Serial Stories நீ காற்று நான் மரம்

நீ காற்று நான் மரம்-14

14

மேடையில் இருந்து இறங்கிய மோகனை நிறைய பேர் சூழ்ந்து வாழ்த்து தெரிவித்து விட்டு ‘எந்த பள்ளி…??’, ‘தற்போது எந்த குரூப்…??’ என்றெல்லாம் கேட்டு விட்டுச் செல்ல, நிறைய மாணவிகளும் வாழ்த்து சொல்லி விடை பெற்றனர்.

“மோகன் , இவ என் பொண்ணு ரசிகா…., இவளும் பயோடெக்…கொஞ்சம் வெளிப்படையா பேசுவா….” ..” நீ எதையும் மனசுல வைக்காதே…” என சொல்லிய பெண்மணியை பார்க்கிறான் மோகன்….அவர் பக்கத்தில் இருந்த பெண்தான் தன்னைக் கேள்வி கேட்ட ‘ரசிகா’ என அறிகிறான்…

“பரவாயில்லை ஆண்ட்டி…

வெளிப்படை யா பேசறது நல்லது தானே…”

“அதுவும் தவிர என் நிலையை விளக்க

அருமையான சந்தர்ப்பம் ஏற்படுத்தி கொடுத்தாளே…அதற்கு நன்றி…”

“ஓகே…இனிமே நாம ஃப்ரெண்ட்ஸ்…”

கை குலுக்க கையை நீட்டினாள்…ரசிகா..

மோகனும் கை குலுக்கி,

“இப்போது மட்டும் நாம் எதிரியா….” என சிரிக்க…

“நீ தான் மேடைலயே பேசி கை தட்டல் வாங்கிட்டேயே…எப்படி இப்படி யெல்லாம் பேசறே… அப்புறம் பார்க்கலாம் …விடை பெறுகின்றனர் ரசிகாவும் அவள் அம்மாவும்..

” தாரா அப்பா ராமசாமியுடன் பிரின்சிபால் பேசிக்கொண்டு விடை பெற, இது வரை தாரா தன் அருகிலேயே நின்று கொண்டு இருந்ததை அப்போது தான் கவனித்தான் மோகன்..

ராமசாமி விடை பெற,

தாரா  “நீயும் வரயா மோகன் நாங்களும் அங்கே தானே போகிறோம்…”

“இல்லை தாரா …நான் இந்த கேம்பஸ் சுத்தி பாத்துட்டு அப்புறமா வரேன்…”

“நீங்க போங்க அங்கிள்…உங்களுக்கு வேலை இருக்கும்…”

“நானும் மோகனுடன் சுத்தி பாத்துட்டு வரட்டுமா அப்பா….”

“உனக்காகத் தனியே அப்புறம் கார் அனுப்ப முடியாது..அப்புறம் சென்னைக்கு போகணும் நான், என் கூடவே வா…..”  ராமசாமி குரலில் லேசான கோபம் தெரிந்ததை மோகன் கவனித்தான்.




மோகன் லேசான சந்தோஷத்துடன் கிளம்ப, ரகோத்தமன் வந்து,

“வா மோகன் எங்க வீட்டுக்கு…நாங்க இந்த குவார்ட்டர்ஸ்க்கு வந்து நீ இன்னும் வரவில்லையே..உங்க அம்மாவும் முரளியும் தான் வந்தாங்க….”

“அம்மாவிடம் சொல்லிவிட்டு ஒரு நாள் வரேனே அங்கிள்”

” வா…எங்க வீட்டுலேந்து போன்ல சொல்லிக்கலாம்”

என கையை பிடித்து தனது புதிய காரில் ஏற்றிக் கொண்டு சென்றார் ரகோத்தமன்..

வீட்டின் கதவை திறந்த விஜி, “அட வா மோகன்….

இங்கே தான் பயோடெக் சேர்ந்திருக்கே என வீணாவின் அப்பா சொன்னார் அன்னிக்கே..”

“அம்மா அப்பா முரளி எல்லோரும் சௌக்கியமா”…

“எல்லோரும் ஓகே ஆண்ட்டி…”

இருக்கையில் அமர்ந்து கொண்டு

வீட்டை கண்ணால் அளவெடுக்கிறான் ..

அழகான மூன்று பெட்ரூம், சமையல் அறை, பால்கனி எல்லாம்…14  ஆவது மாடி…வேலூரில் இப்படி ஒரு இடமா…என எண்ணும் போது…

“ரகோத்தமன் தன் அறையக் காட்ட, வழக்கமாக

புத்தகத்தை ரசித்து ஏதாவது ஒன்றை எடுத்துக் கொள்ளும் மோகன் இன்று வேறு யாரையோ தேடுகிறான்…

” அம்மாக்கு போன் போட்டுச் சொல்லிவிடு மோகன்..”

“அம்மா,நான் ரகோத்தமன் அங்கிள் வீட்டுக்கு வந்திருக்கேன். லேட்டாகும்..”..

” இப்போ தானே வீணா போன் பண்ணிச் சொன்னா….”

“நீ டிபன் சாப்பிட்டுவிட்டு இரவு சாப்பாட்டுக்கு தான் வருவே என்று…”

“போன் இங்கே இருக்கு,வீணாவும் காணோம்…எப்படிப் பேசினா…”

இந்தா மோகன் இந்த வாரப்  பத்திரிக்கைகள்..இங்கேயே ஒரு லைப்ரரி இருக்கு..எடுத்து வருவேன்…படித்துக் கொண்டிரு…நான் வருகிறேன்..”

“வீணா…மோகன் கூட பேசிட்டுரு…நான் சேர்மன் வீடு வரை போய் கொஞ்சம் இன்னிக்கு விழா கணக்கை செட்டில் பண்ணிட்டு வரேன்…”




“ஆஹா…வீணா வரப் போகிறா….ரகோத்தமனும் இல்லை…”

மோகனின் கண்கள் தேட ஆரம்பித்தது..

ஒரு மாசம் ஆயிற்றே பார்த்து, பேசி…”

எங்கே இவளைக் காணோம்…”

“அன்னிக்கு அவ்வளவு பேசினா …இன்னிக்கு ஆளையே காணோமே….”

“விஜி கையில் ஒரு ஜூஸ் டம்ளருடன் வருகிறாள்..”

இதை குடி மோகன்….வீணா கொஞ்சம் வேலையா இருக்கா…வந்துடுவா…நீ படிச்சிட்டுரு…”

“ஒரு பதினைந்து , இருபது நிமிடம்….ஒரே பக்கத்தில் இருக்க, ஒரு யுகம் போவது போல இருந்தது மோகனுக்கு…”

“மேடையில் படிக்கும் போது படிப்பேன்..” “சாப்பிடும் போது சாப்பிடுவேன்….” “என பேசிய நானா” ….இப்போது ஒரே பக்கத்தில் வைத்துக் கொண்டிருக்கிறேன்…”

“அப்போது நான் பொய் பேசி இருக்கிறேனா???…”

புத்தகத்தை மூடி வைத்து விட்டு ரூம் பால்கனியில் போய் வெளி உலகத்தை பார்க்கிறான்..வேலூர் கோட்டை , சி எம் சி கட்டிடங்கள்,  ஜலகண்டேச்வரர் கோவில் கோபுரம் அனத்தும் தென்பட, புதிதாக திறந்திருக்கும் தாரா ஸில்க்ஸ் வண்ண நியான் விளக்குகள் அணைந்து அணைந்து எரிய ,

தான் ஏதோ மாய உலகத்துக்கு வந்திருப்பது போல தோன்றியது..

திடீரென பக்கத்தில் ஜாதி மல்லி வாசனை மூக்கைத் துளைக்க,

பக்கத்தில் வெளிர் நீல சுடிதார், பிங்க் டாப்ஸ்,  காதில் பெரிய பெரிய சங்கிலித் தோரணங்கள், மல்லிகைப்பூ சகிதம் வீணா பிரசன்னமானாள்.

அவளையே வைத்த கண் வாங்காமல் பார்க்க,  வீணாவும் மோகனை ஒரு ஃபார்மல் சட்டை, பேண்டில் முதன் முறையாக பார்த்து கண்ணாலேயே விழுங்கினாள்..

” வா….உள்ளே….நான் எங்கே??? என தேடுவியோனு பார்த்தா…….நீ தாரா சில்க்ஸ் பேரைப் பார்த்து பல்லிளிச்சுட்டுருக்கே இங்கே..” வம்பிழுக்க தயாரானாள். வீணா…

மோகன் அவளின் அழகை பருகிக் கொண்டிருக்கிறான்..

“இத்தனை பெண்களைப் பார்த்தோம் இன்று..”

“ஆனால் இவள் இன்றைக்கு இன்னும் அழகாகத் தெரிகிறாளே…ஏன்????”




“என்ன ஏதோ நினைப்பு….

தாரா பத்தி பேசினேனுட்டு கோவமா….” அதெல்லாம் சும்மா…..”

விஜி வந்து சேர்ந்து கொள்ள ,

“இந்தா….. என்னிடம் அடம் பிடித்து தானே வீணா செஞ்சா…வெங்காய பஜ்ஜியும், ரவா கேசரியும்..உனக்கு பிடிக்குமாமே…”

“உனக்கு எப்படித் தெரியும்???”

“தனம் பாட்டி தான் சொல்லிருக்காளே..உன் ஜாதகமே என்னிடம் இருக்கு…”வீணா சொல்லிக் கொண்டிருக்க போன் அடிக்க உள்ளே செல்கிறாள் விஜி.

“அது சரி, நீ தான் காய் வெட்ட சொன்னா கைய வெட்டிப்பாயே…இது எப்படி செஞ்சே வெட்டிக்காம…, சுட்டுக்காம…”

“அதுவா…..அன்னிக்கு மூட் அப்படி எனக்கு…”

“இன்னிக்கு…”

“இது தான் சாக்குனு நீ கைய பிடிக்காதே…இப்போ ஒண்ணும் இல்லை…”

” இன்னிக்கு கூட்டத்திலே திடிர்னு என்னை பேச சொல்லிட்டாங்க…

முடிஞ்சு வரச்சே, ஒரு பொண்ணு என் கையை பிடிச்சு குலுக்கினா தெரியுமா????”

“சரி சரி… நீ என்னை வெறுப்பேத்தாதே…

நானும் உன்னை வெறுப்பேத்துவேன் அப்புறம்…”

அதற்குள் ரகோத்தமன் உள்ளே வந்து…

“இன்னிக்கு விழா வீடியோ சிடி வந்தாச்சு….மோகன் பேச்சு தான் ஹைலைட்…

வாங்க பார்க்கலாம் …  விஜியுடன் வீணாவும் உட்கார சிடி சுழலுகிறது…

” ராமசாமியை கேமரா காட்ட அப்போது மோகனும் பக்கத்தில் வர அவர் மோகனிடம் ஏதோ பேச, தாரா மோகன் பக்கத்தில் வந்து உட்கார்ந்து ஏதோ காதில் சொல்ல…. இவற்றை வீணாவும் பார்க்க, மோகன் வீணாவைப் பார்க்க……

உள்ளே புது ஒலியில் போன் ஒலிக்கிறது..




“வீணா..அப்போவே போனில் மது தான்…உன் செல் நம்பர் கொடுத்தேன்..

இப்போதும் மதுவாகத்தான் இருக்கும்..”போய் எடு……’

“ஒ…அப்பா….அப்புறம் இந்த வீடியோ பார்க்கலாம்..”

“பை மோகன் உள்ளே செல்கிறாள் வீணா…

மோகன் சிறிது நேரம் கழித்து கிளம்ப,

“வீணா மோகன் கிளம்புகிறானாம்…’என ரகோத்தமன் குரல் கேட்டு செல்லில் பேசிக் கொண்டே வருகிறாள்..

கண்ணாலும், கையாலும் பை சொல்கிறாள்..

மது வீணாவின் தோழி போல…. என மோகன் என நினைத்து லிஃப்டில் நுழைய, செல்லின் எதிர் முனைப் பேச்சைக் கேட்டு,

வீணா குபீர் சிரிப்பு சிரித்து ,

“அசிங்கம் பிடிச்சவண்டா நீ……” என வெட்கப்பட……,

லிப்ட் கதவு மூடிக் கொள்கிறது..

மோகன் இப்போது தனிமையில் கீழே இறங்குகிறான் தன் நினைவுகளோடு….




What’s your Reaction?
+1
9
+1
8
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!