Cinema Entertainment

காதல் கதையை தடுத்த எழுத்தாளர்….மருதநாயகம் உருவான கதை!

கமல்ஹாசன் நடிப்பில் உருவான பல தோல்வி படங்கள் காலம் தாண்டி ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றன. ராஜபார்வை, விக்ரம், குணா, ஹேராம் போன்ற படங்களே அதற்கு உதாரணம். அந்த வகையில் கமல் நடிப்பில் 1991 ஆம் ஆண்டு உருவான திரைப்படம் குணா.

மஞ்சுமல் பாய்ஸ்ஸ விடுங்க குணா படமே ஹாலிவுட் காப்பி தான்..! கமலை வறுத்தெடுக்கும் பிரபலம் - Cinemapettai




இந்த படம் இன்று ஒரு கல்ட் கிளாசிக்காக கொண்டாடப்பட்டாலும் ரிலீஸான சமயத்தில் படுதோல்வியை சந்தித்தது. இந்த படம் ஹாலிவுட்டில் வெளியான Tie me up Tie me down என்ற படத்தின் தழுவலில் உருவானது. இந்த படம் தோல்வி அடைந்தாலும் அடுத்தும் இதே போல ஒரு காதல் கதையையே எடுக்க ஆசைப்பட்டுள்ளார் கமல்ஹாசன். அந்த படத்தின் பெயர் அமராவதி. அமராவதியை ஒரு வரலாற்று காதல் கதையாக உருவாக்க திட்டமிட்டுள்ளார்.

இந்த படத்தின் கதையை எழுதி ஒரு ஆலோசனைக்காக எழுத்தாளர் சுஜாதாவுக்கு அனுப்பியுள்ளார். அப்போது அவர் இப்போதுதான் ஒரு காதல் படத்தில் நடித்தீர்கள். அடுத்தும் ஏன் இன்னொரு காதல் படம் எனக் கேட்டுள்ளார். வரலாற்று நாயகன் ஒருவனை வைத்து ஆக்‌ஷன் படம் ஒன்றை பண்ணுங்கள் எனக் கூறியுள்ளார்.




மேலும் கான்சாகிபு சண்டை என்ற புத்தகத்தைக் கொடுத்துள்ளார். அந்த புத்தகம்தான் மருதநாயகம் படத்தின் விதை கமல் மனதில் விழ காரணமாக அமைந்துள்ளது. அதன் பிறகு பல புத்தகங்களை படித்த கமல்ஹாசன் மருதநாயகம் பற்றி பல தகவல்களை திரட்டி மருதநாயகம் திரைக்கதையை எழுதியுள்ளார். இந்த திரைக்கதையில் சுஜாதாவும் ஆலோசனையராக பணியாற்றியுள்ளார்.

ஆனால் திரைக்கதை எழுதி முடித்த பின்னர் இதை வழக்கமான பட்ஜெட்டில் எடுக்க முடியாது என்பதால் சில ஆண்டுகள் காத்திருந்து அதன் பின்னர் வெளிநாட்டு முதலீட்டை ஈர்த்து தொடங்கினார். ஆனால் பாதி ஷூட்டிங் முடிந்த பின்னர் படம் பல்வேறு காரணங்களால் கைவிடப்பட்டது.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!