kadak katru Serial Stories

Kadal Kaatru – 38

                                               38

 

” நீ யோகனை நிஜம்மாகவே பழி வாங்க வேண்டுமென்றுதான் நினைக்கிறாயா ..?” தன் வாழ்க்கை அவலங்களை அவளிடம் கொட்டித் தீர்த்து விட்டு சிறிது நிம்மதியாகி இருந்த புவனா கேட்டாள் .

” அவர் …யோகனின் அப்பா உங்களை இந்த அளவு துன்ப்ப்படுத்தியிருக்கிறார் . ஆனாலும் அவருக்கு பதிலுக்கு பதில் செய்ய வேண்டுமென்று உங்களுக்கு தோன்றவேயில்லையா ..? “

” ம் …நினைத்திருக்கிறேன் .என் மனமும் , உடலும் வலிக்க , வலிக்க என் குழநதைகள் என்னுள்ளிருந்து பிடுங்கப்பட்ட நேரங்களிலெல்லாம் இதற்கு பழி தீர்க்க வேண டுமென்று நினைத்திருக்கிறேன் .ஆனால் …புவி சாப்பாடு எடுத்து வைம்மா…என்று அவர் சொல்லும்போது அந்த பழி தீர்க்கும் எண்ணமெல்லாம் ஓடிவிடும் . உடனே அவரை கவனிக்க ஓடிவிடுவேன் .”

“ம் ம் ..காதல் …இந்த காதல்தானே அவர் கை தாலிக்காக வயிற்றுக் குழந்தையை கூட உங்களை  அழித்து விட வைத திருக்கிறது .நம் நாட்டில் நிறைய பெண்கள் விழுந்து மிதிபட்டு கிடப்பதும் இந்த பாசம் , காதலினால்தானே …ஆனால் யோகன் விசயத்தில் எனக்கு இந்த மாதிரி தடைகள் எதுவும் கிடையாது . 
அவர் என் விருப்பமில்லாமல் என்னை திருமணம் செய்தார் …என் விருப்பமில்லாமல் என்னை ….” பல்லை கடித்து நிறுத்தினாள் .

” அப்படியா ..சொல்கிறாய் …? அல்லது நினைக்கிறாயா …? ” சமுத்ராவை கூர்ந்தாள் புவனா .

” ஏன் …இதிலென்ன சந்தேகம் அப்படியேதான் .யோகன் மேல் எனக்கு எந்த ஈர்ப்பும் …”

” புவி ….” சமுத்ராவின் பேச்சு மிகுந்த வேதனையுடன் வந்த இந்த குரலால் தடைபட்டது .

யோகன் தோப்பு வீட்டிற்கு கிளம்பும் முன் அவனை நிறுத்தி , வகையாக அவனை வார்த்தைகளால் பந தாடிவிட்டு உள்ளே நுழைந்த சமுத்ராவை வாசலிலேயே எதிர் கொண்டிருந்தாள் புவனா .அவளது துயரத தை பேசியபடியே அப்படியே மாமியாரும் ,மருமகளுமாக வாசல் படியிலேயே அமர்ந்து விட்டிருந்தனர் .

நெடுநேரமாக மனைவியை காணாத்தால் அவளை தேடியபடி மியில்வாகன்ன் அங்கேயே வந்திருப்பார் போலும் .சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி புவி என்ற அழைப்புடன் புவனாவின் புறம் நீண்ட அவரது கைகளில் இருந்த நடுக்கம் புவனாவின் பேச்சுக்களை முழுவதும் அவர் கேட்டு விட்டாரென சொன்னது .

” எ..என்னை …மன்னித்து விடம்மா ….” குரலும் , உடலும் நடுங்க சக்கர நாற்காலியிலிருந்து எழ முயன்றவர் தடுமாற ” என்னங்க …பார்த்து …” பதறியபடி எழுந்து ஓடினாள் புவனா .

” இப்போது எதற்கு கஷ்டப்பட்டு இங்கே வந்தீர்கள் .ஒரு குரல் கொடுத்திருந்தால் நான் வந்திருக்க மாட்டேனா ..? என்ன இது மன்னிப்பு ..அது …இதுவென று …பெரிய வார்த்தைகளெல்லாம் பேசிக்கொண்டு… நம் இருவருக்குமிடையே மன்னிப்பு எங்கிருந்து வந்த்து ..? இனி இப்படி பேசக்கூடாது .என்னை புரிந்து கொண்டீர்களே அதுவே போதும் …” இப்படி கண்ணீருடன் கூறியபடி கணவனை நேராக அமர வைத்து அவர் முக வியர்வையை தன் முந்தானையால் துடைத்து விட்டுக் கொண்டிருந்த புவனாவுக்கு சமுத்ரா என்ற ஒருத்தி அங்கிருப்பதே மறந்து போனது .




இந்த அளவில்லா காதலை கண்டு கொண்ட மாலதி  தன் குழந்தைகளை அது  பாதித்து விடக் கூடாது என்றுதான் இது போல் சத்தியம் வாங்கிக் கொண்டாரோ …? என்று சமுத்ராவிற்கு இப்போது தோன்றியது .மனம்  முழுவதிலும்  ஒரு வித திருப்தியுடன் எழுந்து தன் அறைக்கு வந்துவிட்டிருந்தாள் .

ஏதோ ஒரு வகையில் புவனா குற்றமற்ற உயர்ந்த பெண்ணாகவே சமுத்ராவிற்கு தோன்றினாள் .அதனால்தான் அவளை யோகனுக்கு உணர்த்தி விட வேண்டுமென்ற வேகத்தில்தான் அவனிடம் புவனாவின் கதையை கூறினாள் .

அவனும் அதனை புரிந்து கொண்டானென்றுதான் அவனது இந்த நெகழ்ச்சி சமுத்ராவிற்கு கூறியது. இத்தனை நாட்களாக புவனாவை புரிந்து கொள்ளாமல் போனோமே ….என்ற எண்ணமோ ? முன்பு அவனுடைய அன்னை மாலதி படுக்கையில் இருந்தபோது தாயாக மாறி இவர்களை பார்த்து கொண்டவளல்லவா புவனா ..? அந்த தாயன்பு ஏற்படுத்திய நினைவுகளின் தாக்கமோ ..? என்ன செய்வேனென்று நெகிழ்ந்து நின்றான் யோகன் .

சமுத்ராவின் இயல்புபடி யோகனின் இந்த நெகிழ்ச்சியை மூன்றாவது மனுஷியாக தள்ளி நின்று வேடிக்கைதான் பார்க்க வேண்டும் .ஆனால் …அவனது நெகிழ்வில் தானும் நெகிழ்ந்து அவனை அணைத்து ஆறுதல் கூறும் எண்ணம் வந்து விட்டதெனில் …மயில்வாகன்னை ஆறுதல் படுத்திய புவனா சமுத்ராவின்  நினைவில் வந்து போனாள் .

யோகனை அணைத்து ஆறுதல் கூற உயர்ந்து விட்ட தன் கரங்களை நம்ப முடியாத திகைப்புடன் பார்த்தபடியிருந்தாள் சமுத்ரா .அவள் கரங்கள் யோகனின் தோள்களை தொடும் முன்பே தன்னை சமாளித்துக் கொண்டு  விட்ட யோகன் மெல்ல அவளை தன்னிடமிருந்து விலக்கி நிறுத்தினான் .

” நிறைய பேசியாயிற்று சமுத்ரா .நீ ஓய்வெடு .நான் யோசிக்கிறேன் .” அவளை படுக்கையில் படுக்க வைத்தவன் சிகரெட்டுடன் பால்கனியை நோக்கி சென்றான் .இப்பொழுதெல்லாம் நிறைய சிகரெட் பிடிக்கிறான் கவலையுடன் நினைத்தபடி உறங்க முயன்றாள் சமுத்ரா .

—-

அமைதியாக மேஜையில் அமர்ந்து உணவு உண்டு கொண்டிருந்தவனை ஆச்சரியமாக பார்த்தாள் சமுத்ரா .நேற்றெல்லாம் வெடித்து சிதறிய எரிமலை இதுதானா …? என்ற ஆச்சரியம் அவளுக்கு .அடுப்படியினுள் நின்றபடி யோகன் சாப்பிடுவதை கண்களில் கண்ணீரும் , இதழ்களில் புன்னகையுமாக பார்த்து ரசித்துக் கொண்டிருந்தாள் புவனா .

வழக்கமாக யோகன் காலை, மாலை வெளியேறும் சமயங்களில் அதிகாலை அவன் வரும் சமயங்களில் எல்லாம் அவனை வெறுப்பேற்றுவத்ற்கான வார்த்தைகளை தேடிப்பிடித்து கோர்த்து வைத்துக் கொண்டு அவனைக் கடித்து குதறுவதற்கு காத்துக்கொண்டிருப்பாள் .இன்றோ …என்ன யோசித்தும் அவனை எப்படி வருத்துவதென்று சமுத்ராவிற்கு தோன்றவேயில்லை .

அதோ ..அவன் சாப்பிட்டு விட்டு கிளம்பி விட்டானே …யாரிடமோ போனில் பேசிக்கொண்டு மெல்ல வாசலுக்கு நடந்து கொண்டிருந்தான் .அவசரமாக என்ன சொல்லி இவனை வெறுப்பேற்றி அனுப்ப …? மூளையை கசக்கியபடி ..யோசித்துக் கொண்டிருந்தவள் , அவன் போன் பேசியபடி திரும்பி தன்னை நோக்கி வரவும் நின்றாள் .

தன் போனை அவள் காதில் வைத்தவன் ” மேகலை ..உன்னிடம் பேச வேண்டுமாம் ..” என்றான் .அண்ணனும் , தங்கையும் அடிக்கடி போனில் பேசிக் கொள்வது சமுத்ராவிற்கு தெரியும் .மேகலை எப்போதும் இவளிடம் பேச எண்ணியதில்லை .இன்று எதற்காக என்னுடன் பேச எண்ணுகிறாள் …? யோசனையுடன் போனில் காதை வைத்தவளுக்கு எதிர்புறமிருந்து வந்த ” அண்ணி …” என்ற அழைப்பு நம்ப முடியாத்தாக இருந்த்து .

யோகன் பலமுறை சொல்லியும் மேகலை இதுவரை அவளை அண்ணி என்று அழைத்ததில்லை .வம்புக்காகவே அக்கா என்பாள் .நீ…வா …போ…என்று ஏக வசனத்தில் பேசுவாள் .ஆனால் அப்போதெல்லாம் இருந்த உணர்வற்ற நிலை , இப்போது இந்த அண்ணியில் உடல் சிலிர்க்க உணர்வானது .அவளது அந்த அழைப்பில் பேச்சற்று நின்றாள் சமுத்ரா .எதிரில் அவளையே பார்த்தபடி யோகன் வேறு நின்று கொண்டிருந்தான் .பேச்சு வராமல் தவித்து நின்றபோதே ‘ அண்ணி …அண்ணி …’ இருக்கிறீர்கள்தானே …? என பலமுறை தவித்து விட்டாள் மேகலை .

சட்டென்று யோகனுக்கு முதுகு காட்டி திரும்பி நின்றபடி ” யாரும்மா அது ..? யாரை அப்படி கூப்பினுகிறாய் …? ” கேலி போல் பேசி சமாளிக்க முயன்றாள் .

” நீங்கள்தான் அண்ணி .இந்த அழைப்பை உங்கள் அருகில் இருக்கும் போது எத்தனை முறை மிஸ் செய்திருக்கிறேன் .அதற்கு பதிலாக இப்போது ஒரு நாளைக்கு ஐம்பது முறையாவது அண்ணி …அண்ணி என்று மனதிற்குள் அழைத்து பார்த்துக் கொள்கிறேன் ” லேசாக நீர்த்திரையிட்டிருந்த்து மேகலையின் குரலில் .

” ஏய் …என்ன இது ..? சின்னப்பிள்ளை மாதிரி ..ம் ….? படிப்பு எப்படி போகிறது …? “

” ரொம்ப …ரொம்ப அருமையாக இருக்கிறது அண்ணி .இங்கே இந்த புதிய உலகத்தை எனக்கு அறிமுகம் பண்ணி வைத்ததற்கு நன்றி அண்ணி .நீங்கள் மட்டும் என் திறமையை புரிந்து கொண்டு இந்த வாய்ப்பை எனக்கு ஏற்படுத்தி தராமல் இருந்திருந்தால் , நான் அங்கேயிருந்து கானலின் பின்னால் ஓடி என் வாழ்வை தொலைத்திருப்பேன் .உங்களுக்கு வாழ்நாள் முழுவதும் நான் கடமைப்பட்டிருக்கிறேன் அண்ணி “




” இதுதான் மேகலை …இதனை நீ புரிந்து கொண்டாய் பார் .அது போதும் எனக்கு …நீ புரிந்து கொள்ளும் பெண் என்பதால்தான் அன்று வலுக்கட்டாயமாகவேனும் உன்னை அங்கே அனுப்பி வைத்தேன் .இனி உன் கவனம் முழுவதும் படிப்பில் மட்டுமே இருக்க வேண டும் .”

” நிச்சயமாக அண்ணி …அப்புறம் அண்ணி நான் ஒரு விஷயம் கேள்விப்பட்டேனே …உண்மையா ..? “

” என்னம்மா …? “

” நம் வீட்டிற்கு ஒரு புது வரவு வரப்போகிறதாமே …நிஜம்தானா …? ” மேகலையின் இந்த கேள்வி சமுத்ராவின் கோபத்தை ஆரம்பித்து வைத்தது. .யோகன்தான் சொல்லியிருக்க வேண்டும் …அவள் என ன சொல்லிக்கொண்டு இருக்கிறாள் …இவன் என்ன செய்து கொண்டிருக்கிறான் ….? இதில் தங்கை ஏதாவது செய்வாளென்று எண்ணினான் போல …திரும்பி கோபத்துடன் யோகனை முறைக்கலானாள் .

திடீரென்று சமுத்ராவின் இந்த கோப பார்வையின் காரணம் தெரியாமல் யோகன் விழிக்கலானான் .” செல்லாக்கா ….சொன்னார்கள் ..” என்று அந்தப்பக்கம் மேகலை கூறிக் கொண்டிருந்தாள் .ஓ…இது அவர்கள் வேலையா ..சமுத்ராவின் முடிவை மாற்ற வேண டுமென்று செல்வமணி …மேகலையை துணைக்கு அழைத்தாள் போல .ஆனால் அவளும் மேகலையிடம் எல்லா விசயமும் சொன்ன மாதிரி தெரியவில்லை .கர்ப்பம் என்று மட்டும் சொல்லியிருப்பாள் போல .அதற்கே அங்கே மகிழ்ச்சியில் குதித்து கொண்டிருந்தாள் மேகலை .

” அட …அவர்களோடும் பேசினாயா மேகலை ..? உனக்கும் அவர்களுக்கும் ஏழாம் பொருத்தமாயிற்றே ….” மேகலையிடம் கிண்டலாக கேட்டபடியே முந்தைய தனது கோப பார்வைக்காக யோகனிடம் சமாதான பார்வை அனுப்பினாள் சமுத்ரா.

” ஆமாம் ..நான் பண்ணிய நிறைய முட்டாள் தனங்களில் அதுவும் ஒன று .செல்லாக்காவையும் புரிந்து கொள்ளவில்லை .அண்ணன் என்னை அங்கே அழைத்து வந்த்தும் இவர்கள் எல்லோரும் என்னை விரட்டி விடுவார்களோ ….என்றொரு பயம் எனக்கு இருந்து கொண்டேயிருந்த்து .அதனால்தான் அப்படியெல்லாம் நடந்து கொண்டேன் .” மேகலையின் குரலில் வருத்தம் .தொடர்ந்து அவள் சமுத்ராவிற்கென பல உடல்நல குறிப்புகளை கொடக்க துவங்கினாள் .

” ம் …ஆமாம் …சரி ..சரி …போதும் பாட்டியம்மா .இதெல்லாம் நான் பார்த்து கொள்கிறேன் .நீ படிப்பை மட்டும் பாரு ..” கிண்டலுடன் மேகலையிடம் விடை பெற்றாள் .

போனுக்காக சோபாவில் அமர்ந்து காத்திருந்த யோகனிடம் போனை நீட்டினாள் .போனோடு  அவள் கைகளையும் சேர்த்து இழுத்து அவளையும் சோபாவில் அமர வைத்த யோகன் ” உங்கள் இருவருக்குமிடையே என ன ரகசியம் …? எதற்காக அப்போது என்னை அப்படி பார்த்தாய் ? ” அவளை கூர்ந்து பார்த்தபடி கேட்டான் .

” நா…நான் ..கர்ப்பமாக இருப்பதை நீங்கள்தான் மேகலையிடம் கூறினீர்களோ ..என்று நினைத்தேன் …” தலையை குனிந்தபடி முணுமுணுத்தாள் .

” நானில்லையென்று மேகலை சொல்லி விட்டாள்தானே ….? ஹப்பா …இந்த விசயத்தை நான் சொல்லாத போதே அப்படி ஒரு உக்கிர பார்வையென்றால் ..சொல்லியிருந்தால….என் கதி அதோ கதிதான் ….”

” அப்படி என்ன பார்த்து விட்டேனாம் …? ” சிறு கோபத்துடன் அவனை கேட்டாள் .

” ஐயோ …பார்வையா அது ..? நெற்றிக்கண் ஒன்று லேசாக ஒரு ஓரம் திறந்த்து போல அல்லவா இருந்த்து ..? ” தன் கேலியை தொடர்ந்தான் .

” ம்…சரி …சரி…போதும் ….”

” அட நிஜம்தான்மா …இங்கே பாரேன் …என் தலை முடி  இந்த ஒரம் லேசாக கருகி கூட போய்விட்டது .” தன்  தலையை லேசாக அவள்புறம் சாய்த்து காட்டியபடி கூறினான் .

கருத்தடர்ந்து பளபளப்பாய் மின்னிய அவனது தலைமுடியினுள் விரல் நுழைத்து கோத வேண்டும் போல் எழுந்து விட்ட ஆவலில் தடுமாறிப் போனாள் சமுத்ரா .

” மேகலையின் விசயம் என்ன சமுத்ரா ..? அவள் எப்படி இப்படி …அண்ணி பக்தையாக மாறிப்போனாள் …ம் ….? ” மெல்ல சமுத்ராவின்  கைகளை வருடியபடி யோகன் கேட்க அவனது அந்த அருகாமையை தாங்க முடியாமல் சொல்லிவிட எண்ணி வாயை திறந்தாள் சமுத்ரா .

அப்போது யோகனின் போன் ஒலித்தது .அது இப்போது சமுத்ராவின் கையினுள்தான் இருந்த்து .போனோடு சேர்த்து அவள் கைகளை பற்றி தன் அருகில் அமர்த்தியிருந்தான் யோகன் .

இது சாவித்திரியின் நேரமில்லை என்ற திருப்தியுடன் தன் கைகளை பிரித்து ஓலித்த போனை பார்த்தாள் சமுத்ரா .அதில் லாவண்யா எனும் பெயர் வந்து கொண்டிருந்த்து .

What’s your Reaction?
+1
2
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!