Serial Stories நேசத்தினால் நெருங்கிவிடு

நேசத்தினால் நெருங்கிவிடு-9

9

எர்ணாகுளம் நார்த் ரயில் நிலையத்தில் கார் வந்து அவர்களை பாலாரிவட்டத்தில் இருக்கும் ஒரு நட்சத்திர ஓட்டலில் கொண்டு இறக்கியது.. செக் இன் முடிந்து படுக்கைக்கு வந்து படுக்க 4 மணி ஆகி விட்டது. எஸ்தருக்கும் இவளுக்கும் எதிர் எதிர் ரூம்.. தனியாக வெளி ஊரில் இப்போது தான் முதல் முறையாக தங்குகிறாள்.

“யார் காலிங் பெல் அடிச்சாலும் பார்த்து கதவை திற..

நானும் 9 மணி வரை தூங்கி எழுந்திருக்கிறேன்… “

வினயாவுக்கு தூக்கம் வரவில்லை.

 

“கடவுளே…இன்று ஏன் எனக்கு மறந்து போன பழைய நினைவுகள்?.

சில நினைவுகள் மறக்க நினைத்தாலும் ஆழ் மனத்தில் இருக்கும்.

அப்படி என் ‘பாஸ்’ சிம்மாசனம் இட்டு உட்கார்ந்திருக்கிறானோ??.”

ஆனால் அவன் இப்போ எங்கே இருக்கிறானோ??

ஒரு வேளை அதே கேரளாவில் இப்போதும் இருப்பானோ???”

பாஸ்கர் ஈஸ்வரன் என்று முகனூல், இன்ஸ்டாகிராம், லின்கெடின் எல்லாம் தேட ,ஒரே ஒன்றில் மட்டும் கடைசி படம்…

சுமார் நாலு வருடம் முன்பு போட்டது தான் இருந்தது..

அப்போ???…அப்போ???…கண்களில் கண்ணீர் தளும்பிதலையணையை நனைக்க ஆரம்பித்தது.

——

அடுத்த நாள் அந்த கல்சுரல்ஸின் மூன்றாவது நாள்.

எப்படி பாஸ்கரை பார்ப்பது என திருட்டு தனமாக யோசித்துக் கொண்டு இருக்கையில் ,

“ஏய் வினய்… உனக்கு என்னப்பா…ஹீரோவே கெடச்சாச்சு…இனி இந்த போட்டியிலெல்லாம் பிரைஸ் கிடைச்சா என்ன, கிடைக்காட்டி என்ன?”

நேற்று இவளை கண்டு கொள்ளாத இவள் கல்லூரி முதுகலை தோழி.

“என்ன சொல்றீங்கக்கா? ..எனக்கு புரியலே…”

“பரவால்லே..என்னை அக்காங்கறே..அப்போ அந்த பாஸ்கருக்கு நான் மச்சினிச்சி உறவு ஆகிறது. இதுவும் நல்லா தான் இருக்கு…”

என ஒரு வித ஆற்றாமையுடன் பொருமினாள்..

“அந்த ஓணான் மூஞ்சிக்கு…உம் மேலே எப்பவுமே காண்டு..- இன்னொரு வகுப்பு தோழி, ” ‘நீயா நானா’வில் ஆள் பிடிச்சு போய் பேசிட்டு வந்திடுச்சாம்..அது பண்ற அலம்பல் தாங்காது..”  “ஆனா இன்னிக்கு ரொம்ப புலம்பல் தான்..அது கிட்டே எவனோ ஒரு பையன் வந்து நம்ம கல்லூரி போட்டியாளர்கள் பேரெல்லாம் கேட்டு கிட்டு போனானாம்..

அதில் உன் படத்தை பார்த்து இவதான் அந்த வினயா வா…எங்காளு ‘ப்ரித்விராஜ்’ இவளை பத்தி கேட்டு கிட்டு இருந்தான் ..நு சொல்லிருக்கான். அதிலேந்து இதுக்கு உன் மேல் அப்படி ஒரு பொறாமைடீ..”

“அப்போ??…. பாஸ்கர் புத்திசாலியா இருந்தா நம்பரை கண்டு பிடிச்சு எனக்கு போன் பண்ணட்டும்..”

பெண்களுக்கே உரித்தான கெத்தான ஃபீலிங்க் வந்து விட்டது..

“என்னை நேத்துலேந்து அலைய விட்டயேடா பாவி…”.( டா…வா?? ஆமாண்ட்டா. …டால்டா..அப்படித்தான் டா போடுவேன்) .

அகத்தின் இன்பம் இவளின் முகத்தை அப்போது தான் புடம் போட்ட தங்கம் போல் ஜொலிக்க வைத்தது.

அன்று ஏதோ திடீர் போட்டியாம்..

இது கல்லூரிக்கு இடையிலாம்..

கேம்ஸின் விதியே ஜாலியாக இருக்குமாம்..

மொத்த கூட்டமும் ஹாஸ்டல் வளாகத்தில் உள்ள ஸ்டூடண்ட் செண்டரில் குழுமி இருந்தது . காலை முதல் திடீர் கவிதை, திடீர் கட்டுரை எல்லாம்…

பிடித்த ஆணை அல்லது பெண்ணை பிரபோஸ் செய்யும் விளையாட்டுப் போட்டி .இதையே சாக்காக வைத்து நிறைய பேர் கூத்தடித்துக் கொண்டிருந்தார்கள். இரண்டு நிமிடங்கள்… என்ன வேண்டுமானால் செய்யலாம்..பாடலாம்..ஆடலாம்…

கவிதை சொல்லலாம்.. கதை விடலாம்… எதிர் இடத்திலிருப்பவரை ஒப்புக் கொள்ள செய்ய வேண்டும்.

ஆனால் இருவரும் ஒருவரை ஒருவர் தொட்டுக் கொள்ள கூடாது…

இதற்கு சிறந்த பதில் சொல்லும் ஆண்/பெண் அடுத்து தொடரவேண்டும்…




வினயா கல்லூரியின் அந்த முது கலை ‘ஓணான் மூஞ்சி’ இடையில் மேடை ஏறினாள்.

“கொடுப்பாயா என நானும்

எப்போது கொடுப்பது

என நீயும்…

யாரும் பார்க்காத அந்த தருணத்தில்

பறிமாறிக்கொள்வோமா?”

“வேண்டாம் வேண்டாம்” கத்தல் மாணவர்கள் மத்தியில்

“கோடி ரூபாய் கொடுத்தாலும் வேண்டாம் “என ஒருத்தன் சொல்ல,

“ஒரு கோடி…நீ பார்த்தே..”

ஒருவரும் இவளுக்கு பதில் சொல்ல மேடை ஏற முன் வராதபோது ,

பாஸ்கர் மேடை ஏறினான்.

“டேய் …இவனுக்கு என்ன ஆச்சுடா!!!!…

“தெரியாதா…… அவன் நேத்திலேந்தா  “லூசு பையன்.. லூசு பையன்… லூசா சுத்தறான்..”  “இன்னிக்கு என்ன பண்ணப் போறானோ?..”என அவன் நண்பர்கள் சிலர் அங்கலாய்க்க..

வினயாவின் முகத்தில் கோப ரேகை படற ஆரம்பித்தது..

“சே..சரியான ஜொள்ளு பார்ட்டி போல் இருக்கே…”

மேடை ஏறினவன்..

“அந்த கவிதைய மீண்டும் சொல்லுங்க..”

இன்னொரு முறை சொன்னாள்..

இரண்டு நிமிடம் முடியும் போது

இவன் சொன்ன பதிலால் கூட்டம் ஹோ என கத்தி ஆரவாரம் செய்தது..

“வேண்டாம்..நான் வேற பிரான்ச்..

உங்களுக்கு என் விடைத்தாள் பயன் படாது.” என்றான்.

முத்தம் என எல்லோரையும் எதிர் பார்க்க வைத்ததை சிம்பிளா தேர்வில் பறிமாறிக்கொள்ளும் விடைத்தாள் என கூறியதை நினைத்து வாய் விட்டு சிரித்தாள் வினயா.

சிறந்த பதில் சொன்ன பாஸ்கர்,

அடுத்தது  பிரபோஸ் செய்யலாம்..என நிகழ்ச்சி நடத்திக் கொண்டிருந்த ஒரு பெண் கூற..

“யார் ஜோடியாக வருகிறார்கள் என கேட்க…”

நிறைய பேர் வர,

“தோற்ற அதே கல்லூரியை சேர்ந்த வேறு ஒரு பெண் வரலாமே…” அறிவிப்பு வர…

“நீ போடி..நீ போடி..என உசுப்பேத்தி விட…”

தோற்ற அந்த முதுகலை மாணவி,

இவளிடம், “அவன் பிரபோஸ் பண்ணா ஏற்கக் கூடாது. அப்போதான் வென்றதாக அர்த்தம் ” என்றாள்.

மேடை ஏறி எதிரில் உட்கார்ந்தாள்..

பாஸ்கர்..வினயா…எதிர் எதிரில்.

எல்ஈடீ ஸ்க்ரீன் இருவரின் முகத்தையும் க்ளோசப்பில் காண்பித்து கொண்டிருந்தது..

பாஸ்கர் இவள் முகத்தையே பார்க்க…

ஒரு சில வினாடிக்களுக்குள்…

வினயாவை அவை என்னவோ செய்ய…தலையை குனிந்து கொண்டாள்..

“இப்படி ஆளாளுக்கு சும்மா இருந்தா எப்படி??

ஏதாவது செய்யுங்கப்பா…”

என ஒருத்தன் பஞ்சாயத்தில் குரல் கொடுக்க

மாணவர்கள்/மாணவிகளிடமிருந்து விசில் சத்தம்

அந்த ஹாலைப் பிளந்த நேரத்தில்,

“நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா???”

என பாடல் ஒலித்தது பாஸ்கரின் குரலில்.

இவள் பதில் சொல்ல வேண்டும்.

“ஒண்…..ணு…ம் கேட்கலை..” என்றாள் வினயா.

‘அதானே…எப்படிப்பா கேட்கும் ஒரே நாளிலே ‘என்றாள் வினயாவின் தோழி.

“என் காதல் ராணி இன்னும் தூங்க வில்லையா…”

அடுத்த வரியை பாட,

“உன் முன்னாடி தான் கொட்ட கொட்ட முழிச்சுட்டு இருக்கேன் .

தூங்கலையானு கேள்வி வேற???..”

இப்போ பாஸ்கர் எழுந்தான்..

“பாருங்க மக்களே..

“தான் இன்னும் தூங்கலைனு பதில் சொல்லி அவங்களே ஒப்புக் கிட்டாங்க  “அவங்க என் காதல் ராணி என….”

“என் பிரபோசலை ஏத்து கிட்டதுக்கு தேங்க்ஸ்” என கூறி சிரிக்க,

அவனிடம் தான் தோற்ற மகிழ்ச்சியில்.

“சீ நீ ரொம்ப மோசம்” என தன் இரு கையாலும் அவன் மார்பில் குத்த,

எழுந்த கரகோஷத்தில் ,  போட்டியில் விதியை மீறிய வினயா அன்று இனி வேறு போட்டிகளில் கலந்து கொள்ளக் கூடாது…என்ற அறிவிப்பை பாஸ்கரும் வினயாவும் கண்டு கொள்ளவில்லை.

மெதுவாக அரங்கை விட்டு வெளியேறினார்கள் இருவரும்.

காஃபி டேயில் போய் உட்கார்ந்து ஏதேதோ பேசினார்கள்…

ஒன்றும் நினைவில் இல்லை.

அப்படியே கண்ணயர்ந்த வினயாவின் மேல் உடம்பில் பாஸ்கர் ஏதோ சில்மிஷம் செய்ய “சீ…சீ..கைய எடுங்க..யாராவது பார்க்கப் போறாங்க…”

என சொல்லிக்கொண்டே இருக்க,

ஓட்டல் ரூம் காலிங்க் பெல் அவளது நல்ல கனவை கலைத்துப் போட்டது..

 

“சே..எல்லாம் நல்லபடி சென்றிருந்தால் இப்படி தனிமையில் கனவு வாழ்க்கையில் இப்படி கழிப்பதற்கு பதில் நிஜத்தில் ஆட்டம் போட்டுக் கொண்டேருக்கலாமே..”

“இரண்டு நாளாய் ஏன் இந்த அங்கலாய்ப்பு..

அவனை மொத்தமாக மறந்து கொண்டிருந்த நேரத்தில் ஏன் இந்த ஆண்டவன் இப்படி நினைக்கத் தூண்டுகிறான்.”

‘ஒரு புறம் சதீஷ் வேலைய விட்டு தூக்கிட்டாங்கனு சந்தோஷப்படும் போது, முக்கியமான பேட்டியின் போது பாஸ்கர் நினைப்பு வந்து நம்மை அலக்கழிக்கறதே..’

“ஒரு வேளை..அந்த எஸ்தர் அப்பா அம்மா சொல்வது போல இந்த விபாகர் போல வேறு ஒருத்தரை கல்யாணம் செய்து செட்டில் ஆனால் தான் மெதுவாக பழைய சம்பவங்களை மறக்க முடியும் என தோன்றுகிறதே…கடவுள் ஏதோ ஆரம்பித்து வைத்திருக்கிறான் பார்ப்போம்.”

எத்தனை பேர் தங்கள் காதலை மறந்து, மறைத்து வாழ ஆரம்பிக்க வில்லையா..நாமென்ன அப்படி ஒன்றும் பெரிய தப்பு பண்ணலையே…”




கண்ணாடி ஜன்னலை திறந்து கேரள இயற்கை காற்றை சுவாசிக்க…

ஆனால் வாகனங்களின் ஹார்ன் சத்தம் மேலிட கதவை மூடினாள்.

செல் போன் ஒலித்தது.

போனில் எஸ்தர்…

“வரயா…ஃப்ரேக் ஃபாஸ்ட் சாப்பிட்டு விட்டு வெளியே போய்ட்டு வரலாம்…விபாகர் கார் அனுப்பிருக்கான் …”என்றாள்.

“எங்கே. என்றாள்.

 போட்டிங்க் போகலாம் …கொச்சி மெரைன் டிரைவாமே அங்கிருந்து..என்றாள்..

மீண்டும் மெரைன் டிரைவா

கடவுளே      




What’s your Reaction?
+1
10
+1
9
+1
1
+1
1
+1
1
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!