Cinema Entertainment

ஒரு தவறு செய்தால் படம் எப்படி இருக்கு!

மணி தாமோதரன் இயக்கத்தில் உருவான ஒரு தவறு செய்தால் திரைப்படம் வெள்ளிக்கிழமை வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. இப்படத்தில், எம். எஸ். பாஸ்கர், நமோ நாராயணன், அறம் ராம், உபாசனா, பாரி, ஸ்ரீதர், சுரேந்தர், சந்தோஷ் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தின் விமர்சனத்தை இப்போது பார்க்கலாம்.




கதை:

சினிமாவில் உதவி இயக்குநராக வேண்டும் என்ற கனவுடன் இருக்கும் நாயகன், தன் நண்பர்களோடு வாழ வழியில்லாமல் தெருவில் சுற்றிக்கொண்டு இருக்கிறான். 4 பேருக்கும் வருமானம் இல்லாததால், வீட்டு வாடகை கொடுக்க முடியாமல் கஷ்டப்படுகிறார்கள். இந்த நேரத்தில், வாடகை கொடுக்கவில்லை என்பதற்காக அவர்களை வீட்டை விட்டு துரத்தி விடுகிறார் வீட்டின் உரிமையாளர்.

Oru Thavaru Seidhal

இதையடுத்து அவர்கள் தங்குவதற்காக கோயம்பேடு செல்கின்றனர். அப்போது அங்கு அவர்கள் ஒருவரை சந்திக்கின்றனர். அவர் பிறரின் தேவையைச் சரியாக பயன்படுத்திக் கொண்டால், சுலபமாகச் சம்பாதிக்கலாமென என்ற பாடத்தை கற்றுத் தருகிறார். அவர் கொடுத்த ஐடியாவை நன்றாக கேட்டுக்கொண்ட அந்த நண்பர்கள், தொழில்நுட்பம் தெரிந்த இளம்பெண் ஒருவரது துணையுடன், கே.கே.நகரில் நடக்கும் தேர்தலைப் பயன்படுத்திப் பெரும் பணம் பார்க்க நினைக்கிறார்கள். அதற்கான வேலைகள் முடிந்த பிறகு, அரசியல்வாதிகள் இவர்களை ஏமாற்றி விடுகிறார்கள். அந்த இளைஞர்கள் அரசியல்வாதிகளை பழிவாங்க துடிக்கிறார்கள். இதன்பிறகு என்ன ஆனது என்பது தான் படத்தின் மீதி கதை.

நிறைவான நடிப்பு: பாரி, ஸ்ரீதர், சுரேந்தர், சந்தோஷ் என நான்கு நண்பர்களும் நிறைவான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். தொழில்நுட்பத்தின் சாத்தியத்தையும், அதனால் ஏற்படும் அபாயத்தையும் இயக்குநர் மணி தாமோதரன் நன்றாக புரியும்படி கூறியுள்ளார். ஒளிப்பதிவிலும், இசையிலும் சற்று கவனம் செலுத்தியிருந்தால், படம் இன்னமுமே ரசிக்கும்படி அமைந்திருக்கும் என்பது படம் பார்த்தவர்களின் கருத்தாக உள்ளது.




ஓட்டுக்கு பணம் வாங்குவது சரியா: நாடாளுமன்ற தேர்தலில் பொதுமக்கள் தங்களின் வாக்குகளை எந்த மாதிரியான அரசியல் வேட்பாளர்களுக்கு அளிக்க வேண்டும் என்பதை சிந்திக்க வைக்கும் படமாக ஒரு தவறு செய்தால் திரைப்படம் உள்ளது. ஒரு யதார்த்தமான திரைக்கதை, சுவாரசியமான மேக்கிங், உணர்வுகளை கடத்தும் காதல், அரசியல் சூழ்ச்சி என அனைத்தையும் இந்த படத்தில் உணர்வு பூர்வமாக சொல்லி இருக்கிறார் இயக்குநர்.

அனைவரும் பார்க்க வேண்டிய படம்: ஓட்டுப்போடுவது நமது கடமை, வாக்குக்கு பணம் வாங்கக்கூடாது என்பதை இந்த படம் உணர்த்தி இருக்கிறது. தேர்தல் நேரத்தில் இப்படி ஒரு படம் வந்தது வரவேற்க வேண்டிய ஒன்று, இதைப்பார்த்தாவது காசுக்காக விலை மதிப்பு இல்லாத ஓட்டை விற்கக்கூடாது என்று புரிந்து கொண்டு திருந்த வேண்டும். தேர்தலுக்கு முன் அனைவரும் இந்த படத்தை நிச்சயம் பார்க்க வேண்டும் என்று படம் பார்த்தவர்கள் கருத்து தெரிவித்தனர்.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!