Cinema Entertainment

80 களில் நெஞ்சை துடிக்க வைத்த ஒரு த்ரில்லர்.

படம்னா இப்படி த்ரில்லடிக்கணும்..அப்படி ஒரு படம் தான் நூறாவது நாள்..

1984ல் மணிவண்ணன் இயக்கி மோகன், நளினி, விஜய்காந்த், சத்யராஜ் நடித்து வந்த படம்.. மணிவண்ணன் கோபுரங்கள் சாய்வதில்லை, ஜோதி, குவா குவா வாத்துக்கள்னு ஒரு ஆறேழு குடும்பக்கதை எடுத்துட்டு அப்புறம் எடுத்த த்ரில்லர் தான் நூறாவது நாள். இதறற்கு முன் ஜனவரி 1 எடுத்திருந்தாலும் இது அட்டகாசமான த்ரில்லர்..

Nooravadhu Naal Full Movie | Vijayakanth, Mohan, Nalini | Ilayaraaja | Manivannan | Nooravathu Naal - YouTube

இளையராஜாவின் மூன்று பாடல்களில் ஒரு பாட்டு கன்னட ‘கீதா’ படத்திலிருந்த ஹிட்டான ‘ஜொதயலி’ பாட்டு..அதே டியூனை விழியிலே மணி விழியில் என போட்டிருந்தார். ஆனால் பிண்ணனிஇசை தான் படத்தோட ஹைலைட். சத்யராஜ் அந்த சர்ச்சில் துரத்தி தேடி வரும் காட்சியில் ராஜா நம்மோட இதயத்துடிப்பை போலவே இசை அமைத்திருப்பார்..ராஜாவோட ஸ்பெஷல் த்ரில்லர்..




சத்யராஜ் ஆறு வருஷமாக சின்ன சின்ன ரோல்களில் நடித்தாலும் அப்போ தான் தண்டிக்கப்பட்ட நியாயங்கள், தம்பிக்கு எந்த ஊரு படங்களில் தாடி வைத்த வில்லன் என மக்களால் அறியப்பட்டவராக மாறிக்கொண்டிருந்தார். இனி டைரக்டராகலாம் என தீர்மானித்து மணிவண்ணனை போய் பார்க்க மணிவண்ணன் அந்த வில்லன் ரோல் கொடுத்தார். சிவப்பு ஜெர்கின், ரவுண்ட் கூலர்ஸ், மொட்டை தலைன்னு வந்து அசத்தி விடுவார். படத்தில் மணிவண்ணன் ஸ்பெஷாலிட்டி என்னன்னா மொட்டை தலை வில்லனை நமக்கு காட்டி விடுவார்கள் நளினியின் கனவு காட்சி மூலம்..அதற்கடுத்த காட்சியிலேயே சத்யராஜ் தாடி, மீசையோடு வருவார்.

100வது நாள் சத்யராஜ் கேரக்டரில் அந்த நடிகரா.. நல்லவேளை சத்யராஜ் கேரியரை கெடுக்கலை - Cinemapettai

ஆனால் நமக்கு அவர் தான் அந்த மொட்டை என்பது தனி சஸ்பென்ஸாக வரும்…இது ஒரிஜினல் ஆங்கிலப்படத்தில் இல்லாத சஸ்பென்ஸ்…இந்தப்படத்துக்குப்பின் சத்யராஜ் பெரிய நடிகராக மாறினார். அம்ஜத்கானுக்கு ஷோலே போல சத்யராஜுக்கு நூறாவது நாள்…

விஜயகாந்த் கௌரவ வேடம் போல் வந்தாலும் அவரின் ஆக்ஷன் தான் படத்தை வேறு லெவலுக்கு கொண்டு போனது..மோகன் நடித்தாலும் இது விஜய்காந்த் படாமாக பார்க்கப்பட்டு மக்கள் தியேட்டருக்கு வந்தனர்..




மோகன் கடைசி வரை நல்லவனாக காட்டப்படுவார். கிளைமாக்சில் தான் அவரே வில்லன் என தெரியவரும். மோகனின் நாயக கதாபாத்திரம் மென்மையானதாக இருந்து வந்தது. அதனால் இயல்பாகவே நம் சந்தேகம் அவர் மேல் திரும்பாது. ஆங்கில ஒரிஜினலில் இல்லாதது அந்த முதல்காட்சி. மழையில் ரெயின்கோட்டோடு ஒரு உருவம் கொலைசெய்து உடலை சுவற்றுக்குள் வைத்து கல்வைத்து பூசுவது…அட்டகாசமான துவக்கம்..

நளினியின் வீல் என்ற அலறலும் பீதியான கண்களும் நம்மையும் திகிலடிக்க வைக்கும்..அழகானநடிப்பு….

ஜனகராஜ் கிஃப்ட் பாக்ஸில் ஷூவை வைத்து கொடுத்து கல்யாணவீட்டில் அடிவாங்கும் காமெடி மறக்கமுடியாதது.

நூறாவது நாள்….84ல் வந்த அட்டகாசமான த்ரில்லர்….




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!