Entertainment lifestyles News

ரூ.3,000 சம்பளத்திலிருந்து சிஇஓ – ஊக்கம் தரும் சினேகாவின் கதை!

தொழில்நுட்பத் துறை அசுர வளர்ச்சிக் கண்டு வரும் இந்தக் காலக்கட்டத்தில் சினேகா ராகேஷின் கதை என்பது புத்துணர்வு, வெற்றி மற்றும் வாழ்க்கையில் மீண்டெழுவதைக் குறிப்பதாகும். ஆரம்பகால வாழ்க்கைப் போராட்டங்களில் இருந்து ‘அகர்மாக்ஸ் டெக்’ (Akarmaxs Tech Pvt ltd) நிறுவனத்தை கட்டமைத்தது வரையிலான அவரது பயணம் விடாமுயற்சியின் சாரமாக உள்ளது. ஒருகட்டத்தில் கடும் நிதி நெருக்கடியில் இருந்த நிறுவனத்தை தற்போது ரூ.250 கோடி மதிப்பிலான நிறுவனமாக உயர்வு காண்பதற்கு கடந்து வந்த சினேகாவின் பாதை, ஆர்வமுள்ள தொழில்முனைவோருக்கு விலைமதிப்பற்ற நுண்ணறிவுத் தூண்டலை வழங்குகிறது.




எளிமையான தொடக்கம்: நிதியளவில் நிலைத்தன்மை என்பது தொலைதூரக் கனவாக இருந்த ஒரு குடும்பச் சூழலில் பிறந்து வளர்ந்த சினேகாவின் ஆரம்ப கால வாழக்கையானது பெரும் போராட்டக் களமாகவே இருந்தது. பல தடைகள் இருந்தபோதிலும், தொழில்நுட்பத்தின் மீதான அவரது ஆர்வமிகுதியால் கம்ப்யூட்டர் சயின்ஸில் டிப்ளமோ முடித்தார். இதுதான் அவரது எதிர்கால முயற்சிகளுக்கான அடித்தளமாக அமைந்தது. சினேகா பெங்களூருவுக்குச் சென்ற போதும் சவால்களும் துரத்தின. அற்ப சம்பளமும், பல்வேறு வகையிலான சவால்களும் அவரது உறுதிப்பாட்டைச் சோதித்தன.




நம்பிக்கையின் பாய்ச்சல்: சாதாரண ஊழியராக இருந்து டெக் தொழிலதிபராக வளர்ந்த சினேகாவின் பாதை, அசைக்க முடியாத அவரது தன்னம்பிக்கையால் நீண்டது. சுயமுன்னேற்றத்துக்கான அவரது இடைவிடா நாட்டத்துக்கு அதுவே சான்று. தனது ஆங்கில மொழித் திறனை வளர்த்துக் கொண்டார். பி-டெக் டிகிரி பெற்றார். தனியாகவே சில புராஜெக்ட்களைச் செய்து கொடுக்கத் தொடங்கினார். தன் கல்வித் தகுதியையும் தன் பணியையும் ஒரு சமநிலைக்குக் கொண்டு வந்தார் சினேகா.

2012-ல் தன் சொந்த சேமிப்பு மற்றும் கடன் பெறுதல் மூலம் அவரது தொழில்முனைவுக் கனவு நனைவானது. இதுதான் பிற்பாடு ‘அகர்மாக்ஸ் டெக் பிரைவேட் லிட்’ என்ற நிறுவனமாக வளர்ச்சியடைந்தது. இன்று ‘அகர்மாக்ஸ் டெக்’ நிறுவனம் என்பது ஒரு நிறுவனமாக மட்டும் நின்றுவிடாமல் உலகளாவிய நிகழ்வாக பெங்களூர், துபாய், லண்டன் மற்றும் சிங்கப்பூர் போன்ற முக்கிய நகரங்களில் முன்னிலையில் உள்ளது.

சந்தைப்படுத்தல், மென்பொருள் மேம்பாடு மற்றும் டிஜிட்டல் மாற்றம் உள்ளிட்ட பலதரப்பட்ட சேவைகள் சினேகாவின் புதுமையான பார்வை மற்றும் வணிக புத்திசாலித்தனத்தை எடுத்துக்காட்டுவதாக அமைந்தது. உத்வேகப் பயணம் சினேகாவின் முயற்சிகள் அவரோடு நின்று விடாமல் 2000-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு உத்வேகம் அளித்து, புதிய தலைமுறை தொழில்நுட்ப ஆர்வலர்கள் மற்றும் நிபுணர்களை வளர்த்தெடுத்துள்ளது. சினேகா ராகேஷ் சாதித்தவை தொழில்முனைவோர் வெற்றியுடன் நிற்கவில்லை. ஐரோப்பிய பாராளுமன்றம் போன்ற தளங்களில் அவருக்கு கிடைத்த அங்கீகாரம், தொழில்நுட்பத் துறையில் அவரது குறிப்பிடத்தக்க பங்களிப்பை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

மேலும், சமூக நலன்களுக்கான அவரது அர்ப்பணிப்பு, குறிப்பாக ‘சமக்ராபிவ்ருதி’ போன்ற முயற்சிகள் மூலம் சமூக முன்னேற்றம் மற்றும் கிராமப்புற தொழில்முனைவுக்கான அவரது அர்ப்பணிப்பை எடுத்துக் காட்டுகிறது. இவ்வாறு சினேகாவின் வாழ்க்கை வரலாறு ஒரு சாதாரண அற்பச் சம்பளத்திலிருந்து ரூ.250 கோடி மதிப்பிலான தொழில்நுட்ப நிறுவனத்தின் சி.இ.ஓ.வாக வளர்ச்சியுறுவது என்பது பலருக்கும் ஊக்கமளிக்கும் ஓர் அகத்தூண்டுதல் கதையாகும்.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!