Serial Stories

Kadal Kaatru – 8

                                                 8

” அக்கா மோர் சாப்புடுறீங்களா ? ” இளங்குரல் ஒன்று கேட்க தொண்டை வறண்டிருந்த சமுத்ரா ஆவலாய் திரும்பினாள் .

அந்த பெண்குழந்தைக்கு பதினாறு அல்லது பதினேழே வயதிருக்கலாம் .ஒல்லியாக , கறுப்பாக இருந்தாலும் முக்க்களையுடன் மிக அழகாக இருந்தாள் .பளிச்சென்ற சிரிப்பு அந்த குழந்தையின் போனஸ் .

மிக சாதாரண சுடிதார் .கருவண்டு கண்கள் பேசுகையில் ஓரிடத்திலின்றி அங்குமிங்குமாக அலைபாய்ந்தன. தலை கொள்ளாத அந்த முடி , அப்பா …என்ன அடர்த்தி …

இவள் திரும்பி பார்க்கவும் வெள்ளந்தியாக சிரித்தாள் .இவ்வளவு நேரம் ஒவ்வொருவராக பேட்டி எடுக்கும் போது ஆங்காங்கே கண்ணில் தென்பட்டவள்தான்.

தாகத்திற்கு தொண்டை மோர் தேவைக்கு சம்மதித்தது.

” உன் பெயர் என்னம்மா ?”

” என் பெயர் செல்லி . எங்க குலசாமி செல்லியம்மா பேரை வச்சிருக்காக .வாங்க எங்க வீடு இங்கன பக்கத்திலதான் “

உடன் நடந்தபடி ” என்னம்மா படிக்கிறாய் நீ ? ” விசாரித்தாள் .

” போன வருசந்தான் ப்ளஸ் டூ முடிச்சேன் .அக்கா …நீங்க தப்பா எடுத்துக்கலைன்னா உங்க கையை பிடிச்சுக்கவா ? ” ஆவலாய் கேட்டாள் செல்லி .

கள்ளங்கபடமற்ற அந்த குழந்தை கேள்வியில் கவரப் பட்டவள் ” ஏன்மா …?” என்றபடி கைகளை நீட்டினாள் .

பளபளப்பும் , மென்மையும் ஒருங்கே கலந்து தன்முன் நீண்ட அந்த வெண்ணிற கரங்களை ஆவலாக பற்றிக் கொண்ட செல்லி” உங்க கை எவ்வளவு அழக்க இருக்குக்கா .பளபளன்னு , சாப்ட்டா ” என்றாள் பாராட்டுதலாக .

” ஓ…அப்போ என் கை மட்டுந்தான் அழகா ? தான் அழகா இல்லையா ? ” சிரிப்புடன் கேட்டபடி அவளுடன் நடந்தாள் சமுத்ரா.

” ஐய்யோ ….நீங்க ரொம்ப அழகுக்கா …அப்படியே பொம்மை மாதிரி மொழுமொழுன்னு இருக்கீங்க .சினிமா கதாநாயகி போல “

” ஏன்கா எனக்கு ஒரு சந்தேகம் .படித்தவர்களுக்கெல்லாம் இப்படி அழகு வந்துடுமா ?”

அழகு பரம்பரை சம்பந்தப்பட்டது .படிப்பு …தன்னம்பிக்கையை பலப்படுத்தி அந்த அழகை மெருகேற்றுகிறது .இதனை இச்சிறு பெண்ணிற்கு எப்படி விளக்குவது?




” கண்டிப்பாக செல்லி படிப்பு எல்லோருக்குமே ஒரு விசேச அழகை கொடுக்கத்தான் செய்யும். ” பின்னால் தெளிவாக விளக்கி கொள்ளலாமென விட்டாள்.

” இதுதான்கா எங்க வீடு ” வரிசையாக இருந்த காலனி வீடுகளுள் ஒன்றினுள் அழைத்து சென்றாள் .

ஒரு நடுத்தர வயது பெண் தரையில் கால்  நீட்டி அமர்ந்து கீரையை ஆய்ந்து கொண்டு டிவியில் பார்வையை பதித்திருந்தாள் .

” இது என் அம்மாக்கா.பெயர் சாயாதேவி .அம்மா இவுங்களை தெரியுமில்ல பத்திரிக்கை காரங்க ” என அறிமுக படுத்தி விட்டு

” இங்கு உட்காருங்க்க்கா ” ஒரு வயர் கட்டிலை காட்டிவிட்டு ஓரமாக இருந்த சமையல் தடுப்பிற்குள் நுரைந்தாள் .

அந்த பெண் இவளை ஏறிட்டு பார்த்து தலையை அசைத்து விட்டு மீண்டும் டிவியினுள் போய்விட்டாள். சமுத்ரா விழிகளை வீட்டை சுற்றி ஓட்டினாள் .

அது அரசாங்கம் கட்டி கொடுத்த இலவச வீடு .ஒரே அறை .ஓரமாக சமையலுக்கு தடுப்பு .அருகில் சிறு அலமாரியில் மளிகை சாமான்கள். மற்றொரு பொருத்தப்பட்ட மர    அலமாரியில் ஒரு ஆணின் வண்ண புகைப்படம் .காய்ந்த மாலை தொங்கியபடி இருந்த்து .

யாராக இருக்கும் ? சாகுமளவு வயசு தெரியவில்லை புகைபடத்தில் .மாடசாமி என கீழே எழுதியிருந்த்து.ஒருவேளை சிலவருடங்கள் முன்பு எடுத்த இளமை புகைப்படமாக இருக்கலாமோ ?

” அக்கா மோர் சாப்பிடுங்க ” சமுத்ராவின் எண்ணம் தடைபட்டது .சுத்தமான சிறு செம்பில்  அவள் முன் மோர் நீட்டப்பட்டது .

அந்த வெயிலுக்கு தேவாமிர்தமாக தொண்டையை நனைத்தது அது .” ரொம்ப நல்லாயிருக்கு செல்லி .நன்றிம்மா உனக்கு ”  மனநிறைவோடு சொம்பை நீட்டினாள் .

” ஐய்யே என்னக்கா இதுக்கெல்லாம் போய் நன்றி சொல்லிக்கிட்டு .நீங்களெல்லாம் எங்க வீட்டுக்கு வந்த்தே பெரியது “

” என்னம்மா நான் என்ன பெரிய ஆளா ?”

” கண்டிப்பாக்கா ..நீங்க எவ்வளவு பெரிய படிப்பு படிச்சிரிக்கீங்க.எவ்வளவு பெரிய வேலையில் இருக்கீங்க ? ” செல்லிக்கு படித்தவர்களிடமிருந்த மரியாதை தெரிந்த்து .

” நீ மேலே என்னம்மா படிக்க போகிறாய் ? ” மத்தளமாய் முழங்கி கொண்டிருந்த பெண் அமைதியாகிவிட்டாள்

ஒருவேளை படிப்பில் சிறிது மட்டமா ? ” என்ன உனக்கு படிப்பு அவ்வளவாக வராதோ ? ” கிண்டலாக கேட டாள. .

” இல்லையே …எங்கள் வகுப்பில. எப்பவும நான்தான் முதல் .ப்ளஸ் டூவில் பள்ளியில் முதல் மாணவி தெரியுமா ? ” சிறு ரோசம் அந்த குழந்தையின் குரலில் .

” அப்போது படித்து டீச்சராக போகிறாயா ? ” இது போன்ற கிராமத்து பெண்களின் அதிக பட்ச கனவு அதுவாகத்தானே இருக்கும் என்ற எண்ணத்தில கேட்டாள்

” இல்லை எனக்கு உங்களை மாதிரி ஆகனும்னு ஆசை அக்கா ” ஆசையில விழி பளபளக்க கூறினாள் .

” என்னை மாதிரின்னா…ஓ..பத்திரிக்கை நிருபரா ?”

” ஆமாம் ்..அப்படியே இந்த செய்தி சேனலில் பேட்டியெல்லாம் எடுக்காங்களே …அந்த மாதிரி வேலை பார்க்கனும் .

அந்த இளம் மனதின பெரிய கனவை மனதினுள் வியந்தபடி *” அதற்கு ஜர்னலிசம் படிக்கனும் செல்லி .நீ உன் பத்தாவது , பனிரெண்டாவது சான்றிதழ்களை கொடு .நான் மார்க்கை பார்த்துவிட்டு எந்த கல்லூரி சேரலாம்னு சொல்றேன் .”

” பணம் யாரு உன் அப்பனா கொடுப்பான் ? இல்லை நீ கொடுப்பியா ? ” ஆக்ரோசமான குரலில் திடுக்கிட்டு திரும்பினாள் .

சாயாதேவிதான். கிட்டதட்ட சாமியாடி நிலையிலிருந்தாள்.

” அம்மா வாயை மூடு ” பதறினாள் செல்லி .

” நீ வாயை மூடுடி சின்னக்கழுதை .இவளையெல்லாம் உள்ளே விட்டதே தப்பு .ஏய் எந்திரி வெளியே போ ” கைகளை சொடுக்கினாள்.

முதல் நாள் அனைவரும் சமுத்ராவை பார்த்ததும் பேசாமல் இருந்த்து உண்மைதான் .ஆனால் அது வெறும் முகம் திருப்பல் மட்டுமே .இன்று அனைவருமே மிக நன்றாக பேசினர் .அவளது கேள்விகள் அனைத்திற்கும் விடையளித்தனர் .மறுக்க மறுக்க ஆங்காங்கே விருந்தோம்பல் வேறு .

மிக கடினப்பட்டே அவற்றை மறுக்க வேண்டியிருந்த்து .ஆனால் செல்லியின் பிள்ளை முக விருந்தோம்பலை மறுக்க மனமின்றியே இங்கே வந்தாள. இங்கே இப்படி ஒரு வரவேற்பை சத்தியமாக எதிர்பார்க்கவில்லை .

அவளது பத்திரிக்கை துறையில் இது போன்ற அவமானங்கள் சகஜம்தானென்றாலும் ஏனோ தாங்க சற்று சிரம்மாக இருந்த்து .

” அம்மா அந்த அக்கா ரொம்ப நல்லவங்க .அவுங்களை இப்படியெல்லாம் பேசாதீங்க ” செல்லி அழுகவே தொடங்கி விட்டாள் .

” இந்த நொக்கா  நல்லவளாவே இருக்கட்டுன்டி .ஆனால் சேர்க்கை சரியில்லையே .அந்த வீட்டிலிருந்து வந்தவள் எப்படி நல்லவளா இருப்பா ? அந்த குடும்ப புத்தி தானே இவளுக்கும இருக்கும் ….எனக்கு மட்டும் …முடிந்தால் ….”

” வாயை மூடு சாயா …” கத்தியது ஒரு ஆண்குரல் .

” ” அப்பா பாருங்கப்பா அம்மாவை ….” செல்லி கத்தியபடி அந்த ஆணிடம் செல்ல மகளை ஆதரவாக அணைத்தான்  தகப்பன்.

” வீட்டிற்கு வந்த விருந்தாளிகிட்ட இப்படியா நடந்துக்கிடுவ ? ” அதட்டினான் .

” இவா விருந்தாட இங்கே வரலை ..நம்ம வூட்டை நோட்டம் பார்க்க வந்திருக்கா .நம்ம குடும்பத்தை பிரிக்க சொல்லி அவன் அனுப்பி விட்டிருக்கான் ்செல்லியை கூட்டிட்டு போக பார்க்கிறாள் .இவளை உள்ளே விடாதே …ஏய் போடி ….,” கையில். கிடைத்த சாமான்களை எடுத்து எறிய தொடங்கினாள் .

அப்போது பள்ளி விட்டு வந்த சிறுவன் ஒருவன் திகைத்து நிற்க அவன் தலையை தாக்கியது கூர்மையான ஏதோ ஒரு பொருள் ்

ஆத்திரமடைந்த அவள் கணவன் சாயாவை நெருங்கி ஓங்கி அறைய  அவள் கீழே விழுந்து மயங்கினாள் .இவையனைத்தும் ஒரு ஐந்து நிமிடங்களில் நடந்து முடிந்து விட்டது .

” அம்மா நீங்க கிளம்புங்க ” கையெடுத்து கும்பிட்டான் செல்லியின் தகப்பன் .

வீடு திரும்பியதும் அப்படியே கட்டிலில் விழுந்தாள் சமுத்ரா ்.காலை முதல் நடந்த நிகழ்வுகளை  மனதில் வலம் வந்த்தன .




சாயாதேவிக்கு ஏதோ மனநிலை பாதிப்பு இருப்பது தெரிந்த்து .ஆனால  அதற்கு காரணம் யோகேஸ்வரன்….? இவனுக்கும் , அவளுக்கும் என்ன சம்பந்தமிருக்க முடியும் ?

எண்ணும்போதே பெண்கள் விசயத்தில் யோகேஸ்வரனின் பலவீனம் நினைவு வர …அப்படி இருக்குமோ ? இவனுக்கென்ன பெண்ணென உருவமிருந்தால் போதுமா ? அருவெறுப்பில்  முகம் சுழித்தாள் .

செல்போன் ஒலித்தது .மலையரசன் தான் .

” என்னம்மா இன்று என்ன நடந்த்து ? யாரையெல்லாம் சந்தித்தாய் ? ” விபரம் கேட்டான் .

சமுத்ராவும் யாரிடமாவது அனைத்தையும் கொட்டும் நிலைமையில் தான் இருந்தாள் .எனவே நடந்த்தை ஒன்று விடாமல் அண்ணனிடம் ஒப்புவித்தாள் ்

ஆனால் அவனுக்கு கேட்க ஆரம்பித்த போது இருந்த சுவாரஸ்யம் பிறகு இல்லை போலும் .அல்லது எதுவும் வேலை வந்து விட்டதோ  என்னவோ ?

உம் கொட்டி கேட்டுவிட்டு ” ஜாக்கிரதையாக இரும்மா .இப்போது ஒரு அவசர வேலை .பிறகு அழைக்கிறேன் ”  என்ற எச்சரிக்கையோடு பேச்சை முடித்தான்.

அறைக்கதவை திறந்து வெளியே வந்தவள…. கண்களில் சிவப்போடு ” சாயா வேறு என்ன சொன்னாள் ?” என்று கேட்டபடி நின்றிருந்த யோகேஷ்வரனை சிறிது அச்சத்தோடு பார்த்தாள்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!