீனமாய் முணுமுணுத்தாள் .

” என்ன செய்தேனென்று தெரியவில்லையா …? விழிகள் சொக்க தூங்கி விட்டாயா பேபி …வேண்டுமானால் திரும்பவும் …” என்றபடி மீண்டும் நெருங்கியவனை வரவழைத்துக் கொண்ட கோபத்துடன் பலமிழந்த கைகளால் தள்ளினாள் .

” நான் என்ன கேட்டால் …நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் …? “

” நம் திரமண விசயத்தில் நீ தெளிவான முடிவெடுக்க உனக்கு உதவிக்கொண்டிருந்தேன் பேபி …”




சாத்விகாவின் தள்ளல் வீணானது .வீரேந்தர் இன்னமும் அவளை நெருங்கியிருந்தான் . அவள் கழுத்தை கைகளால் அணைத்து தன் மார்பில் புதைத்துக் கொண்டவன் …” நம் திருமணத்திற்கு டிரஸ் நகை செலக்ட் செய்ய போகலாமா பேபி …? ” என்றான் .

அவன் மார்பின் வாசத்தில் மூழ்கியபடி ” இ…இது சரியாக வருமா …? ” சாத்விகா திணறியபோது அவள் கன்னம்  அழுத்தமானதொரு இதழொற்றலால் நிரம்பியது .

” சரியாக வராதா பேபி …? ” கேட்டபடி அவள் முகத்தை திருப்பினான் .மற்றொரு கன்னத்திற்காக .

” ப்ளீஸ் நீங்கள் கொஞ்சம் தள்ளி உட்கார்ந்து பேசுங்களேன் ….”

” நீ இவ்வளவு குழப்பத்தில் இருக்கும் போது உன்னை தனியாக விட்டுவிட்டு …நான் எப்படி தள்ளியிருப்பேன் பேபி ….” வீரேந்தர் மேலும் முன்னேறி அடுத்த கன்னத்தை இதழ்களால் முற்றுகையிட்டான் .சாத்விகாவின் உடல் ஆக்ரோஷ அருவித்தண்ணீரில் மெத்மெத்தென்று அடித்து சொல்லும் சுக வேதனையை உணர்ந்த்து .

இவன் ஏன் இப்படி செய்கிறான் …? மிகவும் ஒழுங்காக இருப்பானே …மிக நல்ல பையனே …இன்று ஏன் இப்படி …?

” உங்களை நல்ல பையனென்று நினைத்தேன் ….” அவனிடம் தோற்றபடி ….ஜெயித்த உணர்ச்சி ஏன் வருகிறது …எனப் புரியாமல் அவனை தள்ளினாள் .

” நான் நல்ல பையன்தான் பேபி .ஒரு நல்ல பையன் தன் மனைவியிடம் எப்படி நடந்து கொள்வானோ …அப்படி நடந்து கொள்கிறேன் …”

” நான் உங்கள் மனைவியா …? “

” ஆமாம் .நான் முடிவு செய்துவிட்டேன் “

” நான் முடிவு செய்ய வேண்டாமா …? ” அவள் மேனி மீது படர துடித்த அவன் கை விரல்களை பாடுபட்டு தடுத்தபடி கேட்டாள் .

” நீயும் முடிவு செய்துவட்டாய் பேபி .ஆனால் அது உனக்கே தெரியவில்லை “

” எனக்கே தெரியாத்து உங்களுக்கு தெரிந்து விட்டதாக்கும் .நான் எப்போது நம் திருமணத்தை முடிவு செய்தேன் …”

” உன் குடும்பத்தை எதிர்த்து கொண்டு என்னை மட்டுமே நம்பி டில்லிக்கு ப்ளைட் ஏறினாயே .அப்போது “

சாத்விகா ஸ்தம்பித்தாள் .இருபத்தியிரண்டு வருடமாக கண்ணுக்குள் வைத்து வளர்த்த பெற்றோர்களை உதறிவிட்டு எந்த நம்பிக்கையில் இவனை நினைத்து வந்தாள் …? அன்றே இந்த கேள்வியை தனக்குள் கேட்டிருந்தாள் .ஆனால் பதில்தான கிடைக்கவில்லை .இன்று …இவன் சொல்வதை பார்த்தால் …அப்படியிருக்குமோ …எனத் தோன்றியது .

வீரேந்தரை முதன் முறை பார்த்ததிலிருந்தே அவன் மீது தனக்கு ஒரு ஈர்ப்பு ஏற்படுவதை சாத்வகா உணர்ந்தே இருந்தாள் .ஆனால் அதனை கொஞ்சம் அழகாக இருக்கும் ஆண் மீது ஏற்படும் ஹீரோ ஒர்சிப் என்றுதான்  நினைத்திருந்தாள் .ஏனென்றால் அவள் அப்போது சுகுமாரோடு திருமண நிச்சயத்தில் இருந்தாள் .

அது போல் வருங்கால மாப்பிள்ளையென்ற அறிமுகத்தோடு சுகுமார் அருகிலேயே இருந்தாலும் , எந்நேரமும் அவளை தொடும் ஆவலை வெளிப்படுத்தியபடியே இருந்தாலும் …சாத்விகாவின் மனதில் என்றும் அது போன்ற எண்ணங்கள் வந்த்தில்லை .சந்தர்ப்பங்களை ஏற்படுத்தி சுகுமார் அவளை உரசும் போதெல்லாம் சப்பென அவனை அறைய துடிக்கும் கைகளை கஷ்டப்பட்டு கட்டுப்பாட்டிற்குள் வைப்பாள் .

ஆனால் இப்போது …இதோ சுதந்திரமாக அவள் கழுத்தில் முகம் புதைத்தபடி இருக்கும் வீரேந்தரை தள்ள முடியவில்லை .உடலால் அல்ல .மனதால் .தனது உடலும் , மனதும் தனித்து செயல்படக்கூடும் என்று சாத்விகா என்றுமே நினைத்ததில்லை .இதோ இப்போது அப்படித்தான் நடந்து கொண்டிருந்த்து .சாத்விகாவின் உடலை எளிதாக தன் கட்டுக்குள் கொண்டு வந்து கொண்டிருந்தான் வீரேந்தர் .

மேலும் ..மேலும் பலவீனமாகி அவன் கைகளுக்குள் வீழும் அந்த நிலையை பெறாமல் இருக்க மெல்லிய குரலில் ” எனக்கு சம்மதம் …” என்றாள் .

ஒரு நிமிடம் அவள் கழுத்தில் அழுந்த முகம் பதித்தவன் பிறகு அவள் கழுத்து வளைவில் அழுத்தமாக தன் இதழ்களை சத்தத்தோடு பதித்து விட்டு அவளை விடுவித்தான் .” தேங்க் யூ பேபி ….”

” நான் அப்பா , அம்மாவிடம் விசயத்தை சொல்கிறேன் …” என எழுந்தான் .

” அவர்களுக்கு என்னை பிடிக்காதே …” சாத்விகா கவலையோடு கேட்டாள் .

அண்ணாந்து தன்னை பார்த்தபடி கலக்கம் கண்களில் பாய குழந்தைத்தனமாக கேட்ட சாத்விகாவை கண்ட வீரேந்தரின் மனம் பாகாய் உருக , உட்கார்ந்திருந்தவளின் இடையை குனிந்து  இழுத்து எழ வைத்து தன்னோடு சேர்த்து ஒட்டிக்கொண்டவன் ” அதை நான் பார்த்துக் கொள்கிறேன் பேபி …” ரகசிய குரலில் முணுமுணுத்துவிட்டு , முரட்டுத்தனமான முத்தமொன்றை இதழில் விட்டு விட்டு , தடுமாறிய சாத்விகாவை தாங்கி சோபாவில் அமர வைத்துவிட்டு ….நிதானமாக உதட்டை குவித்து விசிலால் ஒரு சினிமா பாட்டை ஹம் செய்தபடி வெளியேறினான் .

சாத்விகாவிற்கு அவனை பார்க்க ஆச்சரியமாக இருந்த்து ்இவன் எப்படி …இப்படி மாறினான் …? சினிமா பாட்டை விசிலடிக்கும் விடலை பையன் போல் .அவன் சினிமாவே பார்ப்பதில்லை என்பதை சாத்விகா அறிவாள் .பாடல்களும் கேட்பதில்லை .டிவியில் நியூஸும் , ஸ்போர்ட்ஸ்சும்தான் .அவன் காதலிக்கிறான்  என்பதையே நம்பமுடியாது .அதிலும் அவளை காதலிக்கிறான் என்பதை நம்பவே முடியாது .மெல்ல தன் கையில் கிள்ளிப் பார்த்துக்கொண்டாள் .அது தேவையில்லை …நானிருக்கிறேன் என்றது சற்று முன் அவள் வாங்கிய இதழழுத்தம் .

—————————

” அந்த நிலா வேண்டுமென்று கேட்டாலும் வாங்கி தந்துவிடுவீர்களோ …? “

” என்ன … ஏன் இப்படி கேட்கிறாய் பேபி …? ” கையிலிருந்த ஐஸ்க்ரீம் ஸ்பூனை கப்பினுள்  போட்டுவிட்டு கேட்டான் .

” உங்கள் அப்பா , அம்மாவிடமே நம் திருமணத்திற்கு சம்மதம் வாங்கி விட்டீர்களே .அதை விட கடினமானதா அந்த நிலாவை வாங்குவது …? “

” ஹா …ஹா .நிலாவை வாங்க முடியாது பேபி .ஆனால் நாம் நிலாவிற்கு போகலாம் .சொல் பேபி உனக்கு சரியென்றால் நாம் நிலாவிற்கு போகலாம் ….” என்றவனின் குரலில் அதற்கான உறுதி தெரிந்த்து .

” எப்போது இப்படி ஒரு காதல் மன்னனாக மாறினீர்கள் …? “

” எப்போதோ …உன்னை சந்தித்த ஏதோ ஒரு நொடியில் …அது உன்னை முதன் முதலாக உங்கள் வீட்டில் சந்தித்தேனே…காரை கொண்டு வந்து என் மேல் மோத வந்தாயே …அந்த நொடியாக கூட இருக்கலாம் …” தன் கப்பிலிருந்து ஐஸ்க்ரீமை அள்ளி அவள் வாயில் திணித்தான் .

” ம்க்கும் …காரால் மோதுபவர்கள் மேலெல்லாம் காதல் வருமாக்கும் …? “

” மற்றவர்கள் பற்றி தெரியாது பேபி .ஆனால் எனக்கு வந்த்து …”

” பொய் .அப்போதெல்லாம் என்னை எப்படி முறைத்துக் கொண்டே இருப்பீர்கள் …? காதலிப்பவர்கள் அப்படித்தான் இருப்பார்களாக்கும் …? “

” வேறு வழி …நீ நான் வேலை செய்ய வந்திருக்கும் முதலாளி மகள் .முதல் சந்திப்பிலேயே ஒரு ஆணுடன் வருகிறாய் .அவன் உனக்கு நிச்சயித்த மாப்பிள்ளை என்கிறார்கள் . நீ என்னிடமே எனக்கு நிச்சயித்த மாப்பிள்ளையை பற்றி விசாரித்து சொல்லு என்கிறாய் .அப்போது நான் என்ன செய்யட்டும் …? “

” ஒரு பிரச்சினையும் இல்லை .அவனை திருமணம் செய்து கொள் என்று கூறிவிட்டு , சொல்லாமல் கொள்ளாமல் ஓடி வந்து விட்டு …இப்போது என்னிடம்  லவ் டயலாக்கா அடிக்கிறீர்கள் …? ” அவன் கைகளில் கிள்ளினாள்.

” ஏய் ஏன்டி கிள்ளுற எருமை .அடுத்த மாதம் உன் திருமண நிச்சயதார்த்தம் இருக்கிறது .அதற்கு நான் கண்டிப்பாக கலந்து கொள்ள வேண்டுமென உன் அப்பாவும் , அண்ணாவும் மாறி மாறி சொல்லி என்னை கடுப்பேற்றிக் கொண்டிருந்தார்கள் .நீ அடுத்தவன் விரலில் மோதிரம் மாட்டுவதை கண்ணீர் விட்டுக்கொண்டு என்னை பார்க்க சொல்கிறாயா …அதனால்தான் …”

” எங்கருந்தாலும் வாழ்கன்னு பாடிட்டு தோளில் சால்வை போட்டுட்டு வந்துட்டீங்களாக்கும் ….”

” பாடவில்லை .சால்வை போடலை …ஆனால் நன்றாகயிருன்னு வாழ்த்திட்டு வந்தேன் .”

” பெரிய தியாகி …”

” இல்லை சாத்விகா ்உன் அப்பா மீது எனக்கு எப்போதும் அளவு கடந்த மரியாதை உண்டு .உனக்காகவென அவர் தேர்ந்தெடுக்கும் எதுவும் தவறானதாக இருக்காது என்பதில் எனக்கு முழு நம்பிக்கை .அதனால்தான் , உன்னை திருப்தியாகத்தான் அங்கே விட்டு விட்டு வந்தேன் …”

அப்பாவின் பேச்சு வரவும் சாத்விகா மௌனமானாள் .குனிந்து தன் கப் ஐஸ்க்ரீமை கிளற ஆரம்பித்தாள் .

” நம் திருமணத்திற்கு அவர்களை அழைக்கலாமா சாத்விகா …? ” மெல்ல கேட்டான் .

” வேண்டாம் .என் அம்மாவை பற்றிய உண்மை தெரியும் வரை அவர்களை பார்க்க நான் விரும்பவில்லை “

” அப்படி என்ன உண்மை …உன் அம்மாவை பற்றி நீ  அறிந்து கொள்ள நினைக்கிறாய் …? ” வீரேந்தரின் குரலில் காதலும் , விளையாட்டுத்தனமும் மறைந்து எரிச்சல் வந்திருந்த்து .

” என்ன வீரா இப்படி கேட்கிறீர்கள் …நீங்களே அன்று பார்த்தீர்களே …அந்த ரேணுகாதேவி….” பேசியவளை கையை உயர்த்தி நிறுத்தினான் .

” ப்ளீஸ் சாத்விகா .நம் திருமணம் முடியும் வரை நீ உன்னுடைய டிடெக்டிவ் வேலையை எல்லாம் தயவுசைய்து மூட்டை கட்டி வை .அதன் பிறகு நாம் இருவருமாக சேர்ந்தே ரோடு …ரோடாக உன் அம்மாவை தேடலாம் .சரிதானே ்இப்போது இது கரைந்துவிட்டதால் ஒன்று தூக்கி குடித்துவிடு அல்லது …” என்றவன் எழுந்து காலால்  குப்பைவாளி மூடியை திறந்து அதனுள் எறிந்து விட்டு வேகமாக வெளியே நடந்தான் .




அவன் கோபத்தில் வாடிய சாத்விகா வேகமாக அவனுடன் போய் காரில் ஏறிக்கொண்டு அவனை சமாதானப்படுத்த முயன்றாள் .

ஆனால் சமாதானப்படுத்த முடியாத கோபம் சாத்விகாவிற்கு வரும்.படி ஒரு வேலை செய்து வைத்தான் வீரேந்தர் .

அவர்கள் திருமணத்திற்கு இரண்டு தினங்கள் முன்பு தனது தட்டிய அறைக்கதவை திறந்த சாத்விகா அதிர்ந்தாள் .அங்கே ” பாப்பா ..” என்ற அழைப்புடனும் , கலங்கிய கண்களுடனும் நின்றிருந்தாள் சௌந்தர்யா .

What’s your Reaction?
+1
16
+1
13
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!