Serial Stories மல்லிகைப் பந்தல்

மல்லிகைப் பந்தல்-19

(19)

அதிர்ச்சியில் உறைந்து உட்கார்ந்திருந்தான் உமாபதி. அவனால் நம்பவே முடியவில்லை. தன் ஆச்சி இத்தனைக் கொடூரமானவள் என்று. தனக்கு முன் பிறந்த இரண்டு பெண் குழந்தைகளையும் கள்ளிப் பால் கொடுத்து கொன்று விட்டு சாமி சாபம் அது இது என கதைக் கட்டிவிட்டிருக்கிறாள். கையிலிருந்த கதை சொன்ன அந்த வெள்ளை சட்டை அவனை நடுங்க வைத்தது.

மேற்கொண்டு படிக்கும் சக்தி இல்லை. ஆனாலும் படித்தான்.

‘நான் கண் விழித்தபோது இப்பொழுது இருக்கும் இதே அறையில் கட்டப்பட்டிருந்தேன். அறை மயக்கமான நிலை. எதிரே உன் ஆச்சி கையில் ஒரு டம்ளரை வைத்துக் கொண்டு என் வாயில் ஊற்ற முயன்றுக் கொண்டிருந்தாள். தண்ணீருக்கு ஏங்கிய என் நாக்கு தவித்து அதைக் குடிக்க துடித்தது. வாயில் இறங்கிய பின்தான் தெரிந்தது…அதன் கசப்பு…

குடிக்காமல் துப்பினேன். என் தலையைப் பிடித்து நிமிர்த்தி வலுக்கட்டாயமாக குடிக்க வைத்தாள்.  அரளி விதை கரைசல் அது. நான் முற்றும் மயக்கம் தெளிந்தேன். முரண்டுப் பிடித்தேன். கையும் காலும் கட்டப்பட்ட நிலையில் என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை. பலவந்தமாக குடிக்க வைக்கப்பட்டேன்.

மறுபடி என்ன நடந்ததென்பதே எனக்குத் தெரியவில்லை. அதன் பிறகு அவள் என் கட்டுக்களை அவிழ்த்துவிட்டுவிட்டு உன் அப்பாவிடம் நான் தற்கொலை முயற்சி செய்ததாக கதை பரப்பிவிட்டிருக்கிறாள். காரணமாக உன்னை சொன்னால் குடும்ப மானம் போய்விடும் என எனக்கும் உங்கப்பாவுக்கும் சண்டை, சடங்கு வீட்டுக்குப் போய்விட்டு வந்ததால் இறந்து போன பெண்களின் நினைவால் உண்டான மன அழுத்தம் என ஏதேதோ கதைக் கட்டிவிட்டிருக்கிறாள். 

நான் பிழைப்பேன் என அவள் நினைக்கவில்லை. பிழைத்துவிட்டேன். நினைவு வந்ததுமே நீ வீட்டைவிட்டு ஓடிவிட்டதாக கேட்ட செய்தி என் வயிற்றில் பாலை வார்த்ததைப் போலிருந்தது. எங்காவது இந்த உலகத்தின் ஒரு மூலையில் நீ உயிருடன் வாழ்ந்தால் போதும் என நினைத்து சந்தோ~ப்பட்டேன். 

நினைவு வந்ததும் மருத்துவமனையிலயே  ‘நான்…பாவி என் புள்ளைங்களைக் கொன்னுட்டியேடி’ ன்னு அவளைப்பார்த்து கத்த டாக்டர் அரளி விதையின் வீரியம் மனநலத்தை பாதித்துவிட்டது என சொல்ல இவளோ வீட்டுக்கு அழைத்து வந்ததும் உடனே எனக்கு பேய் பிடித்தவிட்டது என்று சாமியாடிக்கு பணம் கொடுத்து காதல் தோல்வியில் போன வருசம் செத்துப் போன காளியம்மன் கோவில் தெரு சரோசா என்னைப் பிடிச்சுக்கிட்டாதவும், அவதான் என்னை தற்கொலைப் பண்ணிக்கத் தூண்டினதாகவும் இன்னொரு கதைக்கட்டி என்னை ரூம்ல அடைச்சு வச்சிட்டா. பாவம் உங்கப்பாவுக்கு எதுவும் தெரியாது. அவரையும் தன் வார்த்தைகளாலும், நடிப்பாலும் நம்ப வச்சிட்டா பாவி. எப்படியும் என்னை அவ இந்த ரூம்லயே வச்சு சாகடிச்சுட்டு சரோசாவோட ஆவி பலி வாங்கிட்டதா சொல்லிடுவா. உன்னையும் அவ வாழ விடமாட்டா. எப்படியாவது கொன்னுடுவா. உங்கப்பாவுக்கு இன்னொரு கல்யாணம் பண்ணிவச்சுடுவா. 




எனக்கு நான் சாகறதைப் பத்தியோ, உன் அப்பா ரெண்டாங்கல்யாணம் பண்ணிக்கப் போறதைப் பத்தியோ கவலை இல்லை. நீ வாழனும். இந்த உலகத்துல நீ வாழனும். நீ பெண் பிள்ளையா வாழ ஆசைப்பட்ட மாதிரி வாழனும். வீட்டை விட்டுப் போய்டு. உன் ஆசைப்படி பெண் பிள்ளையா நீ சந்தோ\மா வாழு. இந்தக் கடிதம் உன் கையில எப்படியாவது கிடைக்கனும். நீ வீட்டை விட்டுப் போகனும். அதான் என் ஆசை…’

உமாபதியின் கண்களில் கண்ணீர் வழிந்துக் கொண்டிருந்தது. மாடியில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் தன் தாயை நினைத்தான். குமுறிக் கொண்டு வந்தது. ஓடிப்போய் கதவை கடப்பாறைக் கொண்டு இடித்து தள்ளிவிட்டு அம்மா என அம்மாவின் நெஞ்சில் விழுந்து அழவேண்டும் போல் துடித்தான். 

‘அம்மா சொல்வதைப் போல் என்னைக் காப்பாற்றிக் கொள்ள வீட்டைவிட்டுப் போவதா? அம்மாவை அவர்கள் கொன்று கூறு போடக் கொடுத்துவிட்டு நான் மட்டும் தப்பி ஓடுவதா? கூடாது. என் தாயை தனியே பலி கொடுத்துவிட்டு நான் போக மாட்டேன். அப்படியானால் என்ன செய்வது? எதுவுமே தெரியாத அப்பாவிடம் எல்லாவற்றையும் சொல்லிவிடலாமா? அம்மாவின் மீது அப்பாவிற்கு பாசம் உண்டுதான். ஆனால் அவருடைய அம்மாவின் மீது அவருக்கு அளவு கடந்த பாசமும் நம்பிக்கையும் இருக்கிறது. ஆச்சி கொலைக்காரி, கொடுமைக்காரி என்று நான் சொன்னால் நம்புவாரா? இந்தக் கடிதத்தைக் காட்டினால் நம்புவாரா? அப்படியே நம்பினாலும் என்ன தண்டனைக் கொடுப்பார் பெற்ற தாய்க்கு? இந்த கடிதம் அம்மா பேய் பிடித்த நிலையில் எழுதிய கட்டுக் கதை என்று கூறிவிட்டால்…

அப்படியே நம்பினாலும், அம்மாவை விடுவித்தாலும் என்னுடைய உண்மையான நிலையை அப்பா ஏற்றுக் கொள்வாரா? நான் ஒரு ஆண் இல்லை என்பது ஊரில் சகல மரியாதையோடும், மதிப்போடும் வாழும்  அவருக்கு பெரும் இழிவு என நினைக்க மாட்டாரா? அதன் பிறகு அவருடைய நடவடிக்கை என்னவாகயிருக்கும்? நான் அவருடைய குடும்பத்திற்கும், பரம்பரைக்கும்  வாரிசு என நினைக்கும் அந்த எண்ணத்தில் மண் விழுந்துவிட்டால்… அவருடைய நடவடிக்கைகள் என்னவாகயிருக்கும்? 

இப்போதைக்கு என்னைப்பற்றிய விசயம் வெளியே வரக் கூடாது. அது வரக் கூடாது என்பதற்காகத்தானே ஆச்சி இத்தனையும் செய்கிறாள். 

ஒரு சமயம் அம்மா சொல்வதைப் போல் இல்லாமல் அப்பாவுக்கும் உண்மை தெரிந்திருக்குமோ? அதனால்தான் அப்பாவும் கண்டும் காணாமல் இருக்கிறாரோ? இல்லாவிட்டால் இந்த பேய் பிடித்த நாடகத்தையெல்லாம் அவர் நம்புவாரா? அவருக்கு பரம்பரை கவுரவம் பெரிதாகத் தெரியும் போது அம்மாவும் நானும் இழிவாகத் தெரிகிறோமா?

நியாயத்தைத் தேடி நான் அப்பாவிடம் போய் நின்றால் அதுவே எனக்கு பாதகமாக வந்துவிட்டால்…

வேண்டாம். யரிடமும் நியாயத்திற்குப் போய் நிற்க வேண்டாம். அம்மா சொல்வதைப் போல் நான் இங்கிருந்து போவதுதான் சரி. ஆனால்…தனியாக அல்ல. அம்மாவுடன் போக வேண்டும். 

அம்மாவை அவர்கள் பலியாக்க கொடுத்துவிட்டுப் போகக் கூடாது. அம்மாவை காப்பாற்றுவதுதான் என் முதல் கடமை. 

முடிவெடுத்துவிட்டான் உமாபதி. 




சரியான நேரத்திற்காக காத்திருந்தான். அந்த நேரம் அவனுக்கு மறுநாளே வாய்த்தது. சுந்தரவள்ளியின் மாமன் மகன் மண்டையைப் போட்டுவிட்டார் நெருங்கிய சொந்தம். போகாமல் இருக்க முடியாது. சுந்தரவள்ளியும், வீரமணியும் கிளம்பிப் போயினர். வர இரண்டு நாட்கள் ஆகும். வேலைக்காரியை வீட்டில் துணைக்கு வைத்து விட்டுப் போனாள். மூன்று வேளையும் சாமியாடியின் சி\யைகள் வந்து லலிதாவிற்கு சாப்பாடு கொடுத்துவிட்டு சென்றனர். 

வேறு யாராவது சென்றால் பேய் அவர்களின் மீது பாய்ந்துவிடுமாம். அவள் சாப்பிட்டு முடிந்ததும் அந்த சி\யப் பெண் கதவைப் பூட்டிவிட்டு போய்விடுவாள். 

அன்றைக்கு இரவு நடுநிசிவரை விழித்திருந்தான் உமாபதி. வேலைக்காரி சமையற்கட்டிலேயே பாயை விரித்து படுத்துவிட்டாள். 

உமாபதி எழுந்தான். சமையலறையை வெளியேயிருந்து சத்தம் வராமல் பூட்டைப் போட்டு பூட்டினான். ஒரு சுத்தியலோடு மாடிக்கு வந்தான். அம்மா அடைத்து வைக்கப்பட்டிருந்த அறையின் பூட்டை உடைத்தான். சத்தத்தில் பயந்து போய் அலறிய அம்மாவை சமாதானப்படுத்தினான்.

அவனுடைய குரலைக் கேட்டு உயிர்ப்பெற்றவளாய் சிலிர்த்துப் போனாள். கதவை உடைத்து திறந்துக் கொண்டு உள்ளே வந்த மகனை கட்டிக் கொண்டு கதறினாள். 

அம்மாவை சமாதானப்படுத்திய மகன் அழுவதற்கு இது சமயமல்ல என அம்மாவை தேற்றி  அழைத்துக் கொண்டு நடுஇரவில் பின் பக்க வழியாக தப்பிச் சென்றான். தன் சைக்கிளிலேயே உட்கார வைத்து பக்கத்து ஊர் ரயில்வே ஸ்டே~னுக்கு வரவும் அடுத்த சில நிமிடங்களில் சென்னை செல்லும் இரயில் அங்கே வந்து நிற்கவும் சரியாகயிருந்தது. 

விரமணி சொன்னக் கதையைக் கேட்டு மாதவி சிலையாக அமர்ந்திருந்தாள். அவளால் இந்தக் கதையை நம்பவே முடியவில்லை. 

வீரமணி கண்களை துடைத்துக் கொண்டார். பொழுது இருட்டை நெருங்கிவிட்டது. பூங்காவின் விளக்குகள் எரியத் தொடங்கிவிட்டன. பெற்றோரின் கண்டிப்பிற்கு கட்டுப்பட்ட குழந்தைகள் வீட்டிற்கு ஓடிவிட்டனர். அடங்காத பதின்பருவத்து பிள்ளைகள் இன்னும் விளையாடிக் கொண்டிருந்தனர். அங்கிருந்த  அந்த முதியோர் இல்லத்தை சேர்ந்தவர்களும் இல்லத்திற்கு போய்விட்டனர்.

சொன்ன கதை தந்த தளர்வா, இல்லை வயதின் முதிர்வா தெரியவில்லை வீரமணியால் இப்பொழுது எழுந்து நடக்க முடியவில்லை. 

மாதவிதான் கைப்பிடித்து அவரை இல்லம் நோக்கி நடத்தினாள். நடக்கும் போதும் அவர் கதையின் தொடர்ச்சியை சொல்லிக் கொண்டே வந்தார். 

“என் மகன் தன் அம்மாவை அழைச்சுக்கிட்டு வீட்டைவிட்டுப் போனது எனக்கு பெரிய அதிர்ச்சியாயிருந்தது. அவன் அம்மாவை கூட்டிக்கிட்டுப் போனதுக்கான காரணத்தை நான் வேற மாதிரி நினைச்சுக்கிட்டேன். ‘என் அம்மாவுக்கு பேயெல்லாம் பிடிக்கலை. அவங்களோட மனநலம் பாதிக்கப்பட்டிருக்கு. அவங்களை முறையான மனநல மருத்தவர்க்கிட்ட கூட்டிக்கிட்டுப் போய் காட்டினா சரியாகிடும்னு அவன் அடிக்கடி என்னை தொந்தரவுப் பண்ணிக்கிட்டேயிருந்தான். எனக்கும் அப்படித்தான் தோணுச்சு.

ஆனா… என் அம்மா பேய் பிடிச்சிருக்குன்னு ஆணித்தரமா நம்பினாங்க.  சாமியாடியை வச்சு  பேய் ஓட்ற வேலை செய்து என்னையும் நம்ப வச்சுட்டாங்க. நானும் அம்மா பேச்சைக் கேட்டு புத்தி மழுங்கியிருந்தேன்.  அதனால என் மகன் இந்த வீட்ல லலிதாவை டாக்டர்கிட்ட காட்ட மாட்டாங்கன்னு நெனைச்சு அழைச்சுட்டுப் போயிருப்பான்னுதான் நினைச்சேனே தவிர என் பையன் சத்தியமா இப்படி ஒரு மாறுபாட்டோட இருப்பான்னு நான் நினைக்கவே இல்லை. உண்மை தெரிஞ்சிருந்தா கூட நான் எப்படி நடந்துக்கிட்டிருந்திருப்பேன்னு எனக்குத் தெரியலை.”

இருவரும் முதியோர் இல்லத்தை நெருங்கிவிட்டிருந்தனர். 

“அப்படின்னா… உங்களுக்கு எப்பத்தான் வி\யம் தெரிஞ்சது?”

“என் பையன்கிட்டேயிருந்து ஒரு கடிதம் வந்தது. அதுல எல்லா உண்மையும் எழுதியிருந்தது. அதைப் படிச்சு நான் ஆடிப் போய்ட்டேன். என் அம்மாவோட சுய ரூபம் தெரிய வந்ததும் என்னால அதை தாங்கிக்க முடியலை. என்னொட ரெண்டு புள்ளையையும் கள்ளிப் பால் கொடுத்து கொன்ன தாயை என்னால மன்னிக்க முடியலை. அவளுக்கு நான் என்ன தண்டனை தர முடியும்? நானும் வீட்டைவிட்டுப் போய்ட்டேன். புத்திர சோகம் என்னங்கறதை என் தாய் அனுபவிக்கனும். அதுதான் நான் அவங்களுக்கு தர்ற சரியான தண்டனைன்னு நினைச்சேன்”




“அப்போ… நீங்க உங்க மகன் மனைவி ரெண்டு பேரும் எங்க இருக்காங்கன்னு தேடலையா?”

“அவன் தேட வேண்டாம்னு எழுதியிருந்தான். ஆனாலும் நான் போலிஸ்ல கம்ளைன்ட் கொடுத்தேன். என் சொந்தக்காரர்களை வைத்து தேடினேன். பேப்பர், டிவின்னு விளம்பரம் கொடுத்தேன். ஆனா… இன்னைய வரைக்கும் கிடைக்கலை. என் அம்மா அந்த வீட்ல தனியாயிருந்தே  க\டப்பட்டாங்க. அந்த நேரத்துலதான் கொரோனா பரவ ஆரம்பிச்சது. கொரோனாவால அம்மா ஆஸ்பத்திரியில அட்மிட் ஆனாங்க. அதே சமயம் நானும் கொரோனாவால பாதிக்கப்பட்டிருந்தேன். என் முகத்தை அம்மாவோ, அம்மா முகத்தை நானோ பார்க்க முடியலை. நான் தப்பிச்சுட்டேன். ஆனா… அம்மா கொரோனாவுக்கு பலியாகிட்டாங்க.சொந்தம் பந்தம், கவுரவம்னு பேசினவங்க, பெண் குழந்தையை வெறுத்தவங்க உயிருக்கு போறாடுற நேரத்துல கொரோனா கொடுமையை விட குற்ற உணர்வால அவங்க பட்ட கொடுமைதான் அவங்க உயிரைப் பறிச்சது. சேவை செய்த நர்ஸையெல்லாம் பார்த்து கதறி அழுதிருக்காங்க. பெண் குழந்தைகளை கள்ளிப் பால் கொடுத்துக் கொன்னேனே இன்னைக்கு என் உயிரை காப்பாத்த இத்தனை பெண் பிள்ளைங்க போராடுதேன்னு அழுதிருக்காங்க. வேதனைப்பட்டுப் பட்டே கடைசிக் காலத்துல யாரும் இல்லாம செத்துப் போயிட்டாங்க. ரெண்டு பெண் குழந்தைகளைக் கொன்ன பாவமோ என்னவோ பெத்த புள்ளைக் கையால கொள்ளிக் கூட வாங்கிக்காம போய்ட்டாங்க. ஆண்பிள்ளை கொள்ளிப் போட வேணும்னு பெண்பிள்ளைகளை வெறுக்கறவங்களுக்கெல்லாம் கொரோனா சரியான பாடம் கத்துத் தந்துட்டு. எந்தப் புள்ளையும் கொள்ளிப் போட முடியாத நிலைக்கு ஆளாக்கிட்டு. அப்பறம் அந்த ஊர்ல இருக்கப் பிடிக்கலை. அதான்… இங்க வந்துட்டேன். வீடு வாசல் , நில புலன் எல்லாத்தையும் விக்க சொல்லிட்டேன்.”

இருவரும் முதியோர் இல்லத்திற்கு வந்துவிட்டனர். அவரை கொண்டு வந்து அவருடைய அறையில் உட்கார வைத்தாள் மாதவி. 

வீரமணி சோர்வாக சாய்ந்துக் கொண்டார். ஃபேனை நன்றாக சுழலவிட்டாள். 

கண்களை இறுக மூடிக்கொண்ட வீரமணி முணுமணுப்பாய் சொன்னார். “சாகறதுக்குள்ள அவங்க ரெண்டு பேரையும் பார்த்திடனும். அதுதான் என் ஆசை.”

அவர் முணுமுணுப்பாக சொன்னாலும் அது அவளுடைய காதில் விழுந்தது. 

“கண்டிப்பா அவங்களை நீங்க பார்ப்பீங்க. கவலைப் படாதிங்க.” ஆறுதலாக அவருடைய தோளைத் தட்டிக் கொடுத்தாள்.

“மாதவி…”

“சொல்லுங்கப்பா”

“ராத்திரிக்கு நான் ஹாலுக்கு சாப்பிட வரலை. என் சாப்பாட்டை இங்கே கொண்டு வர்றியா?”

“கண்டிப்பா கொண்டு வர்றேன்ப்பா” 

இரவு மாதவி உணவுக் கொண்டுவந்தபோது அவள் கேட்டாள்.

“அப்பா… உங்க மனைவி, மகனோட ஃபோட்டோ இருந்தா கொடுங்க. எனக்கு தெரிஞ்ச ஒருவர் போலிஸ் டிபார்ட்மென்ட்ல இருக்கார். அவர்க்கிட்ட கொடுத்து கண்டுப்பிடிக்க முயுமான்னு பார்க்கறேன்.” என்றாள்.

வீரமணி லலிதா, உமாபதி இருவரின் புகைப்படங்களையும் காட்டினார். 

உமாபதியை உற்றுப் பார்த்த மாதவி ‘இவனை எங்கோ பார்த்திருக்கிறேனே’ என யோசிக்கத் தொடங்கினாள்.




What’s your Reaction?
+1
10
+1
11
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!