gowri panchangam Sprituality

இன்றைய ராசி பலன் (22.3.24)

சந்திர பகவான் இன்று சிம்ம ராசியில் பயணம் செய்கிறார். இன்று காலை 07.16 வரை துவாதசி. பின்னர் திரியோதசி. இன்று அதிகாலை 03.46 வரை ஆயில்யம். பின்னர் மகம். பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.மேஷம் முதல் மீனம் வரையுள்ள 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.




மேஷ ராசி அன்பர்களே!

ஓடி ஓடி உழைத்த பணத்தை ஒருமுகப்படுத்த முயற்சி செய்வீர்கள். வேறு ஒருவரின் பெயரில் உள்ள உங்கள் நிலப்பட்டாவை மாற்றுவீர்கள். தொழில் போட்டிகளை வெற்றிகரமாக சமாளிப்பீர்கள். வெளியூர்ப் பயணங்களின் மூலம் புதிய ஆர்டர்களைப் பெறுவீர்கள். பங்குச்சந்தை வியாபாரத்தில் அதிரடியான லாபம் பார்ப்பீர்கள்.இன்று ஆஞ்சநேயரை வழிபட மகிழ்ச்சி அதிகரிக்கும்.

அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தைவழி உறவினர்களால் பிரச்னைகள் ஏற்படும்.

பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் விவாதம் செய்வதைத் தவிர்ப்பது நல்லது.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம்.

ரிஷப ராசி அன்பர்களே!

அலுவலகத்தில் நீங்கள் பட்ட சிரமங்களை ஒரு முடிவுக்கு கொண்டு வருவீர்கள். சங்கடப்பட்ட மனதில் தன்னம்பிக்கையும் தைரியமும் வளர்த்து கொள்வீர்கள். பலகாலம் தடைபட்ட இடமாற்றம் கிடைத்து வேறு ஊருக்கு செல்வீர்கள். இல்லத்தில் இதுவரை இருந்த மந்த நிலையை மாற்றுவீர்கள். காதலியின் மனதை ஈர்க்க கணிசமான பணத்தை செலவு செய்வீர்கள்.இன்று விநாயகரை வழிபட மனதுக்கு மகிழ்ச்சி உண்டாகும்.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத செலவுகளால் கையிருப்பு கரையும்.

ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவினர்களால் ஆதாயம் கிடைக்கும்.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வீண் அலைச்சலைத் தவிர்க்கவும்.

மிதுன ராசி அன்பர்களே!

மேல் அதிகாரிகளின் ஆதரவுடன் சிக்கலான வேலைகளை முடிப்பீர்கள். உங்கள் திறமையைப் பார்த்து சிலர் பொறாமைப்படுவார்கள். வியாபாரத்தில் தடைகளைத் தாண்டி லாபத்தைப் பெருக்குவீர்கள். சினமூட்ட நினைத்தவர்களை சிரிப்புடன் ஜெயிப்பீர்கள். நில விற்பனைத் தொழில், மணல், செங்கல் வியாபாரத்தில் நல்ல லாபத்தை பெறுவீர்கள். மகாலட்சுமியை வழிபட நல்ல திருப்பம் ஏற்படும்.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்படும்.

திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் சில சங்கடங்கள் ஏற்படும்.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும்.

கடக ராசி அன்பர்களே!

தொழில் ரகசியங்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ளாதீர்கள். மற்றவர்களுக்காக உத்தரவாதக் கடிதம் கொடுக்காதீர்கள். தவறான வழிகாட்டுதலுக்கு அவசரப்பட்டு தலை ஆட்டாதீர்கள். அதனால் கை பொருளை இழப்பீர்கள். குடும்பத்தில் பொறுப்புடனும் பொறுமையுடனும் செயல்படுவீர்கள். அவசிய தேவைக்காக நெருங்கிய நண்பரிடம் கடன் வாங்குவீர்கள்.வேங்கடேச பெருமாளை வழிபட சிரமங்கள் நீங்கி மகிழ்ச்சி உண்டாகும்.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய முயற்சிகள் சாதகமாக முடியும்.

பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தைவழியில் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும்.

ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் இழுபறியாகும்.

சிம்ம ராசி அன்பர்களே!

சுபகாரியத் தடைகளை நீக்கி சொந்தங்களை ஒன்று சேர்ப்பீர்கள். வியாபாரத்தில் மந்த நிலையை எதிர் நோக்குவீர்கள். போட்டி பந்தயங்களில் ஈடுபடாதீர்கள். நிலம் வாங்கும்போது வில்லங்கம் இருக்கிறதா என்பதை சரி பார்த்துக் கொள்ள மறக்காதீர்கள். ஆன்லைன் சூதாட்டங்களை விளையாடாதீர்கள். குடும்பத்தில் ஒருவருக்கு மருத்துவ செலவுகள் செய்வீர்கள்.இன்று முருகப்பெருமானை வழிபட மகிழ்ச்சி அதிகரிக்கும்.

மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன்கள் விஷயத்தில் கவனமாக இருக்கவும்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது.

கன்னி ராசி அன்பர்களே!

உங்கள் உழைப்புக்குப் பரிசாக அலுவலகத்தில் உன்னத உயர்வை அடைவீர்கள். வேலையிடத்தில் புதிய பொறுப்புகளை ஏற்பீர்கள். சுணங்கிக் கிடந்த வீட்டு வேலைகள் சுறுசுறுப்பாக நடத்துவீர்கள். காதலியுடன் வெளியூர் செல்வீர்கள். அடுத்தவருக்குச் செய்யும் உதவியால் வெளிவட்டாரச் செல்வாக்கை உயர்த்தி கொள்வீர்கள். வியாபாரத்தில் லாபம் பார்ப்பீர்கள். இன்று அம்பிகையை வழிபட காரியத் தடைகள் விலகும்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உறவினர்களுடன் அனுசரணையாக நடந்துகொள்ளவும்.

அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு குடும்பத்தில் சில குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும்.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வழியில் செலவுகள் ஏற்படும்.

துலா ராசி அன்பர்களே!

தொழிலை மேம்படுத்த நீங்கள் கேட்ட உதவிகளை தடையில்லாமல் பெறுவீர்கள். அரசு ஊழியர்களுக்கு பணிச்சுமை குறைந்து நிம்மதி அடைவீர்கள். முதலாளியின் அன்பை பெறுவீர்கள். கட்டுமானத் தொழிலில் முத்திரை பதிப்பீர்கள். ரியல் எஸ்டேட் தொழிலில் நீங்கள் ஓங்கி நிற்பீர்கள். அரசு வேலையில் புதிய ஒப்பந்தம் பெறுவீர்கள். சேமிப்பை உயர்த்துவீர்கள்.இன்று மகாவிஷ்ணுவை வழிபட சிரமங்கள் நீங்கி மகிழ்ச்சி உண்டாகும்.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த சுபச் செய்தி கிடைக்கக்கூடும்.

சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இன்று முக்கிய முடிவு எடுப்பதைத் தவிர்க்கவும்.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உணவு விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்கவும்.

விருச்சிக ராசி அன்பர்களே!

முன்பு நீங்கள் பட்ட கஷ்டங்களுக்கு இன்று தீர்வு காண்பீர்கள். திடீரென்று வெளிநாடு செல்லக்கூடிய வாய்ப்பு பெறுவீர்கள். குடும்பத்தில் இதுவரை நிலவி வந்த குழப்பமான சூழ்நிலையை தீர்ப்பீர்கள். வியாபாரத்தில் ஏற்ற இறக்கத்தை பார்ப்பீர்கள். சிறு தொழில் வியாபாரிகள் அனுகூலம் பெறுவீர்கள். முழங்கால் வலிக்கு ஸ்கேன் எடுத்து மருத்துவ சிகிச்சை பெறுவீர்கள்.விநாயகரை வழிபடுவது நலம் தரும்.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் விலகும்.

அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் ஆதாயம் உண்டாகும்.

கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு கொடுத்த கடன் திரும்பக் கிடைக்கக்கூடும்.

தனுசு ராசி அன்பர்களே!

எனக்குத்தான் எல்லாம் தெரியும் என்ற எண்ணத்தால் அவமானப்படுவீர்கள். உங்கள் அவசரத்திற்கு அரசாங்க வேலைகள் நடக்காமல் அவதிப்படுவீர்கள். பைல்களில் கையெழுத்துப் போடும்போது நிதானமாகப் படித்துப் பார்க்கத் தவறாதீர்கள். தொழிலில் புதிய முதலீடுகள் செய்யாதீர்கள். சந்திராஷ்டம நாள். எச்சரிக்கையுடன் இருங்கள்.
ஆஞ்சநேயரை வழிபட நன்மைகள் கூடும்.

மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் செலவுகள் ஏற்படும்.

பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உறவினர்களிடம் பேசும்போது பொறுமை அவசியம்.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும்.

மகர ராசி அன்பர்களே!

அரசு வேலையில் சட்டத்தை மீறி நடக்காதீர்கள். அதனால் சிக்கலில் சிக்கிக் கொள்வீர்கள். ஆடம்பரச் செலவால் சேமிப்பை கரைப்பீர்கள். மனைவியின் மனக்குறையை போக்கி சந்தோஷத்தை நிலை நாட்டுவீர்கள். நடைபாதை வியாபாரிகள் நல்ல லாபம் பார்ப்பீர்கள். யாரையும் மட்டம் தட்டிப் பேசி வினையை விலைக்கு வாங்காதீர்கள். சந்திராஷ்டம நாள். கவனம் தேவை. பைரவரை வழிபட இடையூறுகள் அகலும்.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் ஆதாயம் கிடைக்கும்.

திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சிறுசிறு குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும்.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு காரியங்கள் முடிவதில் தடை, தாமதம் ஏற்படும்.

கும்பராசி அன்பர்களே!

உங்கள் மனதில் இருந்த இனம்புரியாத பயம் விலகி ஊக்கமடைவீர்கள். உடன் வேலை செய்வோரின் ஒத்துழைப்பால் மேலதிகாரிகளின் பாராட்டை பெறுவீர்கள். வெளிநாட்டு வேலைக்கு முயற்சி செய்தவர்கள் நல்ல செய்தி கிடைத்து மகிழ்ச்சி அடைவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தை அடைவீர்கள். புதிய தொழில் தொடங்க திட்டம் போடுவீர்கள். இன்று அம்பிகை வழிபாடு நன்று.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வழியில் பணவரவு கிடைக்கக்கூடும்.

சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் ஆதாயம் பெறுவீர்கள்.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளை மேற்கொள்வதற்கு உகந்த நாள்.

மீனராசி அன்பர்களே!

பிள்ளைகளின் நடவடிக்கையை அணுக்கமாகக் கண்காணிக்க தவறாதீர்கள். அவர்களின் படிப்புக்காக பழைய சேமிப்பைப் பயன்படுத்துவீர்கள். ஐடி ஊழியர்கள் அனுகூலமான பலனைப் பெறுவீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்வீர்கள். விரும்பிய பெண்ணிடம் அரும்பிய காதலை வெளிப்படுத்தி ஆனந்தம் அடைவீர்கள். இன்று நரசிம்மரை வழிபட நலன்கள் அதிகரிக்கும்.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் செலவுகளால் கடன் வாங்க நேரிடும்.

உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தந்தையுடன் அனுசரித்துச் செல்வது நல்லது.

ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் சங்கடங்கள் ஏற்படக்கூடும்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!