kadak katru Serial Stories

Kadal Kaatru – 35

                                             35

 

 

” உன்னிடம் பேச வேண்டும்மா …? ” குளறலான குரலுடன் மயில்வாகன்ன் வந்து நின்ற போது அவர் அவளுக்கு பிடிக்காத மனிதர் என்ற போதும் ,அவரது வயதும் , இப்போதைய அவர் நிலைமையும்  சமுத்ராவால் மறுக்க முடியவில்லை .மௌனமாக தலையாட்டினாள் .

” நான் கொஞ்சம் கெட்டவன்தாம்மா .மனைவி எப்போதடா இறப்பாள் என காத்திருந்து அவளை கவனிக்க வந்த தாதியை திருமணம் முடித்தவன் . ஒரு நல்ல மனிதன் ….நல்ல என்ன …ஒரு மனிதன் செய்ய மாட்டான் இதை.அதனை செய்த ராட்ச்சன் நான் .ஆனால் என் மகன் அப்படியல்ல .அவன் புடம் போட்ட தங்கம் . “

சமுத்ரா அவரை கேலியாக நோக்க , தலையசைத்தபடி ” ஒரு சாதாரண ஆணுக்குரிய சில பலவீனங்கள் அவனுக்கு உண்டு .ஒத்துக் கொள்கிறேன் .ஆனால் என்னைப் போலில்லை .என் மகன் எதிலும் கட்டுப்பாடானவன் .தன்னைக் கட் டுப்படுத்திக் கொள்ள தெரிந்தவன் .அவனை மகனாக பெற்றதற்கு நான் மிகவும் பெருமையடைகிறேன் .என் பரம்பரையில் என்னைப்பற்றியல்ல, என மகனின் பெருமை பேசப்பட வேண்டுமென நினைக்கிறேன் .”

இவர் என்னதான் சொல்ல வருகிறார் …? சமுத்ராவிற்கு குழப்பமாக இருந்த்து .” என் மகன் குழந்தை , குட் டியோடு ஒரு முழுமையான வாழ்வு வாழ வேண்டுமென்பது எனது நோக்கமாக இருந்த்து ்ஆனால் ..அவன் …திருமணமே வேண்டாமென்பதில் உறுதியாக இருந்தான்” நிறுத்தினார் .

” அதுதானே அப்படி ஒரு கட்டுக்குள் அடங்குகிறவரா …உங்கள் மகன் …? ” கிண்டல் தெறித்தது சமுத்ராவின் குரலில் .

” சாவித்திரியையே கூட குழந்தையோடு இங்கே அழைத்து வந்துவிடலாமென்று கூட சொல்லி பார்த்தேன் .அன்று ஒரு முறை முறைத்தான் பார் .அத்தோடு இந்த பேச்சினை நிறுத்தி விட்டேன் .”

அடக்கடவுளே இப்படி வேறு செய்வார்களா …? சமுத்ராவின் இதயம் ஒரு முறை நின்று துடித்தது .

” பிறகு திடீரென்று ஒருநாள் உன்னை திருமணம் செய்து அழைத்து வந்தான் .முதலில் உன்னை வீட்டினுள் அனுமதித்த போதே எனக்கு சந்தேகம்தான் .காரணமில்லாமல் யோகன் எதுவும் செய்ய மாட்டானே என்று …” தயங்கி நிறுத்த

சமுத்ராவிற்கு புரிந்த்து. இவர் தன்னையும் சாவித்திரியோடு ஒத்து நினைத்திருக்கறார் .ஒரு நிமிடம் உடல் கூச முகம் சுளித்தாள் .

” ஆனால் உன்னை பார்த்தால் அப்படி பெண்ணாக தெரியவில்லை .மேலும் உங்களுக்குள் ஒத்து போவது போன்றும் தெரியவில்லை .குழப்பத்தில் இருந்த போதுதான் உன்னை மணமுடித்து அழைத்து வந்தான் .பெற்றவன் , உடன் பிறந்தவள் இல்லாத திருமணமா …என்ற குறையிருந்த போதும் உங்கள் திருமணம் எனக்கு மிக சந்தோசமே .ஆனால் இது உனக்கு விருப்பமில்லாத திருமணமாக தோன்ற ,அதனை உறுதி படுத்துவது போல் நீயும் கீழுள்ள அறையிலேயே தங்க முடிவெடுத்தாய் .இப்போது நான் தலையிட்டு உன்னை வீட்டை விட்டு வெளியேற்ற முனைந்தேன் .
யோகன் உன்னை மாடிக்கு அழைத்துக்கொண்டான் “

இப்போது இவர் சொல்ல வருவது கொஞ்சம் புரிவது போலிருந்த்து சமுத்ராவிற்கு .

” இப்போது என் பரம்பரைக்கு வாரிசு வரப்போகிறது .இந்த நேரம் நீ ஏன்மா இப்படி செய்கிறாய் …? “

” ஏன் அங்கே தோப்பு விட்டில் உங்கள் பரம்பரை வாரிசு வளரவில்லை …? ” நக்கலாக கேட்டாள் .

” அதை என மகன்தான் சொல்ல வேண்டும் …”

சையென்று வந்த்து சமுத்ராவிற்கு .மகன் செய்யும் போக்கிரித்தனத்திற்கு குடை பிடிக்கும் ஒரு அப்பா .அது சரி …இவரும் ஒரு ஆண் பிள்ளைதானே …?இவர் செய்த்தும் அதே போக்கிரித்தனம் தானே ….இவர் ரத்தம்தானே அவன் உடம்பிலும் ஓடுகிறது .கசப்புடன் எண்ணிய போதே….

” இப்போது வந்திருப்பது மட்டும் உங்கள் பரம்பரையா …? ” புவனா …ஆத்திரத்துடன் நின்றாள் .ஒரு மாதிரி வெறியுடன் என்று கூட சொல்லலாம் .

” இந்த குழந்தைக்கு இப்படி தவிக்கிறீர்களே …? என் வயிற்றில் வந்த்தை ஒவ்வொன்றாய் அழித்தீர்களே …அப்போது அதெல்லாம் இந்த குடும்ப வாரிசு கிடையாதா ..?” ஆத்திரத்துடன் தன் வயிற்றைக் குத்திக் கொண்டாள் .

” ஏய் …வாயை மூடுடி ? ” கத்தினார் மயில்வாகன்ன் .

” எத்தனை நாட்கள் …? ம் …எத்தனை நாட்கள் வாயை மூட வேண்டும் …? புவனா கத்த கையில் கிடைத்த எதையோ எடுத்து அவர் எறிய அது புவனாவின் தலையை தாக்கி ரத்தம் வரச்செய்த்து .

பற்றி புவனாவை தாங்கிய சமுத்ரா மயில்வாகன்னை முறைத்தபடி புவனாவை தாங்கியபடி உள்ளே அழைத்து சென்றாள் .அவள் காயத்திற்கு கட்டிட்டு படுக்க வைத்தாள் .ஆற்ற முடியா துயரத்தில் குலுங்கிய புவனாவின் உடல் சிறிது நேரத்தில் அயரவே , மெல்ல உறங்க துவங்கினாள் அவள் .

பெருமூச்ணோடு அவளை பார்த்து விட்டு வெளியே வந்த சமுத்ராவின் முன் வந்து நின்றாள் செல்வமணி .




இங்கே அவள் சித்தியும் , அப்பாவும் பெரிய போர்க்களமே நடத்திக் கொண்டிருக்கிறார்கள் .இவள் என்னவென்று எட்டிக் கூட பார்க்காமல் உள்ளேயே இருந்தாளே …வெறுப்புடன் அவளை தாண்டி போக முயல , மீண்டும் அவள் வழி மறித்்த செல்வமணி அவளை நோக்கி கைகளை கூப்பினாள் “,சமுத்ரா ப்ளீஸ் ” என்றாள் .

                                                 36

” குழந்தை இந்த குழந்தையை கலைத்து விடாதே சமுத்ரா .ப்ளீஸ் ….” கை கூப்பினாள் .

” ஏனோ …? உங்களுக்கு பிடிக்காத தம்பி பொண்டாட்டி நான் .நான் பெறும் பிள்ளை மட்டும் பிடிக்க என்ன காரணமோ …? ” எகத்தாளம் சமுத்ராவின் குரலில் .

” ஏனென்றால் தம்பியால் மட்டுந்தான் எங்கள் குடும்பத்திற்கு வாரிசு கிடைக்க முடியும் .என்னால் …என்னால் ஒரு பிள்ளை பெற முடியாது ….” விம்மல் தெறித்தது செல்வமணியின் குரலில் .

எப்போதும் திமிராகவும் , தெனாவெட்டாகவும் பார்த்தே பழக்க பட டவள் ..இப்போது இப்படி வெடித்து அழுவது சமுத்ராவிற்கு பார்க்க பரிதாபமாக இருந்தாலும் , ” என்னை என்ன உங்கள் குடும்பத்திற்கு பிள்ளை பெற்று கொடுக்கும் மிஷின் என று நினைத்தீர்களா ? ” என்றாள் .

மீண்டும் சமுத்ரா என்று கைகளை பற்றிய செல்வமணியை உதறியவள் ” எனக்கு பிடிக்காத்தை எனக்குள் வைத்து வளர்க்க எனக்கு பைத்தியமா என்ன …? ” படியேறியபடி சமுத்ரா கூறியது செல்வமணியோடு  , ஓரத்தில் நின்று பார்த்துக் கொண்டிருந்த மயில்வாகன்னுக்கும் சேர்த்துதான் .

படியேறி மாடியை அடைந்த சமுத்ராவிற்கு மிகுந்த சந்தோஷமாக இருந்த்து .பெருமூச்சுடன் படுக்கையில் சாய்ந்து கண்களை மூடிக்கொண்டாள் .இந்த வீட்டினர் என்னை எப்படியெல்லாம் பேசினார்கள், இப்போது என் முறை ..எல்லோருக்கும் பதில் கொடுக்காமல் விட மாட்டேன் ்இதில் முக்கியமாக வதை பட வேண்டியவன் யோகன்தான் .வரட்டும் அவன் …மனதில் வஞ்சம் வைத்து காத்திருந்தாள் .

சற்றே கண் அசந்தாலும் யோகன் உள்ளே வரும்போது விழித்துக்கொண்டாள் . எத்தனை முறை தூங்கியவளை எழுப்பி அணைத்திருக்கிறான் .இப்போது அவள் முறை …தூங்கிக் கொண்டிருந்தால் எப்படி …? கண்களை நன்றாக அகல திறந்து வைத்துக்கொண்டாள் .

” தூங்கவில்லை …? ” கேள்வியோடு உள்ளே வந்து எரிந்து கொண்டிருந்த பெரிய விளக்கை அணைத்துவிட்டு , விடி விளக்கை எரிய விட்டான் .

எழுந்து அமர்ந்து செல்லமாய் சோம்பல் முறித்து ” ம் …மனது சந்தோசமாக இருக்கிறது .தூக்கம் வரவில்லை ” என்றாள் .

” தேவையில்லாமல் உடம்பை கெடுத்துக்காதே ..தூங்கு ” வெளியே போக கிளம்பினான் .

” அட எங்கே போகிறீர்கள் …? இங்கே படுக்கவில்லை ..? ” குரல் துள்ள கேட்டாள் .

” கொஞ்சம் வேலையிருக்கிறது ..” அவளை திரும்பியும் பாராமல் செல்ல முயன்றான் .

இருக்கும்தானே ..நீ எதற்காக என்னை நெருங்கி வந்தாயோ …அந்த வேலைதான் முடிந்து விட்டதே ..பிறகு ஏன் என்னை திரும்பி பார்க்க போகிறாய் ..? ஆனால் நீ என் மேல் விட்ட அம்பினை உனக்கே திருப்பினேன் பார்த்தாயா ..? மனதுக்குள் எண்ணியபடி ” யோகன் …” கொஞ்சலாய் அழைத்தாள் .

” இன்று என் முடிவைப் பற்றி நீங்கள் ஒன்றுமே கூறவில்லையே …? ” அழகாய் தலைசரித்து கேட்டாள் .

” அதுதான் நீயே முடிவெடுத்து விட டாயே …உன் முடிவு .இதில் தலையிட நான் யார் …? ஆனால் …” என்றவன் திரும்பி அவளிடம் வந்து ” பார்த்து….உன் உடம்பு …பத்திரம் …” என்றபடி அமர்ந்திருந்த அவள் தோள்களை அழுத்தி அவளை படுக்க வைத்து போர்வையை மூடிவிட்டவன் ” வீம்பிற்காக விழித்திருந்து உடம்பை கெடுத்து கொள்ளாதே  . தூங்கு ” என்றுவிட்டு வெளியே சோபாவிற்கு சென்றுவிட்டான்.

குழம்பிய மனதுடன் படுத்தவள் சிறிது நேரத்தில் தூக்கம் சொக்க தூங்கிவிட்டாள் .அரைமணி நேரத்தில் விழிப்பு வந்த போது , சிகரெட்டை புகைத்தபடி பால்கனியில் அங்குமிங்கும் அவன் நடந்து கொண்டிருப்பதைக் கண்டாள் .

இந்த திட்டம் தோற்றுவிட்டதால் வேறு திட்டம் யோசிக்கிறானோ ..? என நினைத்தவள் ,என்ன வேண்டுமானாலும் செய்யட்டும் என் முடிவில் மாற்றமில்லை இப்படி எண்ணியபடி மீண்டும் தூங்க முயன்றாள் .

சூடாக தன் முன் நீட்டப்பட்ட ஹார்லிக்ஸை அலட்சியமாக வாங்கினாள் சமுத்ரா .” குடிக்கிற மாதிரி இளஞ்சூட்டில் இருக்கிறது சமுத்ரா .” என்ற செல்வமணி மெல்ல ” நான் சொன்னதை யோசித்தாயா ? ” என்றாள் .

” என் முடிவில் மாற்றமில்லை .” கறாராக பேசினாள் சமுத்ரா .

” நான் உன்னுடன் பேச வேண்டும் சமுத்ரா ..”

” எனக்கு வெளியே வேலையிருக்கிறது …”

” எனக்காக ஒரு அரைமணி நேரம் ஒதுக்கு சமுத்ரா ப்ளீஸ் .என்றவள் ” அம்மா இறந்த்தும் அப்பா உடனே மணம் முடித்துக் கொண்டார் .தம்பி கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு போய்விட்டான் .இந்த புவனாவை எனக்கு பிடிக்காது .ஒரு வெறுமையில் இருந்த போது அப்பா பார்த்து எனக்கு மணம் பேசி முடித்தவர்தான் இந்த சாமியப்பன் .எங்களை விட கொஞ்சம் வசதி குறைந்தவர்கள் .அவ்வளவு வசதியான வாழ்வில்லையென்றாலும் , இவர் என்மீது காட்டிய அன்பினால் என் வசதிகளை குறைத்து வாழ முயன்றேன் .இது என் மாமியாருக்கு புரியவில்லை. நான் அவர்களுக்கு அடங்கியிருக்க வேண்டுமென்று நினைத்தார்கள் .இதனால் எங்கள் இருவருக்குமிடைய்யே சதா சண்டை .ஒரு குழந்தை பிறந்தால் சரியாகி விடுமென எண்ணியிருந்தேன் .ஆனால் ஐந்து வருடம் போய்விட்டது .குழந்தையில்லை .டாக்டரிடம் போய் காட்டினேன் .அவர்கள் ஏதோ குறையிருப்பதாக கூறி மாத்திரைகள் கொடுத்தார்கள் .இதையே சாக்காக வைத்து என் மாமியார் மலடி என்று கூறி என்னுடன் தினமும் சண்டை .கொஞ்சம் கொஞ்சமாக அவரையும் மாற்றி விட்டார்கள் .அவரும் சேர்ந்து என்னுடன் சண்டை போடத் துவங்கினார் .தாங்க முடியாமல் இங்கே வந்தேன் .அப்போது தம்பி இங்கே வந்துவிட்டான் .என் கதையை கேட்டுவிட்டு இனி அங்கே போக வேண்டாமென்றுவிட்டான் .ஐந்து வருடங்களாக இங்கேதான் இருக்கிறேன் .

எங்கேயோ யாரோ செய்த பாவம் என் வாழ்க்கையை கெடுத்து விட்டது “

” இப்போது இதையெல்லாம் எதற்காக என்னிடம் கூறிக்கொண்டிருக்கிறீர்கள் ? ” அலட்சியமாய் கேட்டாள் சமுத்ரா .

” ஒரு உயிரை அழிப்பது பாவம் சமுத்ரா .உன் கருவை அழித்து விடாதே ..” கெஞ்சுதலாய் சமுத்ராவின் கைகளை பற்றினாள் செல்வமணி.

” மதியத்திற்கு நன்றாக உப்பும் , உரைப்புமாக  சமைத்து வையுங்கள் .கொஞ்சம்  வேலையிருக்கிறது ” அவள் கைகளை விலக்கிவிட்டு எழுந்தாள் சமுத்ரா .

அவளது அழைப்பை அலட்சியப்படுத்தி நடந்தவள் ஒரு கெஞ்சல் பார்வையுடன் எதிரே வந்து நின்ற புவனாவையும் அலட்சியப்படுத்தி வெளியே நடந்தாள் .

மதிய உணவு அவள் எதிர்பார்த்தது போன்றே உப்பும் , உரைப்புமாக சமைத்து வைக்கப்பட்டிருந்த்து .தட்டு நிறைய பரிமாறிக் கொண்டு சட்டமாக அமர்ந்து கொண்ட போது , யோகன் உள்ளே வந்தான் . வழக்கமாக மதிய வேளைகளில் வர மாட்டானே..என எண்ணியவளை சற்று சோர்ந்தாற் போலிருந்த அவன் நடை சற்று உறுத்தியது .




” உடம்பு சரியில்லையா ..? ” கவலையை குரலில் காட்டிக் கொள்ளாமல் மெல்ல கேட்டாள் .

” இல்லை ..இன்று கொஞ்சம் டயர்டாக தோன்றியது .சாப்பிட்டு படுக்கலாமென்று வந்தேன் ” சாப்பிட அமர்ந்தான் .

வழக்கமற்ற அவனது இந்த சோர்வு மனதினை உறுத்திய போதும் , தன் பார்வையை வலுக்கட்டாயமாக தட்டிற்கு திருப்பிக் கொண்டாள் .

இருவருக்கும் பரிமாறியபடி ” தம்பி நீதான் சொல்லேன் ” என்று செல்வமணி யோகனிடம் ஜாடை காட்ட அதனை கண்டு எரிச்சலடைந்த சமுத்ரா ” ஒழுங்காக தட்டைப் பார்த்து பரிமாறுவதென்றால் இங்கேயிருங்கள் . இல்லை உள்ளே போங்கள் .நானே போட்டு கொள்வேன் ” என்றாள் .

கண்கலங்கியபடி செல்வமணி உள்ளே செல்ல ” சமுத்ரா அக்கா பாவம் அவளை விட்டுவிடு ” தட்டினை பார்த்தபடி கூறினான் யோகன் .

இதனால் ஆத்திரம் கூட ” அழுது அழுது மாய்மாலம் செய்கிறவர்களெல்லாம் இங்கே இருக்க வேண்டிய அவசியமில்லை .அவரவர் இடத்திற்கு போகலாம் ” உள்ளே பார்த்து கத்தினாள் .

” சமுத்ரா …” என்று அதட்டிய யோகனை கவனியாத்து போல் அவரவர்க்கு தேவையானால் அவர்கள்தான் பெற்றுக் கொள்ள வேண்டும் .அடுத்தவர் தலையை போட்டு உருட்டக் கூடாது …” மேலும் கத்தினாள் .

இப்போது மௌனமான யோகன் சமுத்ராவை பார்த்தபடி அமர்ந்திருந்தான் .இருவரும் உண்டு முடித்து எழுந்த போது உள்ளேயிருந்து பெட்டியோடு வெளியே வந்தாள் செலவமணி .

” தம்பி நான் போகிறேன் “

” எங்கே செல்லா …? “

” என் வீட்டிற்கு …” அழுத்தமாக கூறினாள் .

” ஆனால் செல் லா …???”

” நான் பார்த்துக்கொள்கிறேன் தம்பி .என் இடத்தை எனக்கு உணர்த்தியதற்கு நன்றி சமுத்ரா .” என்றவள் கை கூப்பினாள் ” தயவுசெய்து குழந்தையை அழித்து விடாதே ” கெஞ்சலாய் கூறிவிட்டு வெளியேறினாள் .

இது இவ்வளவு சீக்கிரம் நடக்குமென்று சமுத்ரா நினைக்கவில்லை .இது தனக்கு சாதகமா ..? பாதகமா …? என யோசித்தபடி நின்றபோது ” இது சரியாக வருமா ..சமுத்ரா ? ” எனக் கேட்டபடி அவள் பின்னால் நின்றிருந்தான் யோகன்.

” சரிவராதென்றால் உங்கள் அருமை அக்காவை அழைத்து வந்து திரும்பவும் வீட்டிற்குள் வைத்துக் கொள்ளுங்கள் .என்னிடம் ஏன் கேட்கிறீர்கள் ? இதற்கும் எனக்கும் என்ன சம்பந்தம் …? ” கத்தரித்தாற் போல் பேசிவிட்டு திரும்பியவளின் கண்களில் புவனா பட்டாள் .
அவள் 
சிறிது சந்தோமாக இருப்பது போல் சமுத்ராவிற்கு தோன்றியது .இந்தம்மா என்ன சந்தோசமாக இருக்கிறார்கள் ? யோசித்தவளுக்கு அன்று இது என் வீடு ,நீ வெளியே போ என்று விரட்டிய புவனா நினைவு வந்தாள் .

அடுத்து நீதான் என் இலக்கு என்று எண்ணியபடி அவளைப் பார்த்தாள் சமுத்ரா .

What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!