kadak katru kadal katru Serial Stories

Kadal Kaatru – 14

 ( 14 )

அன்றைய பேட்டிகளை ஒழுங்காக்கி கட்டுரையாக்க வேண்டும் .ஏனோ வேலை ஓடவில்லை சமுத்ராவிற்கு .பொங்கும் அலைகளுக்கிடையே கடலுக்குள் லான்ஞ்சை செலுத்தி சென்ற யோகேஸ்வரனின் தோற்றமே மனதினுள் மீண்டும் மீண்டும் வந்த்து .

செண்பகம் அவளது போனில் வாட்ஸ் அப்பில்  ஒரு போட்டோ அனுப்பி வைத்திருந்தாள் .மிக மிக அழகான ஒரு கொலுசின் படம் .

இதை பாரும்மா .எங்களுக்கு போன் பண்ணு .உன்னுடன் பேச வேண்டும் என மெசேஜ். நேற்று கருணாமுர்த்தி வித்தியாசமாக  பேசியதிலிருந்து அவர்கள் இருவரிடமும் பேசுவதை தவிர்த்தாள் .

மீண்டும் பேச வைக்க இது ஒரு டிரிக்கா …?என எண்ணியபடி போனை தூக்கி போட்டாள் .ஒரு வாரத்திற்காவது பேசக்கூடாது.லாவண்யாவிற்காக பார்த்தால் ….இவர்கள் ரொம்பவே எதிர்பார்க்கிறார்கள் .

அந்த பழங்கால ஜாடியை இங்கிருந்து நான் வாங்கி வந்தால் தங்கள் பழம்பொருட்கள் கடையில் வைத்து நல்ல விலைக்கு விற்கலாமென நினைக்கிறார்கள் போலும் .ஆனாலும் என்று அவர்கள் உண்மையான பழம்பொருட்களை விற்றார்கள் ? இப்போது அந்த ஜாடி மீது இவ்வளவு அக்கறை பட ….

இங்கே அந்த ஜாடியை பொக்கிசமாக பாதுகாத்து வருகின்றனரே …இதை விடுத்து அவர்களிடம் ஒப்படைக்க வேண டுமோ …? மனதினுள் எரிச்சல் மூள மன ஆறுதலுக்காக மலையரசனிடம் போன் பேசினாள் .

் .அண்ணன் வழக்கம் போல யாரை பார்த்தாய் ? என்ன ஏதென்று விசாரிக்க …

” என்ன அண்ணா , இப்போதெல்லாம் என்னுடைய வேலையில் நிறைய அக்கறை எடுத்துக் கொண்டிருக்கிறீர்கள் …? “

முதலில் சற்று தயங்கிய மலையரசன் ” இல்லைம்மா …முன் பின் அறியாத இடத்திற்கு போயிருக்கிறாய் .அங்கே யார் யார் எப்படி இருப்பார்களோ ? வயதுப்பெண்ணில்லையா ? அதுதான் விசாரிக்கிறேன் .” என்றான் .

” பயப்படாதீர்கள் அண்ணா …நான் மிக பாதுகாப்பான இடத்தில் இருக்கிறேன். எனக்கு இங்கே எந்த பிரச்சினையும் இல்லை .”

அண்ணனை தைரியப்படுத்தி விட்டு போனை வைத்தாள் .உடனே தனசேகரிடமிருந்து போன் .அவன் தாய் , தந்தை நினைவில் முதலில் பேச தயங்கியவள் , பின் தனசேகரின் நேர்மை நினைவு வர போனை ஆன் செய்தாள் .




தனசேகருக்கோ , லாவண்யாவிற்கோ  அவர்கள் தாய், தந்தையிடம் அதிக ஈடுபாடு கிடையாது .அதிலும் தனசேகருக்கு தன் தந்தையின் தொழிலில் சுத்தமாக விருப்பம் இருந்த்தில்லை .அந்த தொழிலை விட்டு விடும்படி அடிக்கடி தந!தையிடம் கூறிக் கொண்டிருப்பவன் அவன் .எனவே தாய் , தந்தைக்காக அவன் தன்னிடம் நிச!சயம் தூது வர மாட்டான் என்ற உறுதியுடன் ஹலோ சொன்னாள் .

” சம்மு ….ரொம்ப ரொம்ப சந்தோசமாக இருக்கேன்டா .எனது அமெரிக்க பயணம் கிட்டத்தட்ட முடிவாகி விட்டது ” அளவில்லா உற்சாகம் அவன் குரலில் .

அமெரிக்காவில் வேலை என்பது அவன் வாழ்நாள் கனவு .இப்போது அவனது  அலுவலகத்தில் அவனுக்கு முன் ஒரு பெண் முன்னிலையில் இருப்பதால் தனது பயணம் அடுத்த வருடம்தான் போல என வருத்தப்பட்டிருந்தான் .

” ஏய் எப்படி இது நடந்த்து ? அந்த நிஷா என்ன ஆனாள் ?”

” அவள் வீட்டில் ஏதோ ப்ராபளம் போல .அவள்  போகவில்லையாம் .இன்னமும் அதிகார பூர்வமாக அலுவலகத்திற்கு தெரிவிக்கவில்லை .ஆனால் நண்பர்களிடமெல்லாம் தெரிவித்து விட்டாள் .அவளுக்கு அடுத்த இடத்தில் நான் இருப்பதால் இனி அந்த வாய்ப்பு எனக்குத்தான் வரும் “

” வாழ்த்துக்கள் தனா …சீக்கிரம் கிளம்புங்க …எனக்கு ரொம்ப சந்தோசமாக இருக்கிறது “

” சம்மு …நான் மூன்றுவருட ஒப்பந்த்த்தில் போகிறேன் .இப்போதுபோனால் வர முன் று வருடமாகும் ….” என நிறுத்தினான் .

” அதனால் ….”

” என் விருப்பத்தை நீ மறுக்க கூடாது….”

“என்ன விருப்பம் ? “

” சொல்கிறேன் .என் பயணம் முடிவாகட்டும் .அங்கே உன்  வேலை எப்போது முடிகிறது ?”

” பத்திரிக்கை வேலை அதிகபட்சம் ஒரு வாரத்தில் முடிந்து விடும் ….லாவண்யா விபரம்தான் இன!னும் ஒன்றும் தெரியவில்லை “

” சை…அந்த வேலையை விட்டு தள்ளு .அவள் எங்கேயாவது கண்டிப்பாக நிம்மதியாக இருப்பாள் .”

” அது தெரிந்துவிட்டால் இவர்களும் நிம்மதியாக இருப்பார்களே தனா .அதற்காகத்தானே தவிக்கிறார்கள் “

“எனக்கு அப்படி தோன்றவில்லை .இந்த அம்மாவும் ,அப்பாவும் ஏன்தான் இப்படி இருக்கிறார்களோ ?”

” உங்கள் அம்மா உங்களிடம் பேசினார்களா ?”

” ஆமாம் ஆமாம் ….ஒரு பிரச்சனை என்றால் அதற்கு நிச்சயம் இவர்கள்தான் காரணமாயிருப்பார்கள் .இதில் உன்னிடம் என் னை தூது வேறு அனுப்புகிறார்கள் .”

” அது என்ன பிரச்சினையென்றால் ..”

” வேண்டாம் சம்மு …இதையெல்லாம் நான் மண!டையில்  ஏற்ற தயாரில்லை .நான் இரண்டொரு நாட்களில் உன்னை அழைக்கிறேன் .நீ நான் சொன்னதை கொஞ்சம் மனதில் வைத்திரு .வைக்கிறேன் “

இதுதான் தனசேகரன்.எல்லாவற்றிலும் மிக நேர்மையானவன் .தவறென்றால் தாய் , தந்தையென பார்க்க மாட்டான் .எப்பொழுதும் எதிலும் நேர்வழிதான் அவனுக்கு .

இருவருமாக தங்கள் காதலை அறிவித்து கொண்ட போதிலும் , இது வரை ஒரு தவறான பேச்சு , பார்வை கிடையாது .டிஸ்கொதே , இருளான தியேட்டர், படகு மறைவு போன்ற சில்லறை தனங்கள் கிடையாது .அவனது பார்வை நேரடியாக கண்களையே நோக்கும் .

இன.றைய அமல்ராஜின் பார்வை நினைவு வந்த்து.எவ்வளவு மோசமான பார்வை .இப்படி பொறுக்கித்தன பார்வை பார்த்து கொண்டு இவன் யோகேஷ்வரனை பொறுக்கி என்கிறான் .

ஆனால் பெண்கள் விசயத தில் இவ்வளவு கெட்ட பெயர் வாங்கியிருக கும் யோகேஷ்வரன் பார்வை ஒரு போதும் என் விழிகளை தாண்டிய நினைவில்லை.

முதன்முறையாக யோகனின் கேரக்டரை நல்லபடியாக நினைக்கிறோம் என்ற நினைவின்றியே நினைத்துக் கொண்டிருந்த போது அவள் நினைவுகளின் நாயகனே கதவு திறந்து உள்ளே வந்து கொண்டிருந்தான் .

மிக மிக அசதியாக தெரிந்த அவனது தோற்றம் சிறிது நெருட , சாப்பிட்டானோ ? என்னவோ ?…போய் கேட்கலாமா …ஒழுங்காக பதில் சொல்லுவானா ? அவன் போகும் வரை இருவரும் சண டைதானே போட்டு கொண்டிருந்தோம் .தனக்குள்ளேயே பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருந்தாள் .

அவ்வளவு அசதியிலும் தன் வேக நடை மாறாமல் வந்தவன் இவளருகில் வந்து ,  “சாப்பிட்டாயாம்மா ? ” என்றான் .

” நீங்கள் சாப்பிட்டீர்களா ?” சமுத்ரா அறியாமல் இந்த வார்த்தைகள் உதிர்ந்து விட்டிருந்தன .

” கடலுக்குள் ஏது சாப்பாடு ? இப்போது சாப்பிடலாமா ? உடல் சுத்தம் செய்து வருகிறேன் ” படபடவென மாடியேறினான் .

” அந்த மீனவர் …..?,”

” அவரை காப்பாற்றியாச்சு …..திடீரென ஒரு சுழலில் சிக்கி விட்டார் .அவருடன் போனவர்களை விட்டு தனியே  பிரிந்து விட்டார் . இப்போது….எப்படியோ…..கடவுள் கருணை ….பிழைத்து விட்டார் ” படிகளில் தனதுவேகத்தை சிறிது மட்டுப்படுத்தி இந்த தகவல்களை தெரிவித்து விட்டு மேலும் மாடியேறினான் .

” மேகலை சாப்பாடு எடுத்து வை ” சமுத்ரா குரல் கொடுத்தாள்.
சமுத்ராவின் அதிகார குரலில் சமையலறையிலிருந்து கரண்டியை சுழற்றிக்கொண்டு பொங்கியபடி வந்த மேகலை , சமுத்ரா மாடி பக்கம் கட்டைவிரலால் சுட்டவும் ….மௌனமாக உள ளே திரும்பினாள் .

” நம்ம ஐயா இல்லைன்னா இதெல்லாம் நடக்க சான்சே இல்லீங்கய்யா ” குரல் வெளிப்புறம் கேட்டது.சமுத்ரா அங்கே சென்றாள் .

வாசலில் மயில்வாகனனும் , புவனாவும் இருக்க அவர்களிடம் ஒரு ஆள் பேசிக்கொண்டிருந்தான் .அவன் யோகேஸ்வரனுடன் கடலுக்குள் சென்றவன் போலும் .

” அவன் இருக்கிற படகு தண்ணிக்குள்ள சுத்திக்கிட்டே போகப் போகுது …நாங்க எல்லோரும் கிட்ட போகவே யோசிக்கிறோம் .நம்ம ஐயா கொஞ்சம் கூட யோசிக்காம தண்ணில பாஞ்சிட்டாரு .கொஞ்ச நேரத்துக்கு அவரை மேலே காணோம் .கதிகலங்கி போய் பார்த்துட்டு இருக்கும் .இப்போ அவன் படகும் தண்ணிக்குள்ள போயிடுச்சு .”




” ஐய்யோ ….செல்லியம்மா தாயே …” என புவனா வெளிப்படையாகவும் , “முருகா …,,” என சமுத்ரா மனதிற்குள்ளும் அலறினர் .

” அரை அவுர் ஆச்சு .என்ன செய்யன்னு தெரியாம முழிச்சிட்டு இருக்கும் போது , திடீர்னு நம்ம லான்ஞ்சுக்குள் அவன் தலை முடியை பிடித்து இழுத்துக் கொண்டு ஐயா ஏறுறாரு . அப்பத்தான் எங்களுக்கு மூச்சே வந்த்து ” விவரித்தான் .

இந்த மக்கள் காரணமில்லாமல் யோகேஸ்வரனை கொண்டாடவில்லை என்று சமுத்ராவிற்கு இப்போது தோன்றியது .கூடவே காரணமேயறியாத ஒரு மனநிறைவும் .

மயில்வாகனன் பெருமிதமாய் மீசை வருட , அதற்கு சற்றும் குறையாத பெருமையை புவனாவின் முகத்திலும் கண்ட சமுத்ரா மெலிதாய் ஆச்சரியப்பட்டாள் .

,” சமுத்ரா …,” யோகனின் குரல்தான் .வேகமாக உள்ளே ஓடினாள் .

” மதியமாவது சாப்பிட்டாயா ..? இல்லையா …? ” காலையிலும் சாப்பிடவில்லை என்றாலும் மதியமும் பசியே இல்லை சமுத்ராவற்கு .அதுவும் மேகலையின் அரைகுறை சமையல் உள்ளேயே இறங்க மறுக்க இரண டு கவளத்துடன் எழுந்திருந்தாள் .ஏனோ இப்போது பயங்கரமாக பசித்தது .

” ரொம்ப பசிக்கிறதே ..” வயிற்றில் கை வைத்து புன்னகையுடன் அவள் கூற ,பொருள் விளங்கா பார்வை ஒன்றை அவள் மீது செலுத்தாயபடி ” சாப்பிடவில்லையா ..? ,வா இப்போதாவது ஒழுங்காக சாப்பிடு ” என்றபடி சாப்பாட்டு மேசைக்கு நடந்தான் .

அவளுக்காகவும் தட்டை எடுத்து வைத்தவன் தன் மணிக்கட்டை ் திருப்பி வாட்சில் நேரம் பார்க்கவும் சமுத்ராவிற்கு எரிச்சல் வந்த்து .அப்படி உனக்கு அங்கே அவசரமென்றால் போய் தொலைய வேண்டியதுதானே .இங்கே என்னை எதற்காக உபசரித்து கொண்டிருக்கிறாய் ? எரிச்சலோடு எண்ணமிட்ட போதே அவன் போன் ஒலிக்க தொடங்கியது .

” இல்லைம்மா ..எனக்கு ஒன்றும் இல்லை .நான் நன்றாக இருக்கிறேன் ….இல்லையில்லை நிஜம்தான் …ஓ…அதற்கு ஒரு வழியிருக்கிறதே …இதோ இப்போதே உன் முன் வந்து நிற்கிறேன் .என்னை முழுதாக கண்ணால் பார்த்தால் நம்புவாயில்லையா செல்லம் …? இதோ இப்போதே வருகிறேன் …இச் ….” போனில் கொஞ்சிய குரலில் பேசியவன் முத்தாய்ப்பாய் ஒரு முத்தத்துடன் இங்கே திரும்பியும் பாராமல் வேகமாக வெளியே போய்விட்டான் .

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!