lifestyles News

“என் வாக்கு என் உரிமை” நம் ஜனநாயக நாட்டில் ஒவ்வொரு வாக்கும் முக்கியம்!

ஜனநாயக திருவிழா என்றழைக்கப்படும் தேர்தல் இந்தியாவில் வரும் 19ஆம் தேதி முதல் பல கட்டங்களாக நடைபெறுகிறது. நாட்டின் அடுத்த பிரதமரை தேர்ந்தெடுப்பதற்காக நடக்கவிருக்கும் நாடாளுமன்ற தேர்தல் சுமார் 50 நாட்கள் நடைபெறவுள்ளது. ஜூன் 4ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும். கோடிக்கணக்கான ரூபாய் செலவு செய்து அரசியல்வாதிகள் வீதி வீதியாக அழைந்து வாக்கு சேகரித்து தேர்தலை பாதுகாப்பாக நடத்திட அரசு இயந்திரம் முழு வீச்சில் செயல்படுவது என அனைத்துமே நீங்கள் செலுத்தும் ஒற்றை வாக்கிற்காக… வாக்களிப்பதன் அவசியத்தை இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ளுங்கள்.

எனது ஓட்டு, எனது உரிமை' - சேலம் மாணவிகளின் விழிப்புணர்வு | அனைவரும் வாக்களிக்க வேண்டுமென்பதை வலியுறுத்தி, கல்லூரி மாணவிகள் 'எனது ஓட்டு ...




இந்திய போன்ற ஜனநாயக நாட்டில் வாக்களிக்கும் அதிகாரம் என்பது முக்கிய அம்சமாகும். சுமார் 97 கோடிக்கு வாக்களிக்க தகுதியானவர்கள் என்றாலும் இதில் பாதிக்கும் குறைவான நபர்களே வாக்கு செலுத்துவதில் ஆர்வமாக உள்ளனர். 2019 மக்களவைத் தேர்தலில் 67.11 விழுக்காடு வாக்குகள் பதிவாகியிருந்தன. இந்திய தேர்தல் வரலாற்றில் இது அதிகபட்ச வாக்குப்பதிவாகும்.

18 வயதை பூர்த்தி செய்தவர்கள் வாக்களிக்க உரிமை உண்டு என்ற நிலையில் ஒவ்வொரு தேர்தலிலும் வாக்காளர் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமே உள்ளது. செலுத்தப்படும் ஒவ்வொரு வாக்கும் நாட்டின் எதிர்காலத்திற்கானது என்பதால் வாக்காளர் எண்ணிக்கை அதிகரிப்பு நல்ல விஷயமாகும்.

வாக்கு செலுத்துவதற்கான முக்கிய காரணங்கள்

என் வாக்கு என் உரிமை

இந்தியாவின் ஜனநாயக கட்டமைப்பு தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் அமைந்துள்ளது. சட்டமன்றங்களும், நாடாளுமன்றங்களும் மக்களுக்காக தேர்ந்தெடுக்கப்படுகின்றன. அரசியலமைப்புச் சட்டப்படி வாக்களிக்கும் உரிமையைப் பெற்றிருப்பது நமது அதிர்ஷ்டம். இந்திய அரசியலமைப்பு நமக்கு கொடுத்திருக்கும் அதிகாரத்தை பயன்படுத்தி நமக்கு விருப்பமானவர்களுக்கு வாக்களிலாம்.




மாற்றத்திற்கான வாக்கு

நாம் செலுத்தும் ஒவ்வொரு வாக்கும் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும் திறன் கொண்டது. அரசாங்கத்தின் மீது உங்களுக்கு அதிருப்தி இருந்தால் மாற்றத்தை ஏற்படுத்தவும் புதிய அரசாங்கம் அமைந்திடவும் நீங்கள் வாக்களிக்கலாம்.  ஜனநாயக கடமையை நிறைவேற்ற தவறினால் அதே கட்சி இன்னும் ஐந்து ஆண்டுகள் ஆட்சியில் இருக்கும். நாட்டில் மோசமான நிர்வாகமே தொடர்ந்தால் அது மக்களின் தவறாகும்

ஒவ்வொரு வாக்கும் முக்கியம்

கோடிக்கணக்கான நபர்கள் வாக்கு செலுத்தும் நாடாளுமன்ற தேர்தலில் நம்முடைய ஒரு வாக்கு என்ன மாற்றத்தை ஏற்படுத்தும் என நினைக்க கூடாது. ஒவ்வொரு வாக்கும் முக்கியமானது. “எனது வாக்கு வித்தியாசத்தை ஏற்படுத்தாது” என்ற எண்ணத்திதை விடுவித்து கோடிக்கணக்கான நபர்களில் எனக்கு வாக்களிக்கும் உரிமை உண்டு என நினைத்து வாக்கு செலுத்தும் போது மாற்றம் ஏற்படும். வாக்கு செலுத்துவது ஒவ்வொரு மனிதனின் பொறுப்பாகும்.

நோட்டா

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் மீது திருப்தி இல்லையென்றாலும் வாக்காளர்கள் வாக்களிப்பதை இந்திய அரசு சாத்தியமாக்கியுள்ளது. NOTA என்பது மேலே உள்ள எதுவும் இல்லை என்பதைக் குறிக்கிறது. மேலும் இது எந்தவொரு வேட்பாளர்களாலும் திருப்தி அடையாத நபர்களுக்கான இடமாகும். நோட்டா பொத்தானை அழுத்தினால் போட்டியிடும் வேட்பாளர்கள் யாரும் நிர்வாகம் செய்ய பொறுத்தமானவர்கள் அல்ல என்று அர்த்தம். நோட்டாவுக்கு அதிக வாக்குகள் கிடைத்திருந்தால் இரண்டாவதாக அதிக வாக்குகள் பெற்ற வேட்பாளர் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார்.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!