Samayalarai

சுவைமிக்க தாளிப்பு வடகம்

ஒரு ஸ்பூன் போதும் குழம்பின் வாசனை அடுத்த வீட்டு  வாசலை தட்டும். நம் வீட்டில் வைக்கும் மீன் குழம்பு, புளி குழம்பு, சாம்பார், துவையல், போன்ற குழம்புகளில் தாளிப்பு வடகம் சேர்ப்பதால் குழப்பு இன்னும் சுவையாகவும் வாசனையாகவும் இருக்கும். அந்த காலத்தில் பாட்டிகளின் கைவசம் என்றும் சொல்வார்கள். தாளிப்பு வடகத்தில் வெங்காயம், கருவேப்பிலை அதிகம் சேர்ப்பதால் ருசியை அதிகம் தருகிறது. இந்த தாளிப்பு வடகம் ஒரு வருடத்திற்கு மேல் ஆனாலும் கெட்டு  போகாமல் இருக்கும்.




அந்த காலத்தில் பாட்டிகள் வீட்டில் வரும் விசேஷத்திற்கு முன்னதாகவே இந்த தாளிப்பு கருவடவத்தை  தயார் செய்து வைத்திருப்பார்கள். ஆனால் இப்போ அப்படி  இல்லை  சமையல் செய்வதற்கு நேரம் இல்லாமல் கடையில்  விற்கும் சமையல் பொடி மற்றும் அஜினோமோட்டோ போன்ற பொருட்களை உணவில் சேர்த்து கொள்கின்றார்கள். இதனால் வயிற்று வலி, செரிமான கோளாறு போன்ற பல வித பிரச்சனைகள் வருகிறது. இந்த தாளிப்பு  வடகத்தில் வெங்காயம், பூண்டு, கருவேப்பிலை சேர்ப்பதால் உடலுக்கு  நன்மைகளை தருகிறது. எல்லா குழம்பு வகைகளையும் மணக்க செய்யும்  தாளிப்பு வடகத்தை வீட்டிலேயே மிகவும் சுலபமாக எப்படி  செய்யலாம் என்று இந்த  பதிவில் பார்க்கலாம் வாங்க …




தேவையான பொருட்கள்:

karuvadam seivathu yeppadi 

  • சின்ன வெங்காயம் – 2 கிலோ

  • கடுகு – 50 கிராம்

  • வெந்தயம் – 50 கிராம்

  • சீரகம் – 50 கிராம்

  • உளுத்தம் பருப்பு – 50 கிராம்

  • சோம்பு – 30 கிராம்

  • மஞ்சத்தூள் – 50 கிராம்

  • கருவேப்பிலை- 1 கைப்பிடி அளவு

  • உப்பு – 50 கிராம்

  • முழு பூண்டு -1

  • விளக்கெண்ணெய் – 100 மில்லி லிட்டர்




தாளிப்பு வடகம் செய்முறை:

thalippu karuvadavm

ஸ்டேப் – 1   

முதலில்  2 கிலோ சின்ன வெங்காயத்தை எடுத்து சுத்தமாக கழுவ வேண்டும். தண்ணீரில் கழுவுவதால்  தோல் ஊறி சுலபமாக வெங்காய தோலை உரிக்க முடியும்.  அதன் பிறகு கழுவி வைத்த வெங்காயத்தை அரைக்க வேண்டும்.

ஸ்டேப் – 2

அரைத்து வைத்த வெங்காயத்தை ஒரு பெரிய பாத்திரத்தில் கலந்து கொள்ளவும். அதில் கடுகு, வெந்தயம், சீரகம், முழு உளுத்தம் பருப்பு அப்படி இல்லை என்றால் உடைத்த உளுத்தம் பருப்பு, சோம்பு, மஞ்சத்தூள், கருவேப்பிலை, தேவையான அளவு உப்பு எல்லாத்தையும் சேர்த்து நல்லா  அழுத்தமாக மசிக்க  வேண்டும்.

ஸ்டேப் – 3

பிசைந்து வைத்த வடவத்தை கையை வைத்து நன்றாக மட்டமாக அழுத்தி விடவும். அதை ஒரு நாள் இரவு முழுவதும் ஊறவைக்க வேண்டும். கையால் பிசைவதால் கெட்டு போய்விடுமோ  என்ற அச்சம் வேண்டாம்.




ஸ்டேப் – 4

மறுநாள் காலையில் பிசைந்து வைத்த தாளிப்பு வடகத்தை ஒரு பெரிய தட்டில் கொட்டி பரப்பி விட்டு வெயிலில் வைக்க வேண்டும். இதே போல் ஒரு ஐந்து நாள் வரை காய வைக்க வேண்டும். வெயில் மிதமாக இருந்தால் ஒரு வாரம் வரை காய வைக்க வேண்டும்.

ஸ்டேப் – 5

காய வைத்த தாளிப்பு வடகத்தை மறுபடியும் ஒரு பெரிய கிண்ணத்தில் கொட்டி வைக்க வேண்டும்.அதன் பிறகு ஒரு முழு பூண்டை எடுத்து பொடி பொடியாக நறுக்கி அதில் கலந்து விட வேண்டும். அதன் பிறகு 100 மில்லி லிட்டர் விளக்கெண்ணெய் அதில் சேர்த்து கொள்ளவும்.

ஸ்டேப் – 6

பிறகு ரெடி செய்திருந்த வடகத்தை விளக்கெண்ணெய்யை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி கெட்டியாக பிசைய வேண்டும். பிறகு உருண்டையை உருட்ட வேண்டும். விளக்கெண்ணெய் சேர்ப்பதால் ஓட்டும் தன்மை அதிகம் அதே சமயம் வாசனையாகவும் இருக்கும். அதனால் உருண்டை உருட்டும் பொழுது உடையாமல் கெட்டியாக வரும்.

ஸ்டேப் – 7

பிறகு உருட்டிய உருண்டைகளை ஒரு தட்டில் வைத்து, ஒரு மூன்று நாட்கள் காய வைக்க வேண்டும். நான்காவது நாள் அந்த உருண்டையை திருப்பி காய வைக்க வேண்டும். நாள் ஆகா ஆகா உருண்டையின் கலர் கருப்பாக மாறிவிடும். அதன் பின் இந்த உருண்டைகளை ஒரு பாட்டிலில் ஸ்டோர் பண்ணி வைக்கவும். இப்போது தாளிப்பு வடவம் தயார். இனிமேல் குழம்புவைக்கும் பொழுது தாளிப்பில் சேர்க்க வேண்டியதுதான்.




  • வீட்டுக் குறிப்பு:

சில பயனுள்ள வீட்டுக் குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்வோம்..!!

  • சுத்தமான நாற்காலிகள்
     மைக்ரோ ஃபைபர் சோபாக்களின் மீது கரைகள் ஏற்பட்டால் நூறுசதவீதம் ஆல்கஹால் மற்றும் பிரஷ்ஷின் மூலம் அதை நன்கு தேய்த்தால் கரைகள் உடனே மறைந்துவிடும்.

  • பிரெட் பந்துகள்
    பிரெட்டுகளின் ஓரங்களை நீக்கி, நிறிய பந்து போல மீதமுள்ள பிரட்டை உருட்டிவைத்துக் கொள்ளுங்கள். கிச்சனில் கரைகள் ஏற்பட்டிருந்தால் கரைகளின் மீது அழுத்திதுடைத்தால் கரை நீங்கும். இதை ஸ்பாஞ்ச் போல பயன்படுத்துங்கள். காப்பி மேக்கர், தூசி மற்றும் போட்டோ ஃபிரேம்களை சுத்தம் செய்ய இது ஒரு எளிதான வழியாகும்.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!