Athikalai Poongatru Serial Stories

அதிகாலை பூங்காற்று-19

19 

” சொல்லு கவி …நான் குரங்கு போல் தெரியுறேனோ ..? ” 

கவிதாவின் தலை வேகமாக ஆடி தன் மறுப்பை சொன்னது .

இந்த நிலவொலிக்கும் அவனுக்கும் அவளுக்கும் ஒரு சம்பந்தம் உண்டு .பூர்வ ஜென்ம்ம் போல் ஒரு பந்தம் .

” தோ அது மாதிரியே ஒரு முழு நிலா நாளில் …முந்தி ஒரு நாள் நாம ரெண்டு பேரும் பாத்துக்கிட்டோமே , அது …உனக்கு நெனவு இருக்குதா கவி …? ” 

கடலின் பிரம்மாண்டத்துடன் விரிந்தன கவிதாவின் விழிகள் .

அந்த நாளை இவன் நினைவில் வைத்திருக்கிறானா …? அன்று ….

அடிக கடி குடும்பத்தினர் அனைவருமாக அவர்களது தோப்பிற்கு  போய் வருவதுண்டு . கவிதா தனது பள்ளிப் புடிப்பை முடித்திருந்த நேரம் .அவளது பள்ளி விடுமெறையை கொண டாடவென அனைவருமாக மாந்தோப்பிற கு போயிருந்தனர. அங்கேயே குளித்து , சாப்பிட டு , விளையாண டு என பகல் பொழுதை கழித்தார்கள் .

இருள் வந்த போதும்  , ஏதோ கணக்கு வழக்கு பார்க்கவென அப்பாவும் , சித்தப்பாவும் அமர்ந்திருக்க உணவுண்ட பாத்திரங்களை பிரித்து கழுவியபடி இருந்தனர் அம்மாவும் , சித்தியும் .மரமேறி விளையாடிய சித்தப்பா பிள ளைகளுடன் மனம் ஒன் றாமல் மெல்ல தோப்பை சுற்றி நடந்தாள் கவிதா .

ஆதவன் மறைந்து சந்திரன் மெல்ல எழுந்து கொண்டிருந்மான் .கொஞ்ச தூரத்தில் தெரிந்த கண்மாய் மதகின் அருகே வட்ட பந்தாய் மேலெழும்பிய சந்திரன் அவளை ஏதோ ஒரு வசீகரமூட்டி வா என கை நீட்டி அழைத்தான் .

அந்த மதகில் ஏறிப் பார்த்தால் இந்த நிலா இன்னமும் அருகே தெரியாதா …நிலவுக்கு ஆசைப்பட்டு சோறுண்ட மழலையாய் ஒரு வித ஈர்ப்போடு அந்த நிலவை பார்த்தபடி அந்த மதகருகே போனாள் கவிதா .

செடி கொடிகள் மண்டிக் கிடந்த  புதர்களுக்களை ஜாக்கிரதையாய் தாண்டி அச்சிறு பாலத்தின் மீதேறி நின று பார த்தாள் .இப்போது இன்னமும் நிலவு தூரமாக போய்விட ,

” பார்த்தாயா …உன்னை பிடிக்கத்தானே இவ்வளவு தூரம் வந்தேன் …? நீ பாட்டுக்கு மேலே மேலே போகிறாயே …? ” பக்கத்து வீட்டு தோழியாய் பாவித்து இடுப்பில் கை வைத்து நிலவோடு விரலாட்டி சண்டையட்டாள் .

அப்போதுதான் அதை உணர்ந்தாள் ்அந்த பாலத தின்  மீது தான் மட்டும் இல்லையென …சிறு பயத்துடன் மெல்ல விழிகளை சுழற்ற பாலத்தின்  எதிர் சுவரில் சாய்ந்து நின்றபடி அவளை பார்த்துக் கொண்டிருந்தான் அவன் .

நன்கு உயர்ந்து வளர்ந்து பெரிய  மீசை வைத்து முரடன் போல் தெரிந்தான் .திருட்டனாக   இருப்பானோ …கவிதாவினுள் சந்தேகம் வர காதிலும் , கழுத்திலும் கனத்து கிடந்த பொன் ஆபரணங்கள் அவளுக்கு சுமையாயின .அநிச்சையாக கழுத்தை பொத்தியபடி மெல்ல பின்னால் நடந்தாள் .

” யார் பாப்பா நீ …? இந்நேரத்துல   இங்கே என்ன பண்ணுற …? ” அடையாளம் காணும் ஆர்வத்துடன் அவள் மேல் கூர்ந்தன விழிகள் .

அவன் கேட்கவும் இன்னமும் வேகமாக பின்னடைந்தாள. .

” ஏய் …பார்த்து , பின்னால் பள்ளம் …,” அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே சறுகி பின்னால் இருந்த பள்ளத்தில் உருண்டாள் .




அங்கே உருண்டவள் நேராக கீழே அடர்ந்து கிடந்த வேலி மரங்களின் மேல் முள் படுக்கையில் விழுந்திருக்க வேண்டியது .அவன் அதற்குள் நான்கே எட்டுக்களில் அவளை அடைந்து தன் இரு கால்களையும் அகற்றி ஊன்றி பேலன்ஸ் செய்து கொண டு அவள் இடையில் கை கொடுத்து அவளது உருளலை நிறுத்தியிருந்தான் .

” எதற்கு இந்த அவசரம் …? ” தன்னருகே குனிந்து கேட்டவனின் அடர்ந்த மீசையில் ஒரு பயம் வர கண்களை இறுக மூடிக்கொண்டாள் அவள் .

ஒரு கையினால் வளைத்திருந்த அவளது இடையை சுற்றி பிடித்தபடி அவளை அநாசியமாக தூக்கியவன்  நேரே நிறுத்தி நிற்க வைத்தான் ்பாதங்கள் தரையில் படவும் , வேகமாக அவனது பிடியிலிருந்து விடுபட துடித்தாள் அவள் .

” இரு …இரு , இரண்டு பேரும் சரிவில் நிக்குறோம் .இப்போ என்னை தள்ளினீன்னா இருண்டு பேரும் சேர்ந்துதான் உருளுவோம் ….,” அவனது எச்சரிப்பின் நியாயம் புரிந்து அமைதியானவளின் இடை பற்றிக் கொண்டே தன்னுடன் சேர்த்து மென்மையாக இழுத்தபடி மேடேறினான் .

பாலத்தின் மேல் வரவும் அவளை விடுவித்தவன் ” கள்ளப்பயன்னு நினெச்சியோ …? ” சிரிப்புடன் கேட டபடி அவள் காது ஜிமிக்கியை விரலால் சுண்டினான் .

கவிதாவிற்கு இன்னமுமே அந்த சந்தேகம் இருக்க , வேகதாக அந்த இடத்தை விட்டு போய்விட நடந்தாள் .அவன் அவளை தடுக்கவில்லை .ஆனால் உடன் நடந்தான் .கீழே விழுந்த்தில் சிராய்த்திருந்த முட்டியால் கொஞ்சம் நடை தடுமாற …

” பார்த்து நட கண்ணு . அதுதானே உங்க தோப்பு .உன் அப்பா அன்னாசிலிங்கமா …? ” தூரத்தில் தெரிந்த தோப்பை காட்டி கேட்க அவள் தலையாட்டினாற் .

” கொஞ்சம் தூரம்தான் .காலில் அடிபட்டிருக்கிறது .நான் வேணும்னா தூக்கிட்டு போய் விட்ட்டுமா …? ” இயல்பாய் அவன் கேட்ட கேள்வியில் அதிர்ந்தவள் …

” ம்ஹூம் …” என தலையசைத்து நடையில் வேகத்தை கூட்டினாள் .

” சரி வேண்டாம் .மெல்ல பார்த்து நட ” 

புதர்களிடையே அவள் நடக்க கையிலிருந்த டார்ச்சை உயிர்த்து வழி காட்டியவன் தானும் உடன் வந்தான் .அவர்கள் தோப்பை நெருங்கியதும் , பிரிந்திருந்த கம்பி வேலிக்குள் குனிந்து அவள் போக கம்பிகளை ஒதுக்கி உதவினான் . 

‘” பார்த்து கம்பி மேல கீசிடப்போகுது …” அவளை ஜாக்கிரதைப்படுத்தி பத்திரமாய்  மறுபக்கம் போகும் வரை பார்த திருந்தான் .

” கவி எங்கேம்மா போயிட்டே .திடீர்னு உன்னைக் காணோம்னதும் பயந்துட்டேன் ” தேடியபடி வந்த அன்னையின் பின்புறம் போனபடி திரும்பப் பார்த்தாள் ்

இருளோடு , கறுத்த அவன் தேகம் தடவிய மையாய் கரைந்திருக்க , இவளுக்காக சிரித்த அவன் பற்கள் வெள்ளியாய் மினுங்கியது .

இதோ …இப்போது கூட அன்று போல் மின்னிக் கொண்டிருக்கின்றன அவனது பற்கள் ்கவிதாவின் கண்கள் தாபத்துடன் அவன் பற்களை இதழ்களை அந்த பெரிய மீசையை பார்த்தபடி இருந்தன .அய்யனாரின் பார்வை மோகத்துடன் அவளை துளித்துளியாய் உறிஞ்சிக் கொண்டிருந்த்து .

மயக்கும் அந்த நிலவொஐஇயில் கணவனும் மனைவியும் தங்களை மறந்து ஒருவரையொருவர் பார்த்திருக்க , திடுமென பூந்தோரணம் ஒன று கவிதாவின் மேல் வந்து மோதியது .

திரும்பிப் பார்க்க  வெண்ணிலா …அவள் பின்னாலேயே பொனநிலா .அவர்களை விரட்டியபடி கையில் சாதக் கிண்ணத்துடன் அவர்கள் தாய் ராசாத்தி. 

” மன்னிச்சுக்குங்கம்மா .இரண்டுக்கும் ஒரு வாய் உள ளே திணிக்குறதுக்குள்ள போதும் போதும னு ஆயிடுது.கிண்ணத்தை கையில் எடுக்கவும் ஓடி வந்துடுதுக இப்போ உங்க மேல வந்து மோதி … ” பிள ளைகளின் பின்  மன்றாடியபெருமூச்சுடன்  அய்யா , அம்மாவின் தனிமையை கலைத்து விட்டோமோ என்ற குற்றவுணர்வுடன் நின்றாள் .




” இதுக்கு எதற்கு மன்னப்பு ராசாத்தி .? குழந்தைங்கன னா அப்படித்தானே இருக்கும் .குட்டிங்களா நீங்க சமத்து கொழந்தைங்கதானே…சீக்கிரம் சாப்பிடுவீங்களாம். அப்புறம் நாம கண்ணாமூச்சு விளையாடலாமாம்  …” வாஞ்சையுடன் இருவரையும. தன் இரு பக்கமும் அணைத்துக் கொண்டபடி ஏறிட்டவள் கணவனின் பருகும் பார்வையில் முகம. சிவந்தாள் .

இப்போது எதறகு இப்படி பார்க்கிறானாம் …? குழந்தைகளுக்கு சம்மாக மழலை மிழற்றிய மனைவியை பார்வைக்கு தீனியாக்கியபடி ,..

” ஆமா குட்டிகளா நல்லா சாப்பிட்டாத்தானே உடம்புல தெம்பு வரும் .அப்போதானே நம்ம போராட்டத்துல ஜெயிக்கராம் ” என்றான் .

” ஐ …நாங்களும் போராடுவோம் ” 

” எங்க டீச்சர் கூட போராடி ஆற்றை மீட்கனும்னு சொன்னாங்க ” 

” எங்கள் ஆறு எங்களிக்கு” 

” எங்கள் இடத்தை விட்டு திரும்பி போ ” 

மழலைக் குரலில் இரண்டு குழந்தைகளும் கை உயர்த்தி போராளியாக கத்த அவர்களது தாய் பெருமிதமாக அவர்களை பார்த்து நின்றாள் .

” ரெண டு நாளா வீட்ல இதே பேச்சுதாங்கய்யா .இவுக அப்பாதான் இப்புடி புள்ளைகளுக்கு சொல்லிக. கொடுத்து வச்சருக்குறாரு ” 

” புள்ளைக படிப பு இருக்குது ராசாத்தி ்அத விட்டுட டு இதென்ன போராட்டம் …அது …இதுன னு ” 

” நாலு நாளா பள்ளிக்கூடம் லீவுங்ய்யா ்படிக்கிற புள் ளைங்களும் ஆத்துக்குத்தான் வரப் போகுதுங்களாம்யா ” 

” என்ன போராட்டம் ? ” 

ராசாத்தி போகவும் வீட டுக்குள் நடந்த கணவனுடன் சேர்ந து நடந்தபடி கேட்டாள் .

” அந்த ஆறுக்காக ” சுருக் கமாய் பதில் சொன னான் .

வீட டினுள் அன்னாசிலிங்கமும் , கண்ணாத்தாளும . கூட இதையேதான் பேசிக் கொண்மடிருந!தனர் . 

ஆற்றின் வளத்தை பாழாக்கும் அந்த ரசாயன தெழிற்சாலையை இழுத்து மூட ஙைப்பதற்காக இந்த போராட்டம் . இரண்டு ஊர் மக்களும் இணைந்து இந்த போராட்டத்தில் பங்கேற்க வேண்டுமென , அது விபரம் பேசத்தான் தந்தை இங்கு வந்திருக்கிறாரென அறிந்தாள் கவிதா .

ஓரு வார்த்தை என னிடம் சொல்லஙவில்லையே .்அவள் ஆதங்கத்துடன. கணவனை பார்க்க ,அவன் இறுகிய முகந்த்துடன் வேறு பக்கம் பார்த்துக் கொண்டிருந்தான் .




What’s your Reaction?
+1
16
+1
16
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!