அழகு குறிப்பு

அம்மைத் தழும்புகள் இருக்கா?

சின்னம்மை என்பது பல காலங்களாக அறியப்படும் ஒரு தொற்று நோய். இதற்கான தடுப்பூசிகள் போடப்பட்டாலும், இதன் பாதிப்பு இன்றளவும் இருக்கத்தான் செய்கிறது. கடுமையான வேலையில் காலங்களில் இந்த பாதிப்பு சற்று அதிகமாகவே இருக்கும்.குழந்தைகள் மற்றும் பெரியவர்களும் சின்னம்மையால் பாதிக்கப்படலாம். சின்னம்மையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரிப்பு மற்றும் உடல் முழுக்க தடிப்புகள் அல்லது புடைப்புகள் உண்டாகலாம். இந்த தடிப்புகளில் தொற்றும் தன்மை கொண்ட கிருமிகள் இருந்து, சில நேரம் தழும்புகளையும் உண்டாக்கிவிடும்.




அம்மையால் உண்டான தழும்புகளை போக்குவது எப்படி என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

கசகசா -2 ஸ்பூன்

மஞ்சள் தூள் அல்லது துண்டு -2 ஸ்பூன்

கறிவேப்பிலை-1/2 பிடி

பயத்த மாவு-1 ஸ்பூன்




பயன்படுத்தும் முறை

  • சிறிதளவு கசகசா, சின்னதாக மஞ்சள் துண்டு ஒன்று, கறிவேப்பிலை சிறிதளவு எடுத்து இம்மூன்றையும் மை பதத்திற்கு அரைக்கவும்.

  • இந்தக் கலவையை முகத்தில் எங்கே அம்மை வடுக்கள் காணப்படுகின்றனவோ அங்கே நன்றாகத் தடவுங்கள். 15-20 நிமிடங்கள் உலற விடுங்கள்.

  • பின்னர் பயத்த மாவினால் முகத்தைக் கழுவி விடுங்கள். இப்படியே 3 நாட்களுக்கு ஒரு முறை செய்யுங்கள். அம்மை வடுக்கள் நீங்கி முகம் மினு மினுக்கும்.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!