Serial Stories நேசத்தினால் நெருங்கிவிடு

நேசத்தினால் நெருங்கிவிடு – 5

5

“அந்தப் பெண் தான் வந்து போனவளா??? “என்றான் விபாகர்.

“ஆமாம் ..ஆனால் அவ தனியாதான் வந்ததா தெரியுது ..”என சொல்லிக் கொண்டிருக்கும் போது அந்த ஆண் இவர்கள் கேட்டில் உள்ளே நுழைந்து கொண்டிருந்தான்.

“யார் இவன்?? எதுக்கு வினயாவிடம் பேசி விட்டு இங்கே வருகிறான்.”

“ஒரு வேளை அட்ரெஸ் கேட்டிருப்பான் ..”என நினைத்துக் கொண்டாள்..

அதற்குள் நான் வெளியே போய் சாப்பிட்டு வருகிறேன் என ஒரு நாளும் இல்லாமல் அன்று மட்டும் 2.00 மணிக்கே கிளம்பினான் விபாகர். வெளியே வரவும்,லிஃப்ட் கதவு திறக்கவும் சரியாக இருந்தது.

வந்தவன் ரிசப்ஷனில்,

“இங்கே ‘வினயா’ங்கறவங்க ‘தமிழ் தேசியம்’ பத்திரிக்கைலேந்து வந்தாங்களா??” என கேட்க,

“வந்துட்டு இப்போதான் போனாங்க” என்றான் ரிசப்ஷனிஸ்ட்.

அப்போது தான் கவனித்தாற் போல விபாகர் அவனிடம் திரும்பி வந்து,

“என்ன சொன்னீங்க.. தமிழ் தேசியமா??நீங்க தான் பேட்டி எடுக்க வரேன் நு சொன்னிங்களா?? வாங்க உக்கார்ந்து பேசுவோம்,” என ரிசப்ஷன் பக்கத்துல் வெளியே இருந்த விசிட்டர்ஸ் கேபினுக்குள் கூட்டிப் போன விபாகரை ஆச்சர்யமாக பார்த்தான் ரிசப்ஷ்னிஸ்ட்.

“என் பேர் சதீஷ்..”

நானும்  வினயாவும் இங்கே வரதா பிளான்..நான் கொஞ்சம் வெளியே போயிட்டு வரதுக்குள்ள அவ கிளம்பி போயிட்டா…”

“கூட வேலை செய்யறவங்களா இருந்தாலும் ‘அவங்க’ என மரியாதையா சொல்லலாமே மிஸ்டர் சதீஷ்.

“இல்ல சார்..உங்க பேரு….?”

“விபாகர்”….

“விபாகர் சார்…நாங்க கொஞ்சம் நெருக்கம்.. அதான் அவ.. இவ..நே சட்டுனு சொல்லிடறேன்..”

“எனி வே நீங்க சொன்ன மாதிரியே இனி பேசறேன்..”

“ரிசப்ஷனில் கேட்டீங்களா??”

“கேட்டேன் சார்..இப்பதான் அவ…சாரி அவங்க கிளம்பினாளாம்.. சாரி..கிளம்பினாங்களாம்..” நான் பார்க்கலை..”

“சரி..நேரம் கிடைக்கும் போது வாங்க.”

“உங்க கார்ட் கொடுங்க சார்..”

“விபாகர்..பி.இ..எம்.பி.ஏ. எக்சிகுடிவ் அசிஸ்டண்ட் டு எம்.டி.”

என இருந்தது..

“தேங்க் யூ சார்…”




“உங்க நம்பரை ரிசப்ஷனில் கொடுத்து விட்டுப் போங்க..நேரம் கிடைக்கும் போது கூப்பிடுகிறேன்.”

என சொல்லி லிஃப்டில் இறங்கிப் போனான் விபாகர்.

கீழே அதே லிஃப்டில் மேலே வர நின்றிருக்கும் எஸ்தரிடம்,

“உன் ஃப்ரெண்ட் ..யார் அது?? அந்த தமிழ் தேசியம் பத்திரிக்கை..??”

“வினயா..அவளுக்கு என்ன இப்போ??”

“அவ கிட்ட பேசிட்டிருந்தானே ஒருத்தன் அவன் கீழே வருவான் எதுக்கும் பார்த்து வெச்சிக்க… அப்புறம் பேசறேன்..”

‘விபா என்ன சொல்றான்…யாரோ அட்ரெஸ் கேட்டான் என நினைத்தேனே…’

கீழே வந்தவனை பெண்களுக்கே உரிய பார்வையால் தெரியாமல் பார்த்துக் கொண்டாள்.

“எக்சிகுடிவ் அஸிஸ்டண்ட் இப்போ என் கையில்….நீ யாரோ எஸ்தரிடம் பேசிக் கொண்டு இருக்கிறாய் வினயா..’

‘உன்னை வெல்ல என்னிடம் ஆயுதம் இருக்கு.’

‘உன்னை ஆட்கொள்ளணும் ..இல்லை அசிங்கப் படுத்தணும்.’

என நினைத்துக் கொண்டே போனவனை பார்த்தாள் எஸ்தர்.

அவளது பார்வைக்கு அவன் நல்லவனாக தெரியவில்லை.

‘இவனை எதற்குப் பார்த்து வைக்கச் சொன்னான் ‘விபாகர்.

உள்ளே போய் அடுத்த நாள் திருவனந்தபுரம் ஸ்பெஷலில் இரண்டு ஏசி டூ டயர் புக் செய்து விட்டு , வினயாவுக்கும் அவளது பத்திரிக்கை மெயிலுககும் அனுப்பி விட்டு அடுத்த நாள் எம்.டி க்கு தேவையான சிலவற்றை தயார் செய்ய ஆரம்பித்து வேலையில் மூழ்கிப் போனாள் .

மாலை விபாகர் அறைக்குள் நுழைந்தாள் எஸ்தர்..

“என்ன எஸ்தர்…நான் உன்னை அப்போவே எதிர் பார்த்தேனே..”

“எதுக்குப்பா.??

உன் தோழியை தேடி ஒருத்தன் வந்தானே..?”

“தோழியா?? தேடி வந்தானா?? யார் அது??”

“அது தான் அந்த வினயா மேடம்..அவளை பார்க்க வந்தவன்,”

“நீ பார்த்தயா??”

“ஓ ..அவனா…??” “அவன் இவ கூட வரலியே…அவனை பார்த்தா நல்லவனா தெரியலையே…” “நீ ஏன் அவனைப் பார்க்கச் சொன்னே..”

“அவன் அந்தப் பொண்ணு கூட பேசிக் கிட்டிருந்தான் தானே..கீழே..

இங்கு உள்ளே வந்து அவளை பார்க்காத மாதிரி கேட்டுக் கிட்டிருந்தான்.. அதான் நானும் அவனை யாரென தெரியாத மாதிரி விசாரிச்சேன்..அவன் பேரு சதீஷாம்..””அவளை ரொம்ப உரிமையோட பேசினான் ..நெருக்கமாம்…”

“இதெல்லாம் என் கிட்ட ஏன் சொல்றே…உனக்கு என்ன அவன் மேல பொறாமை வந்துடுச்சா…அந்த பொண்ணு போட்டோ வெச்சுக்கிட்டு இருக்கும் போதே சந்தேகப்பட்டேன்..” “இவளை தான் என் அப்பா மனசில நெனச்சிக் கிட்டு உன்னைப் பத்தி அவங்க அப்பா கிட்டயும் பேசிருக்காரு..என் கிட்டயும் சொன்னாரு…அதான் இன்னிக்கு அவ மெஸ்ஸேஜ் பார்த்து உடனே கூப்பிட்டேன்…

எனக்கும் பிடிச்சு போச்சு…”

“என்னது..எனக்கும் பிடிச்சு போச்சு..

என்கிறே..??” நான் ஏதாவது சொன்னேனே உன்னை எனக்கு பெண் பார்க்க..எனக்கு பிடிச்சுதுனு சொன்னேனா??”

“அட அப்படி ஒண்ணு இருக்கா??.”

“நான் எங்க அப்பாக்கு பிடிச்ச மாதிரி எனக்கும் பிடிச்சு போச்சு நு சொன்னேன்.நீ தான் தப்பா நினைச்சுக்கிட்டே..”

“இல்லே ..இல்லே…அந்த பையன் நடவடிக்கை சரியில்லே..வினயா மேடம் கிட்ட வார்ன் பண்ணி வைங்கனு சொல்லத்தான் கூப்பிட்டேன்..நீ ஏதாவது கண் காது மூக்கு வெச்சு அந்த பொண்ணு கிட்ட சொல்லி வைக்காத..”

போன் அடிக்க  கையில் எடுத்து பேச ஆரம்பிக்கு முன்,

“சீ..சீ….நம்ம ரகசியம் நமக்குள்ள. இதெல்லாம் மத்தவங்களுக்கு சொல்வேனா…”

“ஹலோ…

நான் வினயா பேசறேன் எஸ்தர்..

ஓ..நீயா..லேண்ட் லைன் வந்துச்சா..யாருனு தெரியல…சொல்லுப்பா…நான் டிக்கட் அனுப்பி வெச்சிட்டேனே..மொத்த டீடெய்லும் இருக்கு .”

“அதான் சொல்லக் கூப்பிட்டேன்.

நீங்க யார் கூடவோ பேசிக் கிட்டிருந்தீங்க..”

ஓ..அதுவா..எங்க பாஸ் கூட தான் அவன் ரூம்ல பேசிக் கிட்டுருக்கேன்

நீ அதெல்லாம் கண்டுக்காத..”

“சரிங்க..நான் மூணே காலுக்குள் செண்ட்ரல் ஸ்டேஷன் வந்து கம்பார்ட்மெண்டில் இருக்கேன்.”




“ஓகே.”

‘சீ..சீ நம்ம ரகசியம் நமக்குள்ள வெளியே சொல்வேனா??

என சொல்லிக் கொண்டிருந்தாளே??’

இப்போது அவளின் புலனாய்வு பத்திரிக்கையின் மூளை அபரிமிதமாக வேலை செய்ய ஆரம்பித்தது..

இவள் நல்லவளா??

இவளை நம்பி கேரளாவுக்கு வருகிறோம் என்று சொல்லி விட்டோமே.. போகலாமா??

‘இவ வேற எனக்கு பிடிச்சது சாமுவேல் அப்புறம் எங்க பாஸ் என்கிறாளே…’

‘இங்க சதீஷ் போல ஒரு வேளை அங்கே…??

புலனாய்வு மூளையை ஒதுக்கி வைத்து யோசித்தாள்.

“பொது வெளியில் தான் போகப் போகிறோம்..எனக்கு என்ன பயம்.

நான் என்ன வீட்டிலேயே அடைந்து கிடந்தவளா??

அல்லது கேரளா தான் போகாதவளா??

அதுவும் எர்ணாகுளம்..

இரவு வீடு வரும் வரை ஏதேதோ நினைவுகள்.

வீட்டில் நுழைந்து உடைகளை மாற்றி விட்டு வந்து உட்கார்ந்தாள்.

“அம்மா..நாளைக்கு கேரளா போகப் போறேன்.. வேலன் சார் கூட அங்கே போய் நேர் காணல் எடுக்கப் போகிறேன்..

எதுக்குடி தும்பை விட்டு வாலை பிடிக்கிறே..??

“இன்னிக்கு அவருக்கு டைம் இல்லயாம்…அதான் எஸ்தர் கூப்பிட்டு பேசிட்டு அரேஞ்ச் பண்ண்ட்டாங்க..”

“சொன்னா கேக்கவா போறே…இப்ப வேளை கெட்ட வேளை ல போயிட்டு வரே..இனி ஊர் விட்டு ஊர் வேறயா..??”

“அதுக்கு தான் ஒரு கல்யாணத்தை பண்ணலாம் நா நீ பிடி கொடுக்க மாட்டேங்கிறே…”

“சரி..சரி..உன் பிலாக்கணத்தை ஆரம்பிக்காதே….”

‘அந்த எஸ்தர் எப்படி பட்ட பொண்ணு?நு கேக்கலாம்னு பார்த்தா அம்மா ஏதோ ஆரம்பிச்சு ‘கேட்’ போட்டுட்டாளே…’

“ஏண்டி வினயா…அந்த எஸ்தரோட பாஸை பார்த்தியா…எப்படி இருக்கார் …அவர் பேரு விபாகராமே??” உள்ளிருந்து வந்த அப்பா??

“அவரை எதுக்கு நான் பார்க்கணும்…??

“எனக்கு எஸ்தர் மூலமா வேலன் சாரை பேட்டி காணனும் ..அவ்வளவுதான் என சொல்லி விட்டு உள்ளே போய் விட்டாள்.”

அடுத்த நாள் மதியம் நேரே கிளம்பி செண்ட்ரல் வாசலில் டாக்சியிலிருந்து இறங்கும் போது ,

“ஓகே ப்பா…பார்த்து போ…

நீ அங்கே வரது ஆபீசில் யாருக்கும் தெரியாம பார்த்துக்கறேன். “

என்ற குரலை கேட்டு திரும்பினாள் வினயா.

எஸ்தரை இறக்கி விட்டு ஒருவன் போய்க் கொண்டிருந்தான் பைக்கில்.

இவன் தான் அந்த விபாகரோ இல்லை அவ புருசன் சாமுவேலோ…??

இவன் வரது ஆபிசில் தெரியக் கூடாது என சொல்கிறாள்…யாரது??

தெரியாமல் இவளோடு வந்து விட்டோமோ??

அவனை திரும்ப பார்க்கையில். அவன் முதுகு கரு நீல சட்டையில் தெரிய., வினயாவின் உடல் ஒரு முறை சிலிர்த்தது..




What’s your Reaction?
+1
12
+1
15
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!