gowri panchangam Sprituality

மகாபாரதக் கதைகள்/அதர்மமாகக் கொல்லப்பட்ட வீர அபிமன்யு

குருஷேத்திர போர்

குருஷேத்திர போரில் அர்ஜுனனும், கர்ணனும் மிகச்சிறப்பாய் போர்புரிந்தாலும் அவர்களையும் மிஞ்சிய ஒரு மாவீரன் இருந்தான் அவன்தான் பதினாறு வயது மட்டுமே நிரம்பிய அபிமன்யு.

விதி வசத்தாலும், கௌரவர்களின் சூழ்ச்சியாலும் அபிமன்யு தன் பெரியப்பா மாவீரன் கர்ணன் கைகளாலேயே கொல்லப்பட்டான். முக்காலமும் அறிந்த ஸ்ரீகிருஷ்ணர், தன் பிரியமான மருமகன் அபிமன்யுவை ஏன் சாக அனுமதித்தார் என்பது பலருக்கும் புரியாத ஒன்று.

போரில் அர்ஜுனன் குமாரன் இளம்வீரன் அபிமன்யூ கொல்லப்பட்டது அதர்மச் செயல் தான். மிக இளம் வயதில் அபிமன்யூ கொல்லப்படுவது தெரிந்தும், கிருஷ்ணரால் ஏன் ஒன்றும் செய்ய இயலவில்லை என்பது ஆச்சரியமானதாகவே உள்ளது.




📔மகாபாரதம் #📔மகாபாரதம் #🔥அர்ஜுனன்🔥 #வீர அபிமன்யு #அபிமன்யு 💖 உத்திரை video 💙💛ஆயர் குலத்தான்💙💛 - ShareChat - Funny, Romantic, Videos, Shayari, Quotes

அர்ஜுனன் குமாரன் அபிமன்யு

அர்ஜுனன் மற்றும் கிருஷ்ணரின் சகோதரி சுபத்திரைக்கு மகனாகப் பிறந்தவன். தன் அம்மாவின் கர்ப்பத்தில் இருக்கும்போதே சக்கர வியூகத்தை உடைக்கக் கற்றுக்கொண்ட வீரன் அபிமன்யு. ஆனால் அதிலிருந்து வெளியே வரும் வித்தையை அவன் கற்றுக்கொள்ளவேயில்லை, அதுவே பின்னாளில் அவனது உயிரையும் பறித்தது. தன் தாயை விட, திரௌபதி மீது அதிக பாசம் வைத்திருந்த அபிமன்யு, திரௌபதியின் சபதத்தை நிறைவேற்ற, திருமணம் முடிந்த கையோடு, மகாபாரதப் போரில் அர்ஜுனனின் ஆயுதமாய் இருப்பேன் என உறுதிகொண்டு பங்கேற்றான்.




போரில் அபிமன்யு

போரில் பல மாவீரர்கள் இருந்த போதும், நட்சத்திரங்களிடையே ஜொலிக்கும் துருவ நட்சத்திரமாய் தனித்துவத்துடன் ஒளிர்ந்தான் அபிமன்யு. போரில் பலரும் பீஷ்மரை எதிர்க்கப் பயந்தபோது, அம்புகளாலேயே சுவர் கட்டி கங்கை மைந்தன் பீஷ்மரை தடுத்தான். ‘இளங்கன்று பயம் அறியாது’ என்பதற்கேற்றாற்போல், மாவீர்களெல்லாம் எதிர்கொள்ளத் தயங்கும் பீஷ்மரை, இந்த பதினாறு வயது சிறுவன் வீரத்துடன் எதிர்த்து நின்றான். எதிர்த்து நின்றது மட்டுமின்றி, பீஷ்மரே வியக்கும் வண்ணம் போர் புரிந்தான். பாண்டவர்களின் குருவான துரோணாச்சாரியாரின் ரதத்தை, தன் கணை கொண்டு சிதறடித்தான், கௌரவர்களில் மூத்தவனான துரியோதனனுக்கு அறைகூவல் விடுத்து தோற்கடித்தான். இது போன்ற எண்ணற்ற சாகசங்களை தன் பதினாறாவது வயதிலியே மகாபாரத போரில் நிகழ்த்தினான் அபிமன்யு.

அதர்மமாகக் கொல்லப்பட்ட வீர அபிமன்யு !

அபிமன்யு கொண்டிருந்த சக்கரம் உடைக்கப்பட்டது; கதாயுதத்துடன் போராடிய அபிமன்யு; அஸ்வத்தாமனின் குதிரைகளையும், தேரோட்டிகளையும் கொன்ற அபிமன்யு; சகுனியின் மகன் காளிகேயனைக் கொன்ற அபிமன்யு; துச்சாசனன் மகனின் தேரை நொறுக்கி குதிரைகளைக் கொன்ற அபிமன்யு; அபிமன்யுவுக்கும், துச்சாசனன் மகனுக்கும் இடையில் நடைபெற்ற கதாயுத்தம்; களைத்துப் போயிருந்த அபிமன்யுவைக் கொன்ற துச்சாசனன் மகன்; அநீதியை உணர்த்திய அசரீரி;




சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “விஷ்ணுவின் தங்கைக்கு {சுபத்திரைக்கு} மகிழ்ச்சியை அளிப்பவனும், விஷ்ணுவின் ஆயுதங்களைத் தரித்துக் கொண்டவனுமான {விஷ்ணுவின் ஆயுதமான சக்கரத்தைப் போன்று, தேர்ச்சக்கரத்தை ஆயுதமாகக் கொண்டவனுமான} அந்த அதிரதன் {பெரும் தேர் வீரன் அபிமன்யு}, போர்க்களத்தில் மிக அழகாகத் தெரிந்தான், மேலும் அவன் இரண்டாவது ஜனார்த்தனனை {கிருஷ்ணனைப்} போலவே தெரிந்தான். மயிர் நுனிகள் காற்றில் ஆட, அந்த உயர்ந்த ஆயுதத்தைக் {தேர்ச்சக்கரத்தைக்} கையில் உயர்த்தியபடி இருந்த அவனது {அபிமன்யுவின்} உடல், தேவர்களே கூடப் பார்க்க முடியாததாக {பிரகாசமாக} இருந்தது. கையில் சக்கரத்துடன் கூடிய அவனைக் கண்ட மன்னர்கள், கவலையால் நிறைந்து அந்தச் சக்கரத்தை நூறு துண்டுகளாக வெட்டிப் போட்டனர்.

பிறகு, பெரும் தேர்வீரனான அந்த அர்ஜுனன் மகன் {அபிமன்யு}, வலிமைமிக்கக் கதாயுதம் ஒன்றை எடுத்துக் கொண்டான். எதிரிகளால், தன் வில், தேர், வாள் ஆகியவற்றை இழந்து, அவர்களாலேயே தனது சக்கரத்தையும் இழந்தவனான வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட அபிமன்யு (கையில் கதாயுதத்துடன்) அஸ்வத்தாமனை நோக்கி விரைந்தான்.

சுடர்மிக்க வஜ்ரத்தைப் போன்று தெரிந்த அந்த உயர்த்தப்பட்ட கதாயுதத்தைக் கண்ட மனிதர்களில் புலியான அஸ்வத்தாமன், தன் தேரில் இருந்து வேகமாக இறங்கி, (அபிமன்யுவைத் தவிர்ப்பதற்காக) மூன்று (நீண்ட) எட்டுகளை {நடை அடிகளை} வைத்தான். அஸ்வத்தாமனின் குதிரைகளையும், பார்ஷினி தேரோட்டிகள் இருவரையும் அந்தக் கதாயுதத்தால் கொன்ற சுபத்திரையின் மகன் {அபிமன்யு}, எங்கும் கணைகளால் துளைக்கப்பட்டு, ஒரு முள்ளம்பன்றியைப் போலக் காட்சியளித்தான். பிறகு அந்த வீரன் {அபிமன்யு}, சுபலனின் மகனான காளிகேயனை பூமியில் அழுத்தி {கொன்று}, அவனைப் பின்தொடர்ந்து வந்த எழுபத்தேழு காந்தார வீரர்களையும் கொன்றான். அடுத்ததாக அவன் {அபிமன்யு}, பிரம்ம வசாதீய குலத்தைச் சேர்ந்த பத்து தேர்வீரர்களையும், அதன் பிறகு பத்து பெரிய யானைகளையும் கொன்றான்.




அடுத்ததாகத் துச்சாசனன் மகனின் தேரை நோக்கிச் சென்ற அவன் {அபிமன்யு}, அவனது தேரை நொறுக்கி, குதிரைகளையும் பூமியில் நசுக்கினான். பிறகு, ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, துச்சாசனனின் அந்த வெல்லப்பட முடியாத மகன், ஒரு கதாயுதத்தை எடுத்துக் கொண்டு அபிமன்யுவை நோக்கி “நில், நில்” என்று சொல்லிக் கொண்டே விரைந்தான். சகோதரர்களான அந்த வீரர்கள் இருவரும் உயர்த்தப்பட்ட கதாயுதங்களுடன், பழங்காலத்தின் முக்கண்ணனையும் (மகாதேவனையும்), (அசுரன்) அந்தகனையும் போல, ஒருவரையொருவர் கொல்ல விரும்பி ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். எதிரிகளைத் தண்டிப்போரான அவ்விருவரும், தங்கள் கதாயுத நுனிகளால் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டு, இந்திரனை மகிழ்விக்க எழுப்பட்ட இரண்டு கொடிமரங்கள் விழுவதைப் போலப் பூமியில் விழுந்தனர்.

குருக்களின் புகழை மேம்படுத்துபவனான அந்தத் துச்சாசனன் மகன், முதலில் எழுந்து, எழும்பும் நிலையில் இருந்த அபிமன்யுவின் உச்சந்தலையில் தன் கதாயுதத்தால் அடித்தான். அந்த அடியின் பலத்தால் நிலை குலைந்ததாலும், இதுவரை அவன் அடைந்திருந்த களைப்பினாலும், பகைவரின் படையினரைக் கொல்லும் அந்தச் சுபத்திரையின் மகன் {அபிமன்யு}, தன் உணர்வுகளை இழந்து பூமியில் விழுந்தான். தடாகத்தில் உள்ள தாமரைத் தண்டுகளை யானையொன்று கலங்கடிப்பது போல, மொத்த படையையும் கலங்கடித்த ஒருவன் {அபிமன்யு}, இப்படியே, அந்தப் போரில் பலரால் கொல்லப்பட்டான். கொல்லப்பட்டுக் களத்தில் கிடந்த அந்த வீர அபிமன்யு, வேடர்களால் கொல்லப்பட்ட காட்டு யானையைப் போலத் தெரிந்தான். பிறகு, உமது துருப்பினர் விழுந்த அந்த வீரனை {அபிமன்யுவைச்} சூழ்ந்து கொண்டனர்.




ஜோதிடமும் அதன் சூட்சுமங்களும்.. | 🌹🌺"அய்யா யார் நீங்கள் | Facebook

கௌரவர்கள் மகிழ்ச்சி

கோடை காலத்தில் முழுக் காட்டையும் எரித்துவிட்டுத் வெப்பம் தணிந்த நெருப்பைப் போலவோ, மலையின் முகடுகளை நொறுக்கிவிட்டுச் சீற்றம் தணிந்த புயலைப் போலவோ, பாரதப் படையை வெப்பத்தால் எரித்துவிட்டு, மேற்கு மலைகளை {அஸ்த மலையை} அடைந்திருக்கும் சூரியனைப் போலவோ, ராகுவால் விழுங்கப்பட்ட சோமனை {சந்திரனைப்} போலவோ, நீர் வற்றிப் போன பெருங்கடலைப் போலவோ அவன் {அபிமன்யு} தெரிந்தான். முழு நிலவின் காந்தியுடன் கூடிய முகத்தைக் கொண்டவனும், அண்டங்காக்கையின் இறகுகளைப் போன்ற கருப்புநிற இமை மயிர்களின் விளைவால் அழகிய கண்களைக் கொண்டவனுமான அபிமன்யு, வெறுந்தரையில் விழுந்து கிடப்பதைக் கண்ட உமது படையின் வலிமைமிக்கத் தேர்வீரர்கள் பெரும் மகிழ்ச்சியால் நிறைந்தனர். மேலும் அவர்கள் மீண்டும் மீண்டும் சிங்க முழக்கம் முழங்கினர். உண்மையில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பாண்டவ வீரர்களின் கண்களில் கண்ணீர் பெருகி வழிந்த அதே வேளையில், உமது துருப்பினர் மகிழ்ச்சிப் பரவசத்தில் திளைந்தனர்.




ஆகாயத்தில் இருந்து விழுந்த நிலவைப் போலக் களத்தில் கிடக்கும் வீர அபிமன்யுவைக் கண்ட பல்வேறு உயிரனங்கள், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, ஆகாயத்தில் இருந்தபடியே, “ஐயோ, இவன் {அபிமன்யு} தனி ஒருவனாகப் போரிடுகையில், துரோணராலும், கர்ணனாலும் தலைமை தாங்கப்பட்ட தார்தராஷ்டிரப் படையின் வலிமைமிக்கத் தேர்வீரர்கள் அறுவரால் கொல்லப்பட்டுக் களத்தில் கிடக்கிறானே. நாங்கள் காணும் இந்தச் செயல் அநீதியானதே {அறமன்று}” என்றன. அவ்வீரன் கொல்லப்பட்டதும், நட்சத்திரங்கள் சிதறிக் கிடக்கும் ஆகாயம் நிலவுடன் இருப்பதைப் போலப் பூமியானது மிகப் பிரகாசமாக இருந்தது. உண்மையில், பூமியானது இரத்த அலைகளால் மறைக்கப்பட்டுத் தங்கச் சிறகுகள் கொண்ட கணைகளால் விரவி கிடந்தது.

குண்டலங்களாலும், பெரும் மதிப்புமிக்கப் பல்வேறு தலைப்பாகைகளாலும் அலங்கரிக்கப்பட்ட வீரர்களின் அழகிய தலைகள், கொடிகள், சாமரங்கள், அழகிய விரிப்புகள், ரத்தினங்கள் பொறிக்கப்பட்ட பெரும் திறன்வாய்ந்த ஆயுதங்கள், தேர்கள், குதிரைகள், மனிதர்கள் மற்றும் யானைகளின் பிரகாசமான ஆபரணங்கள், சட்டையுரிந்த பாம்புகளைப் போலத் தெரிந்தவையும், நன்கு கடினமாக்கப்பட்டவையுமான கூரிய வாள்கள், விற்கள், உடைந்த ஈட்டிகள், ரிஷ்டிகள், வேல்கள், கம்பனங்கள் மற்றும் பல்வேறு ஆயுதங்களால் பரவிக் கிடந்த அவள் {பூமி} அழகிய வடிவத்தை ஏற்றாள்.




சுபத்திரையின் மகனால் வீழ்த்தப்பட்டு, உயிரையிழந்தோ, உயிரையிழக்கும் தருவாயிலோ தங்கள் சாரதிகளுடன் இரத்தத்தில் புரண்டு கிடந்த குதிரைகளின் விளைவாகப் பல இடங்களில் பூமி கடக்க முடியாததாக இருந்தது. கவசங்கள், ஆயுதங்கள் மற்றும் கொடிமரங்கள் தரித்தவையும், மலைகளைப் போன்றவையுமான யானைகள், இரும்பு அங்குசங்களாலும், கணைகளாலும் நொறுக்கப்பட்டுக் கிடக்க, குதிரைகள், தேரோட்டிகள், தேர்வீரர்கள் ஆகியோரை இழந்த சிறந்த தேர்கள், யானைகளால் நசுக்கப்பட்டுப் பரவிக் கிடக்க, பூமியானது கலக்கப்பட்ட தடாகங்களைப் போலத் தெரிய, பல்வேறு ஆயுதங்களைத் தரித்த பெரும் எண்ணிக்கையிலான காலாட்படை வீரர்கள் தரையில் இறந்து கிடக்க, அந்தப் போர்க்களமானது பயங்கரத் தோற்றத்தை ஏற்று, மருண்டோரின் இதயங்களில் அச்சத்தை ஏற்படுத்தியது. சூரியனைப் போன்றோ, நிலவைப் போன்றோ பிரகாசமான அபிமன்யு தரையில் கிடப்பதைக் கண்ட உமது துருப்புகள் மகிழ்ச்சிப் பரவசத்தில் திளைத்தன, அதே வேளையில் பாண்டவர்கள் துயரால் நிறைந்தனர்.

யுதிஷ்டிரன் சூளுரை

பாலகனே ஆன இளமை நிறைந்த அபிமன்யு வீழ்ந்த போது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, மன்னன் யுதிஷ்டிரன் பார்த்துக் கொண்டிருக்கும்போதே பாண்டவப் படையணிகள் தப்பி ஓடின. சுபத்திரையின் மகன் {அபிமன்யு} வீழ்ந்ததும் பிளந்து ஓடிய தன் படையைக் கண்ட யுதிஷ்டிரன், துணிவுமிக்கத் தன் வீரர்களிடம், “போரில் பின்வாங்காது உயிரை இழந்த வீர அபிமன்யு நிச்சயம் சொர்க்கத்தையே அடைந்திருக்கிறான். எனவே நில்லுங்கள், அஞ்சாதீர், நாம் நம் எதிரிகளை வீழ்த்துவோம்” என்றான் {யுதிஷ்டிரன்}.




பெரும் சக்தியும், பெரும் காந்தியும் கொண்டவனும், வீரர்களில் முதன்மையானவனும், நீதிமானுமான மன்னன் யுதிஷ்டிரன், துயரில் இருந்த தன் வீரர்களிடம் இந்த வார்த்தைகளைச் சொல்லி அவர்களது திகைப்பை அகற்ற முயன்றான். மன்னன் {யுதிஷ்டிரன் தொடர்ந்தான்}, “போரில் கடும் நஞ்சுமிக்கப் பாம்புகளுக்கு ஒப்பான பகை இளவரசர்களை முதலில் கொன்று, அதன் பிறகே அர்ஜுனன் மகன் {அபிமன்யு} தன் உயிரை விட்டான். கோசல மன்னனின் பத்தாயிரம் வீரர்களைக் கொன்றவனும், கிருஷ்ணனையோ, அர்ஜுனனையோ போன்றவனுமான அபிமன்யு நிச்சயம் இந்திரனின் உலகத்திற்குச் சென்றிருப்பான். தேர்கள், குதிரைகள், மனிதர்கள், யானைகளை ஆயிரக்கணக்கில் கொன்ற அவன் {அபிமன்யு}, தான் செய்ததில் மனம் நிறையவேயில்லை. எனவே, அவனைப் போலவே புண்ணியமிக்கச் செயல்களை நாம் செய்ய வேண்டுமேயன்றி, நிச்சயம் அவனுக்காக வருந்தக் கூடாது. நீதிமான்களின் பிரகாசமாக உலகங்களுக்கும், புண்ணியச் செயல்களால் மனிதர்கள் அடையும் உலகங்களுக்குமே அவன் சென்றிருக்கிறான்” என்றான் {யுதிஷ்டிரன்}” {என்றான் சஞ்சயன்}.




கிருஷ்ணரின் அமைதி

முக்காலமும் உணர்ந்த திருமாலின் அவதாரமான கிருஷ்ணன், அபிமன்யுவின் மரணத்தைக் குறித்தும் முன்னரே அறிந்திருந்தார், இருப்பினும் இரண்டு காரணங்களால் அவரால் அபிமன்யுவின் மரணத்தை தடுக்க இயலவில்லை.

முதல் காரணம், அபிமன்யு சந்திர தேவனுடைய மறுபிறவி ஆவான். அவரின் உதவி பூமிக்கு தேவை என தேவர்கள் வினவியபோது மகனைப் பிரிய விரும்பாத சந்திர தேவன் தன் மகன் பதினாறு ஆண்டுகள் மட்டுமே பூமியில் இருக்கவேண்டும் என்ற நிபந்தனையோடு மகனை அனுப்ப சம்மதித்தார். இதனை கிருஷ்ணர் நன்கு அறிவார் எனவேதான் அவர் அபிமன்யுவை காப்பாற்ற முயலவில்லை.

மற்றொரு காரணம், பீஷ்மரை தன் கைகளாலேயே கொன்றுவிட்டோமே என்ற விரக்தியில் இருந்த அர்ஜுனனுக்கு தன் கௌரவ சகோதரர்களை கொல்ல மனம் வரவில்லை. இதை அறிந்த கிருஷ்ணன் அபிமன்யுவின் இழப்பு அர்ஜுனனை கோபம் கொள்ளச் செய்யும். எனவே அர்ஜுனன் கௌரவர்களை வதம் செய்யத் தயங்கமாட்டான் என எண்ணினார். ஆதலால் தான், உலக நன்மைக்காக, தன் உயிருக்கு இணையான அபிமன்யு சாகும்போது, கிருஷ்ணர் எதுவும் செய்யாமல் கண்ணீருடன் அமைதிகாத்தார்.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!