mayiladum solayile Serial Stories

Mayilaadum Sollaiyilae – 27

                                             27

 

தன் மடியில் புதைந்து கிடந்த மணிமேகலையை நிமிர்த்தினாள் மாதவி .

” பார்த்தன் என் பிள்ளைடி …நான் பெற்றெடுத்தவன் …என் மகன் ….அவன் பிசிறாக ஒரு காரியம் செய்யமாட்டான் .அப்படி செய்தானானால் அது எனது குடும்பத்தற்காகத்தான் இருக்கும் .அவன் என் குடும்ப பொக்கிசம் ….”

கண் கலங்கிய மாதவியை வியப்புடன் பார்த்தாள் மணிமேகலை .எதற்கும் கலங்காதவள் …தனது மகனுக்காக இவ்வளவு நெகிழகிறாளே …இந்த பாசம்தான் மனிதர்களை என்ன பாடு படுத்துகிறது ….?

” நான் என் வாழ்க்கையை சொல்லிக் கொண்டிருக்கிறேன் ்நீங்கள் உங்கள் மகன் புகழ் பாடிக் கொண்மிருக்கிறீர்களே ….? ” எரிச்சல் போல் பேசி மாதவியின் மனதை நிகழ்வுக்கு திருப்ப முனைந்தாள் .

” என் மகன் புகழை பாட எத்தனை ஆண்டுகள் கிடைத்தாலும் எனக்கு பற்றாது .இப்போது சொல் …உனது பிரச்சினை என்ன …? “

மகாராணியின் தோரணை வந்திருந்த்து மாதவியிடம் .

” நா …நான் பார்த்தனை காதலிக்கிறேன் . உண்மையிலேயே அவரது மனைவியாக விரும்புகிறேன் ….” தலையை குனிந்தபடி மெல்லிய குரலில் சொன்னாள் .

” ரொம்ப தைரியம்டி உனக்கு .அம்மாவிடமே உன் மகனை காதலிக்கிறேன்னு சொன்ன முதல் பெண் நீயாகத்தான் இருப்பாயென்று நினைக்கிறேன்…”

” அத்தை ப்ளீஸ் …கிண்டல் வேண்டாம் …”

” ம் …சரி .எப்போதிருந்து இந்த காதல் …? “

.” அது …தெரியவில்லை .எப்போது அவரை காதலிக்க ஆரம்பித்தேனென எனக்கு தெரியாது .திடுமென ஒரு நாள் யோசித்தால் அவரை காதலித்துக் கொண்டிருக்கிறேன் .அதுவும் அவரை விட்டு பிரியவே கூடாதெனும் அளவு வலிமையான அளவு ….”

” நான் நினைக்கிறேன் . இந்த காதல் உனக்கு என் மகன் உன்னை தோப்பு வீட்டிற்குள் அடைத்து வைத்திருந்தானே , அப்போதே வந்திருக்க வேண்டும் ….”

” இருக்கலாம் ….” மணிமேகலை உடனே ஒப்புக் கொண்டாள் .

” எனக்கு காதல் வழிய வழிய இருக்கிறது .ஆனால் அவருக்கு ….? “

மாதவியிடமிருந்து பதிலின்றி போக , அவளை இறைஞ்சுவது போல் பார்த்தாள் மணிமேகலை .

” உங்களுக்கு அப்படி ஏதாவது தெரிகிறதா அத்தை …? “

” எப்போதுமே என் மகன் யாருடைய கணிப்பிற்கும் அப்பாற்பட்டவன் .அவன் தனித்துவமானவன் …” மாதவியின் பெருமையில் இடையிட்டாள் .

” போதும் உங்கள் மகன் பெருமை பாடியது .முதலில் எனக்கு ஒரு பதில் சொல்லுங்கள் அம்மாவும் , மகனும் ….”

” ம் …என் கணிப்புபடி அவனுக்கு உன் மீது கொஞ்சம் அதிக கவனம் இருக்கிறது என்றுதான் சொல்வேன் .இந்த வீட்டின் நிறைய நடைமுறைகளை உனக்காக மாற்றினானே …”

” ப்ச் …அதெல்லாம் நான் கேட்டுவிட்டேன் .    இந்த வீட்டிற்காக தியாகம் செய்து வந்திருக்கிறேனாம் .எனக்காக அவர் இதனை செய்கிறாராம் ….”

” ஓ …ஆனால் உன்னை பார்க்கும் போது அவன் கண்களில் ஒரு மின்னல் தெரிகிறதே ….”




” நான் கங்கா , யமுனா , காவேரி எல்லோரும் அவருக்கு ஒன்று என்றார் ஒரு நாள் .நான் அந்த இடத்தை விட்டே ஓடி வந்துவிட்டேன் ….”

” என்ன …நீயும் என் தங்கைகளை போல் என்றானா …? ” மாதவிக்கு சிரிப்பு பீறிட , சட்டென அவள் கைகளில் அடித்தாள் மணிமேகலை .

” என் வேதனை உங்களுக்கு சிரிப்பாக இருக்கிறதா …? “

மாதவி வாயை கைகளால் பொத்திக் கொண்டாள் ்

” அவர் …அவர்கள் …அந்த சுனந்தாவுடன் மிகவும் …வந்து அந்நியோன்யமாக …இருந்தார்களா …இருவரும் …? ” தயங்கி தயங்கி கேட டாள் .

மாதவியின் சிரிப்பு நின்றது .

” நான்தான் சொன்னேனே .என் மகன் யாருடைய கணிப்பிற்குள்ளும் அடங்க மாட்டான் . அவனது திருமண வாழ்வை இப்போது வரை என்னால் ஒரு வரையறைக்குள் அடக்க முடியவில்லை .வெளிநிலிருந்து பார்ப்பவர்களுக்கு அது ஒரு நிறைவான  திருமண வாழ்வுதான் .ஆனால் ஆராய்ந்து பார்த்தால் …உண்மையாக சொல்ல போனால் …அவனது உணர்வுகளை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை என்பதே உண்மை ….”

” ம்க்கும் …இதற்கு என் மகன்…எனக்கு தெரியும்  என்று பெருமை பேசாவிட்டால் என்ன …?” முணுமுணுத்தவளின் தலையில் கொட்டினாள் மாதவி .

” ஏய் என்னை பகைச்சிக்காதேடி .பிறகு என் மகன் உனக்கு கிடைக்கமாட்டான் ….”

” சாரி …சாரி …நான் என்ன செய்ய வேண்டும் அத்தை …? “

” ம் மகனை கைக்குள் போட்டுக்க மாமியாரிடம் ஆலோசனை கேட்கும் மருமகள் .எங்கேயாவது நடக்குமா இது …? ” மாதவியின் அலுத்தலில் நெகிழ்ந்த மணிமேகலை அவள் மடியில் தலை சாய்த்துக் கொண்டாள் .

” தேங்க்ஸ் அத்தை .என்னை மருமகளாக …உங்களை மாமியாராக ஏற்றுக் கொண்டதற்கு …”

” இதில் என் சுயநலமும் இருக்கிறது மணிம்மா .என் மகன் இப்படியே தனியானவனாகவே இருப்பதை நான் விரும்பவில்லை .அவனும் எல்லோரையும்  போலவே ஒரு இயல்பான வாழ்வு வாழ வேண்டுமென நினைக்கிறேன் .அதற்கு உன்னை போல் ஒரு தைரியமான பெண் …அந்த தெய்வாவை பற்றி கவலையில்லாத பெண் எனக்கு வேண்டும் ….”

” போச்சுடா இதில் அந்த தெய்வாம்மா எங்கிருந்து வர்றாங்க ….? “

” வர்றாளா …அவள் இங்கேதான் இருக்கிறாள் .உன்னை வைத்துத்தான் நான் அவளை ஜெயிக்க போகிறேன் .என் வீட்டின் பிரச்சனைகளை ஜெயிக்க போகிறேன் ்என் பிள்ளைகள் எ ல்லோருடைய வாழ்வையும் சீர்படுத்த போகிறேன் ….” மாதவியின் குரலில் நிரம்பி வழிந்த தன் னம்பிக்கையை கலைக்க விரும்பாத மணிமேகலை தானும் அவளுடன்  கை கோர்த்தாள் .




” நானும் என் பார்த்தனை ஜெயிக்க போகிறேன் ….” மனதுக்குள் சொன்னபடி மாதவியின் கை கோர்த்துக் கொண்டாள் .

” பார்த்தன் சிறு வயதிலிருந்தே எதற்குமே …எத்தனையோ பெரிய பிரச்சனைகளுக்குமே என்னையோ வேறு யாரையோ ஆதரவிற்காக தேடியதில்லை .ஆனால் உங்கள் எல்லோருக்கும் நான் இருக்கிறேன் என்ற ஆதரவு பார்வையை மட்டும் ஒவ்வொரு கணமும் எங்களுக்கு தந்து கொண்டிருப்பான்.அவனது கஷ்ட காலங்களில் எல்லாம் ஒரு தாயாக அவனை அணைத்து மடி சாய்த்து கொள்ள விரும்பியிருக்கிறேன் .ஆனால் அவன் அதற்கு அனுமதித்தில்லை.நான் ….என்னால் என எப்போதும் நிமிர்ந்தே நின்றிருக்கிறான் .இதோ …இப்போது கூட அவனை மடி சாய்த்துக் கொள்ள மிகவும் விரும்புகிறேன் .ஆனால் அவன் …”

நானும்தான் அவனை மடி சாய்த்துக் கொள்ள விரும்புகிறேன் …மனதிற்குள் சொல்லிக் கொண்ட மணிமேகலை , மாதவியின் கைகளை ஆதரவாக வருடினாள் .

” அத்தை பெண்கள் கூட்டணி வைத்தால் ஒரு நாட்டின் ஆடசியையே பிடிக்கலாம் .இந்த வீட்டு ஆட்சியை பிடிக்க முடியாதா …? “

” சரியாக சொன்னாய் மணிம்மா .நாம் இருவருமாக சேர்ந்து அவனை ஒரு வழி பண்ணுவோம் ….”

” ம் …அதானே .அதென்ன எப்போது பார்த்தாலும் முசுடு மாதிரி மூஞ்சை வைத்துக் கொண்டு விறைப்பாய் இருப்பது …இதற்கெல்லாம் அவர் நமக்கு பதில் சொல்லவேண்டும்  அத்தை ….”

எந்த வீட்டிலும் இல்லாத அதிசயமாக அங்கே மாமியாரும் , மருமகளும் சேர்ந்து மகனுக்கு எதிராக திட்டம் தீட்டினர் .

What’s your Reaction?
+1
4
+1
2
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!