gowri panchangam Sprituality

மகாபாரதக் கதைகள்/கண்ணன் ராதை

மகாபாரதம், பாகவத கதைகளின் அடிப்படையில் கண்ணனுக்கு உத்தியோக பூர்வமாக எட்டு மனைவிகள்.

இதைவிட ஜரசாந்த வத போரில் கண்ணனால் கொல்லப்பட்டு சத்ரிய அசர கணவனை இழந்த ஆயிரம் விதவைகளுக்கும் கண்ணன் புணர்வாழ்வு அளித்து வாழ்க்கை கொடுத்துள்ளார் என இதிகாசங்கள் கூறுகின்றது.

இவர்களை விடவும் பதினாறு ஆயிரம் மனைவிமார் இருந்தார்கள் என்று இன்னொரு கதையில் கூறப்பட்டுள்ளது. (இந்த புள்ளிவிபரத்தை எண்ணிமுடிக்கவே சில காலம் ஆகியிருக்கும்)

ஹரிவம்சம் மற்றும் விஷ்னு புராண தரவுத்தளத்தின் படி பிரதான பாரியார் பத்ராதேவியின் பெயரை ரோகினி அல்லது மாத்ரி என மாற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

முதலில் குறி்பிட்ட எட்டு மனைவிமரும் எட்டு பேரரசு மற்றும் சிற்றரசுக்களின் இளவரசிகள் ஆவார்.




இதில் ருக்குமணி(ருக்மனி) மற்றும் சத்தியபாமா மட்டுமே மனைவி மாரில் மக்களால் வணங்கப்படுகின்றனர்.

இன்னொரு மனைவியான காளிந்தியை யமுனை நதி என வணங்கப்படுகின்றது.

இவற்றை விட ஊரில் ரமணனை கொஞ்சும் crush கோபியர் அதிகம்.

ரத்திரியானாலே சூப்பர் சிங்கர் பார்க்க டீவி முன் அமர்ந்து விடும் தாய்க்குலங்களை போல கண்ணன் ஊதுவதை பார்க்க கூட்டங்கூட்டமாக கிளம்பிவிடுவர்.

நடுவே காம்ப் ஃபயர் சுற்றி ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என செம ஃபன்னில் ஏரியா அமர்க்களப்படும்.

இத்தனை உத்தியோக பூர்வ, உத்தியோக பற்றற்ற மனைவியரை விட ராதை கண்ணனை திருமணம் செய்தாலும் அது தனியாக எந்த சிறப்பு அந்தஸ்தையும் கொடுத்து விட வாய்ப்பில்லை.




சிறுவயது தோழி, கேர்ல் ஃபரண்ட், கேள் பெஸ்டியாக கண்ணனுக்கு முதலே பிறந்து கண்ணனை உருகி உருகி காதலித்த ராதை கண்ணனுக்கு எக்ஸ் கேள்ஃப்ரண்டாகவே கொண்டாடப்படுகிறார்.

கோகுலத்திலிருந்து பிருந்தாவனத்திற்கு கண்ணன் குடும்பம் இடம் பெயர்ந்து போன பின் அந்த பப்பி லவ் ஃப்ளாஷ்பேக் முடிவடைய அடுத்து மதுராவுக்கு கம்ச வதத்துக்காக கண்ணன் ஸ்கெட்ச் போட்டு பொருளெடுத்துட்டு போய் போட்டுத்தள்ள வேண்டி வந்ததால் ராதையின் திருமணத்திற்கு போய் அட்சதை போட கூட போக நேரமில்லாமல் போய்விடுகிறது.

கண்ணன் play boy என நினைத்து ராதைக்கு வேறு மாப்பிளையுடன் பெற்றொர்களால் நிச்சயிக்கப்பட்டு திருமணம் முடிந்திருந்தாலும் லவ் ஃபெயிலியருடன் கண்ணனையே நினைத்துக்கொண்டு வாழ்கிறார்.

ராதை கண்ணனின் மனைவி ஆகியிருந்தால் கூட அவருக்கு புராணங்களில் இந்தளவுக்கு சிறப்புக்கள் கிடைத்திருக்காது. புராணங்களை இயற்றியவர்களும் அவற்றை தழுவி தொலைக்காட்சி நாடகங்களாக்கியவர்களும் ராதை கண்ணன் காட்சிகளில் பக்கத்திலிருந்து எட்டிப்பார்த்தது போல தங்கள் காதல் கற்பனை கைவண்ணங்களை காட்டு காட்டென்று காட்டியுள்ளனர்.

ஏனெனில் வரலாறுகள் எப்பொழுதும் ஒரு ஊரில் ஒரு ராஜா . அங்கே மக்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்தார்கள் என்பதை விட யுத்தங்கள் போர்கள் ஏமாற்றங்களையே இதிகாசங்களாக பதிவு செய்துள்ளது. (உலக இதிகாசங்களில் முக்கால்வாசி பொம்பிளை பிரச்சினையால் சாம்ராட்ஜங்களுக்கிடையே போர் மூழும் கதைகள் தான்.)




ராதையை விட அவருக்கு இறுதிப்போரில் செஞ்சோத்து கடன் தீர்க்க வாகன ஓட்டியாக கடமையாற்றவேண்டிய சந்தர்ப்பமும் ஏற்பட்டு விடுகின்றது.

கலிகாலத்தில் தமிழ் கோராவில் கண்ணன் ஏன் ராதையை கல்யாணம் செய்யவில்லைனு ஒரு கேள்வி வரும் என தெரிந்தே அந்தாளு “எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகின்றது“னு அருமயா சொல்லிருக்காப்டி.

குறிப்பு இதிகாசங்கள் கிளைக்கதைகள் மதநம்பிக்கைகள் தாண்டி யாதவன் என்ற பெயர் மற்றும் கபிலர் பாடல் அடிப்படையில் கண்ணன் தமிழராக இருக்க சந்தர்ப்பம் உள்ளது எனவும் குஜராத் துவாரகை ஆராய்ச்சிகளின் படி உண்மையிலேயே கிருஷ்ணன் என்ற மன்னர் வாழ்ந்திருக்க கூடும் எனவும் கருதப்படுகின்றது.




What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!