karpoora pommai onru Serial Stories கற்பூர பொம்மை ஒன்று

கற்பூர பொம்மை ஒன்று – 23

   23

அச்சடித்த உன் அச்சாரங்களுக்கிடையே 
எப்படி மறைப்பேன் 
என் அதீத பெண்மையை ?

” பொழுது எப்படி போனது சாத்விகா …? ” அந்த சாலை மிகவும் கரடு , முரடாக ஏற்ற இறக்கத்துடன் இருந்த்து .அது போன்ற பாதைகளுக்கேற்ற ஜீப்பை அன்றைய பயணத்திற்காக எடுத்து வந்திருந்தான் வீரேந்தர் .அவன் அந்த அதிகாலையிலேயே குளிர …குளிர அதை பற்றிய பிரக்ஞையின்றி அதற்கான பாதுகாப்பு உடைகளெதுவும் இன்றி , ஒரு அழுக்கு வண்ண முரட்டு ஜீன்சும் , கறுப்பு வண்ண முழுக்கை சட்டையும் அணிந்தபடி , சிலீரென வீசும் குளிர் காற்றில் …ஒட்ட வெட்டியிருந்த தனது ராணுவ ஹேர் கட்டிலும்  ஆண்மை மிளிர அழகாய்  ஒரு கையால் அலட்சியமாக அந்த ஜீப்பை ஓட்டிக்கொண்டிருந்தான் .

கனமான சுடிதார் ஒன்றுக்கு மேலே குளிருக்கான ஸ்வெட்டர் ஒன்றும் அணிந்து கொண்ட பிறகும் , காது …மூக்கு வழியே நுழையும் குளிரை கட்டுப்படுத்த முடியாமல் காது மடலும் , மூக்கு நுனியும் குளிரில் சிவக்க அடிக்கடி தனது உள்ளங்கைகளை தேய்த்து சூடேற்றி தன் கன்னங்களில் வைத்து சூடு பெற்றுக் கொண்டிருந்த சாத்விகா …வீரேந்தரின் குரல் காதிலேயே விழாத்து போல் சாலையில் பார்வையை பதித்திருந்தாள் .

” ரொம்ப மோசமாக போயிருக்காதென்று நினைக்கிறேன் ….சரிதானே …? ” இந்த கேள்விக்கும் வீரேந்தர் பதில் பெறவில்லை .

” சுகிர்தாக்கா என்ன சொல்கிறார்கள் .மிகவும் நல்லவர்கள் தெரியுமா ….? “

சாலையில் ஓடிய ஒரு தெரு நாயை சுவாரஸ்யமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவளை புன்னகையோடு பார்த்தான் .” இன்று மௌனவிரதமா பேபி …? “

ம்ஹூம் …சாத்விகா தலையை லேசாக கூட அவன்புறம் திருப்பவில்லை .

சட்டென ஒரு ப்ரேக்கில் ஜீப்பை நிறுத்தினான் .” இறங்கு …”

” இங்கே …எங்கே …? ” முகம் சுளித்தாள் .




” குளிர் இன்று மிக அதிகம் சாத்வி .அதிக குளிர் உன்னை பாதித்து உனக்கு காது அடைத்து கொண்டதென்று நினைக்கிறேன் .அதுதான் அப்போதிலிருந்து நான் மட்டுமே பேசிக்கொண்டிருக்கிறேன் .பாவம் உனக்கு காது கேட்கவில்லை .அதோ அந்த டீக்கடையில் சூடாக ஒரு டீ குடித்தோமானால் குளிர் கொஞ்சம் குறைந்து அடைத்திருக்கும் உன் காதுகள் திறக்க வாய்ப்பிருக்கிறது ….வா ….”

இவனை ….கையால் அடிக்கலாமா ….? இல்லை இங்கே எதுவும் கட்டை கிடக்குமா …சுற்றுமுற்றும் சாத்விகா தேட துவங்க …

” கட்டை சுற்றும் அளவு ஆத்திரம் வேண்டாம் பேபி .அடிக்கிறதென்றால் கையாலேயே அடித்து விடு …” அவளுக்கு அடிக்க தோது போல் லேசாக திரும்பி அமர….

” ஆறடி உயரத்தில் அசுரன் போல் உட்கார்ந்திருக்கிறாய் .உன்னை அடித்து என் கையை நான் புண்ணாக்கி கொள்ளவா …? கட்டை கையில் கிடைத்ததும் மண்டையிலேயே ஒன்று போடுகிறேன் …” குரோதமாய் சொன்னாள் .

” வெல்கம் பேபி .தயாராக இருக்கிறேன் …” ஏதோ அவள்  மாலை …மரியாதை பண்ண போகிறாள் போல் தலை குனிந்து நமிர்ந்தான் .பற்களை கடித்து கோபத்தை அடக்கனாள் அவள் .

” இப்போது போய் டீ குடிக்கலாமா …? ” அவனுக்கு முன்னால் வெடுக்கென இறங்கி அந்த டீக்கடை நோக்கி நடந்தாள் .ஆவி பறக்கும் டீ  சூடாக தொண்டையில் இறங்கிய போது , கொஞ்சம். குளிர் குறைந்தாற் போலவேயிருந்த்து .

” என்ன கோபம் பேபி …? ” தனது கையிலிருந்த கண்ணாடி டீக் கிளாஸின் இளஞ்சூட்டினை மெல்ல அவள் கைகளில் பதித்து எடுத்து அவளது விறைத்திருந்த கைகளை சூடாக்க முயன்றபடி கேட்டான் .

” ப்ச் …அந்த வீட்டில் என்னை விட்டு போய் முழுதாக நான்கு  நாட்களாகிவிட்டது .நீங்கள் பாட்டிற்கு உங்கள் வேலையை பார்க்க போய்விட்டால் எப்படி…? “

” எனக்கு கொஞ்சம் வேலை பேபி .வழக்கமான வேலைகளோடு உன்னோடு தேடுதல் வேட்டை வேறு இருக்கிறதே .அதனால் எனது வேலைகளை கொஞ்சம் ஒதுக்கிவிட்டு வந்தேன் ….”

உனக்காக வேலைகளை ஒதுக்கிவிட்டு வந்தேன்..என்ற வீரேந்தரின் பேச்சு சாத்விகாவிற்கு திருப்தியளித்தது .” ம் …சரி …சரி .அதை சொல்லியிருக்கலாமே ….” முணுமுணுத்தாள் .

” இதோ சொல்லிவிட்டேனே .இப்போது நீ சொல்லு சுகிர்தாக்கா எப்படி பழுகுகிறார்கள் …”

” ரொம்ப நன்றாக .என்னை அருமையாக கவனித்து கொண்டார்கள் .வேளா வேளைக்கு சாப்பாடு , தூக்கம் என ஒரு மகாராணி போல் நடத்தினார்கள் …” தான் பெற்ற அன்பை இனிமையாக நினைவு கூர்ந்தாள் .

” உன் அம்மாவை விடவா …? ” கேட்டுவிட்டு குடித்து முடித்திருந்த அவள் கை டீ கிளாஸையும் சேர்த்து வாங்கி போய் வைத்துவிட்டு வந்தான் .

புரியாமல் நின்றவளடம் ” உன் சௌந்தர்யா அம்மாவை விடவா ….அன்பாக கவனித்து கொண்டார்கள் …? ” விளக்கமாக கேட்டான் .

” அவர்கள் வேறு …இவர்கள் வேறு .நீங்கள் எதற்கு இருவரையும் ஒப்பு சேர்க்கிறீர்கள் …? “

” ஆமாம் உன் சௌந்தர்யா அம்மா யாருடனும் ் ஒப்பு சேர்க்க முடியாதவர்கள் .” என்றவனை முறைத்துவிட்டு போய் ஜீப்பில. ஏறிக்கொண்டாள் .பின்னால் வந்து ஏறியவனிடம் …” அந்த கடிதங்களை தாருங்கள் …” கை நீட்டினாள் .

” எதற்கு …? ” கியரை மாற்றி ஜீப்பை ஸ்டார்ட் பண்ணி ஓட்ட ஆரம்பித்தான் .

” எனக்கு வேண்டும் .என் அம்மா சம்பந்தமாக என்னிடம் இருக்கும் ஒரே ஆதாரம் அதுதான் .அதனை நானே வைத்திருக்க விரும்புகிறேன் …”

” என் மேல் நம்பிக்கை இல்லையா சாத்விகா  …? ” சாலையை பார்த்தபடி கேட்டாலும் வீரேந்தரின் பார்வை அவன் கேள்வியை விட ஈட்டி நுனியாக  வலிமையாய் சாத்விகாவை தாக்கியது .

” நம்பிக்கைக்காக இல்லை .அங்கே சுகிர்தாக்கா , இன்னமும் இரண்டு பேர் சிந்தி மொழி படிக்க தெரியுமென்று சொன்னார்கள் ….”

” நான் மூன்று வருடங்கள் பாகிஸ்தான் பார்டரில்தான்  வேலை பார்த்தேன் .ஐந்து முறை பாகிஸ்தானுக்குள் போய் வந்திருக்கிறேன் .எனக்கு பதினைந்து மொழிகள் சரளமாக பேச , வாசிக்க வரும் .அதில் சிந்தியும் ஒன்று .” வீரேந்தர் இலகுதன்மை மறைந்து இறுகியிருந்தான் .

” வெறும் நல விசாரிப்பென்று சொன்னீர்கள் …” சாத்விகாவின் குரல் இறங்கியிருந்த்து .

” அந்த அளவு நம்பிக்கையின்றி ஏன் என்னை தேடி வந்தாய் சாத்விகா …? “

” எனக்கு வேறு வழி இருக்கவில்லை …”

” ஓ…உனது நம்பிக்கையின்மையை பெற்றதற்கு வருந்துகிறேன் பேபி .இப்போது சொல் நாம் எங்கே போக …? அந்த கடிதங்களை என் வீட்டில் வைத்திருக்கிறேன் .அதை எடுத்து வந்து உன்னிடம் தந்து விடவா …? நீ  நாளை உன் சுகிர்தாக்காவை உடன் அழைம்துக்கொண்டு வந்து அந்த அட்ரஸை விசாரித்து கொள்கிறாயா  …? ” ஜீப்பை நிறுத்தியிருந்தவனை இயலாத கோபத்தோடு முறைத்தாள் .

” எனக்கு உங்களை விட்டால் வேறு வழியில்லையென எண்ணித்தானே இப்படி பேசுகிறீர்கள் ….? ” கலங்கிய கண்களை மறைத்தபடி கேட்டாள் .




” உன்னை கலங்க வைப்பது என் எண்ணமல்ல சாத்விகா .உன் மேல் அக்கறையுள்ளவர்களை சந்தேக கண் கொண்டு பார்க்கும் உனது இந்த குணத்தை மாற்றிக்கொள் ” முத்தாய்ப்பாக ஒரு அறிவுரையோடு மீண்டும் ஜீப்பை எடுத்தான் .ஆனால் அதன் பிறகு அவளிடம் எதுவும் பேசாமல் மௌனமாகவே ஜீப்பை ஓட்டினான் .பேசாமல் வாயை உம்மென வைத்து வர சாத்விகாதான் திணறிபோனாள் .

அவர்கள் இருவருமாக தேடி போன அந்த கடித்த்தில் இருந்த ” பஸ்ட்டி ” எனும் ஊர் கிராமுமற்ற , நகரமுமற்ற ஒரு நடுவாந்திர ஊராக இருந்த்து .விவசாயம்தான் அங்கே முக்கிய தொழில் போலும் .நிறைய கோதுமை வயல்கள் கண்ணில் பட்டன.

இவர்கள் விசாரித்த வீடு ஒரு விசாலமான வீதியில் ஒற்றை அறையாக வீடா இது என சந்தேகம் கொள்ளும்படி இருந்த்து . இங்கே என் அம்மா இருக்கிறாளா …? அல்லது அவளை தெரிந்தவர்களா …? கலங்கிய மனதுடன் வாசலில் தயங்கி நின்றாள் .

” உள்ளே வா சாத்விகா .வீடு உள்ளே பெரியதாக இருக்கும் …” சொன்னபடி தலை குனிந்து உள்ளே நுழைந்தான் வீரேந்தர் .அவன் சொன்னது போல் ஒற்றை அறைகளாக நீள் சந்து போல் நீண்டிருந்த்து அந்த வீடு .இருளடர்ந்து தென்பட்டது .

” இங்கே ஓரளவே வசதி உள்ள விவசாய குடும்ப வீடுகள் இது போல்தான் இருக்கும் ….” இவளிடம் கிசுகிசுத்துவிட்டு உள்ளிருந்து வந்த பெரியவரடம் இந்தியில் பேச தொடங்கினான் .ரேணுகா என பெயர் சொல்லி …இந்த அட்ரஸிலிருந்து கடிதம் வந்த்து பற்றி விசாரித்தான் .

” ரேணுகா தேவி …ரேணு …ஹே பகவான் .்எவ்வளவு நாட்கள் கழித்து அவளை விசாரிக்க வந்திருக்கிறீர்கள் ….” இந்தியில் அங்கலாய்த்த அந்த பெரியவர் உள்ளே திரும்பி …

” அம்மா இங்கே வாருங்கள் .இவர்கள் ரேணுவை தேடி வந்திருக்கிறார்கள் …” என்றார் .

உள்ளிருந்து வந்த வெள்ளை சேலை கட்டி முக்காடிட்ட அந்த பெண் மீண்டுமொரு முறை இவர்களிடம. விவரங்களை கேட்டு தெரிந்து கொண்டு …” ரேணுகாவா …அவள் மூன்று மாதம் முன்பு வரை இங்கேதான் இருந்தாள் .பிறகு ஒருநாள் பாகிஸ்தான் போய்விட்டாளே …” என்றாள் .

” என்ன …? ” இருவரும் அதிர்ந்தனர் .

” இப்போது அவள் உயிரோடிருக்கும் வாய்ப்புகள் மிகவும் குறைவு …அநேகமாக இறந்திருப்பாள் ”  மேலும் இடிகளை இறக்கி கொண்டிருந்தனர் அந்த பெரியவரும் , பெண்ணும் .

What’s your Reaction?
+1
10
+1
12
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!