Serial Stories நீ காற்று நான் மரம்

நீ காற்று நான் மரம்-17

17

மோகனின் இடையை பிடித்துக் கொண்டு மோபெட்டில் பயணித்த வீணா பஸ் ஸ்டாப்பில் இறங்கிக் கொண்டாள்…இருவரும்

இன்னும் கொஞ்சம் நேரம் நீண்டிருக்கலாமே இந்த பயணம் என நினைத்தனர் ..

அடுத்த சில நாட்களில் வீணாவுக்கும் புது பள்ளியில்  புது நண்பர்கள் சேர்ந்து பழக ஆரம்பித்து விட்டாள்..

இவளின் வீணை, வயலின்,  பேச்சு எல்லாவற்றினாலும் நட்பு வட்டம் அதிகமாக ஆரம்பித்தது…

முரளிக்கும் மெதுவாக படிப்பில் பிடிப்பு வர ஆரம்பித்தது…9ஆம் வகுப்பு.

முரளியும் இசைக்கருவிகளில் அதிக திறமை பெற ஆரம்பித்தான்…

மோகனுக்கு நட்பு வட்டம் அதிகமாக ஆரம்பித்தது..

முதல் நாளே மேடையில் பேசி ஹீரோ ஆன மாணவனின் அருகில் இருப்பதை மாணவ மாணவிகள் விரும்ப ஆரம்பித்தனர்…

மோகன் வழக்கம் போல பாடம் நடத்தும் போது கவனித்து,  பின்னர் நூலகத்தை சரியாக பயன் படுத்தி நோட்ஸ் தயாரிக்க ஆரம்பித்தான்..

இவற்றை நட்பு வட்டாரத்தில் பகிர்ந்து அவர்களது சந்தேகத்தை நிவர்த்தி செய்ததன் மூலம் ,தானும் பயன் பெற்றான்…

மது ,ரசிகா,  கைலாஷ் மோகன் என ஆரம்பித்த நட்பு வட்டம் ஒவ்வொரு நாளும் பெருக ஆரம்பித்தது….

மோகன் இப்போதெல்லாம் முரளியை பாட்டு டீச்சர் வீட்டிலிருந்து கூப்பிட்டு வரப் போவதில்லை…. அதற்கு அவசியமும் இருக்கவில்லை..

வீணா அன்று கடைசியாக சொன்ன வாக்கியங்களை நினைவில் கொண்டான்…

இடையை பிடித்துக் கொண்டு வரும் போது…..  “இனிமேல் நாம இடையில் ஏற்பட்ட தடங்கலுக்கு வருந்த வேண்டிய அவசியம் இருக்காது…”

“நீ நன்றாக படி மோகன்…”

“எனக்கும் உன் மேல் நம்பிக்கை இருக்கு…”

“எனக்கு புது செல் போன் வாங்கி கொடுக்கும் போது அப்பா ஒரு நிபந்தனையிட்டார்..”

“அதிக நேரம் யார் கூடவும் பேசக் கூடாது என….”

“அதனால் உனக்கு என் நம்பர் தர மாட்டேன்…நீயும் கேட்காதே…”

“ஏன்… நான் அதிகம் பேச மாட்டேன்…நீ எனக்கு கொடு” என்றான் மோகன்..

”  என்னால் உனக்கு போன் பண்ணிட்டு சீக்கிரம் போனை கட் பண்ணுவேன் நு நம்பிக்கை இல்லை…..”

“அதான் இந்த சுய கட்டுப்பாடு..”

சொல்லி விட்டு இறங்கி போய் விட்டாள்..




அதனால் வீணா வுடன் மாதம் ஒரு முறை வீட்டுப்போனில் நலம் விசாரிப்பான்..

ஞாயிறு அன்று வீணாவை பார்க்கும் சாக்கில் மது வைப் பார்க்க அவன் வீட்டுக்கு போக ஆரம்பித்தாள் ரசிகா.

வீணா மதுவிடம் கடிதம் கொடுத்தனுப்புவாள் மோகனுக்கு..

திங்களன்று மோகன் பதிலுக்கு துண்டு சீட்டில் பதில் அனுப்புவான் ரசிகா மூலம்.

திங்கட் கிழமை கல்லூரி வளாகத்தில் இருந்த வீணாவின் பள்ளியிலோ அல்லது அவளது வீட்டுக்கோ போய் கொடுத்து விடுவாள் ரசிகா…

மது , ரசிகாவிற்கு இந்த கவலை எல்லாம் இல்லை.

அவர்கள் சாதாரணமாக பேசிக் கொள்ள ஆரம்பித்து நட்பு இறுக ஆரம்பித்தது.

“போக போக எப்படி இருக்கும் பார்த்துக்கலாம்..”என ஒரு பிராக்டிகலா வாழ்க்கையை அணுக ஆரம்பித்தார்கள்..

அதனால் இருவர் இடையே பெரியதாக சண்டை, சச்சரவு , தனக்குத் தான் இவன், இவள் என்ற நினைப்பு இல்லாமல் பழகினர்.

இதற்கிடையே

“கெமிகல்” சேர்ந்த தாரா ,

இப்போது தன் அந்தஸ்தின் காரணமாக மெதுவாக மோகனை அவ்வளவாக கண்டு கொள்வதில்லை..

ஆனால் தான் கொஞ்சம் அழகு, அதிகமான அந்தஸ்து என்பதன் காரணமாக எல்லோரும் தான் சொல்வதைக் கேட்க வேண்டும் என நினைக்க ஆரம்பித்தாள்…

முதல் சில நாட்கள் இவளைச் சுற்றி அதிகம் சேர்ந்த நண்பர்கள் வட்டம் சில நாட்களிலேயே அவள் குணம் அறிந்து குறைய ஆரம்பித்தது..

“நட்புக்கு அந்தஸ்தும், அழகும் ஒரு பொருட்டல்ல… “என அவளுக்கு இன்னும் புரியவில்லை.

ரசிகாவும், மதுவும், தாராவைப் பற்றி மோகன், முரளி, வீணா இவர்கள் மூலம் அறிந்து அவளிடம் அதிகம் பேச்சு வைத்துக் கொள்வதில்லை..

தாராவுக்கு ரசிகாவை பார்த்த முதல் நாளே பிடிக்கவில்லை…

தனக்குப் போட்டியாக மோகனின் கையை பிடித்து குலுக்கினாள்…அதுவும் இல்லாமல் மோகன் இவளிடம் இயல்பாக பேச ஆரம்பித்தானே…

ரசிகா தன் இயல்பான இளமையான பேச்சால்

நட்பு வட்டாரத்தில் பிரபலமாகிவிட்டாள்..

தாரவின் பள்ளித் தோழர்கள் , தோழிகள் கூட ரசிகா வந்தால் அவளிடம் விடைபெற்று ரசிகாவிடம் அரட்டை அடிக்க சென்று விடுகின்றனர்….

“இப்போது தன் வகுப்பில்…. ஏன் அனைத்து வகுப்பிலும் இருக்கும் ஆணழகனான மதுவும் இந்த ரசிகாவிடம் இழைகிறானே…”

“இந்த மதுவை தன் பக்கம் இழுத்தால் தான் இந்த ரசிகாவின் கொட்டம் அடங்கும்” என நினைத்தாள் தாரா..

இவ்வாறாக ஒரு வருடம் ஓடி விட்டது…

வீணா +2 முடித்து விட்டாள்.

அவளும் இப்போது அதே கல்லூரி குழுமத்தில் பி.காம் சேர்ந்து விட்டாள்..

முரளி பத்தாவது வகுப்பு…. படிக்க ஆரம்பித்து விட்டான்..




மோகனின் இரண்டாம் வருடம்….

பயோடெக் , கெமிகல் இரண்டுக்கும் பொது வான வேதியியல் செயல்முறை வகுப்பு…..

மது, ரசிகா, கைலாஷ்

மோகன், தாரா அனைவரும் ஒன்று சேர…..

மதுவும் , ரசிகாவும் பேசிக் கொண்டு இருந்ததை பார்த்துக் கொண்டிருந்த

தாரா…..

ஆசிரியை சொல்லிக் கொண்டிருந்த பாதுகாப்பு விதிகளை கவனிக்கத் தவறினாள்..

ஈதர் திரவத்தை செயல் முறை மேஜைக்கு எடுத்து வரக் கூடாது என்பதை மீறி எடுத்து வர…… அங்கங்கே எரிந்து கொண்டிருந்த புன்சன் விளக்கில் ஈதர் எரியத் துவங்க …

மீதமிருந்த ஈதர்

தாராவின் ஆடைகளில் பட்டு அங்கும் தீ பற்றி எரிய ஆரம்பித்தது…

யாவரும் என்ன செய்வது என பிரமிப்பில் இருக்க,

மோகன் சட்டென எரிந்து கொண்டிருக்கும் தாராவின் ஏப்ரன், மற்றும் மேலாடையை கழற்றி எறிந்து தன் சட்டை யை போர்த்தினான்….

கீழ் சுடியை கிழித்து ..

பக்கத்தில் இருந்த் ரசிகாவின் துப்பட்டாவை உருவி ஒரு வேட்டி போல சுற்றி தாரவை கையில் அள்ளினான்….

அதற்குள் கல்லூரி ஆம்புலன்ஸ் தகவலறிந்து வர

தாராவை ஏற்றி, இன்னும் ஒரு மாணவியுடன் தானும் ஏறினான்..

தகவலறிந்து அந்த பக்கம் வந்த ரகோத்தமன்…. அரைகுறை ஆடைகளில் இருந்த தாராவை மோகன் சுமந்து சென்றதை பார்த்தார்.

தாராவின் காயங்களுக்கு முதலுதவி செய்து அதிகம் பயத்திலிருந்த தாராவை வீட்டுக்கு அனுப்ப நிர்வாகம் முடிவு செய்ய,

மோகன் தானே அவளை கூட்டிப் போய்

வீட்டில் விடுகிறேன் என கூறிச் சென்றான்.. பயத்தை போக்க தாராவும் மோகன் வரட்டும் என சொல்ல ..அவனுடன் ஒரு பெண் ஆசிரியை காரில் வர, இதற்குள் விவரம் அறிந்து

தாராவின் வீட்டில் கூட்டம் கூட….,

மோகன் வெறும் பனியனும் பேண்டுடனும் வர….,

தாரா மோகனின் சட்டையிலும் ஒரு மெல்லிய துப்பட்டாவை சுற்றியும் கைத்தாங்கலாக

அழைத்து வரப் பட,

இதனை பார்த்த ராமசாமி,

ஏன் மோகன் ….உங்க காலேஜ் ல பெண் யாரும் இல்லையா…,கூட வர என கேட்க,

“மேம் வந்திருக்காங்க…”

“அவங்க எல்லாரை விட தாராவை எனக்கு தானே அதிகம் தெரியும் …தாராவும் என்னை வா..” என்றாள் அங்கிள் என்கிறான்..




மோகன் விடை பெற,

கோவிந்தனும் தாராவை பார்க்க வர,

கோவிந்தனை தனியே கூப்பிடுகிறார் ராமசாமி…

மோகனுக்கு ஏதோ வெகுமதி கொடுக்கப் போகிறார் முதலாளி என நினைத்த கோவிந்தனிடம்,

“நாளை காலைல ஒரு நல்ல நேரம் பார்த்து உங்க கணக்கு எல்லாத்தையும் சூரி யிடம் கொடுத்து விட்டு சம்பளம் செட்டில் பண்ணி வாங்கிக்குங்க…..”

என சொல்லி உள்ளே போகிறார் ராமசாமி..

என்ன செய்வது என அறியாமல் அங்கேயே வாசலில் இடிந்து உட்காருகிறார் கோவிந்தன்.




What’s your Reaction?
+1
6
+1
10
+1
0
+1
0
+1
0
+1
0
+1
3
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!