Entertainment தோட்டக் கலை

கொத்த மல்லி வளர்ப்பு

சமையல் செய்தல் என்பது ஓர் அருமையான கலை. அந்தக் கலையை பொழுதுபோக்காக அல்லது முழுநேர வலையாக, குடும்பத்திற்காக செய்யும் பொழுது மனது கொள்ளும் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. சமைத்த உணவால், பசித்திருப்போரின் பசியை போக்குகையில், உள்ளம் அடையும் திருப்திக்கு இணையே இல்லை எனலாம். பொதுவாக சமைக்க தேவையான பொருள்களை கடைகளில் இருந்து வாங்கி வந்து உபயோகிப்பீர்;

ஆனால், அப்படி கடைகளில் இருந்து வாங்கும் காய்களின் லிஸ்டில் முக்கியமாக இடம்பெறுவது கறிவேப்பிலை, கொத்தமல்லி போன்ற சமையலுக்கு தேவைப்படும் மூலிகைகளே! அவற்றை அதிகமாக வாங்கி வந்தால் வாடிவிடும்; ஆனால், அதன் தேவையின்றி சமையல் நிறைவடையாது. எப்பொழுதும் தேவைப்படும் பொருளாக இந்த சமையல் மூலிகைகள் விளங்குகின்றன.




சமையலறை தோட்டத்தை ஆரம்பிக்க உதவும் மூலிகைகள் பற்றி இங்கே காணலாம்!

1. கொத்தமல்லி

கொத்தமல்லி அல்லது தனியா என்று அறியப்பட்ட இந்த மூலிகை சமையலின் சுவையை கூட்ட தேவைப்படும் மிக முக்கியமான ஒன்று. இது சமையல் தவிர பிற தேவைகளுக்கும் பயன்படுகிறது; அதாவது அழகைக் கூட்ட, உடலுக்கு குளிர்ச்சியை தர என பல விதங்களில் பயன்படுகிறது.




வளர்க்கும் முறை!

  • கொத்தமல்லியை பானையில் அல்லது தொட்டியில் வளர்க்காமல், இட வசதியுள்ள ட்ரேயில் வளர்க்க வேண்டும். இந்த ட்ரேயை 80% மண்ணால் நிரப்ப வேண்டும்.

  • தனியாவை 10-12 உடைந்த விதைகளை கொண்டு வளர்க்கலாம்;




  • இந்த விதைகளை அரை அங்குல ஆழத்தில் புதைத்து, 3 அங்குல இடைவெளி விட்டு விதைக்க வேண்டும்.

  • இவ்விதைகளின் மீது தண்ணீரை தொடர்ந்து தெளித்து வர வேண்டும்; 15 நாட்களில் இலைகள் துளிர் விடுவதை காண முடியும்.

  • இலைகள் முளைத்த பின்னும் நீர் தெளிப்பினை நிறுத்தாது தொடர்ந்து வரவும். ட்ரேயில் அதிகப்படியான நீரை வெளியேற்றும் வகையில் துளைகள் அமைத்துள்ளீரா என்று உறுதி செய்து கொள்ளவும்.

  • ட்ரேயை சூரிய ஒளி படும்படி வைக்கவும். திரவ நைட்ரஜன் உரத்தை இதற்கு பயன்படுத்தலாம்; இது செடியின் வளர்ச்சிக்கு உதவும். தனியா செடிகள் அதிக வெப்பம் மற்றும் அதிக குளிர் இல்லாத காலங்களில் நன்கு வளரும். அதிக வெப்பம் இச்செடியின் வளர்ச்சியை பாதிக்கும்.

  • தனியா செடிகளை அதிக உயரமாக வளர்த்தால், அது சரியான சுவையை தராது. எனவே, 6 அங்குல உயரம் இருக்கும் போது, பயன்படுத்தும் பதத்திற்கு வருகிறது. தனியா செடியில் முளைத்த விதைகளை சேகரித்து, அடுத்த சுழற்சிக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.

  • இந்த செடிகளை கொஞ்சம் கொஞ்சமாக பறித்து பயன்படுத்த வேண்டும்; அதாவது, ⅓ -மூன்றில் ஒரு பாகத்தை மட்டுமே பறித்து பயன்படுத்த வேண்டும்.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!