Serial Stories vana malai pol oru kathal

வானமழை போல் ஒரு காதல் – 21

21

 

ஐய்யோ …”  ஒருவருடைய அதிர்ச்சியில் அடுத்தவருக்கு குறைந்ததில்லை அங்கிருந்த பெண்களுக்குள்

 

” திலகா ஒழுங்காக கேட்டுச் சொல்லடி ” மங்கை அலறிக் கொண்டிருக்க திலகா முகத்தை மூடிக்கொண்டு ஓவென அழுதாள்.

 




ஏய் எங்கே எப்படி என்று எந்த விபரம் ஆவது கேட்டாயாஅம்மா கவலைப்படாதீர்கள். அண்ணாவிற்கு  ஒன்றும் ஆகி இருக்காது .நான் பார்க்கிறேன் ” கௌதம் வந்த போன் எண்ணிற்கு திரும்பவும் போன் செய்ய முயன்றான்.

 

” வாசுகி எனக்கு பயமாக இருக்கிறது வா நாம் போய் என்னவென்று பார்க்கலாம் ” சிலைபோல் நின்று விட்ட மகளின் கை பிடித்து இழுத்தாள் ராஜாத்தி .தாயின் இழுவைக்கு வாசல் வரை சென்ற வாசுகி ” ஒரு நிமிடம் அம்மா ” என்று கையை உதறிக்கொண்டு மங்கை  முன்னால் வந்து நின்றாள்.

 

” இப்போது உங்களுக்கு சந்தோசமா அத்தைஅது எப்படி உங்கள் மகனுக்கே சாபம் கொடுக்க உங்களால் முடிந்ததுஇதுபோல் ஒரு மகனை உங்களால் இனி ஒருமுறை பெற முடியுமா  ? உங்கள் மகனைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்இத்தனை வருடங்கள் வளர்த்து இருக்கிறீர்களே அவரை புரிந்து கொண்டீர்களா நீங்கள்இப்போது அவரைப் பற்றி நான் சொல்லட்டுமா

 

திருமணம் தானே செய்து கொண்டான் .ஆனால் அவனுக்கு குழந்தை பிறக்க விடமாட்டேன் என்று குரூரமாக நினைத்தீர்களே இந்த விஷயத்தில் உங்கள் மகனின் நிலைப்பாடு தெரியுமா  ?  நான் முதன்முதலில் படிக்க வேண்டும் என்று காரணம் காட்டி இந்த திருமணத்தை நிறுத்தி விடச் சொல்லி உங்கள் மகனிடம் பேசிய போது …” 

 

” என்ன திருமணத்தை நிறுத்தச் சொன்னாயா ? ” மங்கை நம்ப முடியாமல் கேட்டாள்.

 

” ஒரு முறையல்ல .மூன்று முறை இந்த திருமணத்தை நிறுத்தச் சொல்லி உங்கள் மகனிடம் கேட்டிருக்கிறேன் ” 

 

” ஏன் அப்படி கேட்டாய்உன் அப்பாவை விட என் மகனிடம் நிறைய பணம் இருக்கிறது .சொத்துக்கள் இருக்கிறது .நன்றாக தொழில் பார்த்துக் கொண்டிருக்கிறான் .இதையெல்லாம் கணக்கு வைத்து தானே நீங்கள் எல்லோருமாகச் சேர்ந்து அவனிடம் ஏதேதோ பேசி இந்த திருமணத்தை நடத்திக் கொண்டீர்கள் ” 

 




” அது உங்களுடைய எண்ணம் .உண்மையில் ஆரம்பத்தில் இருந்தே இந்த திருமணத்தில் எனக்கு ஒரு தயக்கம் .முதலில் படிக்கும் எண்ணம்பிறகு ராதாவினால்் ஒரு தயக்கம் .பிறகு வந்த குழப்பத்திற்கு காரணம் நீங்கள். இந்த எல்லா மறுத்தல்களையும் நான் உங்கள் மகனிடம் சொல்லியிருக்கிறேன் .அவற்றுக்கான தீர்வை அவர் எளிதாக எடுத்துக் கொடுத்தார் .முதலில் எனது படிப்பு விஷயம் பேசும்போது நீ கண்டிப்பாக தொடர்ந்து படிக்க வேண்டும் வாசுகி .நாம் நமது குடும்பத்தை இப்போதே திட்டமிட்டுக் கொள்ள வேண்டும். எங்கள் வீட்டில் அம்மா தம்பி தங்கை என்று என்னை நம்பி மூன்று பேர் இருக்கிறார்கள் .அவர்கள் பின் வாழ்க்கைக்கான ஏற்பாடுகளை செய்து முடித்துவிட்டு தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆனால் உன்னை பார்த்த உடன் என் மனம் மாறிவிட்டது .இப்போது உடனடியாக உன்னை திருமணம் செய்தே ஆக வேண்டும் என்ற முடிவில் இருக்கிறேன் .என்னுடைய வாழ்க்கை துணையாக நினைத்து வைத்த உன்னிடம் இதனை நான் இப்போது சொல்லியே ஆகவேண்டும் .நாம் திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாக வாழ்க்கையையும் தொடங்குவோம் .ஆனால் நமக்கென்று ஒரு குடும்பத்தை சில வருடங்கள் கழித்து உருவாக்குவோம் .அதாவது என் தங்கை திருமணம் தம்பியின் வேலை , திருமணம் இவற்றிற்குப் பிறகு நமக்கென்று ஒரு குழந்தை பெற்றுக்கொள்ளலாம் உனக்கோ எனக்கோ அதிக வயதாகி விடவில்லை. எனக்கு 26 உனக்கு 21 .நமக்கு இன்னும் நிறைய நாட்கள் இருக்கிறது. நிதானமாக நாம் நமது குடும்பத்தை ஆரம்பிக்கலாம். இப்படி ஒரு வாக்கினை என்னிடம் வாங்கி இருக்கிறார் தெரியுமா ?”

 

வாசுகி கண்ணீர் வடிய கேட்க மங்கை அதிர்ச்சி அடைந்து நின்றுவிட்டாள்.

 

” பிறகு திருமண வீட்டில் உங்கள் பேச்சைக் கேட்டு என் சந்தேகத்தை அவரிடம் சொன்னபோது அவர் நம்ப மறுத்தார். என் அம்மாவை இதுபோல் விஷயங்களின் சாயலாக  கூட என்னால் பார்க்க  முடியாது என்றார் .அவருக்குச் சரியாக வாதாட அப்போது என்னிடம் ஆதாரம் இல்லை .நான் மீண்டும் மீண்டும் வலியுறுத்தவே ஆதாரத்தைக் கொண்டு வா நம்புகிறேன் .ஆனால் அந்த ஆதாரம் உனக்கு கிடைக்க போவதே இல்லை என்று உறுதியாகச் சொன்னார் .எங்களது ஒவ்வொரு பேச்சின் போதும் என் அம்மா என் தங்கை தம்பி என்று எப்போதும் உங்களைப் பற்றித்தான் உயர்வாகப் பேசிக் கொண்டிருந்தார். அந்த அளவு உங்களை நம்பிக் கொண்டிருந்தார் .” 

 

மங்கையோடு  திலகாவும் , கௌதமும்  தலையில் இடி விழுந்தாற்போல் அசையாமல் நின்றுவிட்டனர்.

 

” அவருடைய இந்த குணத்தினால் தான் இங்கே என்னால் உங்களுக்கு எதிராக சிறு செயல் கூட செய்ய முடியாமல் போனது .இதனால்தான் நான் செய்வதறியாமல் இங்கே திணறிக் கொண்டிருந்தேன் .அதனை உபயோகப்படுத்தி நீங்கள் என்னை பைத்தியக்காரியாக்க முயன்றீர்கள் .அத்தோடு அவரிடம் எனக்கு அவரைப் பிடிக்கவில்லை என்ற விசத்தை ஊட்ட முயற்சி செய்தீர்கள்.

இதனை நான் உணர்ந்து கொண்டாலும்

 அவரிடம்  சொல்ல முடியாது .சொன்னாலும் நம்ப மாட்டார். நான் எனக்கான ஆதாரங்களுக்காக காத்திருந்தேன் .நீங்கள் கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சந்தோசமாக எங்களை பிரித்து வைத்தீர்கள் ” 

 




” இப்போது உங்களுடைய திட்டமும் நிறைவேறிவிட்டது .ஆசையும் நிறைவேறப் போகிறது .இனி நீங்கள் உங்கள் கணவரின் சொத்துக்களோடும்  பிள்ளைகளோடும் சந்தோஷமாக இருங்கள்.   என் கணவரோடு நானும் போகிறேன் …” சொல்லிவிட்டு பெரிய விம்மலுடன் முகத்தை மூடிக்கொண்டு அழுதாள வாசுகி.

 

” வாசுகிஒரு வித அலறலுடன்  கைகளை விரித்தாள் மங்கை . ” பாவிநான் பாவி என் பிள்ளையை உணராமல் போனேனே ”  கத்தலுடன் நெஞ்சில் அறைந்து கொண்டாள் .

 

” ஐயோ என் மூத்தமகன் இல்லாத வாழ்க்கையை என்னால் நினைத்துப் பார்க்கவே முடியவில்லையே. எனக்கு எதிர்காலமே இருட்டாக இருக்கிறதே .கண்கள் குருடானது போல் தெரிகிறதே .இல்லை என் மகன் இல்லாத வாழ்வு எனக்கு தேவை இல்லை .இந்த சொத்து பணம் எதுவும் எனக்குத் தேவை இல்லை .என் மகன் மட்டும் தான் வேண்டும்  .அவனுக்கு ஒன்றும் ஆகி இருக்காது .அவன் நன்றாக இருப்பான் .நூறு வருடங்கள் நீங்கள் இரண்டு பேரும் சகலமும் பெற்று  நன்றாக வாழப் போகிறீர்கள் .வா நாம் அவனைப் போய் பார்ப்போம் ” 

 

வெறி கொண்டவள் போல் வாசுகியின் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு வாசலுக்கு போன மங்கை அதிர்ந்து நின்றாள். திடுமென்று அவளது நடை நிற்கவும் தலைகுனிந்து குமுறிக்கொண்டிருந்த வாசுகி நிமிர்ந்து பார்த்து விழிகளை உற்சாகமாய் விரித்தாள்.

 

” தேவ்உற்சாக கூவலுடன் ஓடிப்போய் வாசலில் நின்றிருந்த தேவராஜனை அணைத்துக்கொண்டாள் .

 

” தேவ் உங்களுக்கு ஒன்றும் இல்லையே .நீங்கள் நன்றாக தானே இருக்கிறீர்கள்போனில் என்னென்னமோ தகவல் வந்தது ”  கண்ணீர் வடிய வடிய பதறிய மனைவியை பரிவுடன் அணைத்துக்கொண்டான் தேவராஜன்.

 

வசு பதட்டப் படாதேடா .இங்கே பார் நான் உன் முன்னால் முழுதாக நிற்கிறேன். எனக்கு ஒன்றும் இல்லை. போனில் வந்த தகவல் பொய்தட்டி தழுவி வருடி என உணர்ச்சிகளின் பிடியில் இருந்த மனைவியை நிகழ்வுக்கு கொண்டுவர அவன் பெரும் பாடுபட வேண்டியிருந்தது.

 

” எதற்காக இவ்வளவு பெரிய அதிர்ச்சியை கொடுத்தீர்கள் தம்பிராஜாத்தி வேதனையுடன் கேட்டாள்.

 

” இங்கே சிலபேருக்கு மூளை குழம்பி பைத்தியம் பிடிக்கும் நிலையில் இருந்தார்கள் அத்தை. அவர்களை சரிசெய்வதற்கு இந்த ஷாக் ட்ரீட்மென்ட் தேவைப்பட்டது ” தேவராஜனின் பார்வை மங்கையின் மேல் குத்தூசியாய்  குத்தி நின்றது.

 

” அண்ணா ” கத்தியபடி வந்த திலகா  சட்டென்று குனிந்து தேவராஜன் கால்களைப் பற்றிக் கொண்டாள். ”  என்னை மன்னித்து விடுங்கள் அண்ணா .நான் அம்மா சொன்னதை வைத்து நீங்கள் எங்களை வீட்டை விட்டு விரட்டி விடுவீர்கள் என்று நினைத்து இப்படி எல்லாம் செய்து விட்டேன். இனி ஒழுங்காக இருப்பேன் .என்னை மன்னித்துவிடுங்கள் ” கதறிய திலகாவுடன் கௌதமும் சேர்ந்து கொண்டான்.

 

” என் படிப்பு பாதியில் நின்று விடுமோ என்ற கவலை எனக்கு அண்ணா .அதனால் தான் புத்தி இல்லாமல் இப்படி எல்லாம் நடந்து கொண்டேன் .என்னை மன்னித்துவிடுங்கள் ”  காலில் கிடந்து கெஞ்சிய தம்பி தங்கையை வெறுமையான பார்வையுடன் பார்த்தான் தேவராஜன்.

 




” பாவம் சின்ன வயசு .சரி எது தவறு எது என்று தெரியாது .அம்மா சொல்வதெல்லாம் உண்மை என்றே நினைத்து விட்டார்கள் .அவர்களை இப்படி அழ விடாதீர்கள் தேவ் . ப்ளீஸ் எழுந்திருக்கச் சொல்லுங்கள் ” தங்களுக்காக பேசிய வாசுகியை  நம்பமுடியாமல் பார்த்தனர் இருவரும் .

 

இந்த அன்பான பெண்ணிற்கு துரோகம் செய்ய நினைத்தோமே அவர்கள் மனம் உறுத்த சற்றென்று இடம்மாறி வாசுகியின் காலை பற்றிக் கொண்டனர் . ” நீங்கள் தான் முதலில் எங்களை மன்னிக்க வேண்டும் அண்ணி ” வாசுகி துள்ளி விலகினாள்.

 

” என்ன இதுநான் சின்ன பெண் என்னிடம் போய் …” அவள் மறுத்துக் கொண்டிருக்கும் போதே ” ஏய் போதும்டா .ரெண்டுபேரும் எழுந்திருங்கள் .இனியாவது சுய புத்தியோடு இருங்கள் ” கைகளை அவர்களுக்கு அசைத்த தேவராஜனின் கண்கள் மங்கையின் மீது இருந்தது.

 

அழுத்தமான  எட்டுகளுடன் தன் அருகே வந்து நின்ற மகனை கொஞ்சம் பயமாக பார்த்தாள் மங்கை. ” தேதேவா ”  நா குழறியது அவளுக்கு.

 

சீ ”  ஒரே ஒரு எழுத்துதான். தேவராஜன் உச்சரித்த அந்த ஒரு எழுத்திலேயே மங்கையின் உயிரே போனது போல் ஆனது .அத்தோடு அவன் அப்படியே திரும்பி நகர மங்கை சிறிதும் யோசிக்கவில்லை வேகமாக குனிந்து மகனின் கால்களை தொடப் போனாள்.

தேவராஜன் வேகமாக விலகிக் கொண்டான்.

 

” சீச்சீ இந்தப் பாவத்திற்கு எல்லாம் என்னை ஆளாக்காதீர்கள். இன்றிலிருந்து சரியாக ஐந்து வருடம் எண்ணிக் கொள்ளுங்கள். உங்கள் தேவைகள் எல்லாவற்றையும் நிறைவேற்றி வைத்து விட்டு பிறகு நான் என் மனைவியோடு இந்த வீட்டை விட்டு வெளியேறி விடுவேன்  ” உறுதியாக அறிவித்து விட்டு மனைவியை தன் கரத்தோடு இழுத்துக்கொண்டு மாடிக்கு படியேறினான்.

 




What’s your Reaction?
+1
32
+1
19
+1
1
+1
0
+1
1
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!