Serial Stories நேசத்தினால் நெருங்கிவிடு

நேசத்தினால் நெருங்கிவிடு-15

15

ஒரு சில வினாடிகளில் நடந்த இந்த நிகழ்வைப் பார்த்துக் கொண்டிருந்த சிலரும்,

‘ஏதோ…ஊடகங்கள் செய்யும் ‘பிராங்க்’ இது’ என எஸ்தரிடம் கூறினார்கள்.

பின் பக்கம் ஏதாவது காமிரா தெரிகிறதா எனவும் பார்த்தனர்.ஒருவர் அதிவேகமாக இவர்களை பைக்கில் தொடர்வதையும் பார்த்து,பிராங்க் தான் என சொல்லி, அதிர்ச்சி ஆன எஸ்தரை ஆசுவாசப் படுத்தினர்.

எஸ்தருக்கு மட்டும் இப்போது சந்தேகம் வந்து விட்டது.

நேற்றே சதீஷ் வருகை பற்றி விபாகரிடம் கூறி இருந்ததால்,

விபாகருக்கு போன் செய்தாள்.

“விபா… வினயாவ யாரோ காரில் கடத்திக் கொண்டு போயிட்டாங்க…

என்ன செய்யறது நே தெரியல.”

“நீ எங்க இருக்கே..” “என்ன ஆச்சு??”

“காலைலேந்து எங்கயும் போகல.. இப்போதான் லுலு மாலுக்கு போயிட்டு……”

“இடியட்…சட்னு சொல்லு இப்போ என்ன ஆச்சு..”

” பீச் பக்கத்தில் ஒருத்தன் கேமெரா எடுத்துட்டு ஓடினான்.”

“அவனை பிடிக்க வினயா ஓட , அப்போ ஒரு காரில் அவன் ஏற, அதே காரில் ஒருத்தன் இவளை உள்ளே இழுத்து போட்டு போயிட்டாங்க..”

“நீ எங்க இருக்கே?..கம்பெனி காருக்கு போய் நீ ஓட்டல் போய் சேர்.”

“வினயாவோட செல் எங்க இருக்கு..”

“செல் ஹேண்ட் பாக் , எல்லாமே இங்க தான் இருக்கு..”

“நீ பதட்டப்படாதே.. எல்லாத்தையும் எடுத்துட்டு போய் ஓட்டல்ல இரு..

நான் கொச்சி ல தான் இருக்கேன்.”

இதே நேரத்தில் , காரில் சதீஷ் , வினயாவின் மூக்கில் ஸ்ப்ரே அடிக்க, ஓரிரு நிமிடங்களில் வினயா மயக்கமானாள்.

“நீ தானே ..என்னைப் பத்தி பத்திரிக்கை ஓனருக்கு போட்டுக் கொடுத்து என்னை வேலைய விட்டு எடுக்க வெச்சே..”

“நீ என்னை ஆயுசுக்கும் மறக்க முடியாம செய்யறேன் பாரு…

இன்று இரவு முழுக்க உன்னோடுதான்.”

“நாளைக்கு போய் நீ பேட்டி எடுக்கலாம் டீ என் செல்லமே…”




“அந்த விபாகர் கூட எனக்கு பழக்கம் தான் ” என விபாகரின் விசிட்டிங் கார்ட் காட்டி,

ஏதேதோ சொல்லிக் கொண்டு போக, கேரளா…., நடிகை கடத்தல்…., சதீஷ்…, பாஸ்கர்…., முகம் தெரியாத விபாகர்…. எல்லோரும் வந்து போ…..னா…….ர்………க……………ள்.

எஸ்தர் ஓட்டலுக்கு வந்து அப்பாவுக்கு போன் செய்தாள்..எங்கேஜ்ட் ஆகவே இருந்தது..

சாமுவேலுக்கு போன் செய்தாள். சேதி சொன்னாள்.

“நான் சொல்றேன்..மாமாவிடம். அவங்க வீட்ல சொல்லணுமா.??..”

“இப்போ ஒண்ணும் சொல்ல வேணாம்..”

“மாமா நேத்துலேந்து போன்ல பிசி,வாட்சாப், போன், மாத்தி மாத்தி பேசிக்கிட்டுருக்காரு..யாரோ பழைய சினேகிதனாம்.. சாப்பாடு கூட இன்னிக்கு வரவழைத்து தான் சாப்பிட்டோம்.”

“இந்த அப்பாக்கு என்ன ஆச்சு?, நான் ஒரு வேளை முடியலேன்னா கூட வெளியில வாங்க வேண்டாம்நு தானே சமைப்பாரே..”

அவ்வளவு முக்கியமான பழைய நண்பர் யார் ??”

என நினைத்துக் கொண்டிருக்கையில்,

இரண்டு மூன்று முறை வினயாவின் போன் ஒலித்து ஒலித்து அடங்கியது..போனை எடுத்துப் பார்த்தாள்..

‘அம்மா ..4 மிஸ்ட் கால் ‘என இருந்தது..

அடுத்த முறை ஒலித்த போது எடுத்தாள்.

“ஏண்டி…போனையும் எடுக்கல..

காலைலேந்து மெஸ்ஸேஜும் பண்ணல..”

“நல்ல வேளை இப்போ எடுத்தே.. போன தடவை கேரளா போன போது ஆனா மாதிரி ஏதோ ஆயிட்டுதோனு பயந்துட்டேன்.”

“ஆண்ட்டி..நான் எஸ்தர் பேசறேன்.”

“வினயா எங்கே??”

“அவ..நாளைக்கு பேட்டிக்கு தயார் பண்ணிக்கிட்டு இருக்கா..”

என் கிட்ட போனை கொடுத்துட்டு முக்கியமான கால் பண்ணா மட்டும் எடுநு சொன்னா ஆண்டி..” “அப்பா அங்கே வந்தாரா??

அவருக்கு போன் செஞ்சேன். பிசியா இருந்துச்சு.”.

“இல்லேம்மா…அவரு காலைல வாக்கிங் வந்த போது கூட அதிகம் பேசலையாம்.. சாயந்தரம் கூட வாக்கிங் வரலையாம்….இவர் கூட சொல்லிக்கிட்டிருந்தாரு… நாளைக்கு அவரை போய் பார்க்கணுமின்னுட்டு.” “சரி.அவளை ரெஸ்ட் எடுக்க சொல்லு.. நாளைக்கு பேசுவோம் நு சொல்லு..”

மீண்டும் பாஸ்கும் , அப்பாவுக்கும் போன் செய்தாள்..இருவரும் எடுக்கவில்லை..

‘வினயாவுக்கு என்ன ஆயிற்றோ? அப்பாவுக்கு என்ன ஆச்சு ?

வினயா அம்மாவிடம் சரமாரியா பொய் சொன்னோமே..

இப்போ அவளுக்கு ஏதாவது ஆனா…’

படபடப்பு அதிகமானா… கர்த்தரை நினைச்சுக்கோ..சின்ன வயசுலே அம்மா கத்துக் கொடுத்தது..

ஜப மாலையை உருட்டி, தலையில் முக்காடிட்டு,மண்டியிட்டு ‘வினயாவை காப்பாற்று’ என அங்கேயே ஜெபம் செய்ய ஆரம்பித்தாள்.




What’s your Reaction?
+1
9
+1
9
+1
0
+1
0
+1
0
+1
0
+1
2
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!