Serial Stories Uncategorized நேசத்தினால் நெருங்கிவிடு

நேசத்தினால் நெருங்கிவிடு – 1

உங்களுக்கு அனுமதி கிடைத்துள்ளது.

வாழ்த்துகள்

.

நீங்கள் எங்களின் எம்.டி.யை வரும் வெள்ளிக்கிழமை அன்று சந்திக்கலாம்.

“சக்சஸ்”…வினயா மெயிலில் வந்திருந்த செய்தியை பார்த்து குதித்தாள்.

“என்னடி… காதலர் தினம் கவுண்டமணி மாதிரி குதிக்கறே…

யார் அந்த ப்ரின்ஸ் சார்லஸ்??? “என கேட்ட பக்கத்து சீட் பானுவை முறைத்து, பத்திரிக்கை உதவி ஆசிரியரை சந்திக்க அவரது அறைக்குச் சென்றாள்.

” வா…வினயா..முகத்தில் என்ன திடீர் பிரகாசம்…உனக்கு கல்யாணமா??”

“சார்..ஏன் சார் எல்லாரும் மூட் அவுட் ஆக்கறீங்க..”

“ஒரு பெண்ணுக்கு முகத்தில் வேற காரணத்துக்காக சிரிப்பு வரக் கூடாதா???”

“சரி…நீயே சொல்லு” என்றார் அந்த பல்சுவைப் பத்திரிக்கையின் உ.ஆசிரியர்.

வேலன் குழுமத்தின் எம்.டி யை பேட்டி காண அனுமதி வந்து விட்டது சார்…

“என்னது???” இப்போது உ.ஆ.எழுந்து விட்டார்..

“சரியான மெயில் ஐடி யிலிருந்து தானே வந்திருக்கிறது.”

பக்கத்திலிருந்த விளம்பர மேலாளரும் எழுந்து விட்டார்.

கடந்த இருபது வருடங்களில் பலப் பல தொழில்களில் முன்னேறி, இப்போது தென்னிந்தியாவில் முதல் பத்து பணக்காரர்களில் ஒருவராக திகழும் வேலனின் முழு கட்டுப்பாட்டில் இருக்கும் அந்த குழுமம் பல சாதனைகளை புரிந்திருக்கிறது.  ஆனால் வேலன் மட்டும் யாருக்கும் பேட்டி கொடுக்கவோ பொது விழாக்களில் கலந்து கொள்ளவோ மாட்டார்..அது அவரது தனித்துவம்.இப்போது சம்மதித்திருக்கிறார்.

அவருடனான நேர்காணலை, “தமிழகத்தின் நம்பர் ஒன் பத்திரிக்கைக்கு மட்டுமான பிரத்தியேக பேட்டி ..”என போட்டு..விளம்பரப் படுத்தி……”

உ.ஆ. அடுத்து என்ன நடத்தலாம் என பிளான் போட ஆரம்பித்தார்.

இலக்கியத்தையும் வியாபாரத்தையும் சரியான அளவில் கலக்கும் தந்திரம் அறிந்த பத்திரிக்கை குழுமத்தில் வளர்ந்தவர் அவர்.

ஒரு சாகித்ய அகாடமி எழுத்தாளரின் எழுத்தை வாசிக்க வரும் வாசகனுக்கு ,ஓராயிரம் சாதாரண மனிதர்களை அறிமுகப்படுத்தி, சிலரை நல்ல எழுத்தாளர்கள் ஆக்கிய பத்திரிக்கை அது.

ஆசிரியர் பாணியை அடி பிசகாமல் பின்பற்றும் குழுவினர்கள் .




வினயா சென்னையில் ஒரு பிரபல கல்லூரியில்

எம்.எஸ்.சி.விஸ்காம்..படித்து ட்ரெய்னியாக இருந்து இப்போது தான் பத்திரிக்கையில் கால் ஊன்றி இருக்கிறாள்.

அவளுடன் படித்த சில சுமாரான பெண்கள் தொலைக்காட்சிகளில் வீஜே வாக,நட்சத்திரமாக வலம் வரும் போது , அழகுப் பெட்டகமான வினயா மட்டும் மாஸ் கம்யூனிகேஷன் படிக்காமலேயே மாஸ் மீடியாவுக்கு பணி புரிய வந்தாள்.

“சார்…இது பாருங்க…மெயில் உண்மை தானே…”தனது லேப் டாப் பை அவரின் எதிரில் வைத்தாள்.

“அட…நீ ஏப்ரல் ஃபூல் தான் செய்யறே நு நெனச்சேன்..” என்றார் முகத்தில் வழிந்த அசட்டை லேசாக கர்சீஃபில் துடைத்துக் கொண்டே.

அவளுடன் பணி புரியும் சதீஷ் “கங்கிராட்ஸ் மை டியர்…”

என சொல்லி அவளது பின் புறமாக வலது தோளில் தட்ட வரும் போது…சரேலன திரும்பினாள்..

“தேங்க் யூ” சொல்லி நகர்ந்தாள்.

“எப்படித்தான் இந்த பெண்களுக்கு பின் புறத்தில் கண் வைத்துள்ளானோ ஆண்டவன்” என படைத்தவனை நொந்து கொண்டான் சதீஷ்.

“நான் வேண்டுமானால் வினயாவுடன் உதவிக்கு போகட்டுமா சார்..” எனக் கேட்டு, உ.ஆ.பதில் சொல்லு முன், திரும்பி வந்தவள்,

“தேவை யில்லை..நானே போட்டோவும் எடுப்பேன்” என்றவள்,

உதவி ஆசிரியரிடம்,”கண்டவங்களையும் கூட்டிப் போனா, அங்கு சரியான மரியாதை கிடைக்காது சார்…இவ்வளவு நாள் கழித்து இப்போது தான் முதன் முறையாக பேட்டிக்கு சம்மதித்துள்ளார்”

“நீ சொல்வதும் சரிதான்.” நீயே முழுக்க கவர் பண்ணு…” என்றார்.

“ஆமாம்..ஆமாம்..முழுக்க கவர் பண்ணிட்டு போ…போகும் இடம் பெரிய இடம் , என்ன வேணா நடக்கலாம் ..” என்றான் மூக்குடைபட்ட கோபத்தில் இருந்த சதீஷ்.

“மைண்ட் யுவர் டங்க் சதீஷ்..”பெண்களுக்கு மரியாதை கொடுக்கலேனாலும் பரவாயில்லை…அசிங்கப்

படுத்தாதே..”

உ.ஆ.ஒன்றும் சொல்லாமல் இருந்தார்.

சதீஷ் பொழுது போக்குக்கு வேலை பார்ப்பவன் .ஆனால் சில அரசியல் பிரமுகர்கள் மூலம் நிறைய இடங்களில் உள்ள தொடர்பு மூலம் விளம்பரம் அதிகம் வாங்கி வருவான்.அதனால் ஒருவரும் அவனைப் பற்றி கருத்து சொல்ல மாட்டார்கள்.

அவ்வப்போது வினயாவிடம் மட்டும் இப்படி நோஸ்கட் வாங்குபவன்.

“மோதலில் தான் காதல் தொடங்கும்…,” பார்க்க பார்க்க பிடித்துவிடும்” என்பது போன்ற மசாலா சினிமா சித்தாந்தங்களில் ஊறிப் போயிருந்தான்.

ஆனால் தன் கைபிடித்து வாழ்க்கை முழுவதும் கூடவே பயணிக்க வேண்டும் என நினைக்கும் பெண்களின் எதிர் பார்ப்பு வேறு என அறியாதவன்.

” என்னடி ..போகும் போது சிரிச்சுண்டே போனே??”

“இப்போ கடு கடுப்பா திரும்பி வரே. …அந்த சாடிஸ்ட் சதீஷ் ஏதாவது சொன்னானா??” என்றாள் பானு..

“ம்..ம்… “என்றவளின் கண்ணில் லேசான கண்ணீரைப் பார்த்தவள்..

“என்ன ஆச்சுடி??”

விவரம் சொல்லி “என்னை “முழுக்க கவர் பண்ணிட்டு” போகச் சொல்றான் ராஸ்கல்…”

“என்னைப்போல அழகான பெண்களை படைத்த ஆண்டவனைத் தான் கேக்கணும்.

நாம் நம்மை அழகாக காட்டிக் கொள்ளக் கூடாதா?? இதனால் தான் எனக்கு பேர் என்று நம்பும் நிறைய பேரில் இவனும் ஒருவன்.”

“விட்டுத் தள்ளு…நமக்கும் ஒரு காலம் வரும்..அன்னிக்கு இவனுக்கு இருக்குடி..””ஆண்கள்நா அப்படித்தான் இருப்பாங்க..”

“பொதுப்படையா சொல்லாத பானு..”

“நல்ல ஆண்கள் நிறைய பேர் இருக்காங்க..அதிலும் ஒரு சில வைரங்கள் கூட உண்டு…”என்றவளை ஆச்சர்யத்துடன் பார்த்தாள் பானு..”நீ ஏதாவது கற்பனை பண்ணிக்காதே….”

“வேலன் குழுமத்து வேலன் சார் பற்றி ஏதாவது தப்பாக இதுவரை பத்திரிக்கையில் வந்திருக்கா…இந்த சாடிஸ்ட் இப்போது அவர்களைப் பற்றி அசிங்கமா பேசறானே..”

ஓகே..டீ..நான் அவரைப் பற்றி குறிப்புகள் எடுக்கணும்..லேசா தலைவலி…வீட்டுக்கு போகிறேன்…




“என்னடி…திடு திப்புனு வந்துட்ட….ஏதாவது பிரச்சனையா?..”

“ஒண்ணும் இல்லம்மா…” “ஒரு பெரிய மனுஷரை வெள்ளிக்கிழமை பேட்டி எடுக்கப் போகிறேன்..அதான் கொஞ்சம் டென்ஷன்..”

“நீ காபி போட்டு எடுத்து வா..”

என்றவள் அறைக்கு போய் லேப் டாப்பில் வேலன் குழுமத்தின் இணைய தளத்துக்குள் நுழைந்தாள்.

காபியுடன் வந்த அம்மா அனுஷா ..

“வெள்ளிக்கிழமை நாள் நல்லா இருக்கு..

நானும் அப்பாவும் போய் போன வாரம் மேட்ரிமோனி ல வந்திருந்த அந்த சதீஷ் வீட்டுக்கு போய் பார்த்துட்டு வரட்டுமா…??”

“என்ன சொன்னே…பேரே பிடிக்கல…ஒண்ணும் வேணாம் ..”

“போன வாரம் தானேடி ஏதோ பண்ணிக்குங்கனு சொன்னே…இப்போ…”

“தெரியுதில்ல…எனக்கு கல்யாணத்துலயே இஷ்டமில்லேங்கறேன்…

நீங்க ரெண்டு பேரும் இப்படி செய்யறது பிடிக்கவேயில்லை..”

“அப்பா வந்தா என்னடி சொல்றது…”

“அது உன் பாடு” என சொல்லிக் கொண்டிருக்கும் வேளையில்

அப்பா வைத்தியனாதன்  வருகிறார் இன்னொரு ஆணுடன்.




What’s your Reaction?
+1
19
+1
22
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!