Serial Stories நேசத்தினால் நெருங்கிவிடு

நேசத்தினால் நெருங்கிவிடு – 3

3

‘அந்த காலங்கள் திரும்பி வருமா என ஒரு ஏக்கம், ஏன் திரும்பி வரணும்? என்ற ரோஷம்..’ இப்போது அவளை அலைக்கழித்தது.

மனதை கட்டுப் படுத்த வேலன் க்ரூப் வெப் சைட்டினுள் பார்வையை செலுத்த ஆரம்பித்தாள். இருபது வருடத்துக்கு முன் பார்ட்னர்ஷிப் கம்பெனியாக ஆரம்பித்து…..

அப்பாவுடன் வந்த பெரியவர் யார் என வினயாவின் மூளை ஆராய்வதற்கு முன் மனது அவளை கட்டிப் போட்டது.

அனுஷா தான் வெளியிலிருந்து வந்தவருக்கு தண்ணீர் கொடுத்து உட்கார வைத்தாள்.

“இவர் என் நடப்பு நண்பர்…

நடக்கும் போது ஃப்ரெண்ட் ஆனவர் . பேரு ஸ்டீஃபன்.”

அப்பாவின் சில நகைச்சுவை ‘பன்’ அவ்வப்போது பிடித்தாலும்,

அம்மா இன்று வினயாவின் கல்யாண பேச்சை இழுத்ததால் அவளுக்கு ரசிக்கவில்லை.

“வாங்க சார்.. இது போல ஃப்ரெண்ட் நிறைய பிடிச்சுப்பார்.. ” என்றாள் அனுஷா.

“இவள் தான் வினயா..”

“தமிழ் தேசியம் பத்திரிக்கையில் வேலை செய்யறா..’

“ஒரே பொண்ணா…சார்…”

“எனக்குத் தெரிஞ்சு ஒரு பையன் இருக்கான்.. உங்க சாதி சனம் தான்.”

“என் பொண்ணு ஆபிஸில் அவளுக்கு பாஸ்..”

“என்னது உங்க பொண்ணுக்கு பாஸ் ஆ” என்றாள் அனுஷா.

“அவளுக்கு ,28 வயசுதான் ஆறது..ரெண்டாம் கல்யாணம்லாம்

வேண்டாம்.”

“இல்லம்மா..அந்தப் பையன் ரொம்ப நல்லவன், கெட்டிக்காரன்..எல்லோருக்கும் உதவி செய்வான்.

ஆனால் இன்னும் கல்யாணம் பண்ணிக்காம வேலை வேலைநு மூழ்கி இருக்கானாம். அவருக்கு ஒரு நல்ல பொண்ணு அமையணும்னு சொல்லிட்டு இருப்பா…”

“வைத்தி சாரை கொஞ்ச நாள் முன்னாடி தான் பார்க்கில் பார்த்தேன்..எவ்வளவு நல்லா பழகுறார்..

உங்க பொண்ணை பார்த்தவுடன் ஏனோ தெரியல…எம் பொண்ணு சொன்ன அவ ” பாஸ்” தான் நினைவுக்கு வந்தது.

அவனும் 30 வயசு தான் இருக்குமின்னு சொன்ன ஞாபகம்.”

“அதான் சொன்னேன்…தப்பா நினைக்காதீங்க..”

“நீங்க சொல்றது சரி தான். இதெல்லாம் ஒரு வயசு கோளாறு தான்.”

“இளம் வயசுல எந்த பொண்ணை பார்த்தாலும்

இவ மாதிரி பொண்ணு கிடைப்பாளானு நினைக்கிற அதே மனசு , வயசானவுடன் நல்ல பொண்ணை பார்த்த உடன் இவ நம்ம குடும்பத்துக்கு , இல்லாட்டி நமக்கு தெரிஞ்ச குடும்பத்துக்கு வாழ்க்கை படுவாளா நு ஆதங்கப் படுறதே, அது தான் இயற்கை.”

தண்ணீர் குடித்து முடித்த ஸ்டீபன்,

“நான் கூட அந்த நாளில எஸ்தரம்மாவை மொத மொதல்ல ஒருக்கா

சர்ச்ல பார்த்து காதலிச்சு தான் கல்யாணம் கட்டினேன்.”




“உஸ்..அடக்கி பேசுங்கோ..” அனுஷாவுக்கு இதெல்லாம் பிடிக்காது..”

‘அம்மா, அப்பா இருவருக்கும் நான் கொஞ்ச நாள் நிம்மதியா சந்தோஷமா இருக்கறது பிடிக்கலையா..’

‘ஏன் இப்படி எப்போ பார்த்தாலும் கல்யாணம், மாப்பிள்ளை, இப்படியே பேசுறாங்க…’

‘கல்லூரி நாட்களில் நீ கூடத்தான் தோழிகளுடன் பாய் ஃப்ரெண்ட், காதல் இதெல்லாம் அரட்டை அடிச்ச காலம் எல்லாம் மறந்துடுச்சா??”

அப்பாவுக்கும் அம்மாவுக்கும் ஆக்ரோஷமாக பதில் கொடுக்க வேண்டும்”  என வந்த வாயை கட்டிப் போட்டது வினயாவின் மனதிடமிருந்து வந்த ஆணை.

பேட்டிக்கான் கேள்விகளை தயாரிக்க ஆரம்பித்த வேளையில்

அம்மா அப்பாவிடம்,

“அந்த சதீஷ் வீட்டுக்கு என்ன பதில் சொல்லப் போறீங்க..”

“ஒம் பொண்ணு என்ன சொல்றா..”

“அவளுக்கு அந்த பேரை கேட்டாலே பிடிக்கலயாம்.

அவ யாரையோ அந்த பேர்ல் நெனச்சிருக்கா.”

“அதான் இன்னிக்கு கேட்ட போது எரிஞ்சு விழுந்தா..எம்மேல..”

“சரி சரி..விட்டு பிடிப்போம்.

நேரம் வரச்சே மறுபடி கல்யாண ஆசை வரும்.”

‘வரும் வரும்..நினைச்சுக்கிட்டு இரு…’

என்று அறையிலிருந்த வினயா நினைக்கும் வேளையில்

பேச்சை மாத்த நினைத்த அனுஷா,

“சேதி தெரியுமா உங்களுக்கு??”

“வினயா வெள்ளிக்கிழமை வேலன் க்ரூப் எம்.டி.வேலனை பேட்டி எடுக்க போறாளாம். அவர் இது வரைக்கும் பேட்டி கொடுத்ததே கிடையாதாமே…”

‘ அட…அவர் படம் கூட வெளியே பத்திரிக்கை, முகனூல் எதிலும் கிடையாதே…” “சிலர் தன்னை முன்னிருத்தி தான் எதுவும் செய்வாங்க..

இவர் அப்படிப் பட்ட ஆள் கிடையாதே..ஏதாவது புதிய முயற்சி இருக்கும் போல..”

அப்பாவும் அம்மாவும் பேசிக்கொண்டே போக..

வினயாவின் வேலை தடை பட்டு யோசிக்க ஆரம்பித்தாள்..’என்ன புதிய முயற்சி யாக இருக்கும் ???’

இன்று புதன்,

வெள்ளியன்று போக வேண்டும்.

முதல் முதலில் தனியே பேட்டி ..எஸ்.எல்.ஆரை ரெடி பண்ணி லென்சை துடைத்தாள்..

மெமரி கார்ட் இருக்கிறதா என சரி பார்த்தாள்.சார்ஜ் போட்டு விட்டாள்.

பேட்டியின் போது குறிப்பு எடுக்க பேனா, டயரி எடுத்து வைத்தாள்.

என்ன உடை உடுத்தால் சரியாக இருக்கும்.

‘சாரி’ கட்டி அதிகம் பழக்கம் இல்லை. ஆனால் இவளுடன் படித்த பெண்கள் பாதி பேர் டிவி சானலில் புடவை யோடு வரும் போது…

‘நாமும் அவ்வப்போது கட்டிப் பார்க்க வேண்டும்’ என நினைப்பாள்.

எப்போதாவது வரும் கல்லூரி பள்ளித் தோழிகளின் திருமணமும் இப்போது இல்லை..அனைவருக்கும் கல்யாணம் ஆகி விட்டது. இப்போது சமீபத்தில் இடமும் மாறி வேலையும் மாறி விட்டாள்.

ஒரு லைட் க்ரீன் டிசைனர் புடவையும் , அதற்கு பிளவுசும் தேடி எடுத்தாள்.

பிளவுஸ் போட்டு பார்த்தாள்..ஒரு வருடம் முன் தைத்தது..

கண்ணாடி முன் நின்று பழையதை களைந்து புதிய பிளவுஸ் போடு முன் ஒரு வினாடி பழைய நினைவுகளில் மூழ்கி மீண்டாள்.

தன் அழகை தானே பார்த்து ஹ்ம்ம்….என அவளையும் அறியாமல் ஒரு பெருமூச்சு… பிளவுஸ் வேறு சிக்கென உடம்பை பிடித்து இருந்தது..

‘இந்த ஒரு வருஷத்தில் லேசாக சதை போட்டு விட்டோமோ??’

ஒரு வினாடி நினைத்தவள்… உடம்பை பற்றியே நினைக்கும் அந்த பழைய வினயா எங்கே போனாள் என சிரித்துக் கொண்டாள்.

தோழிகள் சொல்லும் வார்த்தைகள் வந்து போயின.

‘எந்த படுபாவி கொடுத்து வெச்சிருக்கானோ???”

“அடிப்பாவி..தெரியாத அவன ஏண்டி படுபாவி ஆக்கறே”

” வேணும் நா நான் பாம்பே போய் ஆபரேசன் செஞ்சுட்டு வந்து ஒன்னை கட்டிக்கிறேன்.”

“சீ நெனப்பை பாரு…ஒம் மூஞ்சிக்கு அது ஒண்ணு தான் குறைச்சல்..”

என கிண்டல் செய்தவர்களுக்கெல்லாம் பதிலுக்கு பதில் கொடுத்தவள்,

“இப்படிப்பட்ட அழகி கடைசில அப்பா அம்மா சொன்னாங்கனு ஒரு வழுக்கை தலை , இல்லனா ஒரு வத்தல் தொத்தல் ஆசாமிக்கு வாழ்க்க படுவாங்க…

என்று சொன்ன காயத்ரிக்கு மட்டும் பதில் சொல்ல வாய் வரவில்லை.

சமீபத்தில் நடந்த கசின் கல்யாணம் வந்து போனது.

அவன் சுமார் மூஞ்சி குமார்.

அவனுக்கு வாய்த்தவள் லேசா மேக்கப் போட்டால் கேரளத்து பைங்கிளி மாதிரி இருந்தாள்.

சே…இப்போது என்ன நினைப்பு.

கேரளா வெல்லாம் வந்து போகிறது . நினைவை அடக்க மூடி போடாவிட்டால் அவ்வளவுதான் .

அது ஜீபூம்பா பூதம் போல வெளியே வந்து அட்டகாசம் செய்யுமே.

மூடு..மூடு. …பிளவுசை கழட்டி உடை மாற்றி உடலையும் மனத்தையும் மூடி வேறு ‘மூடு’ க்கு மாறினாள்.




வெள்ளிக்கிழமையும் வந்தது.

அலுவலகம் கிளம்பும் போது…

காலை நடைப் பயிற்சி முடித்து உள்ளே வந்த

வைத்தியநாதன் ,

“உனக்கு ஒரு விஷயம் தெரியுமோ…??”

அப்பா இப்படி ஆரம்பித்தால் முக்கால் வாசி நேரம் உப்பு சப்பில்லாத விஷயமாகத் தான் இருக்கும் என்ற நம்பிக்கையில் அலுத்துக் கொண்டே

“சொல்லு…”என்றாள்.

‘நீ போகும் வேலன் க்ரூப்பில் தான் ஸ்டீபன் பொண்ணு வேலை பார்க்கிறாளாம்.’

“நீ அவர் கிட்ட சொல்லி ஜம்பம் அடிச்சுகிட்டயா??”

“இல்லடி..அவர் பொண்ணை பத்தி சொல்லிட்டு இருந்தாரு…அப்போ..”

“நீ இப்படி ஆரம்பிச்சு நம்ம விஷயம் முழுக்க சொல்லி இருப்பே..”

“ஏம்ம்பா எங்கே போனாலும் இப்படி நம் வீட்டு விஷயத்தை ஊரார் கிட்ட சொல்லி கிட்டு வரே… “

“இல்லம்மா அந்த எஸ்தர் பற்றி கொஞ்சம் மன வேதனையா பேசிக் கிட்டு இருந்தாரு..”

“அப்போ பேச்சை மாத்த உன் வேலைய பத்தி பேசினேன்..”

“என்ன சொன்னே????அவங்க பேரு எஸ்தரா??”

“அவங்க தான் எனக்கு மெயில் அனுப்பி போன்லலாம் பேசுனாங்க..”

இப்போது அப்பா,அம்மா வினயா எல்லோருக்கும் ஆர்வம் தொத்திக் கொண்டது.

“புடவைல அழகா இருக்கடி. திருஷ்டி சுத்தி போடணும்..”

“திருஷ்டி!!! அது ஒண்ணு தான் எனக்கு குறைச்சல்”

‘அப்படியே அந்த எஸ்தரின் பாஸ் பற்றியும் கேளு..’

என்ற அப்பாவை பார்வையால் சுட்டெறித்து விட்டு கிளம்பினாள்.

,அம்மா சொன்ன ‘அழகா இருக்கே.’

‘கேரள நினைவு….’இதை எல்லாம் விட ‘அந்த பாஸ்…’

ஒன்றுக்கு ஒன்று தொடர்பில்லாத அவற்றை அவளுக்கு மட்டும் ஏனோ தொடர்பு படுத்திப் பார்க்க தோன்றியது.

“பத்திரிக்கை ஆபிஸ் உள்ளே நுழைந்த அவளுக்கு சதீஷ் சொன்ன அந்த விஷயம் அதிர்ச்சி அளித்தது.




 

What’s your Reaction?
+1
17
+1
15
+1
1
+1
1
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!