Serial Stories நீ காற்று நான் மரம்

நீ காற்று நான் மரம்-18

18

“நான் என்றும் உன்னவன் தான் … நீயும் நன்றாக படித்து முன்னேறு…..

உன் அப்பாவும் நல்லவர் தான். அந்தஸ்து பற்றி கவலை வேண்டாம். நான் நல்ல வேலைக்கு சென்றவுடன் உன் வீட்டு ஆதரவுடன் உன்னை கை பிடிப்பேன்…”

“என்றும் உன் மோகா….”

வீணா தங்களது அந்தஸ்து உயர்ந்து கொண்டே போவது பற்றி கவலைபட்டு எழுதிய கடிதத்துக்கு , மோகன் எழுதிய துண்டு சீட்டு பதில் தானே மேலே உள்ளது…

அது தாராவுக்கு தீ பற்றிய கலவரத்தின் போது , ரசிகாவின் பர்ஸிலிருந்து கீழே விழுந்து அவள் துப்பட்டாவில் ஒட்டிக் கொள்ள…..

ஆர்வத்தில் அந்த துப்பட்டா தாராவின் உடலை மறைக்க மோகன் எடுத்து மூடினானே.

அது தான் இப்போது ராமசாமியின் கையில் கிடைத்தது….ஏற்கனவே கல்லூரி சேரும் முதல் நாள்….

“மோகனுடன் நான் கேம்பஸ் சுற்றிப் பார்த்துவிட்டு வருகிறேன்…” என சொன்ன தாராவைக் கடிந்து அழைத்துப் போன

ராமசாமி இவற்றை எல்லாம் முடிச்சு போட்டு பார்த்தார்…

ஒரு சாதாரண கணக்குப் பிள்ளையின் பையன்….”என்ன தான் இந்த கால மொழியில் அக்கவுண்டண்ட் என சொல்லப்பட்டாலும்…”

தனக்கு மாப்பிள்ளையாக வருவதா…?”

இதனை முற்றிலும் அழிக்க ஒரே வழி கோவிந்தனை வேலைய விட்டு நீக்கி விட்டால் போதும்..,.என தப்புக் கணக்கு போட்டார்…

ஏனென்றால் அவர் ஆரம்ப நினைவே தவறாயிற்றே….

கோவிந்தன், முதலாளி முதலில் கொடுத்திருந்த பஜாஜ் M80 யையும் அவரிடம் கொடுத்து விட்டு பதிலுக்கு கொடுத்த டிவிஎஸ் 50 ஐயும் இன்று அவர் வீட்டிலேயே விட்டு விட்டு வீட்டுக்கு கால் ஓய நடந்து வந்தார்….

இதற்குள் ருக்கு,

மோகன் இன்று கல்லூரியில் செய்த வீர தீரங்களை கேட்டுவிட்டு அக்கம் பக்கத்தில் சொல்ல “

அவர்களும்..

“வெறுமே புகையாதே….இன்னிக்கு தீ வெளியே தெரிய ஆரம்பித்து விட்டதே….”

என புரளி பேசுவதற்கு காரணமானது..

“ரசிகா சில்க்ஸ் மற்றும் வேலூர் கல்லூரியின் விளம்பரம் கிடைக்காத கோபத்தில் இருந்த ஒரு புலனாய்வு பத்திரிக்கை அடுத்த நாள்…..

“கல்லூரியில் மாணவிக்கு தீ!!!!!….காதல் காரணமா!!!!…”என

கன்னாபின்னா கவர் ஸ்டோரி எழுத……”

ஒரே நாள்….. ஒரே நிகழ்வு

கோவிந்தன் குடும்பத்தை புரட்டிப் போட்டது…




கோவிந்தன் இவற்றைப் பார்த்து விட்டு,

மோகனிடம்

“சொல்லு மோகன் என்ன நடந்தது….” என கேட்க…

“அப்பா….எல்லோரும் திடீரென கத்த, தாராவின் உடலில் தீ……அவளது

உயிரை காப்பாற்ற உடனடியாக இந்த காரியத்தை செய்தேன்…”

“ஏன் மோகன் ….” “மற்றவர்கள் யாரும் ஒன்றும் செய்யவில்லையா….”

இயல்பான சந்தேகத்தில் கேட்க …

“அவங்க எல்லாம்.பயத்தில் இருந்தாங்க போல….”

“தாரா…எனக்கு மட்டுமல்ல எல்லாருக்கும் தோழிதான்பா…..”

“ஆனா அதற்கு மேலா நாம இன்று சாப்பிடும் சாப்பாடு அவங்கப்பா கொடுக்கும் சம்பளத்தாலே தானேப்பா….”

”  அதனால் தான் மத்த சமயத்தில் அவளை அலட்சியம் செய்தாலும் அவள் உயிருக்கு ஆபத்து வருகிறது என பார்த்தவுடன் அப்படி பண்ணிட்டேன் பா…”

மோகன் சொன்ன அந்த பதில் கோவிந்தனின் கண்களில் நீரை வரவழைத்தது..

மகனை அருகில் அழைத்து அணைத்துக் கொண்டார்…

“ஏன் பா அழறீங்க…நான் செஞ்சது தப்பா…”

“நீ என் பிள்ளையாயிற்றே.. அது தான் உன் ரத்தத்திலும் எஜமான விசுவாசம்…”

” முதலாளிகளுக்கு பணம் ,  அந்தஸ்து தான் முக்கியம்..அதனால் தான் உன்னை அவள் விஷயத்தில் ஜாக்கிரதை யாக இருக்க சொன்னேன்…”

“ஏன்பா….”.  இப்போ என்ன ஆச்சு…”தாராவுக்கு ஒண்ணும் ஆகலையே…சின்ன காயங்கள் தான்…..” அப்பா வின் கண்ணீரின் காரணம் புரியாமல் சொல்லி விட்டு வழக்கம் போல கல்லூரி கிளம்பி விட்டான்..

பத்திரிக்கை எதுவும் படிக்கும் வழக்கமில்லாத ருக்கு …

“இன்னிக்கு ஏன் லேட்டா போறீங்களா…”

ஒண்ணா மதியம் சாப்பிட்டு போயிடுங்க….”

“இனிமேல் கடைக்கு போகத் தேவையில்லை…

முதலாளிக்கு இனிமேல் நான் தேவையில்லையாம்…”

“என்னங்க இது….குண்டை தூக்கி போடறீங்க….”

விஷயம் அவர் சொல்ல கேள்விப்பட்டு புடவை தலைப்பை வாயில் மூடி விக்கி விக்கி அழ ஆரம்பித்தாள்..




அம்மா தனத்துக்கு போன் போட்டு ஒரு குரல் அழ….

“அழாதடீ….இந்த த்ரிவிக்ரமன் கைவிடமாட்டான்…தன் பக்தனான மகாபலிக்கே சோதனை செய்து ஆட்கொண்டவனாச்சே…”

நாளைக்கே நான் கிளம்பி வரேன். பொறுத்துக்கோ….”

அம்மா வருகிறாள் என்ற தெம்பு…அவளுக்கு கொஞ்சம் தைரியத்தை வரவழைத்தது.

கல்லூரிக்கு சென்றவுடன்சேர்மன் கூப்பிட்டு அனுப்ப மோகன் சேர்மன் ரூமுக்கு சென்றான்..

நேற்று நடந்த நிகழ்வுக்கு ஒரு விசாரணை குழு அமைத்து உண்மையை கண்டறியவும் பத்திரிக்கைக்கு பதில் அனுப்பவும் கல்லூரி பேரை நிலை நிறுத்த என்ன வேண்டுமானாலும் செய்ய தயாராக இருந்தார்கள்….

ஒரு பத்து மாணவ மாணவிகள், இரண்டு டியூட்டர்கள் மற்றும் லேப் உதவியாளர் இவர்களும் ஏற்கனவே அங்கே இருந்தனர்…

எல்லோரும் மோகனை ஒரு மாதிரி பார்க்க பத்திரிக்கை செய்தி பற்றி அறியாத மோகன் ஒன்றும் புரியாமல் உள்ளே போனான்..

நேற்று என்ன நடந்தது என கேட்டதற்கு உண்மையை சொன்னான்..

கல்லூரி முதல்வர் எல்லோருக்கும் வராத அக்கறை உனக்கு ஏன் என கேட்க…

“அப்பாவிடம் சொன்ன அதே பதில்….”

“தாராவின் அப்பா கொடுக்கும் சம்பளத்தில் தானே சார்..எங்க குடும்பமே வாழுது…அதனால் தான் இயற்கையா பதறி விட்டேன்..”

“ஓ… அப்படி என்றால்…இந்த கல்லூரி கொடுக்கும் இலவச படிப்பினால் தானே நீ இங்கிருக்கிறாய்…” இது சேர்மன்..

“ஆமாம் சார்…கண்டிப்பாக….நான் என்ன செய்ய வேண்டும்..”

“இந்த கல்லூரி உன் மீது என்ன நடவடிக்கை எடுத்தாலும் நான் கட்டுப் படுகிறேன் என எழுதி கையெழுத்து போடு…”

நடப்பது எதுவும் தெரியாத மோகன் சரியென பேனாவில் கையெழுத்திடுகிறான்…

இதுவரை அமைதியாக இருந்த விசாரணை குழுவின் அங்கத்தினரான

ரகோத்தமன்…

சேர்மனிடம்

“சார்..நீங்க அனுமதித்தால்…எல்லோரையும் தனி தனியே ஒரே ஒரு கேள்வி கேட்கிறேன்…

அதற்கு பிறகு நீங்க முடிவெடுக்கலாம்…”

“மத்தவங்க சரியென சொன்னால் எனக்கும் ஓகே…”

ஒவ்வொரு மாணவர்களிடமும் தனித் தனியாக ஒரே கேள்வி கேட்டார்..

“தாரா அன்றைக்கு என்ன உடை அணிந்திருந்தார்….??”

எல்லோர் பதிலும் பதிவு செய்யப் பட்டது…

அனைவரும்

“வயலெட் டாப்ஸ் பிளாக் பாட்டம்…என சொல்ல…

மாணவர்களில் சிலர்

கூடுதலாக…” கரு நீல கலரில் பூ போட்ட இன்னர்ஸ் சார் ..”

என சொல்ல…

விசாரணை குழுவில் இருந்த இரு பெண் ஆசிரியைகள் தலை குனிந்தனர்…




மோகனையும் அதே கேள்வி…சேர்மனே அதட்டலாக கேட்க…

“தாரா…எல்லோர் போலும் ஏப்ரன் போட்டிருந்தா சார் இருந்தாலும் தீ சுடியில் பட்டு பரவிவிட்டது சார்…”

‘தாரா ஏப்ரன் போடவில்லை என சந்தேகிக்கறார்களோ’ என நினைத்து பதில் சொன்னான்..

“அது இல்லை என்ன கலர் ட்ரெஸ்…”

மோகன் இப்போது முதல் முறையாக பதில் சொல்லத் தெரியாமல் விழித்தான்….”தெரியவில்ல சார்…”

முதல்வர் இப்போது

“சரி மோகன் நீ இப்போ போகலாம்….”

என…

“சார் ….எனக்கு அவ என்ன ட்ரெஸ் போட்டிருந்தானு கவனிக்கலை சார்…என் சட்டையை மாட்டி விட்டுட்டேனே சார்…”

இது தெரியாததால் நான் சொல்வதை ஏற்காமல் இருந்திடாதீங்க…அது தான் சார் உண்மை…”

சரி….அப்புறம் என்ன நடவடிக்கை என பார்க்கலாம்.நீ கிளாசுக்கு போ….” சேர்மன் சொல்ல மோகன் செல்கிறான்..

ரகோத்தமன் இப்போது

“நீங்க எல்லோரும் சொல்லுங்க மோகன் ஏதாவது தவறு செய்தானா…???? ” “தவறானவனா…???” “இல்லை மற்ற மாணவர்கள் தவறானவர்களா????”

என குழுவில் இருந்த இரண்டு ஆசிரியைகளைபார்த்துக் கொண்டே கேட்டார்….”

விசாரணையின் முடிவு…

                           தெரியும்….




What’s your Reaction?
+1
8
+1
8
+1
0
+1
1
+1
0
+1
0
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!