Serial Stories கடல் காற்று

கடல் காற்று-34

34

செல்லி போன் செய்திருந்தாள் .நன்றாக படிக்கிறாளாம் .காலேஜ் , ஹாஸ்டல் எல்லாம் மிகவும் பிடித்து விட்டதாக உற்சாகத்துடன் கூறினாள் .அவளுடன் சிறிது நேரம் பேசிவிட்டு போனை வைக்க போனபோது அவள் தயக்கத்துடன் ” அக்கா …” என்றாள் .

” என்னம்மா ..? “

” இங்கே ஹாஸ்டலுக்கு அவர் என்னை பார்க்க வந்தார் …”

” யாரும்மா ..?”

” அவர்தான் …என் …என்னுடைய  அ…அப்பா …அந்த …அப் …பா “

சமுத்ராவிற்கு புரிந்த்து .சாயாவின் முதல் கணவன் .செல்லியின் தகப்பன் .

” நீ அவரோடு பேசினாயா செல்லி ..? “

” ஆமாம் அக்கா .அவரை பார்க்கவே பாவமாக இருந்த்து .உன்னை சும்மா பார்த்து விட்டாவது போய் விடுகிறேனென வந்து நின்றார் .முன்பெல்லாம் இவ்வளவு ஆசையாக பேச மாட்டார் .இப்போது ரொம்ப நன்றாக பேசுகிறார் …அதனால் நானும் அவருடன் பேசுகிறேன் ” என்றாள் .

” சரிம்மா …பேசு ” என று போனை வைத்தவள் உடனே யோகனிடம் சென்று அவனை பிடி பிடியென்று பிடித்தாள் .

” நீங்கள் செய்த கொடுமைக்கு இப்போது அந்த பிள்ளை தவித்து கொண்டிருக்கிறது .இப்படியா அநியாயம் செய்வீர்கள் .தகப்பனையைம் , மகளையும் பிரிப்பது எவ்வளவு பெரிய பாவம் தெரியுமா …? “

காலையில் வெளியே கிளம்பும் அவசரத்தில் இருந்தான் அவன் .'” பாரும்மா இப்போது உன்னிடம் வார்த்தையாட நேரமில்லை எனக்கு .அத்தோடு நீ சொல்வது எனக்கு தலையும் புரியவில்லை , வாலும் புரியவில்லை .,அதனால் விளக்கங்களை நான் பிறகு மாலை வந ததும் நிதானமாக சொன்னாயானால் நானும் ….” என்றவன் மீதியை முடிக்காமல் சமுத்ரா எதிர்பாராத நேரத்தில் அவள் கன்னத்தில் அழுத்தமாக இதழ் பதித்து விட்டு வேகமாக வெளியேறினான் .

” சை …” என கன்னம் துடைத்தவள் அதற்குள் அவன் வேகமாக படியிறங்கி விட  நான் இங்கே கத்திக் கொண்டிருக்கிறேன் .நீ பாட்டுக்கு போய்க்கொண்டா இரிக்கிறாய் .? உன்னை இரு …அவன் எண்களை போனில் அழுத்தினாள் .

அவளுக்கு யோகன் தனது பேச்சை நிறுத்த இந்த முறையை கையாளுகிறானோ …? என்ற சந்தேகம் வந்துவிட்டது .அவன் போனை எடுத்ததும்” நான் பேசிக்கொண்டிருக்கும் போதே நீங்கள் பாட்டுக்கு போனால் என்ன அர்த்தம் …? ” கத்தினாள் .

” இல்லை போகவில்லை .அங்கேயே உன்னுடனேயே இருக்கிறேன் .எனக்கும் கூட அதே ஆசைதான் .நாம் இருவருமாக நம் அறைக்குள்ளேயே இருந்து ஒருவருக்கொருவர் தாம்பத்தியத்தின் அர்த்தத்தை படித்துக் கொண்டிருப்போமா …? நாளையிலிருந்து தொடங்கலாமா ..? இல்லை இப்போதிருந்தா …? சொல் கண்ணம்மா ..இப்போதே ஓடி வந்து விடுகிறேன் ” சிறு எரிச்சலுடன் கூடிய குரலென்றாலும் அதன் ஓரம் தென்பட்ட தாபம் சமுத்ராவை சிவக்க செய்த்து .

இவன் முக்கியமான விசயங்கள் பேசும் போதெல்லாம் இப்படி பேசியே தனது கவனத்தை திசை திருப்புகிறான் என எண்ணிய சமுத்ரா , யோகனின் சீண்டலில் குழைந்திருந்த தனது குரலை உயர்த்தி , ” இருபத்தி நான்கு மணி நேரமும் இது போல் வெட்டி பேச்சே பேச வேண டுமென்பதில்லை .நான் செல்லியை பற்றி பேச வந்தேன் “

” என்ன விசயம் ..?” என்றபோது   யோகனின் குரலில் விளையாட்டுத்தனம் மறைந்திருந்த்து .

சமுத்ரா விசயம் சொன்னதும் அவன் ” முட்டாள் ” என்று முணிமுணுத்தது இங்கே கேட்டது .” நான் பார்த்துக் கொள்கிறேன் ” என போனை வைத்தான் .மறுநாள் கேட்டபோது அந்த பிரச்சனை முடிந்து விட்டதென்றான் .செல்லியும் அது சம்பந்தமாக எதுவும் கூறாத்தால் சமுத்ராவும் விட்டு விட்டாள் .

இதனை பெரிதாக்கினால் அதனால் செல்லியின் படிப்பு கெட்டு விடக்கூடுமென்ற எண்ணம் அவளுக்கு .அதனால் இந்த விசயத்தில் யோகனை விட்டுவிட்டாள் .

ஆனால் லாவண்யா விசயம் அப்படியல்லவே .அன்று மேகலையை கல்லூரியில் சேர்க்க சென்னை போன போது கருணாமூர்த்தியையும் ,செண்பகத்தையும் பார்க்க வேண்டுமென சொன்ன போது முடியாது என பிடிவாதமாக மறுத்து இங்கே அழைத்து வந்து விட்டான் .





அவர்களுடன் போனிலும் இப்போது பேச தோன்றுவதில்லை .லாவண்யாவை கண டு பிடித்த பிறகே அவர்களிடம் பேச வேண்டுமென்று ஒரு வகை உறுதி போல் எடுத்துக் கொண்டு பேசாமலிருந்தாள் சமுத்ரா . லாவண்யா பற்றி ஒரு வார்த்தை என்றால் ஒரு வார்த்தை யோகனின் வாயிலிருந்து வரமாட்டேனென்றது .மிக நெருக்கி கேட்டால் ” லாவண்யாவா …? அது யாரு …? ” என்றான் .

கொஞ்சம் தணிந்து கேட்டால் ” அவளை அவள் காதலனுடன் சேர்த்து வைத்து விட்டேன் ” என நக்கலடித்தான் .பற்களை இறுக கடித்து கோபத்தை அடக்குவதே சமுத்ராவின் வாடிக்கையாக போய்விட்டது .

இரண்டு மூன்று நாட்களாகவே சற்று உடல்நலம் சரியில்லாதது போன்றே தோன்ற அன்று மதியம் வீடு திரும்பிய சமுத்ரா உணவு உண்டதும் மிக சோர்வாக உணர்ந்து அப்படியே ஹாலில் சோபாவில் படுத்துவிட்டாள் .எட்டி நின்று அவளை யோசனையாக பார்த்த புவனா அவளருகில் வர முனைந்த போது , யோகன் உள்ளே வரவே அப்படியே உள்ளேயே நின்று கொண்டாள் .

சமுத்ராவைக் கண்டதும் வேகமாக வந்த யோகன் ” முத்ரா என்னடா …என்ன ஆச்சு …? என்றான் ” பதட்டத்துடன் .

” ஒன்றுமில்லை கொஞ்சம் சோர்வாக இருந்த்து .அதனால்தான் ….” விழிகளை மூடிக்கொண்டாள் .

” அவளை ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போங்க தம்பி ” உள்ளிருந்தபடியே குரல் கொடுத்தாள் புவனா .

யோகனும் அவளும் நேருக்கு நேர் நின்று பேசும் பழக்கமில்லை .ஏன் அவளிடம் பேசும் பழக்கமே அவனுக்கு கிடையாது .அவன் இன்று ” ஏன் ..என்ன ஆச்சு …? ” ஆதரவாய் சமுத்ராவின் தலையை வருடியபடி புவனாவின் திசையில் திரும்பி கேட்டான் .

இதில் சிறிது தைரியமடைந்த புவனா கொஞ்சம் வெளியே வந்து ” இந்த மாதம் உனக்கு எத்தனை நாள்மா ஆச்சு …? ” சமுத்ராவிடம் விசாரிக்க , திக்கென்ற அதிர்வுடன் சமுத்ரா விழிக்க , எதிர்பார்ப்போடு அவள் முகம் நோக்கினான் யோகன் .

அவசரமாக தேதியை கணக்கிட்ட சமுத்ராவின் இதழ்கள் ” நாற்பத்தி இரண்டுநாளாயிடுச்சு ” என்க கைகள் தானாக வயிற்றில் பதிந்தன.

” நாளைக்கு ஆஸ்பத்திரிக்கு கூப்பிட்டு போங்க ” என்றுவிட்டு உள்ளே போனாள் புவனா .என்னவென று சொல்ல முடியாத ஒரு உணர்ச்சியில் அப்படியே அமர்ந்து விட்டாள் சமுத்ரா .

” நான் அம்மாவா …!!!!எனக்கென று ஒரு உயிரா ் …!!!என்னை நம்பி ஒரு உயிரா ..!!!இனம் புரியா உணர்வில் தனது வயிற்றை வருடியபடி இருந்தவளின் கரத்தை விலக்கி தன் கரத்தினை அவள்  வயிற்றில் பதித்தான் யோகன் .

” குழந்தை சமுத்ரா …நம் குழந்தை ..்உன் குழந்தை ..” என்றவன் நிறுத்தி ” இப்போது என்ன செய்ய போகிறாய் ..? என்றான் .

அந்த நம் குழந்தையில் நெகிழ்ந்திருந்தவள் …இந்த இப்போது என்ன செய்ய போகிறாயில் குழம்பி அவன் முகம் பார்க்க , வினை முடித்த பாவம் அவன் முகத்தில் .

போய் விடுவேன் …போய் விடுவேனென்றாயே ..????இப்போதும் போய்விடுவாயா ….? ” அவள் கழுத்து தாலி சங்கிலியை தன் கைகளில் எடுத்து வைத்தபடி கேட்க , பொலபொலவென உதிர்ந்தாள் அவள் .

ஆக இவன் இவ்வளவு நாட்களாக என்னை விரட்டி விரட்டி வேட்டையாடியதெல்லாம் இதற்காகத்தானா ..?? பிள்ளையொன்று வந்து விட்டால் இவள் போக மாட்டாளென்ற எண்ணம்தான் என்னுடன் இவனை கூடச் செய்ததோ ..???அப்படி போகாமல் இவனுக்கு பிள்ளை பெற்றுக் கொண்டு இங்கேயே இருந்து விட்டேனானால் இவனது ரகசியங்களெல்லாம் என்னோடும் , இவனோடும் இங்கேயே புதைந்து விடும் .இவனும் தனது கண்ணன் லீலைகளை தொடர்ந்து கொண்டே  இருக்கலாம் ..இவனை எதிர்க்க வேண டுமென நினைத்து இதுவரை தான் சாதித்தது என ன …?

யோசித்து பார்த்தால் ஒன்றுமேயில்லை .லாவண்யா பற்றிய விபரம் கொஞ்சம் கூட தெரியவில்லை .செல்லியின் வாழ்வை சீரமைக்க முடியவில்லை .இதையெல்லாம் விட்டு விட்டு ..இவன் பேச்சினை கேட்டு இவன் குப்பத்து பெண்களுக்கு உழைத்து கொட்டிக் கொண்டிருக்கிறாள் .இதற்கெல்லாம் நல்ல பெயர் பெறுவது அவன்தான் .இதெல்லாம் எங்க ஐயா செய்வதென்று .கூடுதலாக இவன் தங்கையையும் , அக்காவையும் தான் மேய்த்துக் கொண்டிருக்க , இவன் ஜாலியாக தோப்பு வீடு ..அது இதுவென கோகுலககண் ணனாக வீதி உலா வந்து கொண்டிருக்கிறான் .

இப்படி எண்ணம் தோன்றவும் ஆத்திரம் உச்சியை அடைய , ” ஏன் இப்போது என்ன ? ” கிட்டதட்ட கத்தினாள் .
” உஷ் .்” என்றான் “.பிறகு பேசலாம் ” எழப் போனான் .

அதென்ன நீ சொன்னால் பேசவும் , நிறுத்தென றால் நிறுத்தவும் , நீ பிடித்து வைத்த பொம்மையா நான் ..? இந்த நினைவு தந்த வேகத தில் அவன் கைகளை பற்றி இழுத்தாள் .




” பிறகென்ன பிறகு …இப்போதே பேசுவோம் .இப்போது என்று இங்கே எதுவும் மாறிவிடவில்லை .நிச்சயம் இங்கிருந்து போகத்தான் போகிறேன் ” சத்தமாக பேசினாள் .

” ஓ…அப்போது குழந்தை …?”

” குழந்தை என்ன பெரிய குழந்தை .இது என் விருப்பம் இல்லாமல் வந்த குழந்தை .நான் கொஞ்சமும் விரும்பாதவனுக்கு வந்த குழந்தை .இது எனது பயணத்தை தடை செய்யுமானால் கலைத்து வீசிவிட்டு போய்க்கொண்டே இருப்பேன் ” உணர்ச்சிவசப்பட்டதில் குரல் மிக உயர்ந்திருக்க சமுத்ராவின் குரல் வீடு முழுவதும் ஒலித்தது .

அது பின் மதியம் என்பதால் வீட்டில் வேலையாட்கள் இல்லாவிடினும் வீட்டு ஆள்கள் இருந்தார்களே…அவளது பேச்சு சக்கரநாற்காலியை தள்ளியபடி மயில்வாகன்னை கூட வரவைத்திருந்த்து .புவனாவும் , செல்வமணியும் கூட அதிர்ச்சியுடன் நின்றிருந்தனர் .

ஆனால் மிக அதிர வேண்டியவன் , செய்வதறியாது திகைக்க வேண்டியவன் உணர்ச்சியற்ற கற்பாறையாய் முகத்தை வைத்துக் கொண்டு ” வாழ்த்துக்கள் ” என்றுவிட்டு எழுந்து போனான் .




What’s your Reaction?
+1
16
+1
14
+1
1
+1
0
+1
0
+1
0
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!