kadak katru Serial Stories

Kadal Kaatru – 45

                                            45

” எப்படி அத்தை உங்களால் இப்படி மென்மையாக  இந்த பணியாரம் சுட முடிகிறது ..? ” ஒரே வாயில் பாதி பணியாரத்தை அடைத்தபடி கேட்டான் மலையரசன் .

” இது பெரிய விசயமா தம்பி..எல்லாம் கைப்பழக்கம்தான் .இன்னொன்று வைத்துக் கொள்ளுங்கள் .” ஒன்றென்று சொல்லி இரண்டினை வைத்து சட்னி , சாம்பார் ஊற்றினாள் புவனா .

” சம்மு ..நீயும் உட்காரும்மா .அத்தையோட இந்த கார பணியாரம் சூப்பராக இருக்கிறது .நீயும் இரண்டு சாப்பிடு ” தங்கையை அழைத்தான் .

” நான் கொஞ்ச நேரம் கழித்து சாப்பிடுகிறேண்ணா .நீங்கள் சாப்பிடுங்கள் .முடித்து விட்டு வாருங்கள் .நாம் அப்படியே கொஞ்சம் வெளியே போய் வரலாம் .” சமுத்ரா .

” எங்கேம்மா ..? எதுவும் முக்கிய வேலையிருக்கிறதா ..? எனக்கு இன்று கொஞ்சம் வேலையிருக்கிறதே ..” அடுத்த பணியாரத்தை பிய்த்தபடி மலையரசன் சொல்ல ஆத்திரம் வந்த்து சமுத்ராவிற்கு .

அப்படி என்ன வேலையாம் இவனுக்கு .வந்து இரண்டு நாட்களாயிற்று .சேர்ந்தாற் போல் தங்கையிடம் அரைமணி நேரம் இருந்து பேச முடியவல்லை .சாப்பிட மட்டும் வந்து விட்டு யோகனுடனேயே ஒட்டிக் கொண்டு வெளியே போய் விடுகிறான் .கேட்டால் மாப்பிள்ளையின் வேலையை பக்கத்திலிருந்து பார்க்கிறானாம் .இன்று இவனுக்கே வேலை வந்துவிட்டது .அதென்ன தங்கை ஊருக்கு அவளை பார்க்க வந்துவிட்டு இவனுக்கென்று ஒரு வேலை எப்படி வரும் .எல்லாம் இந்த யோகன் செய்யும் வேலையாகத்தான் இருக்கும் .அவன்தான் அண்ணனும் , தங்கையும் பேச விடாமல் தடுக்கிறான் .

” நானில்லை சமுத்ரா .” அவளருகில் நாற்காலியை இழுத்து போட்டு அமர்ந்தபடி சொன்னான் யோகன் .

” என்னது ..நீங்களில்லை …” எரிந்து விழுந்தாள் .

” உன் அண்ணனை நான் கூட்டிப்் போகவில்லையம்மா .அவரேதான் வருகிறார் .இன்று என்னுடன் வரவில்லை .ஏதோ வேலையென்று சொல்லிக் கொண்டிருக்கறார் ” விளக்கினான் .

உன்னிடம் கேட்டேனா ..? பாவனையில் முகத்தை திருப்பிக் கொண்டாள் .

” கேட்காவிட டாலும் நான் என்னை விளக்க வேண்டுமல்லவா ..? ” அதற்கும் பதில் சொன்னான் .

” எதை விளக்க போகிறீர்கள் மாப்பிள்ளை ? ” கழுவிய கைகளை துடைத்தபடி வந்தான் மலையரசன் .

” உங்கள் தங்கையிடம் என்னை விளக்கிக் கொண்டிருக்கிறேன் மச்சான் ” பதிலை அண்ணனுக்கு கொடுத்தபடி தங்கையை பார்த்தான் .

” என் தங்கைக்கெல்லாம் நீங்கள் விளக்கவே வேண்டியதில்லை  மாப்பிள்ளை .நீங்கள் எள் என்பதற்குள் அவள் எண்ணெய்யாய் நிற்பாள் ” பெருமையாய் தங்கையை பார்த்தான் .

” அப்படியா ..? ” என யோகன் பார்த்த பார்வையில் விரல் நகம். வரை சிவந்த்து சமுத்ராவிற்கு .இந்த அண்ணன் வேறு .எப்போது எதை பேசுவது என தெரியாமல் பேசி வைப்பான் .




” அண்ணா இன்று உங்களுடன் நான் பேசியே ஆக வேண்டும் .உங்கள் வேலையை பிறகு பார்த்துக் கொள்ளுங்கள் .இன்று என்னுடன் வாருங்கள் ” வேகமாக சொன்னாள் .

சிறு யோசனையுடன் தயங்கி நின்றான் மலையரசன் .” நீங்கள் போய் உங்கள் வேலையை பாருங்கள் மச்சான் .எனக்கு சமுத்ராவுடன் கொஞ்சம் வேலையிருக்கிறது ” என்றான் யோகன் .

” அதெல்லாமில்லை நீங்கள் என்னுடன்தான் ..” என சமுத்ரா கூறிக் கொண்டிருக்கையிலேயே ” சரி மாப்பிள்ளை நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள் ” என்றுவிட்டு வேகமாக வெளியே நடந்துவிட்டான் மலையரசன் .

” இப்படி எவ்வளவு நேரம் தள்ளிப் போட முடியும் உங்களால் ..? “

” என்னால் முடிந்த அளவு …” தெளிவாக பதில் சொன்னான் .” மேலே வா உன்னிடம் பேச வேண டும் ” எழுந்தான் .

” என னவென்றாலும் இங்கேயே பேசுங்கள் ” பாதங்களை தரையில் அழுத்தி ஊன்றிக் கொண்டாள் .

யோகன் அன்று அடுப்படியில் வைத்து உன்னை தொடாமல் இருக்க முடியவில்லையென தீராத தாபத்துடன் கூறியபடி அவளை  அணைத்ததிலிருந்து , அதில் தான் நெகிழ்ந்த்திலிருந்து இனி அவனுடன் தனிமையை தவிர்த்து விட வேண்டுமென்பதில் உறுதியாக இருந்தாள் சமுத்ரா .அதிகாலை அவன்   திரும்பி வரும் போது  சமுதராவின் அனுமதியின்றி அவளை நெருங்குவதில்லையென்பதால் அப்போது  போர்வையை முகத்திறகு மேல் மூடிக் கொண்டு தூங்க பழகினாள் .

அப்போதும் ஒருநாள் அவன் அருகே நெருங்குவதை உணர்ந்து திக் திக் மனதுடன் காத்திருந்த போது நிதானமாக அருகே வந்து ” இப்படி முகத்தை மூடினால் மூச்சு முட்டாது ..? ” என்றபடி அவள் போர்வையை எடுத்து கழுத்து வரை விட்டுவிட்டு போனான். அதன்பிறகு குறை பொழுதினை தூங்காமல் ஒரு வித வெறுமையுடன் கழித்தாள் அவள் .

எப்படியோ அவனை அருகே நெருங்க விடாமல் இருப்பது அவனுக்கு எப்படியோ தனக்கு மிக நல்லது என்பதனை நன்கு தெரிந்து வைத்திருந்தாள் .எனவேதான் இப்போது அவனுடன் வர மறுத்தாள் .

” ஒரு முக்கியமான ஊர் விசயம் பேசுவதற்்காகத்தான் சமுத்ரா .இப்போது நமது குப்பங்களுக்கிடையே சுமூகமான தீர்வு ஏற்பட்டு விட்டதில்லையா..?உன் பங்கும் அதில் மிக அதிகம் .அதனை பற்றி மட்டுந்தான் பேசப்போகிறோம் .பயப்படாமல் வா … ” என்றபடி மாடியேறினான் .

சமுத்ரா ரங்கநாயகிக்கு இரு பிரிவினர்களின் சண்டைகளை பற்றி விசாரித்து கட்டுரையாக்கி  அனுப்பிக் கொண்டிருந்மாள் .இவை வேறொரு தலைப்பில் அவர்களது தின இதழில் வெளியாகிக் கொண்டிருந்தன. இது நிறைய பெரிய மனிதர்கள் அரணியல்வாதிகள் பார்வையில் பட்டு யோகனின் தீவிர முயற்சியும் சேர்ந்து அனைவரும் அமர்ந்து பேசி இப்போது இரண்டு பகுதியினரும் சமாதானமாக போய்விட்டனர் .

மீன் பிடிப்பதில் தங்களுக்குள் ஒரு வரையறை வைத்துக் கொண்டனர் .அதனால் தேவையற்ற உள்நாட்டு கலவரங்கள் இப்போது வருவதில்லை . இந்த வெற்றியில்  சமுத்ராவின் பங்குமிருந்த்து.அந்தக் கட டுரைகளை அவள் நேர்த்தியாக தொகுத்து அளித்திருந்த விதம் படித்துதான் அந்த குப்பத்து ஆட்களும் சமாதானத்திற்கு இறங்கி வந்தனர் .அந்த அளவு அவர்கள் அனைவருடன் இறங்கி பேசி நன்மை தீமைகளை ஆராய்ந்து அவற்றை எழுதியிருந்தாள் .

மேலும் குப்பத்து பெண்களுக்கென அவள் தொடங்கியிருந்த தொழில்கள் .அதனால் கையில் நாலு காசு புழங்க நடந்த இந்தக் குப்பத்து பெண்களை பார்த்து அந்த குப்பத்து பெண்களும் மெல்ல இந்தப் பக்கம் திரும்ப ஆரம்பித்திருந்தனர் .

இது போலவே குழந்தைகள் படிப்பிற்கென இவர்கள் ஆரம்பித்திருக்கும் அமைப்பும் பிள்ளைகளின் நலனுக்காக பெற்றவர்களை இவர்கள் பக்கம் திரும்ப வைக்குமென்பதில் எந்த ஐயமும் இல்லை .இந்த குப்பங்களை ..குப்பத்து பெண்களை பொறுத்த வரை தான் நினைத்த காரியத்தை ஐம்பது சதவிகிதம் முடித்து விட்டதாகவே சமுத்ரா கருதினாள் .

மீதி ஐம்பது சதவிகிதம் தானாகவே நிறைவேறிவிடும் …அதனை யோகன் பார்த்துக் கொள்வான் என்பதில் அவளுக்கு எந்த சந்தேகமும் இல்லை .எனவே இந்த ஊரை விட்டு செல்வதில் அவளுக்கு எந்த தயக்கமும் இருக்கவில்லை .

” என்ன ..? என்ன விசயம் …? ” கொஞ்சம் கடுகடுப்பை பூசியபடிதான் கேட்டாள் .

” நம் குப்பங்களுக்கிடையே உள்ள பிரச்சினைகள் முடிந்து விட்டன சமுத்ரா . ஆனால் இப்போது வேறு பிரச்சினை வரும் போலிருக்கறது ..” யோகனின் குரலில் கவலை இருந்த்து .

” அந்த ஆந்திர மீனவர்களாலா …? ” ஊகித்து கேட்டாள் .

” ஆமாம் முன்பு நமக்குள் நாம் அடித்துக் கொண்டிருந்தோம் .அவர்களும் வெளியிலிருந்து நம்மை தூண்டி விட்டுக் கொண்டிருந்தனர் .இப்போது நமக்குள் ஒன்றுபட்டு விட , அவர்கள் தவித்துக் கொண்டிருக்கிறார்கள் .இனி நம் இடத்திற்குள் மீன் பிடிக்க அவர்கள் நுழைந்தால் நாம் ஒற்றுமையாக எதிர்ப்போமே .அதனால் ஏதாவது செய்து நம்மை மீண்டும்  பிரிக்க முயற்சிப்பார்கள் .அது முடியாதெனில் …” என நிறுத்தினான் .

” முடியாதெனில் …??.” சமுத்ராவின் வயிற்றுக்குள் ஏனோ பயப்பந்து உருண்டது .

” ஒரு பெரிய கலவரத்தை இங்கே எதிர்பார்க்கிறேன் சமுத்ரா “

” முருகா …” என முனங்கினாள் .” நீங்கள் போலீசில் ….”

” ம் …ராஜபாண்டி சார் மூலம் மந்திரியை பிடித்து போலீஸ் பாதுகாப்பிற்கு ஏற்பாடு செய்துவிட்டேன் “

” பின்னே என்ன யோகன் ..? நிச்சயம் அவர்கள் பார்த்துக் கொள்வார்கள் தானே …? ஏன் இவ்வளவு கவலைப்படுகிறீர்கள …? “

” மனித சக்தி மகத்தானது சமுத்ரா .காவலுக்கு ஒரு ஐம்பது போலீஸ் வருவார்களா ..? அங்கிருந்து அதிகளவில் ஆட்கள் வந்தால் …? ” நிறைய கவலை யோகனிடம் .

” அதெல்லாம் போலீஸ் பார்த்துக் கொள்வார்கள் .நீங்கள் கவலைப்படாதீர்கள் யோகன் .” ஆறுதல் சொன் னாள் .

” பார்த்துக் கொள்ள வேண்டும். திரும்ப பெற முடியாதவை மனித உயிர்கள் .அவைகளுக்கு எந்த பாதிப்பும் இல்லாமலிருக்க வேண்டும்.நானும் இளைஞர்களை வைத்து ஒரு குழுவை ஏற்பாடு செய்திருக்கீறேன் .அவர்களுக்கு பயிற்சியும் கொடுத்துள்ளேன் .ம் …பார்க்கலாம் … ” பெருமூச்சுடன் பேச்சை முடித்தான் .




” இப்போது உன்னை அழைத்த காரணம் வேறு .ஊர் முழுவதும் கலவரம் மூளும் சூழ்நிலையிலுள்ளது .இப்போது நீ ..இங்கிருந்து செல்ல வேண்டாம் சமுத்ரா .எல்லா பிரச்சினைகளும் முடியட்டும் .பிறகு வேண்டுமானால் …” போ ..என சொல்ல மனமின்றி பேச்சை நிறுத்தினான் .

அவனவ முறைத்தாள் சமுதரா .” நிஜம்தான் சமுத்ரா .நீ நினைக்கும் அளவு நிலைமை இல்லைம்மா .சீரியஸாக இருக்கிறது ” என்றான் .

” அதை நான் பார்த்துக் கொள்கிறேன் ” என்றுவிட்டு கீழே போக போனவளை வழி மறித்தான் .கோபமாக சமுத்ரா பார்க்க ” நான் இப்போது வெளியே போகிறேன் முத்ரா .இனி எப்போது வருவேனோ ..? இல்லை …?” என்றவன் முடிக்காமலேயே நிறுத்தி அவளை இழுத்து இறுக அணைத்தான் .அவளது இதழ்களில் இதழ் பதித்து ஆழ்ந்து முத்தமிட்டான் .உயிரையே உறிஞ்சி விட வேண்டுமென்ற வேகத்துடனும் , தாகத்துடனும் இருந்த்து அந்த இதழணைப்பு .

விரைத்து , குழைந்து , தளர்ந்து , குளிர்ந்து , மெல்ல மெல்ல அந்த முத்தத்திற்குள் நழுவிக் கொண்டிருந்தாள் சமுத்ரா .என்ன செய்கிறாய் சமுத்ரா ..விழித்துக் கொள் .மீண்டுவா ..என்ற மூளையின் பலவீனமான எச்சரிக்கையை அலட்சியப்படுத்தி மெல்ல மெல்ல தன்னவனுடன் ஒன்றிக் கொண்டிருந்தாள் .

இதற்குத்தானடா உன்னுடன் தனிமையிலிருப்பதை தவிர்த்தேன் செல்லமாக மனதிற்குள்ளாகவே கணவனுடன் சண்டையிட்டுக் கொண்டிருந்தவளை தன் இதழ்களிலிருந்து விடுவித்தான் யோகன் .தடுமாறியவளை மெல்ல தன் மார்பில் சரித்து முதுகினை வருடியபடி ” சாரி கண்ணம்மா ..இது எனக்கு ஒரு பூஸ்ட் போல .ஒரு வேளை இதுவே கடைசியாக இருந்துவிட்டால் …என்னை பிடிக்காமலேயே போய்விட்டால் , அப்படி இதுவே கடைசியாக இருக்க வேண்டும் என கடவுளிடம் வேண்டிக்கொள் ” பத்திரமாக அவளை கட்டிலில் அமர்த்தியவன் திரும்பியும் பார்க்காமல் கீழே போய்விட டான் .

கணவனின் முத்தம் தந்த அதிர்ச்சியில் அவன் வார்த்தை பிசிறலை கவனிக்காதவள் இவனை விட்டு இருந்து விடுவேனா ..? ஏக்கத்துடன் நினைத்தபடி கண் கலங்க தொடங கினாள் .

அன்று பகல் முழுவதும் மலையரசனை எதிர்பார்த்திருக்க , அவன் மாலைதான் திரும்பி வந்தான் .அவனை நன்கு திட்ட வேண்டுமென வாயை திறந்தவள் மிகவும் சோர்ந்திருந்த அவன். முகத்தை பார்த்ததும் மனம் மாறினாள் .

” காபி சாப்பிடுங்கண்ணா .ஏன் இவ்வளவு டயர்டாக தெரிகிறீர்கள் ..? எங்கே போயிருந்தீர்கள் ..? ” காபி கப்பை அவன் முன் வைத்தபடி கேட்டாள் .

” உன் னிடம் கொஞ்சம் பேச வேண்டும்மா .எங்கே வைத்து பேசலாம் ..? ” அண்ணன் தனிமையை தேடுவதை உணர்ந்தவள் ” மாடியில் எங்கள் அறைக்கு போய்விடலாம் . வாங்கண்ணா …” என அழைத்து சென்றாள் .

” சம்மு நான் திருமணம் செய்து கொள்ளலாமென்று இருக்கிறேன் . “

” அண்ணா …” அவனை ஆச்சரியமாக பார்த்தாள் .மலையரசன் ஆர்மியில் சேரும் முன்பே அவனுக்கு திருமணம் முடித்து விட வேண்டுமென்று மிகவும் முயன்றாள் அவன் அப்போது ஒரேடியாக மறுத்துவிட்டான் .முதலில் உன் திருமணம்தான் .என்றுவிட்டான் .இப்போது தங்கை திருமணம் முடிந்ததாலா ..? அல்லது …என்ன திடீரென்று ..ஒரு வேளை எதுவும் காதல் விவகாரமோ ..? இப்படி யோசிக்கும் போதே…

” நான் படித்துக் கொண்டிருக்கும் போது ஒரு பெண்ணை காதலித்தேன் ” என்றான் .வியப்புடன் விழி விரித்தாள் சமுத்ரா .

” அண்ணா பெண்களென்றாலே பத்தடி தள்ளி நடப்பீர்களே அண்ணா ..நீங்களா ..? ” ஆச்சரியத்துடன் சிரிப்பு பொங்க கேட்டாள் .

” இல்லைம்மா உன் அண்ணன் நீ நினைக்கும் அளவு நல்லவனில்லை ” வெறுப்பாய் தலையசைத்தான் .

” என்னண்ணா சொல்கிறீர்கள்..? “

” நான் காதலித்த பெண்ணையே என் நண்பனும் காதலித்தான் .எனது காதல் நிறைவேறவில்லை .அவனது காதல் திருமணத்தில் முடிந்துவிட்டது .ஏனென்றால் அவர்கள் இருவரும் ஒருவரையொருவர் விரும்பியிருந்தனர் .என்னுடையது ஒரு தலைக்காதல் .” அவர்கள் திருமணத்திற்கு சாட்சியாக என்னையே அழைத்த போதுதான் இந்த விபரமே எனக்கு தெரிய வந்த்து .வேறு வழியின்றி எந்திரமாக சாட்சி கையெழுத்து போட்டு வந்தேன் .”

” என் கண் முன்னாலேயே அவர்கள் சந்தோசமாக வாழ்ந்த ஒவ்வொரு நிகழ்வும் என்னை வெறியேற்றியது .பொறுக்க முடியாமல் ஒரு கட்டத்தில அவர்கள் இருவரையும் பிரித்து ஆக வேண டுமென்ற முடிவிற்கு வந்தேன் “

” அண்ணா …” நம்ப முடியாத அதிர்ச்சியில் கத்தினாள்  சமுத்ரா .

” ஆமாம் சம்மும்மா ..அப்போது நான் ஒரு மிருகமாக மாறியிருந்தேன் .என்ன செய்வதென்று தெரியாமல் அந்த பெண்ணிற்கு மற்றொருவனுடன் தொடர்பிருப்பதாக அவள் கணவனிடம் பொய் கூறினேன் .சாட்சியாக சில போட்டேக்களை நானே தயார் செய்து அதனை என் நண்பனிடம் காட்டினேன் .அதனை பார்த்த என் நண்பன் என்ன சொன்னான் தெரியுமா ..? “

மலையரசன் தன் கதையை தொடர்ந்து கொண்டிருக்க சமுத்ரா அதிர்ச்சியில் பேச்சு வெளி வராமல் அவனை பார்த்தபடி நின்று கொண்டிருந்தாள் .

What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!