Serial Stories நேசத்தினால் நெருங்கிவிடு

நேசத்தினால் நெருங்கிவிடு-17

17

          டாய்லெட் சென்று முகம் கழுவி லேசாக முகத்திற்கு ஒப்பனையிட்டு மீண்டும் எஸ்தரும் வேலன் சாரும் இருக்கும் டேபிளுக்கு வந்தாள்.காபி கொண்டு வந்து வைத்தார்கள்.

“எப்போது ஆரம்பித்தது உங்கள் தொழில் வாழ்க்கை??

“யார் உந்துதலில் இப்படி தொழில் ஆரம்பிக்க??

போட்டி களை எப்படி சமாளித்தீர்கள்..”

நடுநடுவே போட்டோவும் எடுத்தாள்.

இருவரும் இருக்குமாறு ஒரு ஆட்டோ செட் பண்ணி செல்ஃபி எடுத்தாள்

அளவான நாகரிகமான பேச்சு..

நறுக்கு தெறித்தாற் போல் தொடுக்கப்பட்ட கேள்விக்கணைகளுக்கு பொறுமையாக அவ்வப்போது பதிலை ஆங்கிலமும் தமிழும் கலந்து சொல்லிக் கொண்டே சாப்பிட்டார் வேலன்.

“இப்போது மட்டும் எப்படி முதன் முதலில் எங்களுக்கு பேட்டி எடுக்க அனுமதி கொடுத்தீர்கள் “என்ற கேள்விக்கு,

” என் உதவியாளர் விபாகர்தான் சொல்லி வற்புறுத்தினான்.அவன் வந்து சேர்ந்த இரண்டு வருடங்களிலேயே அபார வளர்ச்சிக்கு வித்திட்டான்.” “இப்போது எங்களது பங்குகளை வெளியில் விற்க ஏதுவாக ஐ பி.ஓ. ஏற்பாடு செய்ய இருக்கிறோம்.

இந்த சமயத்தில் எங்கள் க்ரூப் பற்றி அவரவர்கள் ஏதாவது எழுதாமல் ஒரு பெரிய பத்திரிகையில் முதன் முதலில் வந்து பின்னர் நாங்கள் கொடுக்கும் செய்தியும் எடுபடும் என்று சொன்னான்.”

“உங்களைப் போல வேறு சில பத்திரிக்கைகளும் ,உங்கள் பத்திரிக்கையில் இருந்து இன்னொருவரும் கூட கேட்டிருந்தார்கள் இரண்டு மாதமாக..” ஆனால் விபாகர் ஒருத்தரை தேர்ந்தெடுக்கிறான் என்றால் அவர்கள் நிச்சயமாக சரியான ஆளாகத்தான் இருக்க வேண்டும்” உன்னையும் அவன் தேர்ந்தெடுக்க வலுவான காரணம் இருக்க வேண்டும். நேற்றைய விவகாரம் எனக்கும் தெரிய வந்தது..கவலைப் படாதே..நாங்க உனக்கு துணையாக நிற்போம்..”

“எஸ்தர்…விபாகர் எங்கே??”

“அடுத்த மீட்டிங்குக்கு ரெடி பண்ண போயிருப்பான்..””லன்ச் டைமல கலந்துக்கறேன்” நு சொன்னான்.

“விபாகர்க்கு வினயா பொருத்தமா இருப்பா போல இருக்கே..நீ கேட்டயா எஸ்தர்?..”

“நீ தப்பா நினைக்காதே…விபாகர் எங்க க்ரூப்க்கு செல்லப் பிள்ளை..எப்போதும் ஆபிஸ் தான்..வீட்டுக்கு செல்வது எப்பவாவது தான்.அதனால் நாங்க தான் அவனுக்கு பெண் பார்க்க ஆரம்பித்து விட்டோம்.அவங்க வீட்டில் இதையெல்லாம் செய்வதாக தோன்றவில்லை.”

எனக்கு இந்த ஜோசியம்லாம் தெரியாது..பெயர் பொருத்தம் வெச்சு தான் தொழிலை ஆரம்பிப்பேன்.”

“வேலன்- விபாகர் கூட்டணி போல

விபாகர்- வினயா பேர் பொருத்தம் கூட நல்லாருக்கு.”

“நேற்றே அவள் ஓகே சொல்லிட்டா சார்…”

“ஓ..அவ்வளவு தூரம் வந்தாச்சா…”

“அவனை யாரும் வேண்டாம்நு சொல்லமாட்டாங்க..”

அவன் தான் தட்டிக் கழிக்கிறான் இப்போது வேண்டாமென ” என்றார்.

“சார்.. பத்து மணிக்கு இதே ஓட்டலில் நடக்கும் அந்த அந்த ஆயுர் வேத பார்மா கம்பெனியின் புது பிராடக்ட் லாஞ்ச். இன்னும் அரை மணி தான் இருக்கு.”

ரூமூக்கு சென்று ரெடியாகி வரும் வரையில்..

வினயாவுடன் எஸ்தர் இருந்தாள்.

“என்ன..வினயா…நல்லா பேசிட்டு இருக்கே..சட்னு மூட் அவுட் ஆகறே..

என்ன ஆச்சு..நேத்து கதைய மறந்துடு..”

“நேத்து மறந்த பாஸ்கர் மீண்டும் இன்று நேரில் வந்து விட்டானே…” “இதை எப்படி சொல்வேன்.??”

எஸ்தருடன் முதல் மாடிக்குப் போனாள்.. பாஸ்கர் உள்ளே சென்ற அதே ஹால்.

“நான் வரவில்லைக்கா..” என தயங்கினாள்.

“இல்லை..இன்று எம்.டி.கலந்து கொள்ளும் இதுவும் முக்கிய நிகழ்வு.

மத்திய மந்திரி ஒருவரும் வருவதாக இருக்கிறார்கள்.”

விதி விளையாட ஆரம்பித்தது தெரிந்து விட்டது.

உள்ளே போனாள்.இவளுக்கு முதல் வரிசையில் இடம்.

லேசாக கண்களால் துழாவினாள்.




‘பாஸ்கர் அங்கே இல்லை..’

‘ஒரு வேளை இந்த ஓட்டலில் பணியில் இருக்கிறானோ??..’

‘போகும் போது விசாரிக்கலாம்..’

நேற்று என்னைக் காப்பாற்றிய விபாகர் வருகிறானா ..?என எதிர் பார்க்க ஆரம்பித்தது அவளது இன்னொரு மனம்.

“விபாகர் மத்திய மந்திரியுடன் ஏதோ பேசிக் கொண்டிருக்கிறார் சார்.. “இப்போது வந்து விடுவார்..”என்றாள் வேலனிடம் எஸ்தர்.

அப்போது ஒருவர் வந்து எஸ்தரிடம் ஏதோ சொல்ல,

“வினயா..உன்னிடம் போலீஸ் ஏதோ விசாரிக்கணுமாம்..”

அடுத்த மாடியில் ஒரு அறைக்கு செல்கையில் நேற்று வந்த காவல் துறை அதிகாரி இருந்தார்.

“நேற்றே நடந்தது மொத்தமும் எங்களுக்குத் தெரியும்..”

“இருந்தாலும் கோர்வையாக வழக்குப் பதிவு செய்ய சில விட்டுப் போன நிகழ்வுகளை இணைக்கணும்.” “நீ வரிசையாகச் சொல்லு..”

“காரில் ஏற்றப் பட்டவுடன் ஆரம்பித்தாள்.

ஒவ்வொன்றாக கூற ஒருவர் பதிவு செய்து கொண்டிருந்தார்.

சில படங்களைக் காட்டி அடையாளம் காட்டச் சொல்ல, டிரைவர் பக்கத்தில் இருந்த ஒருவனைத் தெரியும் என்றாள்.

அவன் ஏற்கனவே தேடப்பட்டு வரும் தீவிரவாதி என்பதால் ,இன்று வந்திருக்கும் மத்திய மந்திரியின் பாதுகாப்பு படையில் இருப்பவர் ஒருவரிடம் அதனை போனில் சொல்ல…

அவர் உள்ளே வந்தார்..

வினயா..நீயா??”

தம்பி மாமாநீங்களா??..”

போலிஸ் உடை அல்லாமல் சாதரண உடையில் இருந்தார்.

ஓடிப் போய் கட்டிப்பிடித்து அழுதாள்.




What’s your Reaction?
+1
10
+1
15
+1
0
+1
1
+1
1
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!