gowri panchangam Sprituality

காவல் தெய்வங்கள்/பொய் சொல்லா மெய்யார்’ மற்றும் ‘பத்திர காளி’

புதுக்கோட்டைக்கு அருகில் உள்ள பொன்னமராவதிக்கு அருகில் உள்ளதே மூலன்குடி எனும் கிராமம். அந்த கிராமத்தில் ஆணும் பெண்ணுமான இரண்டு இளைஞர்கள் இருந்தனர். இருவரும் நெருங்கிய நண்பர்களாக பழகிக் கொண்டு இருந்தார்கள். அவர்களின் வேலை வயல்வெளியில் உள்ள தானியங்களை பாதுகாத்து வருவதே.




ஒரு நாள் அவர்களைக் கண்ட ஒரு கிராமத்தவன் அவர்களைப் பார்த்தால் கணவன் மனைவி போல உள்ளனரே எனக் கூற அது அவர்களது மனதை வருத்தமடையச் செய்ய ஒருநாள் அவர்கள் இருவரும் எவரிடமும் சொல்லாமல் கிளம்பிச் சென்று ‘பாஜ்ரா’ (இது கோதுமைப் போன்ற ஒருவகை  தானியம்)  எனும் தானியக் கிடங்கில் ஒளிந்து கொண்டனர். திடீர் என அவர்கள் இருவரும்  காணவில்லை என்பதினால் அந்த  ஊர் மக்கள் அவர்களை தேடி அலைந்தார்கள்.

இறுதியாக  அந்த இருவரும்  பாஜ்ரா  தானியக் களஞ்சியத்தில் ஒளிந்து கொண்டு  இருந்ததை கண்டு பிடித்தனர்.  ஆனால் பாஜ்ரா தானியக் களஞ்சியத்தில் ஒளிந்து கொண்டு இருந்த அவர்கள்  இருவருமே மூச்சு முட்டி அதற்குள் மடிந்து கிடந்தார்கள். ஆகவே ஊர்மக்கள் அவர்களுடைய உடலை சுடுகாட்டுக்கு எடுத்துச் சென்று  எரித்தனர். ஆனால் ஆச்சர்யமாக அவர்களது உடை தீயினால் எரிந்து போகவில்லை.   ஆகவே மீண்டும் அவர்களது ஆடைகளை எடுத்து தீயில் போட்டார்கள். அப்போதும் அது எறியவில்லை. எத்தனை முறை அவர்களின்   உடையை எடுத்து தீயில் போட்டும் அவை எறிந்து போகவில்லை. அப்போது ஆகாயத்தில் இருந்து ஆசிரி ஒன்று குரல் கொடுத்து ‘தாமே அந்த கிராமத்தைக் காக்கும் கடவுள்’ எனக் கூறியது.

ஆகவே அந்த கிராமத்தினர் அது முதல் அந்த பையனுக்கு ‘பொய் சொல்லாத மெய்யார்’ எனவும் பெண்ணுக்கு ‘சீலைக்கரி பத்ரகாளி’ எனவும் பெயரிட்டு அவர்களுக்கு சிலை வைத்து அவர்களை வணங்கலாயினர்.

ஆனால் அது முதல் அந்த கிராமத்தில் பல பிரச்சனைகள் தோன்ற அது அந்த காளியினால் ஏற்பட்டு வருகிறது  எனக் கருதிய மக்கள்  அவளுடைய சிலையை மட்டும் அங்கிருந்து அகற்றி காட்டில் கொண்டு போய் ஒரு இடத்தில் போட்டு விட்டார்கள்.  அது முதல் அந்த கிராமத்தின் பிரச்சனைகள் குறையலாயின.

ஒருநாள் வெள்ளாடு மேய்ப்பவர் ஒருவர் அந்த காளியின் சிலையை பார்த்து விட்டு அதன் முகம் ஆகாயத்தைப் பார்த்தபடி இருக்குமாறு திருப்பி வைத்து விட்டார்.   மறுநாள் அந்த கிராமம் தீப்பிடித்து எரியலாயிற்று.  அகவே ஊர் மக்கள் ‘பொய் சொல்ல மெய்யாரிடம்’ சென்று தம்மைக் காப்பாற்றுமாறு வேண்டிக் கொள்ள அவரும் அந்த காளியின் சிலையை கொண்டு வந்து தம்மைப் பார்த்தபடி இருக்குமாறு வைத்து விடுமாறு கூறினார். மக்களும் அதை செய்ய அப்படி வைத்தவுடன் அந்த கிராமத்தின் பிரச்சனை முற்றிலும்  தீர்ந்தது.




அந்த கிராமத்தில் ‘பொன்னர்’ மற்றும் ‘பிரம்ம கருப்பருக்கும்’  ஆலயம் இருந்தது. ஆனால் அந்த ஆலயத்துக்கு  மேல் கூறை  இல்லை. அந்த இருவரும் மூலன்குடி கிராமத்தில் இருந்து சுமார் 25 கிலோ மீட்டர் தொலைவில் இருந்த ஒரு கிராமத்தை சேர்ந்தவர்கள். ஒரு முறை மூலன்குடியை சேர்ந்த பெண்ணை   ‘பொன்னர்’ மற்றும் ‘பிரம்ம கருப்பரின்’ கிராமத்துப் பையனுக்கு மணம் முடித்தனர். மூலன்குடியை சேர்ந்த மணப்பெண்ணின் உறவினர்கள்  அந்த கிராமத்துக்கு போய் வந்து இரவில் அங்கிருந்த ‘பொன்னரின்’  ஆலயத்தில் தங்கினார்கள். அப்போது அவர்கள்  ஒருவருடைய கனவில் ‘பொன்னார்’ தோன்றி அங்கிருந்து  செல்லும்போது  அவர்களுடன் தன்னையும் மூலன்குடிக்கு அழைத்துச் செல்லுமாறு கூறினார். ஆனால் வந்தவர்கள் பையனின் கிராமத்தில் இருந்து அவருடைய சிலையை  எடுத்துப் போனால் அந்த கிராமத்து  பிள்ளை வீட்டாருடன் தகராறு ஏற்படுமே என பயந்தனர். ஆனால் ‘பொன்னரோ’ தன்னை அங்கிருந்து அவர்களுடன் அழைத்துப் போனால் மூலன்குடியை வளமையாக வைப்பேன் என்று உறுதி கொடுத்ததினால் அவருடைய கைதடியை சம்பிரதாயமாக அங்கிருந்து எடுத்துக் கொண்டு போய் தம்முடைய கிராமத்தில் இருந்த ‘பொய் சொல்லா மெய்யாரின்’ ஆலயத்தில் வைத்தனர்.

ஆகவே  ‘பொன்னர்’ கிராமத்தினர் திருமணம் ஆன பெண்ணை மூலன்குடிக்கு திருப்பி அனுப்பி விட்டார்கள் என்றாலும் ‘கருப்பரும்’ ‘பொன்னரும்’ ஊர் மக்களுக்கு உறுதி அளித்தது போல மூலன்குடியை வளமாக  ஆக்கினார்கள்.




‘பொன்னர்’ மற்றும் ‘பிரம்ம கருப்பரும்’ ‘பொய் சொல்லா மெய்யாருக்கு’ உதவியாளராகச் சேர்ந்தனர். மெய்யாருக்கு பக்கத்தில் இரண்டு குதிரை சிலைகளும் செய்யப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டது. தினமும் இரவில் அந்த குதிரை மீது ஏறிக் கொண்டு அந்த இருவரும் (பொன்னர்’ மற்றும் ‘பிரம்ம கருப்பர்) தமது சொந்த ஊருக்கு சென்று விட்டு திரும்பி  வருவதாக  நம்புகிறார்கள்.

அந்த கிராமத்தினர் மூலிகை மலையானின் ஆலயத்துக்கே வருடாந்திர யாத்திரையை செய்கிறார்கள்.  அந்த கிராமத்தில் கருத்த கலியன் மற்றும் சின்ன கருப்பு போன்றவர்களின் ஆலயங்களும் உள்ளன.   வைகாசி மாதம் எனப்படும்  மே- ஜூன் மாதங்களில் அங்கு  மெய்யாரின் விழா  நடைபெறுகின்றது. மகா சிவராத்தரியிலும் பெரிய விழா நடைபெறுகின்றது. ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும் ‘அவரி படைப்பு’ என்ற விழாவில் பொன்னருக்கு மிருகங்களின்  பலி தரப்படுகின்றது.
——————-
பின் குறிப்பு :
மூலன்குடி எனும் கிராமம் தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டத்தில் குடவாசல் எனும் ஊரின் அருகில் உள்ளது. இந்த கிராமத்தில் நான்கு ஆலயங்கள், ஒரு தேவாலயம் போன்றவை  உள்ளன.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!