gowri panchangam Sprituality

காவல் தெய்வங்கள்/முனீஸ்வரன் பற்றிய சிறப்பு தகவல்கள் 

முனீஸ்வரன் பற்றிய சிறப்பு தகவல்கள் 

சிவபெருமானை ஈஸ்வரன் என்று அழைப்பார்கள்.சிவனுக்கு பிறகு இரண்டு பேருக்கு மட்டுமே ஈஸ்வரன் பட்டம் கிடைத்திருக்கிறது. அதில் ஒருவர் தர்மத்தை காக்கும் சனீஸ்வரன்.  மற்றொருவர் முனிஸ்வரன் ஆவர். இந்த முனீஸ்வரன் சிவபெருமானின் காவலர்களில ஒருவர் ஆவார்.

முனீஸ்வரன் கிராமங்களில் அதிகமாக கோவில் கொண்டிருக்கிறார். அவர் கிராமங்களை இரவு நேரங்களில் காத்து, துஷ்ட சக்திகளை அடியோடு ஒழித்துக் கட்டுவார் என நம்பப்படுகிறது. அந்த முனீஸ்வரன் அவதரித்த வரலாற்றை பற்றி கொஞ்சம் பார்ப்போம்,

முன்னொரு காலத்தில் அந்தகாசுரன் என்னும் அசுரன் தேவர்களையும், மக்களையும்வதைத்து இடையூறு செய்து வந்தான். அந்த அசுரனிடம் இருந்து தங்களைக் காக்கும்படி அன்னை பராசக்தியை அனைவரும் வேண்டினர்.




பார்வதி அம்மன் காத்தாயி என்ற பெயரில் பூமியில் அவதரித்தார்.
அசுரனை அழிக்க காத்தாயி அம்மன் லாடமுனி, முத்துமுனி, செம்முனி, கருமுனி,கும்பமுனி, வால் முனி, சட்டை முனி என்று ஏழு முனிகளை உருவாக்கினார். அவர்கள் அனைவரும் சேர்ந்து அந்தகாசுரனை அடக்கி வதம் செய்தார்கள்.

பின்னர் முனிகள் அனைவரும் ஒரே வடிவமாக கலியுகத்தில் மக்களை காப்பதற்காக பூமிக்கு வந்தனர்.இவர்களின் அம்சமாக விளங்குபவரே முனியப்பன் ஆவார்.

முனீஸ்வரன் கண்கள் நெருப்பு போல பிரகாசிக்கும், கனல் கக்கும் கண்களும், அருள் ஒளிரும் மேனியும், கொண்டவராக முனியப்பன் விளங்குகின்றார். முனீஸ்வரன் அருள் கிடைத்தால் சகல சவுபாக்கியங்களும் கிட்டும் என நம்பப்படுகிறது.

முனீஸ்வரன் நள்ளிரவு 12 மணிக்கு மேல் 5 மணிக்குள் சுமார் 20 அடி உயரத்திற்கு வெண் புகைவடிவில் வலம் வருவார் என சொல்லபடுகிறது. இன்றும் பல கிராமங்களில் கிராம தெய்வமாக முனியப்பன் உள்ளார். பலருக்கு முனியப்பன் குல தெய்வமாவார். பல்வேறு பெயர்களில் இவர் கிராமங்களில் அழைக்கபடுகிறார்.

நீண்ட தூர பயணம் புறப்படுபவர்கள் தங்களுடைய வாகனங்களுடன் முனியப்பனை வணங்கிய பிறகேதங்களின் பயணத்தை ஆரம்பிப்பார்கள். 
இந்த வழக்கத்தை இன்றும் கூட கிராமங்கள் மட்டுமல்லாது நகரங்களிலும் காணலாம். இதற்க்கு காரணம் முனியை வணங்கிவிட்டு புறப்பட்டால் அந்த பயணத்தில் நமக்கு எந்த பிரச்சனையும் ஏற்படாமல் நம்மை காப்பார் என நம்பிக்கையேயாகும். 

முனி என்ற பெயரைக் கொண்டவர்கள் அளவற்ற குறும்பு செய்பவர்களாக இருப்பார்கள் மேலும் அன்புக்கு மட்டுமே கட்டுப்படுவார்கள்.சில நேரங்களில் இவர்கள் தன்னை அறியாமல் கூறும் வார்த்தைகளும் நிஜமாகும். 




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!