Entertainment lifestyles News

கோடை காலத்தில் சளி பிடிக்குமா..? வராமல் தடுப்பது எப்படி..??

பொதுவாகவே, நம்மில் பலரும் குளிர்காலத்தில் தான் சளி போன்ற பிரச்சினைகள் வரும். ஆனால் வெயில் காலத்தில் சிலருக்கு சளி பிடிக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா..? இதற்கு காரணம், வைரஸ் தொற்று, அதிக அளவு ஏசியை பயன்படுத்துவது, குளிர்பானம் அல்லது ஐஸ்கிரீம் போன்ற குளிர்ந்த பொருட்களை சாப்பிடுவது ஆகும். தட்பவெப்ப நிலை அல்ல. கோடை காலத்தில் ஏற்படும் சளி பிரச்சனையானது குளிர்காலத்தில் ஏற்படுவது போல தான் இருக்கும். விரைவில் அது தானாகவே படிப்படியாக குறைய ஆரம்பிக்கும்.

இருப்பினும் கோடையில் சளி ஏன் ஏற்படுகிறது என்ற காரணத்தை முறையாக கண்டுபிடித்தால் அதை எளிதாக குணப்படுத்தி விடலாம். அதுமட்டுமின்றி, கோடைக்கால சளியினால் ஏற்படும் தொற்றுக்களிலிருந்து உங்களை பாதுகாத்து கொள்ள, தற்காப்பு நடவடிக்கைகளை எடுக்கலாம்.




summer tips reasons behind summer cold causes symptoms and how to prevent it in tamil mks

அறிகுறிகள்: 
சளி, ஒவ்வாமையால் பாதிக்கப்பட்டவருக்கு தும்மல், மூக்கு ஒழுகுதல், அரிப்பு தொண்டை வலி போன்ற அறிகுறிகள் ஏற்படுமாம். மேலும் இவை கோடைகால ஜலதோஷத்தின் அறிகுறியாகும்.  அதுமட்டுமல்லாமல் இருமல், வியர்வை, காய்ச்சல் போன்ற அறிகுறிகள் கூட ஏற்படும். பொதுவாகவே, கோடையில் சளி ஏற்படும் போது அதன் அறிகுறிகள் மாறும். ஆனால் ஒவ்வாமை ஏற்பட்டால், அதன் அறிகுறிகள் நீண்ட நாட்களுக்கு அப்படியே இருக்கும்.

கோடை காலத்தில் சளி பிடிப்பதற்காக காரணங்கள்: 

  • பொதுவாகவே, கோடை காலத்தில் அதிகமாக வியர்க்கும். இதனால் உடலில் நீண்ட நேரம் ஈரம் தங்குவதால், சளி பிடிக்க வாய்ப்பு அதிகம்.

  • அதுபோல, அதிக நேரம் வெயிலில் சுற்றித் திரியும் போது, நம் உடலில் அளவுக்கு அதிகமாக வெப்பம் தங்குகிறது. இது வெப்பதை மட்டுமல்ல வலியையும் கொடுக்கும். இதுதான், வெப்ப பக்கவாதம் அல்லது கோடை சளி என்று அழைக்கப்படுகிறது.

  • அதிக வெப்பநிலை இருக்கும் இடத்தில் இருந்து குளிர்ந்த இடத்திற்குள் நுழையும் போது கூட சளி ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது.

  • கோடைக்காலத்தில் வெப்பதில் இருந்து தப்பிக குளிர்ச்சியான பானங்களை அருந்துவது வழக்கம். ஆனால் அது தவறு. இதனால் தொண்டை தொற்று போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.




கோடை காலத்தில் ஏற்படும் சளியை தடுக்க வழிகள்: 

  • கோடை காலத்தில் ஏற்படும் சளி பிரச்சனைகளை சரிசெய்ய வீட்டு வைத்தியம் சிறந்த முறையாகும். இதற்கு நோய் எதிர்ப்பு சக்தியுள்ள ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள். இவை வளர்சிதை மாற்றத்தில் ஆரோக்கியமான விளைவுகள் ஏற்படுத்தும். மேலும், ஆரோக்கியமான உணவுகளில் ஊட்டச்சத்துக்களும், வைட்டமின்களும் நிறைந்திருப்பதால், கோடைக்காலத்தில் ஏற்படும் சளி போன்ற பிரச்சனைகளில் இருந்து உங்களை பாதுகாக்கும். அதற்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியையும் வழங்கும்.

  • அதுபோல, இந்த பருவத்தில் எவ்வளவு அதிகமாக நீர் குடிக்கிறோமோ அவ்வளவு அதிகம் அது நம்மை ஆரோக்கியமாக வைக்கும். மேலும் உடலில் உள்ள தேவையற்ற நச்சுக்களை வெளியேற்றுவதற்கு நீர் பெரிதும் உதவுகிறது.

  • முக்கியமாக, ஆரோக்கியமான தூக்கம் அவசியம்.

  • பொதுக் கழிப்பறைகளை பயன்படுத்தினால் கைகளை சுத்தம் செய்ய மறக்காதீர்கள்.

  • ஏற்கனவே சளியால் பாதிக்கப்பட்ட நபர்களிடம் இருந்து சற்று விலகி இருப்பது நல்லது.

  • குறிப்பாக, உணவுகளில் காய்கறிகள், கீரை, வெள்ளரி போன்றவற்றை சேர்த்துக்கொள்ளுங்கள்..அவை உங்கள் உடலுக்கு தேவையான குளிர்ச்சியையும், ஊட்டச்சத்துக்களையும்  வழங்கும்.




What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!