gowri panchangam Sprituality

மகாபாரதக் கதைகள்/சக்ர வியூகம்

சக்ர வியூகம்:இது ஒரு சுழலும் மனித மரண இயந்திரமாக கருதப்படுகிறது. வெவ்வேறு அளவுகளினால் ஆன ஏழு வட்ட சக்கரங்களால் சக்கர வியூகம் அமைக்கப்படுகிறது. இந்து சமய இதிகாசமான மகாபாரதத்தில் இந்த சக்கர வியூகத்தில் சிக்கி அர்ஜூனனின் மகன் அபிமன்யு உயிரிழந்தார்.




முழுமஹாபாரதம்: சக்கர வியூகம்! - துரோண பர்வம் பகுதி – 032

🌻 வியூகங்கள் போரில் பயன்படுத்தப்பட்டவைகள்

🌻 இவை பறவைகள், விலங்குகள் மற்றும் இயற்கையை வடிவமாக கொண்டு இருக்கும்

🌻 ஒவ்வொரு வியூகத்திற்கும் பலமும், பலவீனமும் இருக்கின்றன. அதுபோல ஒவ்வொரு வியூகத்திற்கும் எதிர் வியூகம் உண்டு

🌻 வியுகத்தை உடைப்பதே வெற்றியாகும் காரணம் சாதாரணமாக கூட்டமாக தாக்குவதற்கும் வியூகம் அமைத்து தாக்குவதற்கும் பல வித்தியாசங்கள் உண்டு

🌻 ஆனால் வியூகங்களில் சக்ர வியூகம் முக்கியமானதாக கருதப்படுகிறது காரணம் இதை அமைப்பது கடினம் அதே போல் எதிரி இதை அமைத்தால் அதை உடைப்பதும் கடினம்

🌻 ஒரு வியூகத்தை மற்றொரு வியூகம் கொண்டு உடைக்க இயலும் ஆனால் சக்ர வியூகத்தை உடைக்க என்று ஒரு வியூகம் இல்லை

🌻 குருசேத்திரத்தில் கூட சக்ர வியூகத்தை உடைக்க கௌரவ படையில் பீஷ்மர், துரோணர், கர்ணன் மற்றும் அஸ்வதாமன் பாண்டவ படையில் கிருஷ்ணர் மற்றும் அர்ஜுனனை தவிர வேறெவரும் அறியார் கிருஷ்ணரின் மகன் பிரதியும்னனும் கிருஷ்ணரின் பேரன் அனிருத்தனும் அறிவர் ஆனால் இவர்கள் குருசேத்திர யுத்தத்தில் பங்கு கொள்ளவில்லை விதுரர் அறிவாரா என்று தெரியவில்லை காரணம் அவர் பீஷ்மர் இருந்த காரணத்தால் எந்த பெரும் யுத்தத்திலும் பங்கு கொள்ளவில்லை குரு சேத்திர யுத்தத்திலோ கிருஷ்ணரின் வியூகத்தால் கோவர்த்தன வில்லை உடைத்து யுத்தத்தில் பங்கெடுக்கவில்லை.




🌻 இதை உருவாக்குவது என்பது சாமான்யம் அல்ல குறிப்பிட்ட சிலரால் மட்டுமே உருவாக்க முடியும் மேலும் இதில் காத்தல் அழித்தல் என இரண்டு வகை உள்ளது

🌻 பாரதத்தில் விராட யுத்தத்தின்போது பீஷ்மரால் துரியனை காக்கவும்

🌻 குருசேத்திரத்தில் பதிமூன்றாம் நாள் யுதிஷ்டிரனை சிறைபிடிக்கவும்

🌻 பதினான்காம் நாள் ஜயத்ரதனை காக்க சர்ப்ப வியூகம் மற்றும் ஊசி வியூகம் உடன் கூடிய சக்ர வியூகம் உருவாக்கப்பட்டது

🌻 விராட யுத்தத்திலும் பதினான்காம் நாளும் அர்ஜுனரால் உடைக்கப்பட்டது ஆனால் பதிமூன்றாம் நாள் உள்ளே சிக்கிய அபிமன்யு கொல்லப்பட்டார்

🌻 அப்படி என்ன இந்த வியூகத்தில் உள்ளது பற்பல மாவீரர்கள் இருந்தும் குறிப்பிட்ட சிலரால் மட்டுமே உடைக்க முடியும் என்று சொல்லுமளவிற்கு ?

🌻 சக்ர வியூகம் 7 வளையங்களை கொண்டது இதில் ஒவ்வொன்றும் ஒன்றுக்கு ஒன்று எதிர்திசையில் சுழன்ற வண்ணம் இருக்கும் அதாவது நாற்படைகளும் கலந்து வடிவமைக்கப்பட்டு இருக்கும் வளையமானது சுழன்ற வண்ணம் இருக்கும்

🌻 இதனால் ஒருவர் காலாட்படையுடன் சண்டையிடும்போது காலாட்படை சென்று குதிரைப்படை வரும் பின்பு தேர்ப்படை மற்றும் யானைப்படை இவ்வாறாக தொடரும் இதனால் சண்டையிடுபவர் எளிதில் வீழ்த்தப்படுவார்

🌻 இவை இல்லாமல் ஒவ்வொரு வளையத்திற்கும் ஒரு மகாரதி பொறுப்பாவார் இதனால் ஒருவர் வியூகத்தின் உள் நுழைவாரானால் ஒரு வளையத்திற்கு ஒரு மகாரதியை வீழ்த்தியாக வேண்டும்.




🌻 வளையமானது சுழன்றுகொண்டே இருப்பதால் அதில் விரிசலானது விழுந்தால் உடன் அடுத்து இருப்பவர்களால் நிரப்பப்படும் இதனால் வளையத்தில் விரிசல் உண்டாக்குவது கடினம்

🌻 ஒருவர் வியூகத்தின் உள்ளே சிக்குவாரேயானால் சுழன்று கொண்டு இருக்கும் படை அவரை குழப்பும் மேலும் சோர்வு அவரை வாட்டும் இதனால் வியூகத்தை உடைக்க நினைப்பவர் அதிக திறனை கொண்டு சோர்வடையாமல் இருப்பது அவசியம்

🌻 வளையத்தில் விரிசலுண்டாக்கி நுழைய வேண்டுமானால் வளையத்தின் பலவீனமான பகுதியை எதிர்நோக்கி காத்திருக்க வேண்டும் மேலும் நுழைய இருக்கும் பகுதியின் இடது மற்றும் வலது புறத்தை தாக்க வேண்டும் ஒரு இடத்தில் தாக்கினால் சிறிது நேரத்தில் அந்த இடம் முடப்படும் ஆனால் ஒரு இடத்தின் இருபுறம் தாக்கப்படுமேயானால் நுழைய அவகாசமானது கிட்டும்

🌻 தேர்ப்படையின் மீதோ இல்லை ரதம் வரும்போதோ தாக்கினால் உள் நுழைவது கடினம் இதனால் அபிமன்யு யானைப்படை வரும் நேரம் சரியாக தாக்கி உள்நுழைவார்

🌻 உள்நுழைவது பற்றி கூறப்பட்டு இருந்தாலும் வியூகத்தை உடைப்பது பற்றி வியாசர் குறிப்பிடவில்லை ரகசியமானது கடைசிவரை கூறப்படவில்லை

🌻 சிறந்த வீரர்களுக்கே வயிற்றில் புளியை கரைப்பதாக இருந்தது சக்ர வியூகம் என்று சொன்னால் மிகையாகாது

👑 இதனாலே இன்றுவரை கூட பல சிக்கல் மிகுந்த விசயங்களுக்கும் திறன் மிகுந்த ஒருவரின் செய்கைக்கும் சக்ர வியூகம் என்ற பெயர் உள்ளது.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!