Serial Stories நேசத்தினால் நெருங்கிவிடு

நேசத்தினால் நெருங்கிவிடு – 2

2

அதே நாளில்,

“வேலன் சார்…”

“உங்களை பேட்டி காண விரும்பி ஒரு பிரபல பத்திரிக்கை யிலிருந்து கேட்டிருக்காங்க..அது இந்தியாவின் முதல் ஐந்து பத்திரிக்கை குழுமங்களில் ஒன்று.தமிழில் நம்பர் ஒன் சார்.”

“விபாகர்…”

“உனக்கு தான் என் பாலிசி தெரியுமே…என்னை முன்னிறுத்தி தொழில் செய்ய பிடிக்காது..நமது உற்பத்தி பொருட்களும், சேவையும் தரமும் தானே நம்மை இந்த அளவுக்கு உயர்த்தி இருக்கின்றன..”

“நீங்க சொல்வது சரிதான். ஆனால் இது விளம்பர உலகம்.நமது தொழில் இப்போது அடுத்த கட்டத்தை நோக்கி செல்கிறது.

முதன் முதலில் கம்பெனி பங்குகளை வெளியாருக்கு விற்று பங்கு தாரர்கள் ஆக்கப் போகிறோம். நீங்க இது வரை யாரென தெரியாதவர்கள் இப்போது உங்கள் வீட்டுக்குள் என்ன நடக்கிறது என்பது வரை கவனிக்கத் தொடங்குவார்கள்.”

“அவர்களாக ஏதாவது எழுதும் முன்பு நாமே பெரிய பத்திரிக்கைக்கு பேட்டி கொடுத்தால் இந்த முதல் பங்கு விற்பனை செய்யும் ஐ பி.ஓ. சமயத்தில் நல்லது தானே சார்.”

“வெல்கம் விபாகர்.” “நீ சொல்வதில் ஏதாவது பொருள் இருக்கும்.

நீ என்னுடன் வந்து ஒரு மூணு வருஷம் இருக்குமா..?”

“சரியா மூணு வருஷம் மூணு மாசம் ஆகியிருக்கு சார்.”

“ஹா..ஹா..ஹா…இதுக்கும் புள்ளி விவரமா யங்க் மேன். “

“உங்களுக்கு ஐ ஐ எம் ல ஸ்டாடிஸ்டிக்ஸ் ஓவராதான் சொல்லி கொடுத்திருக்காங்கனு நெனைக்கிறேன்.”

“அது மட்டுமில்லே சார்..48 மணி நேரத்துக்கு மேலே தூங்காமல் இருக்கவும் சொல்லிக் கொடுப்பாங்க போலிருக்கு சார்…”

சொல்லிக் கொண்டே உள்ளே வந்தாள் வேலனின் காரியதரிசி எஸ்தர்.

“என்ன ஆச்சு..ஏன் தூங்கலியா விபாகர்…”

இல்லே சார்..நம் வீட்டில் ஒரு விசேஷம்நா தூக்கம் வருமா?? அதற்கு ஏற்பாடுகள் செய்து முடிக்கும் வரை தூங்க முடியாது சார்..”

‘வீட்டுக்கு கூட ரெண்டு நாளா பேசல, சாப்டானா, தூங்கினானு தெரியலை’ என அவங்க அம்மா போன் பண்ணாங்க சார்.அப்போ தான் எனக்கே தெரியும்.”

“ஏம்ப்பா…அம்மா அப்பாவை தவிக்க விடாதே..

நான் அந்த வயசிலே கவனிக்கலே..இப்போ நான் கவனிக்க நெனச்சாலும் அவங்க இல்லை என்றார் 55 வயதைக் கடந்த பில்லியனரான வேலன்.”




வீட்டு லேண்ட் லைனுக்கு போன் செய்து பேச ஆரம்பித்தான்..

“ஹலோ…அண்ணாவா…அம்மா..அப்பாக்கெல்லாம் இங்கே ஒரே கவலை.நான் எவ்வளவு தான் தைரியம் சொல்றது…. நீயே பேசு..”

“வேளா வேளைக்கு சாப்பிடு…தூங்கச் சொன்ன தூங்க மாட்டே… உடம்பை பாத்துக்கோ…சுவர் இருந்தா தான் சித்திரம் எழுத முடியும்..அவ்வளவு தான் சொல்வேன்” என்றார் அப்பா ஈஸ்வர்.

அம்மா “உன் குரலைக் கேட்டா போதும்டா…எங்க இருந்தாலும் நல்லா இருக்கணும்.”

“என்னம்மா..இப்படி கழட்டி விடறே..வாரமொரு தடவை தான் வந்துடுறனே….இப்போ வேலை கொஞ்சம் அதிகம்…

போன் பண்ண முடியலே.”

‘சரிடா..பார்த்துக்கோ..வெச்சிடட்டுமா போனை..”

மீண்டும் வேலன் அறைக்கு சென்றான்.

“பேட்டி காண வெள்ளிக் கிழமை ஓகே சொல்லி மெயில் அனுப்ப எஸ்தரிடம் சொல்லிட்டேன். எஸ்தர் எந்த நேரம்நு முடிவு பண்ணுவாங்க சார்..’

“ஓகே..விபா…

எஸ்தர்..நீங்க ஒரு பன்னெண்டு மணிக்கு மேலே ஒன்றரை க்குள் வெச்சுக்குங்க…”

எஸ்தர் குறித்து மெயில் பண்ண சென்றவுடன்,

“என்ன சார் ..மூகூர்த்த நேரம் மாதிரி சொல்றீங்க…”

என சிரித்தான்.

“எனக்கு நேரம் காலத்துல அபார நம்பிக்கை உண்டுப்பா.”

“யார் கண்டாங்க….நீ சொல்லி நான் ஃபிக்ஸ் பண்ற இந்த பேட்டி கூட உன்னை அடுத்த லெவலுக்கு எடுத்து செல்லலாமே…”

“ஆல்தி பெஸ்ட்.” “நீ என் கூடவே இருந்து பாயிண்ட்ஸ் எடுத்து கொடுக்கறீயா..நீ தான் புள்ளி விவர புலி ஆச்சே..”என அவனை கிண்டலடிக்க…

“வேண்டாம் சார்..நீங்க இயல்பா பேசுங்க…”

“வரவங்க எப்படி பேட்டி எடுக்கறாங்கங்கறதை பொருத்து அடுத்த நடவடிக்கை எடுப்போம்.”

“விபாகர்.. வெள்ளிக்கிழமை டைம் கேட்டு போன் பண்ணிச்சுப்பா” “வினயானு ஒரு பொண்ணு.. “

“ஏதோ ஒரு பொண்ணு…விஷயத்தை சொல்லு..நீ என்ன சொன்னே..அன்னிக்கு டயம் இல்லேனு சொல்ல வேண்டியது தானே…”

“இது அந்த பத்திரிக்கைலேந்து வர பொண்ணுப்பா..”

“நான் மெயில் ல டைம் அனுப்பி இருக்கேன் நு சொல்லிட்டேன். “

‘ஓ…அப்போ சரி….

இரு.. இரு… நோட் பண்ணிக்கறேன்….என்ன பேரு சொன்னே?..’

“வினயா…”

இது என்ன கடவுளின் விளையாட்டா? வினையா??




 

What’s your Reaction?
+1
18
+1
12
+1
0
+1
2
+1
0
+1
1
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!