Serial Stories நேசத்தினால் நெருங்கிவிடு

நேசத்தினால் நெருங்கிவிடு-6

 6

வினயா எச்.ஏ.1 கம்பார்ட்மெண்டில் ஏறி,

தண்ணீர் வாங்க இறங்கிய போது எஸ்தர் ஏறினாள்.

“ஏம்ப்பா வினயா… உன்னைப் பார்த்து கையசைத்து கூப்பிட்டு கிட்டே இருந்தேன்..கூட்டத்தில் பேரை சொல்லிக் கூப்பிடக் கூடாதேனு சும்மா இருந்தேன்.

வேக வேகமா இந்த ட்ராலியையும் இழுத்து வந்தேன்..நல்ல வேளை இதில் கடைசியிலேயே ஏசி பெட்டி இருக்கு..”

மூச்சு வாங்கி கொண்டே பேசினாள்.

“நீ எங்கே இறங்குறே?.”

“தண்ணி பாட்டில் உங்களுக்கும் சேர்த்து வாங்கி வரேன்..”

சொல்லி விட்டு போய் வாங்கி வந்து வைத்த போது பார்த்தாள்,

எஸ்தர் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்குவதை.

அவளின் டாப்ஸில் வியர்த்துப் போன இடங்களையும் வியர்க்காத இடங்களையும் பிரித்துக் காட்டிக் கொண்டிருந்தன அவளது உள்ளாடைகள்.

“நீங்க வேணா போய் ட்ரெஸ் மாத்தி வாங்க, நான் பார்த்துக்கறேன்.”

“தேங்க்ஸ் வினயா.”

போய் டாப்ஸ் மாற்றி வந்தாள்.

“நான் கொஞ்சம் பூசினா போல இருக்கேன்.

ஆனா நீ வேர்வையிலும் அழகா இருக்கே…

ஆனால் உன் உடை செக்சியா தெரியலை..” என சொல்லி சிரித்தாள்.

“நான் அதிகமா வெளியே போக வேண்டி இருப்பதால் எப்போதும் அதுக்கு தகுந்தாற்போல் தான் உடை போட்டு வருவேன்.”

“உங்க ஆபிசுக்கு தான் புடவையில் வந்தேன்.

ஆனால் நேத்தைக்கு நான் பட்ட அவஸ்தை இருக்கே…அப்பப்பா..”

“ஏன்??

எங்க ஆபிசில் யாரும் அப்படி இல்லையே..”

“அது எனக்கு தெரியாது..ஆனால் எங்க ஆபீசில் ஒரு பொறுக்கி இருக்கான்.அவன் தான் என்னை பார்வையாலயும் வார்த்தையாலயும் டார்ச்சர் பண்ணான்.”

“யார் அது ….சதீஷா??”

“உங்களுக்கு எப்படி தெரியும்??”

“ஹா..ஹா…எங்க ஆபிஸ்லயும் ஒரு புலனாய்வுக்காரன் இருக்கான்..

அவன் தான் இவனைப் பத்தி சொன்னான்.”

“நான் அப்புறம் தான் அவனை பார்த்தேன்.”

“யார் அது?”

“அதாம்ப்பா…நான் சொன்னேனே ..அதான் விபாகர்…”

“அவன் தான் இவனை பார்த்துட்டு என்னிடம் வார்ன் பண்ணான்.”

நடந்தவற்றை கூறினாள்.

லேசாக வினயாவுக்கு பயம் வர ஆரம்பித்தது..

‘இவள் கூறுவதை நம்பலாமா??

இல்லை அந்த விபாகர், சதீஷ் சேர்ந்து ஏதாவது செய்யும் சதியா??

இந்த சதீஷ்க்கு தான் ஊரெல்லாம் ரவுடிங்க சகவாசம் உண்டே…’

‘எஸ்தர் சொல்வதை பார்த்தால் இவள் நல்லவள் போல தெரிகிறதே..’

‘ஆனால் நான் போன் பேசும் போது ஏதோ அந்த விபாகரிடம்,

“நம்ம ரகசியம் நமக்குள்ளே…” என்று சொல்லிக் கொண்டிருந்தாளே.’

வினயா யோசித்துக் கொண்டிருக்கும் போது..




“என்ன பயப்படறியா? …அந்த சதீஷ் பத்தி…”

“ஒரு ரெண்டு நாள் எதை பத்தியும் கவலை படாதே…

“ஜாலியா இரு..அப்போ தான் உன் பேட்டியும் நல்ல படி நடக்கும்.”

“ஆமாங்க எஸ்தர் மேம்…”

“ஏய் உன்னை விட அஞ்சாறு வயசு … சரி…சரி..அப்படி பார்க்காதே…

ஏழெட்டு வயசு தான் அதிகம் இருக்கும்.”அக்கானு வேணா கூப்பிடு”

சரி..எஸ்தர் அக்கானே கூப்பிடுறேன்.”நான் வீட்டிலேந்தே டாக்சியில் வந்துட்டேன்.நீங்க எப்படி ஆபிஸ்லேந்து நேரே வந்தீங்களா??”

“ஆமாம்பா..எம்.டி.நாளை கழிச்சு வருவாரு..நாளை ஞாயிறு..ஆபீஸ் வேலை எதுவும் பார்க்க மாட்டாரு.எதுவா இருந்தாலும் இந்த விபா தான் பார்த்துப்பான் அன்னிக்கு. அதனால் இன்னிக்கே அவர் திங்க கெழமை காலைல வர ஃப்ளைட்டு டிக்கட் எல்லாம் புக் பண்ணி அனுப்பிட்டு வந்துட்டேன்..”விபாகர் வேலைய பொறுத்து கிளம்புவான்.”

அவள் கொஞ்சம் அதிகப் படியா விபாகர் பத்தி தன்னிடம் சொல்வது போல் இருந்தது வினயாவுக்கு.

“இன்னிக்கு கூட கடைசி நிமிஷம் வரை வேலை..”

“கம்பெனி வண்டி வெளில போயிருந்தது…டாக்சி புக் பண்ணி வர லேட்டாகும்..அதனால விபாகர் தான் பைக்கில் ட்ராபிக் ஜாம் ல மாட்டாம கரெக்ட் டைமுக்கு கூட்டி வந்தான்.”

“அப்போ அந்த நீல சட்டைகாரன் தான் விபாகரோ??

அவனை பின்னாலிருந்து பார்த்த போது எதுக்கு என் உடல் சிலிர்த்தது?? மனக் கேள்விகளுக்கு விடை தேடிக் கொண்டு இருக்கையில்,

டி டி ஈ வந்து டிக்கட் கேட்க இருவரும் ஐடி ய நீட்ட

‘ஒருத்தர் போதும்’ என வினயாவின் ஆதார் கார்ட் பார்த்து லேசாக இவளையும் பார்த்து டிக் செய்து விட்டு “எங்கே கோட்டயம் இறங்கறீங்களா??” என கேட்க

“இல்லை சார்..எர்ணாகுளம் டவுன்.டிக்கட் இல்லாததினால்அது வரை புக் பண்ணேன்” என்றாள் எஸ்தர்.

 வினயாவை மீண்டும் பார்த்து விட்டு சென்றார் அந்த நடுத்தர வயது டிடி ஈ.    எஸ்தர் அதை கவனித்து

“உன்னிடம் ஏதோ ஒண்ணு இருக்கு…

கண்ல காந்தம் வெச்சிருக்க போல ..அதான் எல்லொரும் உன்னை அப்படி பார்க்கிறாங்க.”




வினயாவுக்குத் தெரியும் அவளது காந்த இடங்கள் எவை எவை என..

நீ எர்ணாகுளம் வந்திருக்கயா??அழகான ஊராம்.” நா கேரளா போனதில்லே

“நீ எப்படி??”

“நானும் சிறு வயசிலே போனதில்லே.

ஆனா காலேஜ் ட்ரிப் ல போயிருக்கேன்.”

“எங்கே??”

“எர்ணாகுளம் தான்.”

“கேரளா போனா நமக்கு இயற்கை காட்சி பாக்க பிடிக்குது..ஆனா சாமுவேல் சொல்லும் ….அந்த ஊரு பொண்ணுங்களை பாக்கறதுக்காகவே கேரளா டூர் போவாங்களாம்..சொல்லி எங்கிட்ட திட்டு வாங்கி சிரிக்கும்…அதுக்கு எங்கிட்ட திட்டு வாங்கணும்னா ரொம்ப பிடிக்கும். அப்படி திட்டு வாங்கி வாங்கி எனக்கு பிடிச்சு போச்சு…”

உங்களுக்கு குழந்தை இருக்கா?..

“இருக்காப்பா ஒரே புள்ள..

“அஞ்சு வருஷம் கழிச்சு பொறந்தான்.”

லேசாக கண்ணில் நீர்.

“பேரு பீட்டர் பிரகாஷ்…

இந்த பிரகாஷ் ங்கிற பேரை அப்புறமா தான் சேர்த்தேன்.”

“பிரகாஷ் பிறந்து சில மாசத்துலயே அவனுக்கு இதயத்தில் பிரச்சனையின்னு தெரிஞ்சுது..செலவு அதிகமாகும்னு பயந்து கிட்டே இருந்த போது தான் விபாகர் வந்து எங்க கம்பெனியில சேர்ந்தான்.

பயப்படவேண்டாம் நு சொல்லி க்ரவுட் ஃபண்டிங் மூலம் ஒரே மாசத்துல பணம் சேர்த்து ஆபரேஷன் செஞ்சு….அப்பப்பா …

அவன் மனுஷனே இல்லேடி…தேவ தூதன்..”

“இல்லேனா சரியான நேரத்தில் எங்க கம்பெனில சேர்ந்துருப்பானா??

பீட்டர் கூட பிரகாஷ்நு சேர்த்து கூப்பிடுவான்.

அப்போலேந்து நாங்களும் பிரகாஷ் நு கூப்பிட ஆரம்பிச்சு வாழ்க்கையே பிரகாசமா ஆக ஆரம்பிச்சாச்சு…”

“நான் அப்பப்போ விபாகர்னு கூப்பிட்டாலும் சாமுவேலுக்கும எங்க அப்பாக்கும் அவன் பாஸ்தான். பிரகாஷ் விபாவை பார்த்தா குஷியாயிடுவான்…பாஸப்பா…பாஸப்பானு மடியிலே ஏறி விளையாடுவான்.” “அதனால் தான் இவனுக்கு ஒரு நல்ல பொண்ணா பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கணும் நு ஆசை..அவங்க வீட்ல அப்படி ஏதும் பாக்குறா மாதிரியும் தெரியல… எங்க அப்பா அதான் யாரை பார்த்தாலும் கொஞ்ச நாளிலேயே அவங்க மூலம் பொண்ணு பார்க்க ஆரம்பிச்சாரு…”

“உங்க வீட்டுக்கு அப்பா வர போது உன்னையும் பார்த்திட்டு வந்து சொல்வாரு..அவரோட அபிப்ராயமும் பார்வையும் தப்பாது.”

“போலீஸ் சிபி சி ஐடில இருந்தவரு..அதனால் இன்னி வரைக்கும் கூட தான் போலிஸ்ல இருந்தேன் நு சொல்ல மாட்டாரு.

“உனக்கு கல்யாணம் எப்போ?? யாரையாவது பாத்து வெச்சிருக்கியா?? இல்லே அப்பா அம்மா தான் பாக்கணுமா??” “உனக்கு அப்படி யாரும் பழக்கமில்லேனா…சொல்லு..இந்த விபாவை பார்க்கலாம்.”

“எனக்கென்னவோ நீங்க ரெண்டு பேரும் பொருத்தமா இருப்பீங்கனு தோணுது.. எங்க அப்பா முதலில் இதை சொன்ன போது நான் நம்பலை…” “என்ன பதில் இல்லை…??”

“பிரகாஷ் ..இந்தப் பேரை அவள் சொன்னதிலேருந்தே ஏதேதோ நினைவுகள் வந்து அவளை அழுத்தத் தொடங்கின…”

“என்ன சொன்னீங்கனு கவனிக்கலை அக்கா…”

“உங்க குழந்தை மூலம் எவ்வளவு கஷ்டப் பட்டிருப்பீங்கனு நெனச்சேன்.. கொஞ்சம் தூக்க கலக்கம் வேறயா..சரியா கவனிக்கலை. நான் மேல் பர்த்தில் ஏறி படுக்கறேன்.”என்று சொல்லி ஏறிப் படுத்தாள்.

அவள் மனசில் ஏதோ சஞ்சலம் இருப்பது புரிந்தது எஸ்தருக்கு..

‘சரி ரெண்டு நாள் முழுக்க என் கூட தானே இருப்பா .அப்போ விபாவை அறிமுகப் படுத்துவோம்.’

‘அவன் பார்வையாலயும் செய்கையாலயும் சொல்லாலும் பழகிய அனைவரையும் கவர்ந்து விடுவானே.. இன்னிக்கு வினயாவை வேவு பார்க்க வந்த சதீஷைக் கூட நம்ப வைத்து விட்டானே…’

கதவை மூடிய போது, அந்த இடைவெளி வழியே காரிடாரில் போய்க் கொண்டிருந்தவன் முகம் சதீஷ் போலவே இருந்தது…

எஸ்தருக்கு இப்பொது லேசாக பயம் எட்டிப் பார்த்தது.




What’s your Reaction?
+1
11
+1
16
+1
1
+1
0
+1
0
+1
0
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!