Serial Stories

நீ காற்று நான் மரம்-16

16

“மோகனுடன் புதியதாக ரசிகா என்ற பெண்ணை பார்த்த வீணா…..நாம சொன்னா மாதிரி இவன் கண்ணில் மட்டுமல்ல இப்போ பேச்சிலும் காந்த சக்தி இருக்கு போல….இப்படி பெண்கள் வந்து ஒட்டிக் கொள்கிறார்களே…..”

என நினத்து,

“மோகன் நீயும் பாட்டு டீச்சர் வீட்டுக்கு வாயேன்..அட்ரெஸ் தெரியுமா …” என்றாள் வீணா….

“ரசிகா கிட்டே கேட்டு கிட்டு வரேன்…அப்படியே முரளியையும் கூட்டிக் கிட்டு போயிடுவேன்…”

“எனக்கு தெரியும் பாமா டிச்சர் வீடு ..நான் கூட்டிக்கிட்டு போறேன்..என்றாள் ரசிகா”

“நான் இங்கே என் ஃப்ரெண்ட் கைலாஷ் வீட்டுக்கு வந்தேன் வீணா…”

“ரசிகா நேத்து எனக்கு ஃப்ரெண்ட் ஆனாங்க.. அவங்க வீடும் இதே பெல் வீட்டு குடியிருப்புல தான்.”

“அது தான் ஃப்ரெண்ட் நு சொல்லியாச்சே….அப்புறம் அவங்க… இவங்க… என்ன??? ஃப்ரெண்ட் ஆயிட்டா நு சொல்லு….” என்றாள் ரசிகா….

” அப்படில்லாம் ரொம்ப இடம் குடுத்துடாத ரசிகா …”

“இந்த மோகன் அப்புறம் உரிமைல ” டீ” போட்டு கூப்பிடுவாரு….”

“உனக்கு தெரியாது மோகனைப் பத்தி….”

வீணா மோகனை பார்த்துக்கொண்டே சொன்னாள்…

“அப்ப உனக்கு இந்த மோகனை முழுக்க தெரியும்நு சொல்லு…”. லேசா கண்ணடித்தாள் ரசிகா…

மோகனும் மதுவும் இவர்கள் பேசுவதை ரசித்துக் கொண்டிருக்க…

மோகன் “இந்த பெண்கள்தான் எப்படி சட்டென பேசி பழகுகிறார்கள்….”

எனக்கு கைலாஷ் இப்போ தான் நல்ல பழக்கமாகி இருக்கான்….இந்த மது எப்படியோ….பின்னாடி தான் தெரியும்..

“உங்களுக்கு மது என்பது முழு பேரா?? ” இப்போது மோகன் மெதுவாக பேச்சை ஆரம்பித்தான்…

“இல்லே…என் முழு பேர் மது சாரங்க்”

“சாரங்க் உங்க அப்பா பேரா…” இது மோகன்..

“மது சாரங்க் என்பது அம்மாக்கு பிடிச்ச இந்துஸ்தானி ராகம்…”

அப்பா ஹரித்வார் பெல் கம்பெனியில் இருந்த போது இந்துஸ்தானி கத்துக்கிட்டாங்க எங்க அம்மா…”

“பாமா டீச்சருக்கு ‘மது சாரங்க்’ ராகம் பிடிக்குமாமே….அட..

அப்போ வீணாக்கும் அந்த ராகம் பற்றி தெரியுமா…பிடிக்குமா??

மதுவை பார்த்துக் கொண்டே வீணாவிடம் கேட்டாள் ரசிகா….

” எனக்கு மது சாரங்க் பற்றித் தெரியும்…”

“ஆனா எனக்கு எப்பவுமே கர்னாடக “மோகன” ராகம் தான் பிடிக்கும் “

தலையை க் குனிந்து கொண்டு கண்ணை மட்டும் மோகன் பக்கம் திருப்பிச் சொன்னாள் வீணா.

மோகன் கேட்க நினைத்து மனத்தைக் குழப்பிக் கொண்ட விஷயத்தை ரசிகா அலட்சியமாக கேட்டு விட்டாள்..

வீணாவும் கோடி காட்டுகிறாள்..

“நான் தான் ஒன்றுமில்லாத விஷயத்தை இப்படி ஊதிப் பெரிதாக்கிக் கொண்டேனோ???”

இன்று இங்கே வர காரணமான முரளிக்கும் கைலாஷுக்கும் மனத்தில் நன்றி தெரிவித்து கொண்டான் மோகன்…

“இந்த கைலாஷ் எங்கே இன்னும் காணோம்…”

நான் வேணா போய் பார்க்கட்டுமா???” என்றான் மோகன்..

“அதற்குள் கைலாஷே வர..

“சாரிடா…உள்ளே லேட்டாயிடுச்சு…”




“நான் சொல்லலை.. கடலை தீந்ததும் வந்துடுவான் நு….” என்றாள் ரசிகா.

“ஏண்டா மோகன் ….இந்த ரசிகாவை எப்படிப் பிடிச்சே….இவ சின்ன வயசுலேந்து பெரிய அராத்துடா…பெல் கேம்பஸே நடுங்கும்…”

” மவனே தட்னா தாரந்துடுவ….உன் மேட்டரெல்லாம் சொல்லி உன்னை பீஸ் பீஸா கீசிடுவேன் ஜாக்ரத…”

“அம்மா தாயீ….நீ ஒரு மாடர்ன் ட்ரெஸ் போட்ட சொர்ணாக்கா….” உன் கிட்டே முடியுமா…”

“மவனே அந்த பயம் இருக்கட்டும்…” என ரசிகா சொல்ல,

ரசிகா , கைலாஷின் பேச்சில் அனைவரும் சிரிக்க ஒரு நண்பர் குழு ஒன்று சட்டென அங்கே உருவாகி விட்டது….

“வாடா போகலாம்…” கைலாஷ் மோகனை கூப்பிட்டுப் போக…

“மதுவும் வீணாவும் கிளம்ப ,

ரசிகா “நான் வந்து உன்னை பாமா டீச்சர் வீட்டுக்கு கூட்டி போகிறேன் ஒரு அரை மணி நேரம் கழிச்சு…”என்றாள்.

“வீணா…முரளிக்கு வீணை கிளாஸ் முடிஞ்சுடுத்தா….எப்ப ரெடியாவான்..???”

“முரளி வீணை, புல்லாங்குழல் கிளாஸ் எல்லாம் முடிஞ்சு டீச்சர்கிட்டே அரட்டை அடிச்சுட்டுருக்கான்…நான் இவன் கூட கேம்பஸ் சுத்தி பாக்க வந்தேன்….”

“நீ அப்புறம் வா…”

மோகன் கைலாஷ் வீட்டில் நுழைந்து அவன் அப்பா அம்மா எல்லோருடனும் பேசிக் கொண்டே இருந்தான். மோகன் இப்போ நல்லா பேசறானே…. முன் இருந்த கூச்சம் போயிட்டதே….” என மோகனை அளந்து கூறி விட்டாள் கைலாஷின் அம்மா…

அரை மணிக்கு மேலே ஆகிவிட்டது….

வாசலில் இருந்து உள்ளே

நுழைந்தாள் ரசிகா…

“மோகன் போலாமா…???”

“என்னடி ரசிகா இன்னும் உன்னுடைய இன்றைய சுற்றுப் பயணம் முடியலயா??” என்றாள்.கைலாஷின் அம்மா..

” இன்னும் முடியல ஆண்டி…”

வெளியே வந்து வழி அனுப்பிய கைலாஷ்..

“நான் கூப்பிட்டு போயிருப்பேனே .. மோகனை….”

“நீ எதுக்கு …ஏதாவது மேட்டரா…”

“ஆமாண்டா….இந்த பாமா டீச்சர் பையனாமே….அவன் வந்து ஒரு பதினஞ்சு நாள்.இருக்கும்..இன்னி வரைக்கும் பாத்துட்டு பாத்துட்டு போறான்….இன்னிக்கு அவன் வீட்டிலே போய் டைரக்ட் அட்டாக் பண்பப் போறேன்….”




கைலாஷும் ரசிகாவும் இப்படி ஒரு விஷயத்தை அனாயசமாக கையாள்வதை பார்த்த மோகனுக்கு ..

“படித்தால் போதுமா…பழக வேண்டாமா….”

என்ற தாரா எப்போதோ கேட்ட கேள்வி வந்து போனது…

தான் இப்போது தான் இவற்றை பார்த்து, கேட்டு உணர ஆரம்பித்திருக்கிறோம்…”

வாழ்க்கையில் நண்பர்கள் , அவர்களுடனான நட்பு என்பது மனத்தின் வேதனைக்கு மிகச் சிறந்த வடிகால் போல…அதனால் தான் இவர்கள் ஜாலியாக இருக்கிறார்கள்..என நினைத்துக் கொண்டான்…

ரசிகா ஸ்கூட்டியில் செல்ல கூடவே டிவி எஸ் 50 இல் மோகன் செல்ல…

“எனக்கே தெரியும் ரசிகா அட்ரெஸ்….முரளி சொல்லிருக்கான்…நானே போயிக்கறேன் என மோகன் சொல்ல….”

“.இந்த மதுவை எப்படி பழக்கப் படுத்திக் கொள்வது என நினத்தேன்…அதுக்காக சினிமால வர மாதிரி , அவங்க வீட்ல போய் பாட்டு கத்துக்கறது எல்லாம் என்னால முடியாத காரியம்…”

“உன் மூலம் இன்னிக்கு ஒரு கோடு போட்டுப்பேன்..இனி மெதுவா ரோடு போட்டுப்பேன்…

” ரசிகா….என்னாதிது….நீ மதுவை கரெக்ட் பண்ண என்னை கூட்டிக்கிட்டு போறயா.???

நேரடியாக மோகன் கேட்க,

“நீ மட்டும் அந்த வீணாவைப் பார்க்கத்தானே கைலாஷ் வீட்டுக்கு வந்ததா சாக்கு சொன்னே….”

“நீயும் வீணாவும் பாத்துக்கிட்ட அந்த கோலத்தைத் தான் நானும் பார்த்தேனே..அதுவும் தவிர அவளிடம் நீ கைலாஷ் வீட்டுக்குத் தான் வந்த மாதிரியும், என்னிடம்

பாட்டு டீச்சர் வீட்டு அட்ரெஸ் தெரியும் என்றும் சொல்லறே!!!!!….”

எப்படி நீங்கள்ளாம் இந்த விஷயத்துல இவ்வளோ தத்தியா இருக்கீங்க???.”

“நீ அவ கிட்டே இதை சொல்லிடாதே வீணா…”

“நான் சொல்லாமலும் வீணாவுக்கே தெரிஞ்சுப்பா…”

அப்போ என்னை தப்பா நினைப்பாளா வீணா…??

“மாட்டா…நீ தப்பானவனா தெரியலையே…”

“நீ வந்ததன் நோக்கம் அவளுக்கு தெரிந்தாலும் உன்னை கேட்க மாட்டா…

அதைத்தான் அவ உள்ளூர விரும்புவா…”

பழகிய சில மணித்துளிகளில் கல கலப்பாக பேசும் ரசிகாவையும் அவளது பார்வையையும் மோகனுக்கு பிடித்துப் போனது…

“தனக்கு பிடித்த விஷயத்தை பிடித்த மாதிரி, தனக்கு புரியற மாதிரி பேசுகிறாளே…”என எண்ணிக் கொண்டான்.

அங்கே பாமா டீச்சர் வீட்டில் “முரளி….., மோகன் வந்திருக்கான் …இங்கே வந்து உன்னைக் கூட்டி போறேன் நு சொன்னான்…..”

“நீ பஸ்ல போகாதே….” என்றாள் வீணா..

“மதியமே அண்ணா சொல்லிட்டான் கா என்னிடம்….”

“அட்ரெஸ் கேட்டு வாங்கிட்டான்….”

“ஓ…இவனை மொக்க மோகன் நு நெனச்சமே …இப்போ சக்க போடு போடறாரே மாப்ள….” என நினைத்துக் கொண்டாள்..

“என்றைக்காவது சமயம் வரும்….. அன்னிக்கு இருக்குடா உனக்கு…..”




மோகனுடன் வந்த ரசிகா…

“இது தான் அவங்க வீடு… நீ போய் முரளிய கூப்பிடு…அந்த சாக்கில் நானும் உள்ளே வந்துடுவேன்…

வாசலில் முரளி ரெடியாகி வீணாவுடனும் மதுவுடனும் பேசிக் கொண்டிருக்க…

முரளியை மோகன் ரசிகாக்கு அறிமுகப் படுத்த..

“தெரியுமே அண்ணா…இவங்க போட்டோ மைக்கோட இன்னிக்கு பத்திரிக்கைல வந்திருந்ததே…”

அட நான் நேற்றிலிருந்து ஏதேதோ நினத்து பத்திரிக்கைய படிக்கவில்லையே என எண்ணிக் கொண்டான்…

ரசிகா வீணாவைப் பார்த்து “நான் அடுத்த வாரம் வரேன், உன்னைப் பார்க்க…..”

“அப்படியே மது….உன்னையையும்..”

சொல்லிவிட்டு அகன்றாள் ரசிகா..

மோகன் முரளியை கூப்பிட்டு கிளம்பத் தயாராக..

முரளி “பஸ் ஸ்டாப் வரை யமஹால என்னை கூப்பிட்டு போங்க ….” என மதுவிடம் சொல்ல…

மோகன் “அப்போ வீணாக்கா எப்படிடா வருவா…நீ என் கூடவே வா…”

வீணா ..”முரளி..நீ மது கூட பைக் ல வா….”.. நான் மோகன் கூட வரேன்…மோகன் பின்னால் மோபெட் இல் ஏறிக் கொணாள்…

மோகன்

“யமஹால முரளி வேகமா போய் வெயிட் பண்ணுவான்..என் மோபெட் வேகமா போகாதே….”

“நீ மெதுவா போ…லூசா நீ…” “அதுக்கு தானே உன் கூட ஏறினேன்…”

அப்போது மதுவுடன் பைக்கில் தோளைப் பிடித்துப் போன வீணா இப்போது

மோகனின் இடையைப் பிடித்தாள்.

ஒரு ரவுண்டு போய்த் திரும்பி வந்து இவர்களை மீண்டும் தாண்டிப் போகும் மது இவர்களின் இந்த நிலையைப் பார்த்து

“என்ன வீணா….நல்ல நாளாப் பாத்து சேர்ந்துட்டாப் போலே…”

” சீ…அசிங்கம் பிடிச்சவண்டா நீ….” என்றாள் வீணா…

நேற்று இரவு இவனை பாதித்த இதே சொற்கள் இன்று இனித்தன மோகனுக்கு…




What’s your Reaction?
+1
7
+1
7
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!