gowri panchangam Sprituality

இன்றைய ராசி பலன் (15.04.24)

சந்திர பகவான் இன்று மிதுன ராசியில் பயணம் செய்கிறார்.இன்று மாலை 05.01 வரை சப்தமி. பின்னர் அஷ்டமி. இன்று அதிகாலை 05.55 வரை திருவாதிரை. பின்னர் புனர்பூசம். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம். மேஷம் முதல் மீனம் வரையுள்ள 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.

மேஷ ராசி அன்பர்களே!

பெண்கள் மனத் துணிவுடன் காரியம் செய்வீர்கள். மகளை நல்ல கல்லூரியில் சேர்க்க கல்வியாளர்களிடம் ஆலோசனை பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலைச்சலால் அவதிப்படுவீர்கள். குடும்பத்தில் இருப்பவர்களுடன் கோபமாகப் பேசி பிரச்சனையை பெரிதுபடுத்துவீர்கள். எச்சரிக்கையுடன் நடந்து வியாபார சிக்கலைத் தீர்ப்பீர்கள். அதிக முதலீடு செய்து அவதிப்படாதீர்கள்.
திங்கட் கிழமையான இன்று சிவபெருமானை வழிபடலாம்.

அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வழியில் ஆதாயம் உண்டாகும்.

பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் முயற்சிக்கு வாழ்க்கைத்துணையின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உடல்நலனில் கவனமாக இருக்கவும்.

ரிஷப ராசி அன்பர்களே!

தொழிலுக்கு இருந்த இடையூறுகளை சாதுரியமாக களைவீர்கள். எந்த வகையான இக்கட்டான சூழ்நிலையையும் சமாளிப்பீர்கள். வியாபாரத்தை சிறப்பாக நடத்துவீர்கள். . எதிர்பாராத இடத்திலிருந்து பண வரவை பெற்று வங்கி சேமிப்பை உயர்த்துவீர்கள். முயற்சிகளுக்கு இருந்த முட்டுக்கட்டைகளை நீக்குவீர்கள். குடும்ப சிக்கலை சாதுரியமாக பேசி தீர்ப்பீர்கள்.இன்று முருகப்பெருமான் வழிபாடு செய்யவும்.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த சுபச்செய்தி கிடைக்கக்கூடும்.

ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் ஆதாயம் கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் சங்கடங்கள் ஏற்படக்கூடும்.




மிதுன ராசி அன்பர்களே!

வியாபாரம் காரணமாக வெளியூரில் தங்குவீர்கள். உடல் நலம் பாதிக்கப்பட்ட தந்தையாரை மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச் செல்வீர்கள். உறவினர்களுக்கு உதவி செய்து உங்கள் செல்வாக்கை அதிகரித்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்கள் கூடுதலாக வேலை பார்ப்பீர்கள். வாக்கு வன்மையால் அனுகூலம் அடைவீர்கள். விநாயகரை வழிபடுவது நலம் சேர்க்கும்.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிர்ஷ்ட வாய்ப்புகள் ஏற்படும்.

திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவு உண்டு.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன்கள் விஷயத்தில் கவனமாக இருப்பது அவசியம்.

கடக ராசி அன்பர்களே!

திறமையான செயல்பாட்டால் பாராட்டப்படுவீர்கள். குடும்பத்தில் எதிர் பாராத விருந்தினர் வருகையால் வீண் சலசலப்பை சந்திப்பீர்கள். வியாபாரத்தை விரிவுபடுத்த திட்டம் போடுவீர்கள். திருமண முயற்சிகளில் சாதகமான பலனை பெறுவீர்கள். தொழில் வளர்ச்சி பற்றிய சிந்தனையை அதிகரிப்பீர்கள். பிள்ளைகளின் கல்வி பற்றிய கவலையில் மூழ்குவீர்கள்.முருகப்பெருமானை வழிபடுவது நலம் தரும்.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் முக்கிய முடிவுகள் எதையும் எடுக்கவேண்டாம்.

பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்கள் வகையில் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும்.

ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் வீண் விவாதம் செய்வதைத் தவிர்க்கவும்.




சிம்ம ராசி அன்பர்களே!

விழிப்புடன் இருந்து வியாபாரத்துக்கு வர இருந்த நஷ்டத்தை தவிர்ப்பீர்கள். சிலர் பதவி உயர்வோடு உத்தியோக இட மாற்றமும் பெறுவீர்கள். குடும்பத்தில் குழப்பம் ஏற்பட்டு மனக்கலக்கம் அடைவீர்கள். வியாபாரத்தை நிதானமாக நடத்துவீர்கள். தொழிலுக்குத் தேவையான உதவிகளை வெளிநாட்டில் இருந்து பெறுவீர்கள். அரசுத் துறைகளில் பணி அழுத்தம் அதிகரித்து சிரமப்படுவீர்கள்.சிவபெருமானை வழிபட காரியங்கள் அனைத்தும் ஸித்தியாகும்

மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு.

பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் சில பிரச்னைகள் ஏற்படும்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாயிடம் எதிர்பார்த்த உதவி கிடைப்பது தாமதமாகும்.

கன்னி ராசி அன்பர்களே!

அடுத்தவருக்கு உதவி செய்வதன் மூலம் வெளி வட்டாரங்களில் நல்ல பெயர் எடுப்பீர்கள். நண்பர்களுக்கு இடையே இருந்த பிணக்குகளை விலக்குவீர்கள். வீட்டில் சுப காரியங்களுக்கான ஏற்பாடு செய்வீர்கள். உங்கள் பக்கம் நியாயம் இருப்பதை நிதானமாகப் பேசி புரிய வைப்பீர்கள். தொழிலை முன்னேற்ற பாதையில் கொண்டு சென்று பணவரவை அதிகரிப்பீர்கள்.இன்று நீங்கள் துர்கையை வழிபடுவதன் மூலம் சிரமங்கள் பெரிதும் குறையும்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிரிகளால் இடையூறுகள் ஏற்படக்கூடும். கவனம் தேவை.

அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப் பிடிக்கவும்.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்குக் கொடுத்த கடன் திரும்பக் கிடைக்க வாய்ப்பு உண்டு.




துலா ராசி அன்பர்களே!

உங்களுக்கு வரவேண்டிய கடன் பாக்கியை வசூல் செய்வீர்கள். உடல் ரீதியான பாதிப்புக்கு மருத்துவமனைக்கு சென்று வந்த பிறகு நல்ல முன்னேற்றம் காண்பீர்கள். அலுவலக நிர்வாகத்தில் சீர்திருத்தத்தைக் கொண்டு வருவீர்கள். கட்டுமானத்துறையில் புதிய முயற்சியை மேற்கொள்வீர்கள். விவசாயத் தொழிலில் முனைப்புடன் ஈடுபடுவீர்கள். மின்சாரப் பொருட்கள் வியாபாரத்தை வெற்றிகரமாக நடத்துவீர்கள். லட்சுமி நரசிம்மர் வழிபாடு நன்மைகளை அதிகரிக்கும்.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் பேசும்போது பொறுமை அவசியம்.

சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும்.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உணவு வகைகளால் அலர்ஜி ஏற்படக்கூடும் என்பதால் கவனம் தேவை.

விருச்சிக ராசி அன்பர்களே!

வேலைகளை வேகமாக முடிக்க இயலாமல் பின்னடைவை சந்திப்பீர்கள். இனிமையாக பேசி கணவன் மனைவிக்கு இடையே இறுக்கத்தை அதிகரிப்பீர்கள். அலுவலகச் சுமையால் குடும்பத்தைவிட்டு அந்நியப்படுவீர்கள். அரசு வங்கியில் இருந்து எதிர்பார்த்த லோன் வர தாமதமாகி அலைவீர்கள். வியாபாரத்தில் சறுக்களை சந்திப்பீர்கள். சந்திராஷ்டம நாள். எச்சரிக்கை தேவை.இன்று நீங்கள் துர்கையை வழிபட காரியங்கள் அனுகூலமாகும்.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவினர்களால் சில பிரச்னைகள் ஏற்படும்.

அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் விவாதம் செய்வதைத் தவிர்ப்பது நல்லது.

கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உறவினர்களிடம் அனுசரணையாக நடந்துகொள்ளவும்.




தனுசு ராசி அன்பர்களே!

ஆடை அலங்காரப் பொருட்கள் வாங்குவீர்கள். அனுபவம் வாய்ந்தவர்களின் வழிகாட்டுதலால் தொழிலில் முன்னேற்றம் அடைவீர்கள். வாடிக்கையாளர்களைக் கவர்ந்து வியாபாரத்தைப் பெருக்குவீர்கள். சகோதர சகோதரிகளுக்கு உதவியாக இருப்பீர்கள். வீட்டில் உள்ளவர்களை சந்தோஷப்படுத்த அக்கறையோடு நடந்து கொள்வீர்கள். விநாயகர் வழிபாடு விக்கினங்களைத் தீர்க்கும்.

மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும்.

பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் செலவுகள் ஏற்படக்கூடும்.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நீண்டநாளாக தடைப்பட்டு வந்த காரியம் சாதகமாக முடியும்.

மகர ராசி அன்பர்களே!

அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் என்று அலட்சியமாக இருக்காதீர்கள். எடுத்த வேலையை முடிக்க அக்கறையோடு பாடுபடுவீர்கள். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு உத்தியோக வாய்ப்பு பெறுவீர்கள். அலுவலக கடனுதவி பெற்று வீட்டை அழகுபடுத்துவீர்கள். தோப்பு பராமரிப்பு பணியில் கவனத்தைச் செலுத்துவீர்கள். கட்டுமான வேலையை சிறப்பாக பார்ப்பீர்கள்.மகாவிஷ்ணுவை வழிபடுவதன் மூலம் வீண் பிரச்னைகளில் இருந்து விடுபட முடியும்.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தேவையற்ற செலவுகளைத் தவிர்ப்பது நல்லது.

திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தந்தைவழியில் எதிர்பார்த்த காரியம் முடிவதில் தாமதம் ஏற்படக்கூடும்.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வீண் அலைச்சலும் உடல் அசதியும் உண்டாகும்.




கும்பராசி அன்பர்களே!

ஏஜென்சி சம்பந்தப்பட்ட வேலைகளில் நல்ல வருமானம் பெறுவீர்கள். நிலம் வாங்கி விற்பதன் மூலம் கணிசமான கமிஷன் கிடைத்து சந்தோஷப்படுவீர்கள். வர்த்தகத்தை விரிவாக்கம் செய்ய நண்பர்களின் உதவியை நாடுவீர்கள். கதை கவிதை கட்டுரை இலக்கிய ஈடுபாடுகளை அதிகரிப்பீர்கள். வேலையில் திறமையாகச் செயல்படுவீர்கள்.இன்று பைரவர் வழிபாடு நன்மைகளை அதிகரிக்கச் செய்யும்.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை தவிர்க்கவும்.

சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் பணவரவுடன் எதிர்பாராத செலவுகளும் ஏற்படும்.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்கள் மூலம் கேட்கும் செய்தி உற்சாகம் தருவதாக இருக்கும்.

மீனராசி அன்பர்களே!

முயற்சியை முடுக்கிவிட்டு முன்னேற்றமான காரியங்களைப் பார்ப்பீர்கள். அரசாங்க சம்பந்தப்பட்ட வேலைகள் அனுகூலமாக நடப்பதால் அடுத்த கட்டத்திற்கு செல்வீர்கள். அரசியல்வாதிகளின் சந்திப்பால் சமுதாயத்தில் செல்வாக்கை அதிகரிப்பீர்கள். காதலியின் மனம் கோணாமல் நடந்து கொண்டு உறவை பலப்படுத்துவீர்கள்.கடன் பிரச்சனை தீர சிவபெருமானுக்கு ருத்ரா அபிஷேகம் செய்வது நல்லது.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத செலவுகளால் கையிருப்பு கரையும்.

உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு ஏற்படும்.

ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் அனுசரணையாக நடந்துகொள்வது நல்லது.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!