Entertainment lifestyles

கம்மி பட்ஜெட்ல ட்ரிப் போனுமா..? சென்னைக்கு பக்கத்திலேயே சூப்பரான இடம் இருக்கு..!

பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு முடிந்து விடுமுறை ஆரம்பித்துவிட்டது. கனமழை ஓய்ந்து குளிர்காலமும் தொடங்கி இருக்கிறது. இந்நேரத்தில் குறைந்த பட்ஜெட்டில் நண்பர்களுடன், குடும்பத்துடன் ஒரு குட்டி சுற்றுலா செல்ல திட்டமிட்டிருந்தால், சென்னைக்கு மிக அருகில் ஒரு சூப்பர் ஏரி இருக்கிறது. அந்த இடத்திற்கு எப்படிச் செல்வது, அப்பகுதியின் சிறப்பு என்ன என்பதைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.




கொண்டாங்கி ஏரி :

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நல்ல மழை பெய்ததின் காரணத்தினால் பல்வேறு ஏரிகளில் நீர் வரத்து அதிகரித்துச் செழிப்பாக உள்ளது. அப்படி ஒரு சூப்பரான ஏரிதான் கொண்டாங்கி ஏரி. சென்னையில் இருந்து 2 மணி நேரம் பயணம் செய்தால் கொண்டாங்கி ஏரியை நீங்கள் அடைய முடியும். சுற்றி இருக்கும் இயற்கை சூழல், நல்ல காற்று, அருமையான நீரோட்டம் என இந்த இடத்தை பார்ப்பதற்கு ரம்மியமாக இருக்கிறது.

குழந்தைகளுடன் சென்றால் இந்த ஏரி பாதுகாப்பானதாக இருக்கும். ஏரியின் நீரோட்டத்தின் ஆழம் குறைவான உள்ளதால், குழந்தைகளுக்கு ரொம்ப பிடித்த இடமாக இருக்கும். குடும்பத்துடன் சென்றால் ஒரு நாளுக்கான சிறப்பான இடமானதாக இருக்கும்.

ஏரியைச் சுற்று நிறைய இடம் இருப்பதால், குடும்பத்துடன் சமைத்து எடுத்துச் சென்றால், அங்கேயே சாப்பிட்டு மகிழ்ச்சியாகக் குளித்து விளையாடி விட்டு வரலாம். இந்த பகுதிக்குச் செல்வதற்குப் பெரியளவிலான பட்ஜெட் தேவையில்லை. நான்கு அல்லது இரு சக்கர வாகனத்தில் சென்றால் பெட்ரோல் செலவு மட்டும்தான். பேருந்தில் சென்றால் இன்னும் செலவைக் குறைக்கலாம்.




சென்னையில் இருந்து எங்கு உள்ளது ?

சென்னையில் இருந்து 47 கி.மீ., தொலைவில் அமைந்துள்ளது கொண்டாங்கி ஏரி. தாம்பரத்தில் இருந்து வெறும் 26 கி.மீ., தொலைவிலும், கூடுவாஞ்சேரியில் இருந்து வெறும் 15 கி.மீ., தொலைவிலும் அமைந்துள்ளது. வார இறுதி நாட்களில் இந்த பகுதிக்கு அருகில் உள்ள ஊர்களிலிருந்து மக்கள் குடும்பத்துடன் வருவார்கள்.

வாகனத்தில் செல்பவர்கள் கூகுள் மேப்பில் கொண்டாங்கி ஏரி என்று உள்ளீட்டு வழியை பின்தொடர்ந்து செல்லலாம். பேருந்து என்றால், நெல்லிக்குப்படும் வரை உங்களால் செல்ல முடியும். அதன் பின் அப்பகுதியில் உள்ள போக்குவரத்தை உபயோகித்துச் செல்லலாம். மழை காரணமாக இப்பகுதியில் நீர் வரத்து அதிகரித்துள்ளதால், இந்த விடுமுறைக்குச் சின்ன சுற்றுலாவாக இந்த கொண்டாங்கி ஏரிக்குச் சென்று வாருங்கள்.




What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!