Serial Stories நீ காற்று நான் மரம்

நீ காற்று நான் மரம்-9

 9

 

நுழைவுத் தேர்வுப் பயிற்சி வகுப்பு ஆரம்பமாகி நடக்க ஆரம்பித்து விட்டது..

மோகன் மிக மும்முரமாக படிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்தான்.

தாரா பேசினால் பேசுவான்..  சில நேர கொக்கி போடும் அவளின் கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் போய் விடுவான்…அப்பா எச்சரித்தது நினைவுக்கு வந்தது…

“தான் கடை முதலாளி ஆக முடியாது “…

“ஆனால் படித்தால் பொறியியலும் , விஞ்ஞானமும் வசப்படும்..சாதிக்கலாம்….. சாதிக்க முடியும் ..”என்ற நம்பிக்கை வந்து விட்டது…

ஒரு வாரம் ஓடி விட்டது…

ஒரு நாள் இரவு வரும் போது வீட்டில் ஒரே சத்தம், காலணிகள்..

வீட்டில் நுழைய,

“வாடா மோகா…”

வரவேற்றது தனம் பாட்டி..

“பாட்டி” ..ஓடிப் போய் கை பிடித்து பக்கத்தில் உட்கார்ந்து , “எப்படி இருக்கே பாட்டி…நீ வருவது பற்றித் தெரியும்..என்னிக்குனு அம்மா சொல்லவே இல்லையே”…

“இந்த வீணா தான் சொல்லவேண்டாம் என்றாள்”..

“ரகோத்தமன், விஜி இருவரும் உள்ளே இருந்து வந்தனர்..

பாட்டி பக்கத்தில் உட்கார்ந்திருந்த மோகன் எழுந்து

” உக்காருங்க அங்கிள்…நல்லா இருக்கீங்களா…எப்படி இருக்கீங்க..நீங்களும் வந்திருக்கீங்களா.???”

“ஆமாம் மோகன்.. எனக்கும் வேலூர் பொறியியல் கல்லூரியில் பேராசிரியர் வேலை கிடைத்திருக்கு…

அதனால் முதலில் வேலையில் சேர்ந்து விட்டு அப்புறம் வீடு பார்த்து போகலாம் என வந்து விட்டேன் …நாளைக்கு போய் சேரலாம் என இருக்கிறேன்.”

அதுவரை கேட்டுக் கொண்டே வந்த மோகன் சட்டென்று

“அப்போ வீணா படிப்பு…அவ +2 ஆயிற்றே..”

“ஒரு வேளை அங்கேயோ யாராவது உறவினர் வீட்டில் விட்டு விட்டு வந்து விடுவார்காளோ என்ற அச்சத்தில் கேட்டே விட்டான்.”




உடனே விஜி

” பார்த்தீங்களா..நான் கேட்டது மாதிரியே கேட்கிறான் மோகன்..

அவனுக்கு தான் வீணா படிப்பு மேலே எவ்வளவு அக்கறை”..

“ஆமாம் மோகன்…விஜி சொன்னா.

நான் தான் கேட்கவில்லை..

அவளுக்கும் என் கூட இங்கே வருவதில் தான் பிரியம். “

லேசாக அதிர்ச்சியான மோகன் முகத்தில் மீண்டும் சந்தோஷம்..

“அது சரி அங்கிள்..

முரளிக்கு சொல்லிக் கொடுப்பதைப் போல வீணாவுக்கும் சொல்லிப் படிக்க வைக்கிறேன்..காமர்ஸ் குரூப் ரொம்ப சுலபம் படிக்கும் முறையில் படித்தால்.. ” “ஆண்ட்டி..நீங்க வீணா பற்றிய கவலையை விட்டுத் தள்ளுங்க.நான் பார்த்துக்கறேன் அவளை….”

“ஆமாம் மோகன்..நீ சொன்னால் வீணா கேட்பாள் என நினைக்கிறேன்”..

என்றாள் விஜி.

அதுவரை வீணாவும் முரளியும் காணோமே என நினைத்துக் கொண்டிருந்த மோகன் ,

வீணாவும் முரளியும் வாசலில் நுழைவதைப் பார்க்கிறான்.

இவர்கள் பேசின கடைசி வார்த்தையை மட்டும் கேட்டுவிட்டு,

” மோகன் சொல்லி நான் ஏன் கேட்கணும்” ….இது வீணா..

” மோகன் சொன்னான் ..உன்னை முரளி மாதிரி படிக்க சொல்லிக் கொடுப்பேன் என்று, அதற்கு தான் நான் சொன்னேன்”.

“ஓகே.ஓகே..” அப்போ சரி..

படிப்பில் நீ என்ன சொன்னாலும் கேட்கிறேன் மோகன்..”

“மத்த விஷயங்களில் உனக்கு விவரம் பத்தாது..நான் சொல்லி தரேன்…அப்படித்தானே டா முரளி”.

முரளியும் சேர்ந்து சிரிக்க

வீடே கலகலப்பாகியது.

“இதுக்கு தான் ஒரு பொண் குழந்தை தான் வீட்டுக்கு அழகுனு சொல்வேன் ..”

“இப்போது அம்மா ருக்மணி சொல்வது நிஜந்தான்” என எண்ணிக் கொள்கிறான் மோகன்.

“அய்யே..நான் இன்னும் உங்களுக்கு குழந்தையா.”

“நான் இப்போ பெரியவளாக்கும்..”

அதற்குள் தனம் பாட்டி குறுக்கே புகுந்து..

“யார் யார் சொல்லுக்கு யார் யார் தலையாட்டப் போறாளோ ….அந்த பெருமாளுக்கு தான் தெரியும்.”

சொல்லி விட்டு எழுந்து போகிறாள்..




மோகனும் வீணாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள,

வீணா தலை குனிகிறாள்.

“இந்த உனக்கு வாங்கிண்டு வந்தேன்”..

ஒரு ஆறு பென்சில் சீவி ரெடியாக, ரெண்டு எரேசர்.

எல்லாம் கொடுக்க,

மோகன் ஆச்சரியமாக வாங்கிக் கொள்ள,

“நுழைவுத் தேர்வுக்கு உதவும் ..எல்லாம் ரெடியா

சீவி வெச்சுருக்கேன்”.

ரெண்டாவது பேனா, இல்லைனு கண்டவங்க கிட்ட ‘லவ் பேர்ட்ஸ்’ போட்டு

பேனாலாம் வாங்க வேண்டாம்..”

கொடுத்து விட்டு உள்ளே போகிறாள் வீணா…

மோகன் முரளியைப் பார்க்க அவனும் அண்ணாவின் பார்வையத் தவிர்த்து தொடர்ந்து உள்ளே போகிறான்..

அடுத்த நாள் மோகன் படித்துக் கொண்டிருந்த போது மோகனின் நண்பன் வந்து,

“இந்தாடா பேர்வெல் பார்ட்டி போட்டோவெல்லாம் வந்து விட்டது”…

என கொடுக்க

“கொடு கொடு நான் பார்க்கணுமே…நீ எந்த லட்சணத்தில் ட்ரெஸ் பண்ணியிருக்கேனு”

என பிடுங்கிக் கொள்கிறாள் வீணா..”

“அந்த போட்டோக்களில் தாரா தன் கையை பிடித்த போட்டோவும் இருக்குமே என

நினைத்துக் கொண்டிருக்கும் போதே…..

அந்த போட்டோவை பார்க்கிறாள் வீணா…..




What’s your Reaction?
+1
7
+1
9
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!