Entertainment News

சந்திராயன் தரையிறங்கும் நேரலை – எங்கெங்கு பார்க்கலாம்?

உலகமே எதிர்பார்த்துக்கொண்டிருந்த ‘அந்த’ ஒரு முக்கியமான தருணத்தை நாம் நெருங்கிவிட்டோம். சந்திரயான்-3 (Chandrayaan-3) நிலவில் தரையிறங்கும் நிகழ்வு இன்று மாலை நடைபெற உள்ளது. இந்த வரலாற்று நிகழ்வை நேரலை காண இந்திய மக்களுக்கு இஸ்ரோ ஒரு புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது.




இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான (Indian Space Research Organisation) இஸ்ரோ, நிலவை நோக்கி சந்திரயான்-3 திட்டத்தை ஆரம்பித்தது. இப்போது, சந்திரயான்-3 அதன் லேண்டரை (Chandrayaan-3 lander landing) நிலவில் தரையிறக்க தயார் ஆகி வருகிறது. சந்திரயான்-3 நிலவில் தரையிறங்கும் பெருமைமிக்க நிகழ்வை இஸ்ரோ (ISRO) அதன் யூடியூப் சேனல் (YouTube) வழியாகவும், இஸ்ரோவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் வழியாகவும் இன்று நேரலை செய்கிறது.




இந்திய பொதுமக்கள் இந்த நிகழ்வை நேரடி காணல் மூலம் பார்வையிட வேண்டும் என்பதற்காக, இஸ்ரோ இந்த நிகழ்வை நேரலை (ISRO Live Telecast) செய்கிறது. இந்த நேரலையை ஆன்லைனில் எப்படி பார்ப்பது? என்று பார்க்கலாம் வாங்க. யூடியூப் மற்றும் இஸ்ரோவின் அதிகாரப்பூர்வ இணைய பக்கம் வழியாக மட்டுமின்றி, இஸ்ரோவின் பல்வேறு சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் இந்த நிகழ்வு நேரலை செய்யப்படுகிறது.

சந்திரயான்-3 நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கத் தயாராக இருப்பதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. இதனால், சந்திரயான்-3 நிலவு தரையிறக்கம் திட்டமிட்ட படி, ஆகஸ்ட் 23 ஆம் தேதி (இன்று), மாலை 06:04 (சாத்தியம்) மணி அளவில் தரையிறக்கப்படும் என்று இஸ்ரோ அறிவித்துள்ளது. சந்திரயான் 3 நிலவு தரையிறக்கம் நேஷனல் ஜியோகிராஃபிக் சேனல் (National geographic channel) மற்றும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் (Disney+ Hotstar) வழியாக நேரடியாக ஒளிபரப்பப்படும்.

சந்திரயான்-3 தரையிறங்குவதற்கு முன்னதாக மாலை 4 மணி முதல் இஸ்ரோவின் லைவ் ஸ்ட்ரீமிங் (ISRO Chandrayaan-3 landing live streaming) தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

டிவி பார்வையாளர்கள் சந்திரனில் சந்திரயான்-3 தரையிறங்குவதை (Chandrayaan-3 landing live) டிடி நேஷனல் (DD national) மற்றும் பல செய்தி சேனல்கள் வழியாகவும் நேரடியாகப் பார்க்கலாம்.




What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!