Serial Stories நேசத்தினால் நெருங்கிவிடு

நேசத்தினால் நெருங்கிவிடு-7

7

மேல் பெர்த்தில் படுத்துக் கொண்டு கண்ணை மூடினாள்.

ஆனால் மனதில் பழைய நினைவுகள் காட்சியாக விரிய ஆரம்பித்தது..

************************

“ஏய் வினயா…  சென்னை கல்லூரியில் விழா…. நாளை ரெடியாயிட்டு வா.. ‘

“அங்கே இவளை விட பேரழகியெல்லாம் வருவாங்க.”

என்றாள் இன்னொருத்தி.

“நிறைய திடீர் போட்டிங்க நடத்துவாங்க அங்கே…”

“நீ தான் ஆல் இன் ஆல்அழகு ராணியாச்சே… சமயத்துல எவனாவது செட் ஆவான்..”

“ஆனால் பசங்களை பார்த்து ஜாக்கிரதையா இருக்கவும். நீ புதுசுனு தெரிஞ்சா உன்னையே சுத்தி ஒரு கூட்டம் சுத்தும்.”

வருடா வருடம் சென்னை கல்லூரி யில் ஜனவரி மாதத்தில் நடைபெறும் இளைஞர் திருவிழாவில் கலந்து கொள்ளவும் அப்போது அங்கே கலந்து கொள்ளும் இரு பாலர்களையும் பார்த்து முறையே ஜொள்ளு விடவும் அங்கு குழுமும் கூட்டம் மிக அதிகமாக இருக்கும்.

மிக பிரபலமானது இசை நிகழ்ச்சிகள்.

நிறைய மாணவர்கள் வித விதமான போட்டிகளில் கலந்து கொண்டு திறமையை நிரூபிக்க வேண்டும் என வருவார்கள். ஒரு சிலர் இந்த போட்டிகளின் போது அடுத்த கல்லூரி ஆண்களுக்கும் பெண்களுக்கும் நட்பாவார்கள்..சில அன்றோடு முடியும். சில ஆயுள் பார்யந்தம் தொடரும்.

வினயா  கல்லூரியில் இரண்டாம் வருடம்.

அவர்கள் கல்லூரி குழுவில் வினயாவும் ஒரு முக்கிய உறுப்பினர்.ஆனால் இந்த வருடம் தான் குழுவில் தன் பல்வகை திறமையால் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளாள்.

அவளுக்கு பாட்டு, நடனம், யோகா, எழுத்து எல்லாமும் வரும்.

சிறு வயதில் அவளது ஜாதகத்தைப் பார்த்த உறவினர் ஒருவர் “ “இவளுக்கு ஆய கலைகள் அறுபத்தினான்கும் வரும் என்று சொன்னது உண்மை “என அப்பா  சொல்லிக் கொண்டிருப்பார்.

அவளைப் பார்ப்பவர்கள் புது மழையில் வரும் கிராமத்து மண் வாசனையையும் அதி காலையில் எழும் பச்சை புல்களின் வாசனையையும் ஒரு சேர அனுபவிப்பார்கள்.




வெள்ளிக்கிழமை ….

அவளுக்கு பிடித்த பச்சை டாப்சும் நீல கலர் பாட்டியாலாவும் அணிந்து வழக்கம் போல அதற்கு மேட்சிங்காக காதுகள், கைகள், கழுத்து என பார்த்து பார்த்து அலங்கரித்து கொண்டு கிளம்பினாள்.

அன்று பாட்டு, கவிதை, பரத நாட்டியம் என சில நிகழ்ச்சிகள் இருந்தன.. போட்டியில் பார்க்கும் போது தான்

இந்திய அளவில் இவ்வளவு திறமையா என அதிர்ந்தாள்..

‘நாமெல்லாம் நம் திருப்திக்காக பாடிக் கொள்ளலாம் ,ஆடலாம் .. ஆனால் இனிமேல் போட்டியில் எல்லாம் கலந்து கொள்ள வேண்டுமானால் நிறைய தயார் படுத்திக் கொள்ளணும்’ என்று புரிந்து கொண்டாள்.

பாட்டுப் போட்டி முடிந்து வரும் போது,

ஒருவன் அவளிடம் , “ஹேய்.. யூ ஹாவ் சங்க் வெல்..டோண்ட் லூஸ் ஹார்ட்… யூ ஹேவ் சங்க் ஓல்ட் சாங்க்…தட்ஸ் வொய் தே டிண்ட் செலக்ட் யூ, பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் ” என ஆறுதல் சொல்லி விட்டு போனான்.

அவள் அவளுக்கு சின்ன வயதிலிருந்தே பிடித்த ‘வசீகரா..என் நெஞ்சினிக்க’ பாடலை பாடி இருந்தாள்.

மதியம் லைப்ரரிக்கு பின் இருந்த ஃபுட் கோர்டில் போய் நட்பு சூழ உட்கார்ந்து சாப்பிட்டு கொண்டிருந்தாள்.. செல்ஃப் சர்வீஸ் தான்.

“பின்னாடி டேபிள்ல …  திரும்பி பார்க்காதே வினயா…உன்னையே சில பசங்க சைட் அடிச்சு கிட்டு இருக்காங்க ..”

“விடுப்பா.. இதுக்காக தானே அவங்களும் வந்திருக்காங்க..நாமளும் வந்திருக்கோம். இதெல்லாம் இன்னும் நாலு வருஷம் கழிச்சு செய்ய முடியுமா..

பஸ் ஸ்டாண்டில் பார்க்கப் படாத, பார்க்காத பார்வையா??” வினயா..சொல்லிக் கொண்டிருக்க,

ஒருத்தி..”அப்படி இல்லடா செல்லம்.. அதிலயும் ஒரு பக்கி இங்கே நம்மளை பார்க்காம செல் போன் நோண்டிட்டு இருக்குடா..”

“அவனுக்கு ஏற்கனவே செட் ஆகியிருக்கும் டீ..

அவன் பர்சனாலிட்டிக்கு.”

“ஆனா எத்தனை பேர் இருக்காளுங்களோ?…

எவளுக்கு மெஸ்ஸேஜ் அனுப்பிட்டு இருக்கானோ..?.”

“அவன் தான் மூணு வருஷமா வரானே.. இதே ஐ ஐ டி யிலிருந்தே..என ஒரு பி.ஜி மாணவி சொல்ல,

“உங்களுக்கு எப்படி தெரியும் அக்கா..”

“அவன் ஒரு கர்வி டீ..”

“யார் கிட்டயும் பிடி கொடுத்து பேச மாட்டான்..நம்ம காலேஜ்லேந்தே ரெண்டு மூணு பேரு ட்ரை பண்ணி இருக்காங்க…”

“ரேங்க் ஹோல்டராம் டீ..ஆளூ வேற மலையாள ஆக்டர் பிரித்விராஜ் மாதிரி இருக்கானா??கேரள நேடிவ்வாம்..போன வருஷமே அவன் கிளாஸ் மேட் சொன்னா!!…”

“இன்ஸ்டிட்யூட் ல கூட நல்லா யாராவது செஞ்சா பாராட்டிட்டு போயிடுவானாம். அதையே சாக்காக வெச்சிகிட்டு பேச போனா,

‘யார் நீங்க?..அப்பவே மறந்துட்டேன், எனவே ஆல் தி பெஸ்ட் நு’ சொல்வானாம்..அவனை புரிந்து கொள்ளவே முடியாதாம்..அவனது மெயின் எய்ம் மேல் படிப்பு, பெரிய பதவி தானாம்.”

‘யார் இவன் ?..திரும்பி பார்க்கலாம் என்றால்…. நம்ம வானரப் படை ஒரு வருஷம் இதையே சொல்லி நம்மை ஒட்டிக் கிட்டிருப்பாளுக..’

‘சரி..சரி.. திரும்பிப் பார்ப்போம்..’

என ஸ்பூனை தவறவிட்டு எடுக்கும் சாக்கில் பின்னால் திரும்பி பார்க்க..

‘ஹேய்..வினயாவை பாருங்கடி, அவ பாக்குறது நமக்கு தெரியக் கூடாதாம்…நு ஒருத்தி சொல்ல…

குபீர் சிரிப்பு அலை எழ, அனைத்து மாணவர்களும் இந்த டேபிளையே பார்க்க,

அந்த இளம் வயது ‘பிரித்விராஜ்ஜும்’ பார்க்க, வினயாவும் பார்க்க…”

டப்..டப்..’கம்பார்ட்மெண்ட் வாசல் கதவு தட்டப்பட்டது.

வினயாவின் நினைவுகளும் கலைந்தது..

மெதுவாக கதவை திறந்த எஸ்தர் ,நைட் மீல்ஸ் சேலத்தில் வரும் நு சொல்பவனிடம்

“இல்லைங்க சாப்பாடு வேண்டாங்க..” என சொல்லிக் கொண்டிருந்தாள்..

ரயில் காட்பாடி தாண்டிக் கொண்டிருந்தது..

“அக்கா..எனக்கு வேணும்…நான் எடுத்து கிட்டு வரலை…”

என சொல்ல,

இந்த கேரளா ட்ரெய்னல வெஜ் பிரியாணி, எக் பிரியாணி, பரோட்டா தான் வரும்…” விபா அரேஞ்ச் பண்ணிருக்கான்.

நம்ம கம்பெனி டிஸ்ட்ரிப்யூட்டர்ங்க இருக்காங்க.. அவங்க கிட்ட சொல்லிருப்பான்..

நான் ஏற்கனவே சொன்ன மாதிரி அவனை மாதிரி பிளான் பண்ண முடியாதுப்பா…சின்ன சின்ன டீடெயில்ஸ் கூட பார்த்துப்பான்..




“அட..எங்க பத்திரிக்கைக்கு கூட விற்பனையாளர்கள் , ரிப்போர்டர்கள் நிறைய பேரு எனக்கு நண்பர்களா இருக்காங்க..ஆனா இது எனக்கு தோணலியே. ” என நினைத்தாள்.

“நீ பியூர் வெஜ் நு சொல்லிருக்கேன்.எனக்கு எது கிடைச்சாலும் சாப்பிடுவேன்.” அவன் எனக்கு சிக்கன் ஆர்டர் பண்ணிருப்பான்.. சிக்கன்னா எனக்கு உயிர் நு தெரியும் .”

மெதுவாக பழைய நினைவுகளிலிருந்து மீண்டு கொண்டிருந்தாள்..

“ஆனா சிக்கனுக்கு உயிர் இல்லையே..”

“பரவாயில்லையே ..நல்லா தான் கவுண்டர் கொடுக்கறே…இப்படியே இரு…இப்போ தூங்கி கொஞ்சம் தெளிஞ்சுட்டா போல..”

செல்லில் செய்தி பார்த்தவள்..

“ஹை..குட் நியூஸ்… “என குதூகலித்தாள்.

“என்ன உனக்கு ஏதாவது பிரமோஷனா???”

இல்லை க்கா….அந்த சதீஷை நேத்தோட சீட்டை கிழிச்சு அனுப்பிட்டாங்களாம்..ஏற்கனவே சில கேஸ்ங்க இருந்ததாம். நேத்து ஏதோ நடந்திருக்கு…நான் உங்க ஆபிஸுக்கு வந்த போது ஏதோ ஆகிடுச்சாம்.”

‘அப்போ நான் பார்த்த ஆளு அந்த சதீஷ் இல்லை போல இருக்கே..’

‘ஆனால் ,அவன் சதீஷாக இருந்தால்….’

‘வேலையை விட்டு நீக்கிய பின் இதே ரயிலில் வருகிறான் என்றால்….

என்ன நோக்கமாக இருக்கும்??’

‘வினயாவிடம் இப்போது சொல்ல வேண்டாம்.’

ஆனால் விபாவுக்கு மெஸ்ஸேஜ் அனுப்பி தெரிவித்து வைப்போம்..

எஸ்தர் செல்லில் மூழ்க,வினயாவும் மேலே ஏறி படுத்து ,

பானுவிடம்,

“என்ன ஆச்சுடி…”

“சதீஷ் இன்னிக்கு செம்மயா மாட்டிக் கிட்டாண்டி.

நான் சிஸ்டத்தை ஓபன் பண்ணி வெச்சுட்டு ரெஸ்ட் ரூம் போன போது நம்ம டிபார்ட்மெண்ட் மெயிலுக்கு வந்த சில மெயிலை போட்டோ எடுத்துக் கிட்டு இருந்தான்..

நம்ம ரிப்போர்டர்ங்க கொடுத்த சில சீக்ரட் தகவல்கள் எப்படி லீக் ஆகுதுனு தெரியாம இருந்தது…”

“அவன் பொண்ணுங்க பின்னாடி வந்து நிக்கும் போது அவன் வேற எதையோ பார்க்க வந்திருக்கான் நு நம்மை மூடிக்கச்சே இதனை பார்த்து அந்த……பத்திரிக்கைக்கு செய்தி அனுப்பி இருக்கான்.

அதில் சிலது ரொம்ப முக்கியமான சீக்ரெட்டாம்.”

“நேரடியா இன்னிக்கு ஆசிரியரே பார்த்துட்டு உடனே மேலிடத்துக்கு சொல்லி மூணு மாச சம்பளம் கொடுத்து அனுப்பிட்டாங்க..”

“அவன் மேலே நிறைய புகார்ங்க இருந்தாலும் நாமெல்லாரும் அவன் மேலிடத்துக்கு வேண்டியவன் நு பொறுத்துப் போனோம்..”

“ஆனால் இப்போ தான் தெரியுது இவன் நம்மை பணிய வைக்க இப்படி யெல்லாம் தன்னைத் தானே பெரிய ஆளாக்கி வெச்சு இருக்காண்டி…நல்ல வேளை டீ…

கடவுள் இருக்காருடி…”

வினயா..கொஞ்சம் புத்திசாலி..

நெருப்பு போல அவனை அண்ட விட மாட்டாள்..

ஒரு நாள்,

சதீஷ் பானுவின் சீட்டின் பின்புறமாக நின்று கொண்டு

அவளின் தோளின் பின் புறமாக தன்னுடைய கைகளை முன் புறம் மாலையாக போட்டுக் கொண்டிருக்க,

வினயா உள்ளே வர,சதீஷ் நகர்ந்து சென்றான்.

வினயாவிடம் கண்ணீருடன்,

“பார்த்தயா..இது போல அடிக்கடி எனக்கு தொந்தரவு நடக்கும்..”

“நீ ஏண்டி பயப்படறே..

உ.ஆசிரியர்ட்ட சொல்லுடி..”

“அவன் பெரிய ஆளுடி…”

“நானும் வயசான அம்மாவும் மட்டும் தாண்டி.. புருஷன் எப்பவோ ஓடிட்டான், நான் அழகா இல்லைனு வேறு ஒருத்திய கட்டிகிட்டு..”

“இந்த நாதாரிக்கு அப்படி இல்லை. அதுக்கு பொண்ணுங்க மேல அப்படி என்ன ஆசை இருக்கோ தெரியல..ஒரே அருவருப்பு…”என்று கண்ணை கசக்கி கொண்டாள்.

“நான் போய் சொல்லறேன்..” என்பவளையும் தடுத்து விடுவாள். “எனக்கு வேலை போனால் யாரும் என் உருவத்தை பார்த்தே நேர் முகத் தேர்வுக்கு கூட கூப்பிட மாட்டாங்கடி..என்னிக்காவது ஒரு நாள் விடியும் டி..என்பாள்.

“பரவாயில்லைடி…

இன்னிக்கு ஏதோ நரி முகத்திலே முழிச்சுருக்கே.” என்சாய் ….” பை டீ…”

“ஆமாண்டி..நீயும் புது இடத்திலே எஞ்சாய் பண்ணு..”

“புது இடமா “

என எண்ணங்கள் ஓடிய போது,

சேலம் வந்து விட்டது.

சரியாக கம்பார்மெண்டை தட்டி,

எஸ்தர் மேடம்…

என கேட்டு இரு பார்சலை கொடுத்து விட்டுச் சென்றான் ஒருவன்.

“வா..உட்கார்ந்து சாப்பிடலாம் .”.

பார்சலை பிரித்தார்கள்.

எஸ்தருக்கு பிடித்த சிக்கன் பிரியாணி, குருமா,

வினயாவுக்கு இட்லி, சட்னிகள், சாம்பாருடன் ,இன்னொரு பார்சலில் முன்னொரு சமயத்தில் பிடித்த, இப்போது நிராகரிக்கும் வெங்காய ஊத்தப்பம் .

“நல்லாருக்கே…உனக்கு இட்லி, ஊத்தப்பம் பிடிக்குமா…??”

“ஊத்தப்பம் இப்போ லாம் சாப்பிடுவதில்லை என சொன்னால் ஏன் எதுக்கு என எல்லாம் சொல்ல வேண்டி இருக்குமே.”

“ஊத்தப்பத்தை உள்ளே தள்ள,

ஏற்கனவே இன்று வந்த பழைய நினைவுகளுடன், பிரகாஷ் வந்து போனான்.




What’s your Reaction?
+1
11
+1
13
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!