Serial Stories யுகம் யுகமாய்..! 

யுகம் யுகமாய்..! -1

 1

அமெரிக்காவின் சான்ஃப்ரான்சிஸ்கோ ஏர்போர்ட்டிலிருந்து சான் ஜோஸ் நகரை நோக்கிச் செல்லும் ஹைவேயில், டாக்ஸி ஒன்றின் பின்னிருக்கையில், ஒயிலாக சாய்ந்து கொண்டிருக்கும் வர்ஷா ஓர் இருபத்தி ஐந்து வயது  அழகுப் புயல்.

காண்போர் கண்ணையும்,கருத்தையும் கவர்ந்திழுக்கும் இளமைச் சூறாவளி. அவளைக் கண்டவர்கள்தான் காதல் கிறுக்கு பிடித்து அவள் பின்னே சுற்றுவார்களே தவிர, இதுவரைக்கும் அவளை எந்த ஆண்மகனும் வசீகரித்ததில்லை.

முப்பது வருடங்களுக்கு முன் தமிழ்நாட்டிலிருந்து அமெரிக்காவிற்கு வேலை நிமித்தம் சென்று அங்கேயே செட்டிலாகி விட்ட ராஜசேகர், வந்தனா தம்பதியினரின் ஒரே செல்ல மகள்தான் வர்ஷா. அமெரிக்க நாட்டின் டெக்ஸாஸ் மாநிலத்தில் பிறந்து வளர்ந்து. உயர்கல்வி முடித்தவளுக்கு சிலிகான் வேலியில் மிகப் பெரிய செயற்கை நுண்ணறிவு (ஆர்டிஃபிசியல் இன்டெலிஜென்ஸ்) நிறுவனமான தாம்ஸன் க்ரூப் ஆஃப்  மென்பொருள் தயாரிப்பு கம்பெனியில் கிடைத்தது எக்கச்சக்க சம்பளத்துடன் கூடிய உயர்பதவி ஒன்று .

நல்ல திறமையும்,தைரியமும் நிறைந்த ஆரோக்கியமான பெண்ணான வர்ஷாவுக்கு, புதிய கம்பெனியில் அடியெடுத்து வைத்ததுமே ஏதோவொரு தடுமாற்றம். தேகமெங்கும் ஒரு பரபரப்பு. விவரிக்கவியலாத ஒரு சிலிர்ப்பு.

நித்தம் தவறாமல் ஒர்க் அவுட், ஸ்விம்மிங் , ஏரோபிக்ஸ் எல்லாம் செய்து ஸ்லிம் ப்யூட்டியாக வலம் வருபவள்,உணவு விஷயத்திலும் ஏகக் கட்டுப்பாடுகளை அனுசரித்து ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்பவள். எந்தவொரு செயலையும் ஜஸ்ட் லைக் தட் செய்து முடிக்கும் அறிவாற்றல் உடையவள்…!

“இன்று என்னாயிற்று எனக்கு?”  அவளுக்கே ஆச்சர்யம் தான்.

மேற்கொண்டு யோசிக்க நேரமில்லாமல் சமாளித்துக் கொண்டவள், வேலையில் சேர வேண்டிய ஃபார்மாலிடீஸ்களை முடித்தாள். 

“வர்ஷா..! உனக்கு நம்ம கலீக்ஸை எல்லாம் அறிமுகப் படுத்தறேன் என்னோட வா”

அழைத்தாள் டெய்ஸி, வர்ஷாவுக்குப் பெர்சனல் செக்ரடரியாக நியமிக்கப் பட்டிருக்கும் அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த தமிழ்ப் பெண்.

“வித் ப்ளஷர்”

தோளைக் குலுக்கிக் கொண்டபடி அவளுடன் சென்றாள் வர்ஷா. இயல்பாக இருப்பதாக வெளியில் காட்டிக் கொண்டாலும் உள்ளூறப் படபடப்பு அடங்காமல் இம்சிக்க, காலையில் ஏர்போர்ட் வரும் அவசரத்தில்  வழக்கமாகக் குடிக்கும்  காஃபியைக் குடிக்காமல் விட்டதால் இருக்குமோவென்று தோன்றியது.?

அவளுடைய முழுநாள் வேலைக்குமான ஆதார சக்தியான காஃபியை குடிக்காததுதான் தன்னுடைய இப்போதைய படபடப்புக்குக் காரணமாக இருக்கலாம் என்ற தீர்மானத்துக்கு வந்தாள்.

ஒவ்வொரு ஸ்டாஃபாக டெய்ஸி அறிமுகப் படுத்த, எப்போது முடியும் இந்த அறிமுகப் படலம்? எப்போது கேண்டீனுக்குச் சென்று சூடாக ஒரு கப் காஃபியைக் குடிப்போம்? என்று உள்ளூறத் தவித்துப் போய் விட்டாள் வர்ஷா.

“இனி ஒரே ஒருத்தர்தான்..”

டெய்ஸி சொல்லி முடிப்பதற்குள்..

“அவரைக் கொஞ்ச நேரம் கழித்து சந்திக்கிறேனே”

“நீ  பாக்கணும்னு நெனச்சாலும் இப்போ முடியாது. அவர் இப்போ முக்கியமான மீட்டிங்கில் இருக்கார்.”

“வா..உனக்கு உன்னோட கேபினைக் காட்டறேன்”

“அச்சச்சோ..! டெய்ஸி மொதல்ல எனக்கு கேண்டீனைக் காட்டு. ஒரு கப் காஃபி உள்ளே எறங்கினாதான் எனக்கு உடம்பும் மனசும் ஆக்டிவா இருக்கும்..வா..வா”




“ஐ ஆம் வெரி ஸாரி வர்ஷா. இன்னைக்கு முதல் நாள், உன்னை எங்களோட கெஸ்ட்டா  நான் ட்ரீட் பண்ணியிருக்கணும். நீ ப்ரேக்ஃபாஸ்ட் சாப்ட்டியான்னு கூட நான் கேக்க மறந்துட்டேன். எனக்கு இப்பல்லாம் சென்ஸ் ஆஃப் ஹாஸ்பிடாலிடி கொறஞ்சுகிட்டே வருது போல..”

தன் மீதே குறைப்பட்டுக் கொண்டவள் வர்ஷாவை அழைத்துக் கொண்டு கேண்டீனுக்குச் சென்றாள்.

கேண்டீனில் நல்ல சூடான காஃபியை மிடறு,மிடறாக ருசித்துக் குடித்தவள்

“ ஹேய்..இப்போ சொல்லு! இன்னும் யாரையோ நான் மீட் பண்ணணும்னு சொன்னியே..! காட்டு பாக்கலாம்” 

டெய்ஸியின் கரங்களைப் பிடித்திழுத்தாள்.  சமவயது என்பதாலோ..இல்லை, இருவருக்கும் அலைவரிசை ஒத்துப் போனாலோ, சந்தித்த சில மணித்துளிகளுக்குள்ளாகவே, இருவருக்குள்ளும் நெருக்கமான நட்புணர்வு பூக்கத் தொடங்கியது.

“ம்ம்..பரவாயில்லையே ! இந்த காஃபி உனக்குள்ள ஒரு பெரிய மாயத்தை உருவாக்கிடுச்சே.  உனக்கு கேஃபின் அடிக்ஷன் இருக்கோ?”

“நோ..நோ..! தினமும் காலைல ஒரு கப் காஃபி அவ்வளவுதான். அதுவும் எங்கம்மா பழக்கி விட்டதுதான்.”

இருவரும் பேசியபடி கேண்டீனிலிருந்து வர்ஷாவின் கேபினை நோக்கி நடக்க, திரும்பவும் அதே படபடப்பு வர்ஷாவுக்குள் ஊடுருவியது. 

“ச்சே என்னதிது இன்னைக்குப் புதுசா?” 

டெய்சிக்குத் தன்னுடைய டென்ஷன் தெரிந்து விடாமல் சமாளித்தபடி தனக்கெனத் தரப்பட்ட அறைக்குள் நுழைய முற்பட்டவளை…

“வெல்கம் வர்ஷா” என்ற கம்பீரமான குரல் அண்ணாந்து பார்க்க வைத்தது. 

ஆறடி உயரத்தில், அளவான உடற்கட்டில் , முகமும்,காந்தக் கண்களும் மலர்ந்து சிரிக்க,

“ஐயம் ப்ருத்வி’ என்றபடி கைகளை நீட்டினான் அந்த ஆணழகன்.

“ஹாய்..கிளாட் டு மீட் யூ”

அவன் கைகளைப் பற்றிக் குலுக்கிய அந்தக் கணத்தில்  அப்படியே மயங்கிச் சரிந்தவள்தான் வர்ஷா.  எத்தனை நேரம் ஓடியதோ தெரியவில்லை.

மயக்கம் தெளிந்து, மலங்க மலங்க சுற்று முற்றும் பார்த்தாள். 

பக்கத்தில் அமர்ந்திருந்த டெய்ஸி,

“வர்ஷா.. உனக்கு இப்போ  பரவாயில்லையா? கொஞ்சம்  காஃபி தரவா?  படபடவென வினவினாள்.

டெய்ஸியை ஏற இறங்கப் பார்த்தவள்,

“நான் எங்க இருக்கேன்? எனக்கென்ன ஆச்சு? நினைவலைகளில் ஏதேதோ பிம்பங்கள்.. தெளிவற்ற பேச்சுக் குரல்கள். ! மீண்டும் வர்ஷா மயங்க,டென்ஷனான டெய்ஸி,

வர்ஷாவின் முகத்தில் லேசாகத் தண்ணீரைத் தெளித்து, சூடான காஃபியைக் கொஞ்சம் குடிக்க வைத்தாள்.

மெதுமெதுவாக, சுயவுணர்வுக்கு மீண்டாலும்,  கண்களை மூடிக் கொண்டு யோசனையில் ஆழ்ந்தாள் வர்ஷா. 

சின்னப் பொண்ணா இருக்கும் போது இந்தியாவுல இருந்து பாட்டி வருவாங்களே. அப்போ ராஜா ராணி  கதை சொல்லும் போது இப்படித்தானே பேசுவாங்க? பாட்டி சினிமா கதை சொல்லும் போது வாய்ஸ் மாடுலேஷனும், பாடி லாங்குவேஜும்அப்படியே விஷுவலா பாக்கற மாதிரி இருக்கும்.  நான் கூட பாட்டி மாதிரியே ஃப்ரண்ட்ஸ்க்கெல்லாம் அந்தக் கதைகளை சொல்லுவேனே! அப்படியே இருந்தாலும் இத்தனை வருஷம் கழிச்சு இன்னைக்கு ஏன் அதெல்லாம் நினைவுக்கு வரணும்? குழம்பித் தவித்தாள்.

காலையில் இந்த இடத்தில் கால் வைத்ததில் இருந்து, அந்த நெடுமாறனை..அதுதான் அந்த ப்ருத்வியை சந்தித்த வரை…ஏன் இப்போதுமே கூட என் மனதிலும்,உடலிலும் ஏதோ அதிர்வலைகள்,ஒரு சிலிர்ப்பு, .

மெதுவாக இமைகளைப் பிரித்து டெய்ஸியைப் பார்க்க, அவளோ , 

“பார்க்க நல்ல ஆரோக்கியமாகத்தானே இருக்கிறாள். அப்புறம் ஏன் இப்படி மயங்கி விழுகிறாள். ஏதேனும் வெளியில் தெரியாத மாதிரி வியாதி இருக்குமோ! பாவம் அப்படி ஏதும் இருக்கக் கூடாது” மனதுக்குள் இறைவனை வேண்டிக் கொண்டாள்.

எவ்வளவு நேரம் இப்படிக் கண்களை மூடிக் கொண்டு இருப்பது?. கண்களைத் திறந்ததும் டெய்ஸி கேள்விக்கணைகளால் துளைப்பாளே! எனக்கே காரணம் தெரியாத போது அவளுக்கு என்ன சொல்லிப் புரிய வைப்பேன். இந்த கம்பெனில் கால் வைத்த நொடியிலிருந்துதான் இப்படியாகி விட்டேன் என்றாள் நம்புவாளா?

சரி, வேறு வழியில்லை என்று கண்களைத் திறந்து , டெய்சியைப் பார்த்துப் புன்னகைக்க அவளும் நிம்மதிப் பெருமூச்சுடன் சிரித்தாள்.

“வர்ஷா இன்னைக்கு நீ நல்லா ரெஸ்ட் எடுத்துக்கோ!  உனக்கு கம்பெனி கெஸ்ட் ஹவுஸ்ல ரூம் இருக்கு. ஒரு வாரத்துக்குள்ள நீ வேற அபார்ட்மெண்ட் பாத்துக்கணும். உனக்கு என்னோட ஹெல்ப் வேணும்னா தயங்காம சொல்லு. ஐ ஆம் அல்வேஸ் ரெடி.

வர்ஷா எனக்கென்னவோ இதை உன்னோட பேரன்ட்ஸ்கிட்ட சொல்லிடலாம்னு தோணுது”




“எதை..? நீ எனக்கு ஹெல்ப் பண்றேன்னு சொன்னியே அதையா?”

வர்ஷாவைப் பார்த்து முறைத்தவள்,நீ மயங்கி ,மயங்கி விழுந்தியே..அதை!”

“அச்சச்சோ! அவ்வளவுதான்..! எங்கம்மா அங்க மயங்கி விழுந்துருவாங்க..அப்புறம் எங்கப்பாதான் பாவம்” சோகமாக முகத்தை வைத்துக் கொண்டவளைப் பார்த்து 

“யூ ஆர் வெரி மிஸ்சிவஸ்” சிரித்தாள் டெய்ஸி.

டெய்ஸியின் காரிலேயே கெஸ்ட் ஹவுஸ் போய்ச் சேர்ந்த வர்ஷா சுறுசுறு, துரு துரு என்றாகி விட,  அவளை மறு நாள் வந்து பிக்கப் செய்து கொள்வதாகச் சொல்லி விட்டு நிம்மதியுடன் கிளம்பினாள் டெய்ஸி.

ஆனால்…கலிஃபோர்னியாவுக்கு கிளம்பிப் போன ப்ருத்விக்கோ தன்னைப் பார்த்ததும் அந்தப் பெண் மயங்கி விழுந்தது எதேச்சையாக நடந்ததா..இல்லை வேறு ஏதாவது காரணமா? ஏதேனும் மனநலக் கோளாறு? ம்ஹும்அப்படியெல்லாம் எதுவும் இருக்காது…இருக்கவும் கூடாது. பார்வைக்குத்தான் வளர்ந்த பெண்ணாக இருக்கிறாள்.புது அட்மாஸ்ஃபியர் என்பதால் உள்ளூற பயந்திருப்பாளோ? ஹ்க்கும்! யுஎஸ் ல பிறந்து வளர்ந்தவளுக்குப் பயமாவது? கேள்வியும் நானே..! பதிலும் நானே! என்று தனக்குள்ளே பேசிக் கொண்டான்

“எத்தனை பெண்களைக் கடந்திருப்பேன்

இப்படி என் மனம் துடித்ததில்லை”

அவன் மனம் ஒரு நிலையில்லாமல் தவித்தது.

(தொடரும்)




What’s your Reaction?
+1
18
+1
9
+1
0
+1
3
+1
1
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!