Serial Stories நீ காற்று நான் மரம்

நீ காற்று நான் மரம்-19

19

மோகன் வீடு வந்து சேர்ந்தான்..

அப்பா அம்மா முரளி அனைவரும் அமைதியாக இருந்தனர்…

அதிலும் முரளியின் அமைதி அவனை ஆச்சரியப் பட வைத்தது…

தனக்கு விசாரணை நடந்ததை அம்மாவிடமும் முரளியிடமும் பகிர்ந்து ஆறுதல் தேடிக் கொள்ளலாம் என நினைத்தான்…

“என்ன ஆச்சு முரளி?”

“அப்பாவுக்கு வேலை போச்சு…”

காலை முதல் நடந்த விவரங்களைச் சொன்னான்.

“நாளை தனம் பாட்டி வரா….”

வீடே ஒரு சூன்யமாக இருந்தது…

“தனக்கு நடந்த விசாரணை முடிவு என்ன ஆகும்” என தெரியாமல் இருக்கும் போது இது என்ன புது பிரச்சனை..

“பட்ட காலிலே படும் கெட்ட குடியே கெடும்…”

என்பது உண்மையா…???”

யாரிடம் இப்போது பகிர்ந்து கொள்வது….???

கல்லூரியில் எல்லோருக்கும் தெரியும்…

“ஆனால் வெளியில் நடப்பதை வீட்டில் இருப்பவரிடம் பகிர்ந்து கொண்டால் தான் ஆறுதல் கிடைக்கும் என வந்தேனே…”

தனம் பாட்டிக்கு போன் பண்ணலாம் என நினைக்கும் போது மதியம் ரயிலில் கிளம்பி இரவே வந்து இறங்கி விட்டாள்..

“மாப்பிள்ளை…..ருக்கு பிறந்து 10ஆவது வருஷத்தில் உங்க மாமனார் போயிட்டார்…”

“ஒண்டிக்கட்டையா இவளை வளர்த்து கல்யாணம் பண்ணியும்… இன்னும் அவர் ஞாபகார்த்தாமா அந்த வீட்டை விக்காம வெச்சிருக்கேனே..”

“என்னிக்கு இருந்தாலும் அது ருக்குவுக்கு தானே…”

“கவலை படாதீங்க …உங்க நேர்மைக்கு வேற வேலை கிடைக்கும்…”

“என்னடா ஆச்சு…முரளி…”

முரளி தாராவுக்கு தீ பிடித்ததில் ஆரம்பித்து அப்பாவுக்கு வேலை போய் விட்ட வரை சொல்லி முடித்தான் பாட்டியிடம்.

“மோகா…நேத்திக்கு இது நடந்தப்புறம் இன்னிக்கு காலேஜ் போனயா…??அங்கே எல்லாரும் உன்னிடம் எப்படி நடந்து கிட்டாங்க….??”




” யாராவது கேட்க மாட்டார்களா” என ஏங்கிய அந்த இளைஞனின் குழந்தை உள்ளம் இப்போது பாட்டியிடம் கதறத் தொடங்கியது…

அப்போது தான் இவர்கள் அனைவருக்கும் பத்திரிக்கை செய்தியால் கல்லூரியில் என்ன நடந்திருக்கும் என “தாங்கள் யாரும் கேட்கவில்லையே…”என உரைத்தது…

மோகன் பாட்டியின் மடியில் அழுது முடித்து ஒருவாறாக சொல்லி முடித்தான்…

“ரகோத்தமனை அந்த பெருமாள் தான் சேர்த்திருக்கார் அங்கே..”

“உனக்கு ஒரு குறைவும் இல்லை…பெருமாள் இருக்கார் ..பாத்துப்பார்..”

என சொல்லி எல்லோரையும் அமைதி படுத்தினாள்.

அடுத்த நாள் கல்லூரியில்  மதிய இடை வேளைக்கு பிறகு மோகனை கூப்பிட்டு அனுப்பினார்கள் சேர்மன் ஆபீஸில்..

நேற்று அங்கே போன போது படபடப்பில் இருந்தான்…….இன்று….. பயத்தில் இருந்தான்.

“பத்திரிக்கை செய்திக்கு முக்கியத்துவம் கொடுத்து

உன்னை ஒரு வாரம் சஸ் பெண்ட் செய்யலாம்…”என நண்பர்கள் மத்தியில் பேச்சுதான் அவனது பயத்துக்கு காரணம்.

இன்று சேர்மன், கல்லூரி முதல்வர், பெண் துணை முதல்வர் மட்டுமே இருந்தனர்…

” உன் மேலே எந்த தவறும் இல்லை ..மோகன்…நீ வழக்கம் போல படிப்பை தொடரலாம்…”என்றார் பெண் துணை முதல்வர்..

“எல்லோரும் இந்த முடிவு பற்றி பிரிந்து நிற்கையில் ரகோத்தமன் சாருக்கு மற்றவர்கள் சொன்ன பதிலும், நீ சொன்ன பதிலும் பரிசீலித்தோம்..

இரண்டு பெண்களும் ஒரேயடியாக உன் பக்கம் தான் நியாயம் என்றனர்…”

பத்திரிக்கை செய்தி பரபரப்புக்காக எழுதப்பட்ட பொய்….. நீ சொல்வது தான் உண்மை…”என அடித்து சொல்கிறார்கள்..

இது போல விஷயங்களில் பெண்களுக்கு அனுபவம் அதிகம்…நான் கூட சிலவற்றில் என் மனைவி சொல்வது தான் நம்புவேன்.” என்றார் சேர்மன்..

“சார் ..எனது ஸ்காலர்ஷிப் தொடரும் தானே..”

“நீ தான் படிப்பை தொடரப் போகிறாயே…நீ ஒவ்வொரு செமஸ்டர் வாங்கும் மதிப் பெண் தான் அதனை நிர்ணயம் செய்யும்…”

“நன்றி சார்..”

வெளியில் ரகோத்தமன் காத்திருந்தார்…

அவர் மோகனின் தோளில் கை போட்டு ‘திருப்தி தானே…”மோகா..”.என்றார்.

“முதன் முறையாக ‘மோகா’ என அழைக்கிறாரே…”

“நன்றி அங்கிள்….. சாரி…

நன்றி சார்….”

” நன்றி அந்த உங்க பாட்டி சேவிக்கும் த்ரிவிக்ரமனுக்கு சொல் …”

“உனக்கு ஆதரவாக எதுவும் நடக்கவில்லை…

அந்த நொடியில் நான் தனி தனியாக கேட்ட அந்த கேள்வியும் நீங்க ஒவ்வொருவரும் சொன்ன பதிலும் தான் உன்னைக் காப்பாற்றியது…”

“நான் தான் சரியாக சொல்லவில்லையே சார்…”

“ஆமாம் நீ சரியாக சொல்லாததும் உன் நண்பர்கள் மிகச் சரியாக சொன்னதும் தான் காரணம்…”

“புரியலை அங்கிள் ..”

சில விஷயங்கள் உனக்கு புரியாமல் இருப்பதே நல்லது….”

“நீ நல்லவண்டா மோகன்…”

“நீ ஆடிப்போய் இருப்பாய்…உன் பாட்டி தனம் விஜிக்கு போன் போட்டு உங்க அப்பா வேலை போனது பற்றி சொன்னா..”

“நீ வீட்டுக்கு வந்து விட்டு போ…” இருவரும் கிளம்பத் தயாரான போது…

காவல் துறை யை சேர்ந்த இருவர்…

சேர்மன் ரூமுக்குள் நுழைந்தார்கள்.

“மோகனை இருக்க சொல்லுங்க… “

உள்ளே இருந்து தகவல் வந்தது…

ரகோத்தமன் “இந்த விவகாரம் இப்போது தனது கை மீறிப் போகிறது…”என உணர்ந்தார்..




“சார்…இது சின்ன விஷயம் தான்…”

“ஆனால் ஒரு பத்திரிக்கை ல வந்தா…. எல்லாரும் ஒவ்வொருவராக கண் காது மூக்கு வைத்து அவரவர் கோணத்தில் எழுதுவாங்க..”

“அதனால் எங்களையும் விசாரணை செய்யச் சொல்லி மேலிடத்து உத்தரவு.”

நடந்த விஷயங்கள்…. விசாரணை முடிவு பற்றி தெரிந்து கொண்டனர்.

“ஒரு கேசும் இல்லை…அந்த பத்திரிக்கை சொல்வது வடிகட்டின பொய்…”

மோகனுக்கும் தீயிற்கும் சம்மந்தமில்லை…என முடிவுக்கு வந்தனர்..

” உள்ளே வந்தவுடன்

தொப்பி, சீருடை, கூலிங் கண்ணாடியில் இருந்த எஸ்.ஐ. எடுத்தவுடன் அதட்டலாக….

“ஏன் அந்த பொண்ணு மேல தீ வெச்ச…..??? ஒரு தலைக் காதலா….”

“சார்…..”அதிர்ந்து விட்டான் மோகன்…

அப்படியெல்லாம் இல்லை சார்…

அவங்க எங்க முதலாளி மகள்…அவ்வளவுதான் சார்…”

“சரி…அவ அன்னிக்கு எந்த கலர் உடை அணிந்து வந்தா…..???”

“சார் ..தெரியலை சார்…”

“நான் வேணா கேட்டு வந்து சொல்றேன்..”

“நேத்து முதல் இதை யாரிடமும் கேட்கவில்லையா….”

“கேட்க தோணலை. சார்…”

இப்போது தொப்பி கூலிங் கிளாஸ் கழற்றி….

“பயப்படாத மோகா…”

“சார் உங்களுக்கு எப்படி என் வீட்டு பெயர் தெரியும்..????”

“ஒரு வேளை பத்திரிக்கையில் இது கூட எழுதி இருக்காங்களா….”

“நான் தான் அதை படிக்க வில்லையே…” என நினைத்தான்.

என்னைத் தெரியலையா…??

நான் தான் ராணி பேட்டையில் உங்க வீட்டு எதிரில் இருந்த கேசவன்..

“அங்கிள்..” “சார்…”நீங்களா…?

இரண்டு வருடம் முன்பு திருக்கோவிலூர் ரயிலில் போகும் போது முரளி இவரைக் கேள்வி கேட்டதும் அவருடைய மனைவியின் வயிற்றைப் பார்த்து” பொண் குழந்தை தான்.. பொண்ணு குழந்தை தான் வீட்டுக்கு அழகு…”என சொன்னதும் இவனுக்கு நினைவுக்கு வந்தது..

இப்போது தைரியத்தை வரவழைத்துக் கொண்டு,

சார் உங்களுக்கு என்ன குழந்தை பிறந்தது..???

” அட நினைவில் இருக்கா அதுவும்…..??

“உங்க அம்மா சொல்லி என்னிக்கு தப்பாயிருக்கு….?”

பொண் தான்….. உங்கம்மா பேருதான் வெச்சோம் “ருக்மணி …”

சேர்மனை பார்த்து “நீங்க நிறைய நல்ல காரியம் செய்யறீங்க தெரியும்…”

“ஆனால் இவனை சேர்த்து ஃபீஸ் இல்லாம படிக்க வைக்கிறீங்களே..அது தான் சிறப்பு…”

“இவங்க குடும்பமே மத்தவங்களுக்கு உதவி செய்யும் குடும்பம் சார்…

இது போல பசங்க இப்போ ஆயிரத்தில் ….லட்சத்தில் ஒருவன்…”

“இவனுங்களை கொண்டாடுங்க சார்…”நாங்களும் எங்களால ஆனதை உதவுகிறோம்…”

“தினம் ரவுடிங்க கூட தான் குடித்தனம் செய்யறோம்..” “இது போல நல்லவங்க செய்தி எப்பவாவது தான் கேள்வி படறோம்…அந்த பத்திரிக்கை காரனை நாங்க பாத்துக்கறோம்… “

“அம்மா வெறும் வம்பு பேச அண்டை வீட்டுக்கு போகிறாள் என எல்லோரையும் போல தானும் நினைத்தது தவறு…”

“அவள் எவ்வளவு உதவி செய்திருந்தால் நமக்கு இவ்வளவு சாதகம் செய்திருக்கிறார் கேசவன் அங்கிள்…”என நினத்தான்.

“வரேன் சார்…”

சேர்மனிடம் சொல்லிக் கொண்டு கையில் தொப்பியும் இன்னொரு கை

மோகனின் தோளில் இருக்க வெளியே வந்தார்…எஸ்.ஐ கேசவன்..




ரகோத்தமன் இது வரை படபடப்பாக இருந்தவர்…. இந்த காட்சியை பார்த்து சற்றே ஆறுதல் அடைந்தார்..

” அப்புறம் ஒரு நாள் வா மோகன் டேசனுக்கு….”

“வரேன் சார்…முரளிய கூட்டிக்கிட்டு…”

“வேற வினையே வேண்டாம்…அவன் லாக் அப் உள்ளே போய் உக்காரணும் பான் …

அப்புறம் ரவுடிங்க கிட்ட உக்காந்து எப்படி திருடினான் நு கதை கேட்பான்….”என சொல்லு சிரித்து விட்டு போய் விட்டார்..

” வா உடனடியா வீட்டுக்கு போகணும்…”

வீணா நேத்து இரவிலிருந்து ஒண்ணும் சாப்பிடலை….இப்போ மூர்ச்சை ஆகிட்டாளாம்…”

இவனையும் பரபரப்பு தொற்றிக்கொள்ள,

அவன் கண்களில் வழிந்த நீரைப் பார்த்தார் ரகோத்தமன்.




What’s your Reaction?
+1
9
+1
9
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!