Serial Stories நீ காற்று நான் மரம்

நீ காற்று நான் மரம்-22

22

“வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் மாற்றம்…” செய்தியில் பார்த்தவுடன்,

“அப்பாவுக்கோ தனக்கோ வேலை வாங்கித் தருவார்” என்ற நம்பிக்கை தகர்ந்தது..

இதற்கிடையில் எல்லா இடத்திலும் கணினி பயன்பாட்டால் சிறு கடை காரர்கள் கூட கோவிந்தனை வேலைக்கு வைத்து கொள்ள தயங்கினர்.

ஒரு வார காலம் ஒரு யுகமாக கழிந்தது…

கடைசி வருட மாணவர்களை வேலைக்கு எடுக்க நேர்முகத் தேர்வுக்கு வந்திருந்த சில நிறுவனங்களிடம், மோகனின் துறைத் தலைவர் மோகனுக்கு ஏதாவது தற்காலிக இண்டெர்ன் ஷிப்/பயிற்சிப் பணி கிடைக்குமா என முயற்சி செய்தார்…

அனத்தும் தட்டிக்கொண்டே போனது..

எதுவும் நிகழவில்லை…. ஒரு மாத காலமும் ஆகி விட்டது…

சேர்மன் அலுவலகத்திலிருந்து அழைப்பு வந்தது மோகனுக்கு…

” உன் அப்பாவுக்கு வேலை போய்விட்டதா..???”

நேரடியாக கேள்விக்கு வந்து விட்டார்.

“ஆமாம் சார்…???”

“ஏன்….? “

விஷயத்தை சொல்லி விட்டு,

” காரணங்கள் ஆளுக்கு ஆள் மாறுபடுமே சார்…”

எங்க விதி…யாரை குறை சொல்வது ….???”

“அப்பாவுக்கு வேலை இல்லை என என்னிடம் ஏன் கேட்கவில்லை…??”

“சார் …இதெல்லாம் உங்களுக்கு எப்படி தெரியும்….???”

“ஏற்கனவே என்னால் உங்களுக்கு அதிக தொல்லை….இன்னும் எவ்வளவு சார் கேட்பது….?

” அப்பாவுக்கு இங்கேயே ஒரு வேலை கொடுத்தால் செய்வாரா….?

“கலெக்டர் ரொம்ப கேட்டுக் கொண்டாரப்பா…”




” நேத்து ஒரு விஷயமா அவரை பார்க்க சென்னைக்கு போனேன்…”

“உனக்கும் ஏதாவது செய்யறேன் என சொல்லி இருக்கிறேன்…”

“அப்பாவை வர சொல்லு….நாளைக்கு….”

“நாளைக்கு எதுக்கு ..இன்னிக்கே வர சொல்றேன் சார்….”

வெளியே வந்து அப்பாவுக்கு போன் பண்ணி

“சேர்மன் உன்னை வர சொல்றார்..ஏதோ வேலை விஷயமா…”

” ரகோத்தமன் சொல்லி இருப்பாரு…”

என்றாள் தனம் பாட்டி…

“நாள் பாத்து வேலைக்கு சேருங்க..”

இது ருக்கு..

” வேலை என்ன…… நாள் பார்த்தா போனது…???

எப்போ சேரச் சொன்னாலும் சேர வேண்டியது தான்…”

மதியமே வந்துவிட்டார். மோகனுடன் போய், மாலையில் சேர்மனை பார்த்து விட்டார்…

“உங்களை பத்தி கேள்விப் பட்டேன்….”

“இங்கே இன்னதென வேலை கிடையாது.”

” எல்லா வேலையும் செய்யணும்…நாளைக்கே வந்து சேருங்க….”

“நாலு ஹாஸ்டல் மெஸ்ஸில் வரவு செலவு கணக்கு பார்க்கணும்…”

“முதல் ஒரு வாரம் எனது  அலுவலகத்தில் இருங்க…

எல்லாவற்றையும் கவனிங்க…”

“சரி சார்…சாதாரணமா அப்பா , தன் பிள்ளைக்கு வேலை தேடி வாங்கித் தருவார்…இங்கே மோகன் எனக்கு வேலை வாங்கி தந்திருக்கான் சார் …”

” ஏனெனில் மோகன் அசாதாரணமான பிள்ளை…” நாங்களும் அவனை பாதுகாக்கணுமே.. “

எல்லா அப்பாக்களும் கேட்க ஆசைப் படும் வார்த்தைகள் தான்…

ஆனால் ஒரு சில தந்தைக்கு மட்டுமே இந்த பாக்கியம் கிடைக்கிறது.

ஆனால் கோவிந்தனுக்கு வேலை, மகனை பற்றிய நல் வார்த்தைகள் கேட்டவுடன் , ஒரு மாதம் பட்ட அவமானங்கள், கஷ்டங்கள் ஒரே நொடியில் விலகினாற் போல ஆனது..

“நாளைக்கே சேர்ந்துக்கறேன் சார்….”

“உங்களுக்கு பழைய அளவு சம்பளம் தர முடியாது …”

அதில் பாதிதான் தரமுடியும்…”

“காலையில் 8 மணிக்கு வந்து விட வேண்டும்…”

“மற்றதெல்லாம் நாளை பார்க்கலாம்..”

வெளியே வந்து கோவிந்தனும் மோகனும் பஸ் நிறுத்தம் வரும் வழியில் ,

எதிரே வண்டியில் சென்றாள் வீணா.

மோகனையும் கோவிந்தனையும் கல்லூரியில் ஒன்றாக பார்த்து திரும்ப மோகனுக்கு ஏதாவது பிரச்சனையா…???”




“நிறுத்தி கேட்க அச்சம்….”

“நமக்கு ஒருத்தரை பிடிச்சா, அவங்க சந்தோஷம் தான் நம் சந்தோஷம் , அவங்க துக்கம் தான் நமக்கும் துக்கம்..”

“ஆனால் மோகனுக்கு எந்த கெட்டதும் நடக்க கூடாது என பதறுகிறதே மனம் …”

“திரும்ப திரும்ப இவனின் நினைப்பு தான்…. “

“இனி எனக்கு சுக துக்கம் எல்லாம் போல இருக்கே….”

வீட்டுக்கு வந்தது முதல் தனக்கு தானே மனத்தில் வேண்டாததை போட்டு குழம்பி போனாள்..

முகம் கழுவி நெற்றி கூட இட்டுக் கொள்ளவில்லை…

விஜி கேட்டதுக்கும் பதில் சரியா வரவில்லை.

இரவில் ரகோத்தமன் வந்ததும் மெதுவாக

“அப்பா….மோகனுக்கு மீண்டும் ஏதாவது பிரச்சனையா….???”

உங்களுக்கு ஏதாவது தெரியுமா….?? என கேட்க நினைத்தாள்…

ஆனால் அப்பாவின் மூட் …அன்று கேட்கும் நிலையில் இல்லை…

அவருக்கு வேறு ஏதோ அழுத்தம் கல்லூரியில்…

விஜி நிலைமை தான் பாவம் … இருவரிடமும் ஒன்றும் பேச முடியவில்லை…

இதற்கிடையே தாராவுக்கு சென்னை கல்லூரிக்கு மாற்ற ஏற்பாடு செய்தார் ராமசாமி..

“அப்பாவை மீறி எதுவும் செய்யமுடியாது…அதே சமயத்தில் இந்த ஒரு மாத காலமாக கல்லூரியிலும் யாரும் அதிகம் தாராவுடன் பேசாததால் …சே…இந்த காலேஜ் வாழ்க்கை போதும்….. வேறு எந்த காலேஜுக்காவது செல்லலாம் “என முடிவு எடுத்து விட்டாள்.

இரவு மோகன் வீட்டில் நெடு நாட்கள் கழித்து அனைவரும் நிம்மதியாக தூங்கினார்….

அடுத்த நாள்…

சேர்மன் அலுவலகத்தில் வேலைக்கு சேர்ந்தார் கோவிந்தன்…

பக்கத்து ரூமில் இன்னும் இருவருடன் இவருக்கும் இருக்கை கொடுக்கப் பட்டது..

” சேர்மன் போன் ஒலித்தது….”

“தாரா இரண்டாம் வருஷம் கெமிகல்…இந்த ஸ்டூடண்ட் ஃபைல் எடுத்து வாங்க…”

கோவிந்தன் தேடி எடுத்து உள்ளே நுழைகிறார்….

அங்கே ராமசாமி உட்கார்ந்திருக்கிறார்…

“முதலாளி….” என அழைக்க வேண்டும் என வாய் வரை வந்து விட்டது…”

”  இவரிடம் மீதி ரெண்டு வருஷம் கட்ட வேண்டிய பணத்தை வாங்கிட்டு டிசி எல்லாம் ரெடி பண்ணி கொடுத்து செட்டில் பண்ணி அனுப்பிடுங்க…

போன மாதம் இவருக்கு சம்பளம் செட்டில் பண்ணி அனுப்பிய ராமசாமி….. இப்போது கோவிந்தனின் அடுத்த செயலுக்கு காத்திருக்கிறார்…




What’s your Reaction?
+1
8
+1
11
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!