lifestyles News

முட்டை வியாபாரத்தில் ரூ.100 கோடிக்கு பிஸ்னஸ்..!! யாரு சாமி நீங்க?!

முட்டை விற்பனைக்கு என ஒரு பிராண்டை உருவாக்கி அதில் வெற்றி பெற்று தற்போது 100 கோடி ரூபாய் மதிப்புள்ள நிறுவனமாக மாற்றியுள்ளனர் மூன்று நண்பர்கள்.




eggoz: Agritech startup Eggoz raises $8.8 million - The Economic Times

பீகார் மாநிலத்தை சேர்ந்த அபிஷேக் நெகி, உத்தம் குமார் , ஆதித்யா குமார் இணைந்து உருவாக்கிய நிறுவனம் தான் EGGOZ நிறுவனம். இயற்கை தீவனங்கள் மூலம் வளர்க்கப்படும் கோழி கோழிகளில் இருந்து பெறப்படும் முட்டைகளை விற்பனை செய்து வருகிறது இந்த நிறுவனம்.

ஒரு நாளைக்கு 4 லட்சம் முட்டைகளை விற்பனை செய்கிறது கிட்டத்தட்ட 100 கோடி ரூபாய் லாபம் கொண்ட நிறுவனமாக உருவெடுத்துள்ளது. அண்மையில் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த அபிஷேக் நெகி, தங்களுடைய தொழிலை எப்படி தொடங்கினோம் என்பது குறித்த தகவல்களை பகிர்ந்திருந்தார்.

இந்தியாவில் முட்டைகளுக்கான தேவை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது, குறிப்பாக ஒவ்வொரு 8 ஆண்டுகளிலும் இந்தியாவில் முட்டை நுக்ர்வு இரண்டு மடங்குகளாக இருக்கிறது என கூறுகிறார். முட்டை சார்ந்த தொழிலுக்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பது என்பதால் நண்பர்களோடு இணைந்து இந்நிறுவனத்தை உருவாக்கியதாக தெரிவித்துள்ளார். பால் பொருட்கள் என்றால் எல்லாருக்கும் எப்படி அமுல் ஞாபகத்திற்கு வருகிறதோ, அதேபோல முட்டை என்றவுடன் அனைவருக்கும் EGGOZ என்ற பெயர் தான் ஞாபகத்திற்கு வர வேண்டும் என்ற நோக்கத்திலேயே தாங்கள் சந்தைப்படுத்தி வருவதாக கூறியுள்ளார்.




Eggoz raises $3.5 million in series A - The Hindu BusinessLine

இவர்கள் நிறுவனத்தில் இருந்து கிடைக்கும் முட்டையில் மஞ்சள் கருவிற்கு பதிலாக ஆரஞ்சு நிற கரு இருக்கிறதாம். இதன் ஊட்டச்சத்து தன்மை என்பது மஞ்சளை விட அதிகம் என்பதால் இவர்களின் முட்டைக்கு சந்தையில் நல்ல வரவேற்பு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த 2020 ஆம் ஆண்டு மூவரும் சேர்ந்து முதலில் பிஹார் மாநிலத்தில் கோழி பண்ணை வைத்து நடத்தி வந்தனர். கொரோனா தொற்று காலத்தில் இவர்கள் பல்வேறு சவால்களை சந்திக்க நேர்ந்தது , ஒரு கட்டத்தில் வங்கி இருப்பு பூஜ்யம் என்றானதாம். ஆனால் அவற்றையெல்லாம் கடந்து வந்து தற்போது 100 கோடி ரூபாய் லாபமுள்ள நிறுவனமாக மாற்றியுள்ளனர்.

ஸெப்டோ, பிக் பாஸ்கெட், இன்ஸ்டாமார்ட், அமேசான், ஃபிளிப்கார்ட் போன்ற தளங்களில் நாம் இந்நிறுவன முட்டைகளை நேரடியாக வாங்க முடியும். இவர்களது இணையதளத்தில் நேரடியாக சென்று கூட பொருட்களை வாங்க முடியும். ஆறு முட்டை இருக்கக் கூடிய ஒரு பெட்டியானது 77 ரூபாய் என்ற அளவில் விற்பனை செய்யப்படுகிறது. அதே போல சந்தாதாரராகும் வாய்ப்பும் வழங்கப்படுகிறது. நாம் குறிப்பிட்ட தொகையை செலுத்தி சந்தா பெற்றுவிட்டால், வீட்டிற்கே கொண்டு வந்து டெலிவரி செய்கின்றனர்.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!