gowri panchangam Sprituality

இன்றைய ராசி பலன் (18.4.24)

சந்திர பகவான் இன்று சிம்ம ராசியில் பயணம் செய்கிறார்.இன்று இரவு 08.35 வரை தசமி. பின்னர் ஏகாதசி. இன்று காலை 10.55 வரை ஆயில்யம். பின்னர் மகம். கேட்டை மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம். மேஷம் முதல் மீனம் வரையுள்ள 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.

 

மேஷ ராசி அன்பர்களே!

படிப்புக்காக பிள்ளைகளை வெளிநாடு அனுப்ப திட்டமிடுவீர்கள். பழுதாகிக் கிடந்த வாகனத்தைச் சரி செய்வீர்கள். தாயாரின் ஆசையை நிறைவேற்றுவீர்கள். சொந்த பந்தங்களோடு இணக்கமாக இருப்பீர்கள். அடுத்தவரின் பிரச்சனைக்காக மனம் வருந்துவீர்கள். குடும்பத்தினர் வருத்தம் அடையக் கூடாது என பாடுபடுவீர்கள்.இன்று அம்பிகையை தரிசிக்க நற்பலன் அதிகரிக்கும்.

அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் அனுசரணையாக நடந்துகொள்வது அவசியம்.

பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும்.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கும் திடீர் செலவுகளுக்கும் வாய்ப்பு உண்டு.




ரிஷப ராசி அன்பர்களே!

நீண்ட காலமாக ஆசைப்பட்ட பொருளை நிச்சயமாக வாங்குவீர்கள். அடுத்துக் கெடுக்க நினைப்பவர்களை கொடுத்து மனம் குளிர வைப்பீர்கள். வேலை இடத்தில் இருந்த பிரச்சனைகளை வெற்றிகரமாகத் தாண்டுவீர்கள். உறவினர் வீட்டு விருந்து நிகழ்ச்சியில் குடும்பத்துடன் கலந்து கொள்வீர்கள். சகோதர சகோதரிகளுக்கு உதவி செய்வீர்கள். முருகப்பெருமான் வழிபாடு மகிழ்ச்சியை அதிகரிக்கும்.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வெளியூரிலிருந்து எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து சேரும்.

ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் குடும்பம் தொடர்பான விஷயத்தில் முடிவு எடுப்பதைத் தவிர்க்கவும்.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் செலவுகள் ஏற்படும்.

மிதுன ராசி அன்பர்களே!

பொதுச் சேவைகள் மூலமாக புகழடைவீர்கள். ஊழியர்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். பணி நிமித்தமான பயணங்களில் நல்ல லாபத்தை பெறுவீர்கள். டீக்கடை வியாபாரத்தை சுறுசுறுப்பாக நடத்துவீர்கள். பெட்டிக்கடை வியாபாரிகள் பிரச்சனைக்கு தீர்வு காண்பீர்கள் ‌ மாணவர்கள் அக்கறையுடன் படித்து சாதனை படைப்பீர்கள்.அம்பிகையை வழிபடுவது நன்மை தரும்.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் செலவுகளால் கையிருப்பு கரையும்.

திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழியில் நன்மை உண்டாகும்.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைக்கக்கூடும்.




கடக ராசி அன்பர்களே!

தாயார் வீட்டுக்குச் செல்லும் மனைவியைத் தடுக்காதீர்கள். கம்பெனியின் கணக்கு வழக்குகளை சரியாகக் காட்டினால் சிக்கலில் மாட்ட மாட்டீர்கள். வெளியூர்ப் பயணங்களின் போது தேவையற்ற பழக்கங்களில் ஈடுபடாதீர்கள். வியாபாரத்தில் சின்ன சறுக்களை சந்திப்பீர்கள். காதலியிடம் புரியாமல் பேசி தேவையில்லாத வம்பில் மாட்டிக்கொள்வீர்கள்.மகாலட்சுமி வழிபாடு மகிழ்ச்சி தரும்.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணலாபம் உண்டாகும்.

பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் காரிய அனுகூலம் ஏற்படும்.

ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும்.

சிம்ம ராசி அன்பர்களே!

வேலையாட்கள் பற்றாக்குறையால் தொழிலில் முதலீடு செய்ய தயங்குவீர்கள். மெட்டீரியல் இல்லாமல் கட்டிட வேலையை தள்ளிப் போடுவீர்கள். சொன்ன நேரத்திற்கு வேலையை முடிக்காமல் எலெக்ட்ரிஷீயன்கள் திணறுவீர்கள். வெளியிடப் பயணங்களால் பயன் அதிகம் அடைய மாட்டீர்கள். நிதானத்தை இழக்காமல் வேலை பார்க்க முயற்சி செய்வீர்கள்.விநாயகர் வழிபாடு நன்மைகளை அதிகரிக்கும்.

மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மேற்கொள்ளும் புதிய முயற்சி சாதகமாக முடியும்.

பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் ஆதாயம் உண்டாகும்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.




கன்னி ராசி அன்பர்களே!

எதிர்பாராத வகையில் தொழிலில் ஏற்றம் காண்பீர்கள். மளமளவென்று பணவரவை அதிகரிப்பீர்கள். விறுவிறுப்பாக வியாபாரம் செய்வீர்கள். அரசு வேலையில் சிக்கலான பிரச்சனைகளைத் தீர்ப்பீர்கள். பந்தயங்களில் வெற்றி பெறுவீர்கள். ரியல் எஸ்டேட் தொழிலை சுறுசுறுப்பாக நடத்துவீர்கள். திடீர் மருத்துவச் செலவு வந்து திணறி போவீர்கள்..மகாவிஷ்ணு வழிபாடு மகிழ்ச்சி தரும்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வெளியிடங்களில் சாப்பிடுவதைத் தவிர்க்கவும்.

அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன்கள் விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்கவும்.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வீண்அலைச்சலுடன் வீண் விவாதங்களையும் தவிர்க்கவும்.

துலா ராசி அன்பர்களே!

பேச்சுத் திறமையால் பெரிய காரியங்களைச் சாதிப்பீர்கள். தொழிலை விரிவுபடுத்த நண்பர்களிடம் ஆலோசனை பெறுவீர்கள். வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கிக் குவிப்பீர்கள். பிள்ளைகளின் முன்னேற்றத்திற்காகப் பாடுபடுவீர்கள். கையிருப்பை நிலத்தில் முதலீடு செய்வீர்கள். வியாபாரத்தில் இருந்த வில்லங்கங்களைத் தீர்ப்பீர்கள்.சிவபெருமானை வழிபட சிரமங்கள் குறையும்.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும்.

சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும்.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்கள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும்.




விருச்சிக ராசி அன்பர்களே!

வேலையிடத்தில் சக ஊழியர்களின் இடையூறுகளை முறியடிப்பீர்கள். புரிந்து கொள்ளாமல் குடும்பத்தினர் பேசுவதால் மனக் காயம் அடைவீர்கள். எதிர்பார்த்த ஆர்டர்கள் கிடைக்காமல் வருத்தப்படுவீர்கள். பிள்ளைகளின் பிரச்சினைக்காக கல்லூரிக்குச் செல்வீர்கள். கேட்ட இடத்தில் இருந்து பணம் வர தாமதப்படுவதால் தொழிலில் பின்னடைவை சந்திப்பீர்கள்.விநாயகர் வழிபாடு நலம் சேர்க்கும்.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும்.

அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் வீண் விவாதங்களில் ஈடுபடவேண்டாம்.

கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும்.

தனுசு ராசி அன்பர்களே!

எவ்வளவு கொட்டிக் கொடுத்தாலும் சகோதரிகளிடம் திட்டு வாங்கி கட்டிக் கொள்வீர்கள். . கையில் வைத்திருக்கும் பணத்தைக் கவனமாகக் கையாளத் தவறாதீர்கள். வீட்டை விட்டு வெளியேறும் போது பூட்டை இழுத்துப் பார்த்து விட்டுச் செல்ல மறக்காதீர்கள். எடுத்தோம் கவிழ்த்தோம் என்று பேசாதீர்கள். சந்திராஷ்டம நாள். எச்சரிக்கையாக இருங்கள்.ஆஞ்சநேயர் வழிபாடு நலம் சேர்க்கும்.

மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் பணவரவுடன் எதிர்பாராத செலவுகளும் ஏற்படும்.

பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சகோதரர்களுடன் இணக்கமாக நடந்துகொள்வது நல்லது.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பிள்ளைகளின் தேவைகளை நிறைவேற்றி மகிழ்வீர்கள்.




மகர ராசி அன்பர்களே!

சிறிய வேலை என்றாலும் பெரிய அக்கறையோடு செய்வீர்கள். பெற்றோர்களின் பாராட்டல் உச்சி குளிர்ந்து போவீர்கள். உறவுகளைத் தேடிச் சென்று உதவுவீர்கள். வீட்டுக்காக எதிர்பார்த்த வங்கி லோன் சாங்ஷன் ஆகி துரிதமாக வேலையை தொடங்குவீர்கள். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி குடும்பத்தினரை மகிழ்ச்சிப்படுத்துகிறீர்கள்.பைரவரை வழிபடுவது நலம் சேர்க்கும்.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் ஆதாயம் உண்டாகும்.

திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் முக்கிய முடிவு எடுப்பதைத் தவிர்க்கவும்.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளால் சில சங்கடங்கள் ஏற்படும்.

கும்பராசி அன்பர்களே!

ஆடல் பாடல் என்று ஆடம்பரங்களில் நாட்டம் கொண்டு அதிகம் செலவு செய்வீர்கள். தேவையில்லாத பழக்கங்களில் ஈடுபடாதீர்கள். இவனால் என்ன செய்ய முடியும் என்று நினைத்தவர்கள் முகத்தில் கரியைப் பூசுவீர்கள். தொழிலில் உங்கள் வேகத்தைப் பார்த்து எதிரிகள் பொறாமைப்படுவார்கள். வேலை இடத்தில் சோர்வடையமாட்டீர்கள்.இன்று வீரபத்திரரை வழிபட எதிலும் வெற்றியே கிடைக்கும்.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம்.

சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தாயாரின் தேவைகளைப் பூர்த்தி செய்து மகிழ்வீர்கள்.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நல்லவர்களின் நட்பு கிடைப்பது மகிழ்ச்சி தரும்.




மீனராசி அன்பர்களே!

உங்கள் மனம் புண்பட பேசுபவர்களை ஒதுக்கித் தள்ளுவீர்கள். வீண் விரயங்களைச் சந்திப்பீர்கள். பிள்ளைகளின் பிரச்சினையால் டென்ஷன் ஆவீர்கள். மனைவியின் பேச்சு கோபத்தைத் தூண்டி பொறுமை இழப்பீர்கள். தாயாரின் குதிகால் வலிக்கு மருத்துவம் பார்ப்பீர்கள். இயலாதவர்களுக்கு உதவி செய்து செல்வாக்கை அதிகரிப்பீர்கள்.விநாயகர் வழிபாடு தடைகளை அகற்றும்.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வெளிநாட்டிலிருந்து எதிர்பார்த்த தகவல் கிடைக்கும்.

உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.

ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வீண் செலவுகளால் மனதில் சஞ்சலம் ஏற்படக்கூடும்.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!